கண்ணில் பூ விழுதல்..

Author: தோழி / Labels: ,


நமது கண்ணின் கருவிழியில் வெண்படலம் ஏற்படுவதையே கண்ணில் பூ விழுந்துள்ளது எனக் கூறுவர். பல்வேறு காரணங்களினால் நமது விழித்திரையில் ஒளி ஊடுறும் தன்மை குறைவதே இதற்குக் காரணம். இதைத்தான் ஆங்கிலத்தில் கேட்ராக்ட் (cataract) என்று கூறுவர். நோய், கண்ணில் அடிபடுதல், பரம்பரைக் கூறு மற்றும் வயதின் காரணமாகவும், தொடர்ந்து வெளிச்சத்தையே பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்த குறைபாடு உண்டாகும். 

இதனால் விழித்திரையில் கொஞ்சம் கொஞ்சமாய் ஒளி ஊடுறுவும் தன்மை குறைந்து ஒரு கட்டத்தில் முழுமையான பார்வை இழப்பு ஏற்பட்டுவிடும். இதற்கு நவீன அறிவியலில் அறுவை சிகிச்சை மூலமாக புதிய செயற்கை கண் வில்லையை வைப்பதுதான் தீர்வாகக் கூறப் படுகிறது. தமிழில் இதனை கண்ணில் பூ விழுதல், விழிப்புரை , கண்புரை , கண்திமிரம் என்றும் அழைப்பர். 

இந்த குறைபாடு பெரும்பாலும் புரதத்தன்மை இழப்பால் ஏற்படுகிறது. கண்ணில் பூ விழுந்தால் தலைவலியோ கண் சிவப்பாக மாறுவதோ இருக்காது. சிலருக்கு அடிக்கடி கண்களில் நீர் வரலாம். பார்வையின் அளவு மிகவும் குறைந்து காணப்படும்.சூரிய ஒளி நேராக கண்களை தாக்குவதும், கண்களுக்கு அதிக வெப்பம் தரக்கூடிய வேலையைச் செய்பவர்களுக்கும் கண்ணில் பூ விழ அதிக வாய்ப்புக்கள் உள்ளன. 

நவீன மருத்துவத்தில் இந்தக் கண்ணில் பூ விழுவதை குணமாக்க மருந்து கிடையாது என்பது தான் உண்மை. நேரடியாக அறுவைச் சிகிச்சையின் மூலம் பாதிக்கப் பட்ட விழித்திரையை நீக்கிவிட்டு அந்த இடத்தில் செயற்கை விழித்திரையை பொறுத்துவதன் மூலம் மீண்டும் பார்வையைப் பெறமுடியும். எனினும் நமது முன்னோர்கள் இதற்கான தீர்வு ஒன்றினை அருளியிருக்கின்றனர் என்பது ஆச்சர்யமான ஒன்று. 

தேரையர் தனது நூலான "தேரையர் வைத்திய சாரம்" என்னும் நூலில் கண்ணில் பூ விழுதலை நிவர்த்திக்கும் முறை ஒன்றினை அருளியிருக்கிறார்.

பாரடா நற்தேனில் சங்கா லாட்டி
     பருங்குன்றி மணியது சோலிரண்டு போதும்
நேரடா மண்டலந்தான் விழியிற் போடு
     நில்லரிது நில்லரிது பூவிட்டோடும்
மாரடா திரோதாயி மாய்கை தள்ளு
    மகத்தான என்குருவின் முறை தப்பாது
சேரடா இளவென்னீர் சாதங் கொள்ளு
     சேராதே புளிப்புகையுந் தள்ளிப் போடே

சுத்தமான தேனில், சங்கு கொண்டு உரைத்து ஒரு குன்றியளவு தினம் இரண்டு வேளையாக கண்ணில் போடவேண்டும் என்கிறார்.இப்படி தொடர்ச்சியாக நாற்பத்தெட்டு நாட்கள் செய்து வந்தால் கண்ணில் விழுந்துள்ள பூ அகன்று விடுமாம். இதற்கென சில பத்திய முறைகளும் உள்ளன, இந்த கால கட்டத்தில் உடலுறவு தவிர்க்க வேண்டுமாம். மேலும் சாதத்தில் சுடு நீரை விட்டு சாப்பிடச் சொல்கிறார். புளி, புகை போன்றவைகளும் தவிர்க்க வேண்டுமாம்.

