ப்ராணயாமம் என்னும் மூச்சுக்கலை

Author: தோழி / Labels:


உயிரின் ஆதாரம் சுவாசம் எனப்படும் மூச்சு. பிறந்த நொடியில் இருந்து இறுதி மூச்சு வரை இந்த சுவாசம் நமது உடலின் ஊடே ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னமும் தீர்க்கமாய் சொல்வதானால் இந்த சுவாசம்தான் வாழ்க்கை. இந்த உண்மையை நாம் அறிந்திருக்கும் அளவுக்கு அதை உணரவில்லை என்பதே உண்மை.

இது பற்றி விரிவாய் எழுதுவதாய் முன்னரே குண்டலினி தொடரில் குறிப்பிட்டிருந்தேன். அதன் அடிப்படையில் இனி வரும் நாட்களில் இந்த மூச்சுக்கலை பற்றிய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

ப்ராணன் என்றால் மூச்சு, யாமம் என்றால் ஒழுங்கு செய்தல் ஆகும். யோக நெறியில் நான்காவது படிநிலையாக ப்ராணயாமத்தை பதஞ்சலி முனிவர் அருளியிருக்கிறார். இந்த மூச்சு நமது உடலில் மூன்று கட்டமாய் நிகழ்கிறது.

மூச்சை உள்ளே இழுத்தல், இதனை "பூரகம்" என்கின்றனர்.
மூச்சை உள்ளேநிறுத்துதல், இதனை "கும்பகம்" என்கின்றனர்.
மூச்சை வெளியேற்றுதல், இதனை "ரேசகம்" என்கின்றனர்.

இந்த மூன்று செயல்களும் தொடர்ந்து சீரான தாள கதியில் நம்முடலில் ஓடிக் கொண்டேயிருக்கிறது. இந்த மூன்று நிகழ்வுகளின் ஊடே செய்யப் பட்ட பல்வேறு பரிசோதனைகளின் திரளே ப்ராணயாமம் எனப்படும் மூச்சுக் கலை.

நவீன அறிவியலின் படி நமது உடலில் ஒரு நிமிடத்தில் 15 முதல் 20 முறை சுவாசம் நடக்கிறது. உறங்கும் போது இதன் அளவு 10 முதல் 12 ஆக குறைகிறது. ஆழ்நிலை தியானம் போன்றவைகளைச் செய்யும் போது இந்த அளவு இன்னும் பாதியாகக் குறைந்து விடுகிறது. 

எல்லாம் சரிதான், இந்த மூச்சு நமது உடலில் எப்படி நடக்கிறது?

விவரங்களை நாளைய பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

14 comments:

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பகிர்வுகள் பயன்மிக்கவை.. பாராட்டுக்கள்..

arul said...

nice information

ஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி said...

நல்ல பகிர்வு. தொடரட்டும் சகோ.

Somz said...

தோழி, சமீபத்தில் சரயோகம் எனும் நூலை படித்தேன் (Published by http://vykyoga.com/index.html). அதில், ஒரு நாளின் வெவ்வேறு நேரங்களில் (முறையாக மூச்சுப்பயிற்சி பழகியவருக்கு) மூச்சு பஞ்ச பூதங்களின் வடிவங்களில் வெளியேறும் அதாவது வட்டம்,சதுரம்.. அவ்வாறாக. சோதித்துப் பார்க்க கண்ணாடியை மூச்சு படும்படி அருகில் வைத்து சொதிக்கச்சொல்கிறார். அவ்வடிவம் அதில் நம் மூச்சு வெப்பத்தால் படலமாக படியும் என்று(fog formed by our breath). இதைப் பற்றி நீங்கள் அறிவீர்களா? உங்கள் கருத்து என்ன?

Anonymous said...

Dear Thoozi. Your post is very good. But please read the text of Siddha Macchamuni Karana Jnanam 10, in the text he warns that Pranayama gives the time of health, bloating, and makes a person gets sick, if you do not know the secret execution of the practice Kesari. If you do not have this text, I can send you a copy.

Balaji said...

pooragam - 16 vinadigal,
Kumbagam - 64 vinadigal,
Iresagam - 32 vinadigal.

Ithai kalai 60 muraiyum, nan pagalil 40 allathu 20 muraiyum, maalai matrum iravil thalaa 20 muraiyum paligi vara, 12 aandugalil Yogag kaliyil kuruvagalaam.

Yogam sambathamana pira thagavalgal thirumanthirathilum Pathanjali yoga sutharathilum kanalam.