எளிமையான அதே நேரத்தில் ஆச்சர்யமான தீர்வுதானே..... 

எனினும் அந்த காலகட்டத்தில் கிடைத்த பொருட்களைக் கொண்டு தேரையரால் அருளப் பட்ட இம் முறைகளை தற்போதை நவீன அறிவியலோடு இணைத்து ஆராய்ந்து மேம்படுத்தினால் எளிய செலவில்லாத மருத்துவ தீர்வு ஒன்றினை நம்மால் முன் வைக்க முடியும். ஆர்வமுள்ளவர்களும், ஆய்வாளர்களும் இது தொடர்பாய் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டால் நன்மை கிடைக்கும்.

இது ஒரு தகவல் பகிர்வு மாத்திரமே, தீர்வு இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டுகிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

9 comments:

Unknown said...

pulipugai = Puli + uppu + ugai or
Pulipu + ugai

It can be anything kindly note..

arul said...

thanks for sharing

Sermaraj S said...

தோழி, இந்த பாடலை நான் படிக்கும் பொது எனக்கு வேறு மாதிரியான பொருள் வருகின்றது. ஆனால் குருவருள் பெற்ற உங்கள் பொருளோ வேறு மாதிரியாக உள்ளது. இதற்கு தான் குருவருள் வேண்டும் போலும்....

குருவருளை பெற முயற்சித்து வருகிறேன் தோழி....

மின்துறை செய்திகள் said...

அருமையான தகவல்

Statsfact said...

நல்ல பதிவு தோழி.

இன்றைய நாளில் கண்புரையை அகற்றி - அதன் பின் செயற்கை விழித்திரையை பொருத்துவதற்கு பணம் 5000/-
இருந்து 50000 /- வரை செலவகிறது.!!!!
செலவு செய்யபடுகிறது !!!!!!!

மேலும் சித்தர் ராஜ்யத்தில் வளம் வரும் அனைத்து நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள்.

தினமும் கலையில் " மக்கள் தொலைக்கசியில் " காலை வணக்கம் என்ற ஒரு நிகழ்ச்சியில்
" நலம் தரும் மூலிகை " என்ற ஒரு நிகழ்ச்சி 7:40க்கு ஒலிபரப்பு ஆகிறது.

அதில் சித்த மருத்துவர் டாக்டர் அன்பு கணபதி என்பவர் சித்தர்கள் சொல்லி இருக்கும் மருத்துவ முறையை விளக்குகிறார்.
மக்களுக்கு ஏற்படும் பலவிதமான நோய்களுக்கு மருந்தும், அந்த மருந்தை தயாரிக்கும் முறை பற்றியும் கூறுகிறார்.

சித்தர் பாடல்களுக்கு விளக்கமும் சொல்கிறார்.

தற்பொழுது " சர்க்கரை நோய்க்கு " விளக்கமும் - மருந்தும் சொல்கிறார்.

காலையில் பர்க்கமுடியதவர்கள் " www.youtube.com " என்ற இணையத்தளத்தில் சென்று " DR ANBU GANAPATHY" அல்லது
" NALAM THARUM MOOLIGAI " என்று தட்டச்சு செய்து பழைய பதிவுகளை பார்த்தும் - கேட்டும் பயன்பெறலாம்.

நன்றி

-கிமூ-

immanantony said...

வர வர தோழி ஓபி அடிக்கிறார்கள்
மிக தாமதமாக பதிகிறீர்கள்
நிறைய நாள் காக்க வேண்டியிருக்கிறது
lol..,

Dr.V.K.Kanniappan said...

மதிப்பிற்குரிய தோழி,

தோழி எழுதிய 'கண்ணில் பூ விழுதல்' கட்டுரை வாசித்தேன். கண் டாக்டர் என்ற முறையில் என் கருத்துக்கள் சில சொல்ல விழைகிறேன்.