Balaji.

Unknown said...

nice information

Siddhar said...

தோழி,
உங்களது விளக்கங்கள் மிகவும் அருமை.


"உருத்தரித்த நாடிதனில் ஒடுங்குகின்ற வாயுவை
கருத்தினால் இருத்தியே கபாலம் ஏற்ற வல்லிரேல்
விருத்தரும் பலராவர் மேனியும் சிவந்திடும்
அருள்தரித்த நாதர் பாதம் அய்யன் பாதம் உண்மையே"

இது பெரிய ஞானகோவை நூலின் கருத்து.

இதன் பொருள் :

நம் உடம்பில் ஓடும் பிராணனை நம் கருத்தினால் கட்டுபடுத்தி
அதன் மூலம் நாம் ஞான நிலையை அடையலாம். எனவே சுவாசத்தை கடுபடுத்துவதன் மூலம் மனதை கட்டுபடுத்தி குண்டலினி யோகத்தை அடையலாம்

Sivananthan said...

மூச்சினை நிறுத்தி கபாலம் ஏற்றி முக்தி அடைவது குறுக்கு வழியாகும்.இதில் கரணம் தப்பினால் மரணம். ஒரு அளவுக்கு மேல் நிர்ப்பந்தப்படுத்தி மூச்சினை கபாலத்தில் நிறுத்த முயலும்பொழுது கழுத்துக்கு மேல் எது பலவீனமான பகுதியோ (கண், காது,கபாலம், போன்ற ) அந்த பகுதியில் மூச்சுக் கற்று பிய்த்துக்கொண்டு வெளியேறிவிடும்.அப்படி வெளியேறி கண்ணை பறிகொடுத்தவரை பற்றி நான் கேள்விப்பட்டு உள்ளேன். அவர் ஒரு சித்தவித்யார்த்தி.குற்றாலம் பகுதியில் வாழ்ந்து வந்தவர். அவர் பெயரை வெளியிடுவதை நான் விரும்பவில்லை. இப்படி கபாலம் வழியே மூச்சு காற்று வெளியேறி மரணம் சம்பவித்த துறவிகளை கபால மோட்சம் அடைந்துவிட்டார் என கூறி அடக்கம் செய்தனர்.பின்னாளில் சாதாரணமாக இறந்துவிட்ட சாமியார்களையும் தலையில் தேங்காயை உடைத்து கபாலத்தை பிளந்து பின்னர் அடக்கம் செய்யும் முறையும் வந்துவிட்டது.

Siddhar said...

நான் மூச்சை கபாலத்தில் ஏற்றி அதன் மூலம் ஞானம் பெறவேண்டும் என்று குறிப்பிடவில்லை. வாசி யோகத்தின் மூலம் குண்டலினியை கபாலத்தில் நிறுத்த வேண்டும் என்று குறிபிடுகிறேன்

Siddharism - The True Indhu Religion said...

இந்தப் பிறாணாயாமத்தைப் பற்றித்தான் எத்தனை கற்பனைகள், மயக்கங்கள், வீண் முயற்சிகள், ... மூச்சினைக் கட்டும் வாசியோகம் வேறு; பிறாணாயாமம் வேறு. இந்த மூச்சுப் பயிற்சியினால் நிலையான பயனைப் பெற்று இறப்பை வென்றவர்கள் அல்லது குறைந்தது நரை, திரை, பிணி, மூப்பு வென்றவர்கள் யாரெனும் உள்ளனரா? என்று உலக அளவில் நமக்குத் தெரிந்த ஒரு நூற்றாண்டுக் கணக்கில் (விவேகானந்தர் காலம் முதல் வேதாத்திரி காலம் வரை) எண்ணிக்கையிட்டு ஆய்ந்து பார்த்தால் ஓரளவு இந்த மயக்கங்களைப் பற்றிப் புரிந்து கொள்ளலாம். (போகாத ஊருக்கு வழி சொல்வதைப் போன்றதே இந்தப் பிறாணாயாமப் பயிற்சி பற்றிய ஆராய்ச்சி).

Unknown said...

I have never seen like this site in Internet. thank u so so much for offering such a site to us.

Unknown said...

arumayana pathivugal .vazhga.. valarga

Kannadasan said...

ஏறுதல் பூரகம் ஈரெட்டு வாமத்தால்
ஆறுதல் கும்பம் அறுபத்தினாலதில்
ஊறுதல் முபத்திரண்டதி ரேசகம்
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகமாமே.
---திருமூலர்

Post a comment