தேரையர் வைத்திய சாரம் கவிதை மிக அருமை. கண்ணின் கருவிழி (Cornea) என்னும் முன்பகுதி நிறமில்லாதது, கண்ணாடி போன்றது. கருமையான தோற்றம் தருவது iris என்ற பகுதியின் பிரதிபலிப்பே. இதன நடுவில் உள்ள துவாரம் (pupil) வழியாக வெளியிலிருந்து ஒளி Cornea - anterior chamber - pupil - retina சென்றடையும். pupil க்குப் பின்னால் Crystalline Lens இருக்கும்.

லென்சில் ஏற்படும் அடர்த்தி மாற்றத்தினால் வருவது புரை (Cataract) எனப்படும். பிறவியிலேயே ஏற்படும் குறைபாடு, காயங்கள், கண்ணில் மற்றும் உடலில் ஏற்படும் நோய்கள், முதுமை ஆகியவை இதற்கான காரணங்களாகும்.

'கண்ணில் பூ விழுதல்' (Corneal Opacity) எனப்படுவது கருவிழி என்ற கண்ணாடி போன்ற பகுதியில் ஏற்படும் நோய் (Corneal ulcer, congenital Glaucoma), காயங்கள் (Injuries) ஆகியவற்றின் பின்னூடாக வருவதே. பிறவியிலும் ஏற்படுவதுண்டு.

தேரையர் தனது பாடலில் சுத்தமான தேனில் சங்கு கொண்டு உரைத்து ஒரு குன்றியளவு தினம் இரண்டு வேளையாக 48 நாட்கள் கண்ணில் போட பூ அகன்று விடும் என்கிறார். கருவிழியில் ஏற்பட்ட புண் அல்லது காயம் ஆறுமா என்பது சந்தேகமே.

தேனிலும், சங்கிலும் என்ன மூலக் கூறுகள், மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்று அறிந்து கொள்ள வேண்டும். அவை காயம் ஏற்பட்டு ஆறியபின் ஏற்படும் தழும்பை மட்டுமே குணப்படுத்தக் கூடும் என்பது என் கருத்து. இதனை முயற்சித்துப் பார்க்கலாம்.

சங்கின் திண்மையின் (thickness) வெளிப்புறம் conchiolin என்ற கூறும், இடையில் calcite என்ற கூறும், உட்புறம் calcium carbonate என்ற கூறும் இருப்பதாகத் தெரிகிறது.

மருந்தினால் தீராத பூவிற்கு (Corneal Opacity) பல வருடங்களாக கருவிழி மாற்று (Corneal transplantation) அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதில் ஒவ்வாமை ஏற்பட்டு மீண்டும் பூ வர வாய்ப்புண்டு.

தேரையர் கூறிய 'கண்ணில் பூ' Cataract ஆக இராது என்று எண்ணுகிறேன். இதற்கு (Cataract) தக்க சமயத்தில் அறுவை சிகிச்சை செய்து செயற்கை லென்ஸ் பொருத்துவது ஒன்றே வழி.

ammu said...

நீங்கள் ஆண்களுக்கு விந்து சம்பந்தமான மற்றும் ஆண் குறி சம்பந்தமான விளங்கங்கள். ஒரு ஆண் பெண் திருமணதிற்கு முன்பு மற்றும் பின்பு எந்த வாழ்க்கையை பின்பட்ட்ற வேண்டும். கணவன் மனைவியிடம் எதிர்பார்ப்பது என்ன மற்றும் மனைவி கணவனிடம் எதிர் பார்ப்பது என்ன? குழந்தை வளர்ப்பு முறை? வேறுபடுத்தி ஆண் குழந்தை வளர்ப்பு மற்றும் பெண் குழந்தை வளர்ப்பு? குழந்தையின் ஒவ்வொரு வயது ஏறும் பொழுது பெற்றோரர்கள் குழந்தையிடம் பழகும் விதம் மற்றும் அவர்களை அணுகும் முறை எப்படி இருக்க வேண்டும்?

aa said...

arumai

Post a comment