கோரக்கர் எழுதிய நூல்களும், தொடர்பான குழப்பங்களும்!

Author: தோழி / Labels:


கோரக்கரின் வரலாற்றையும், அவரின் படைப்புகள் பற்றியும் முன்னரே இங்கே பகிர்ந்திருக்கிறேன். புதியவர்கள் அந்த பதிவினை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம். என்னிடம் இருக்கும் தகவல்களின் அடிப்படையில் கோரக்கர் எழுதிய இருபத்தியோரு நூல்களின் பட்டியலையும் அங்கே கொடுத்திருக்கிறேன். எனினும் சித்தரியல் ஆய்வாளர்கள் ஒவ்வொருவரும் கோரக்கர் அருளிய நூல்கள் குறித்து முரண்பட்ட எண்ணிக்கையை முன் வைக்கின்றனர். அதிலும் ஒரு சிலர் கோரக்கர் ஏழு நூல்கள் மட்டுமே எழுதியதாக கூறி வருகின்றனர்.

இது தொடர்பான எனது தேடலின் ஒரு தெளிவினை பகிரவே இந்த பதிவு.

கோரக்கர் தனது நாதபேதம் என்னும் நூலில் ஒரு சுவாரசியமான தகவலை நமக்கு தந்திருக்கிறார். அதாவது தான் பல விஷயங்களை அனைவருக்கும் புரியும் வகையில் எளிமையாக பாடி வைத்ததாகவும், அவற்றை சித்தர்கள் எடுத்துச் சென்று விட்டதாக கூறுகிறார்.

மேலும், அதே நூலில் தான் எழுதிய நூல்களின் முழு பட்டியலை குறிப்பிடுவதுடன், தான் சமாதியாகும் இடம் குறித்தும் சொல்லியிருக்கிறார்.

சித்தர்கள்என் னூல்வாங்கிச் சென்ற பின்பு
     சிதறாமல் சந்திரரேகை இருநூற தாகும்
வித்தகமாய் ரவிமேகலை எழுபத்தைந்து
     விகற்பமிலா நமனாசத் திறவுகோல் நூறும்
பத்தியுடன் நாதபேதம் இருபத் தைந்து
     புகலரிய கனகபிந்து எண்பத் தைந்து
நத்திவரும் கரிசல் இருநூற் றொன்று
     நவில்ஞானம் ஆயிரத்து நூற்று ஒன்றே

ஒன்றாகும் சீவரத்தினம் தொண்ணூற் றைந்து
      ஓதரிய மூலிமர்மம் எண்ணூ றாகும்
நன்றெனமுச் சோதிநாதம் எண்பத் தாறு
     நயவாத காண்டமோ ரிருநூ றாகும்
கன்மகொண்ட நிகண்டுமுந் நூறு செந்தூரம்
     கனமதி முத்தாரம் தொண்ணூற் றொன்று
பின்னுமுப்புக் காண்டநிகண் டதுமுந் நூறு
     மேதினியில் சித்தர்வாதம் அறுபத் தாறு

ஆறுதலாய் அம்சதீபம் அறுபத்தேழு
     ஆயிரத்து நூறுமெய்ஞ் ஞானமாகும்
சீறுரிய சித்தர்மறைப் புண்மை நூறு
     செகசாலம் சித்தர்சம் வாதம் நூறு
கூறுதலாய்க் கூடுவிட்டுக் கூடு பாய்தல்
     கொள்கையுடன் இருநூறும் ஆகும் 
மாறுதலாய் மறைப்புச் சூட்சம் ஐம்பத் தைந்து
     மந்திரலீலை மூன்றுநூற் றைந்து மாகும்

ஆகிடஇந் நூல்களைச் சித்தன் யானும்
     அறிந்தமட்டும் காவிரியின் நதிபாங் குற்று
மோகிதமாய்ச் சோழநாட்டின் கொள்ளி டப்பால்
     முத்தரநதிதீரம் பேரூர்ப் பட்டிச் சிற்றூர்
ஏகிநிறை சமாதியுற்றேன் அதுமுன் நாக
     இயற்றுமிந் நூல்வழுத்த லினிஉற் றேனால்
பாகிதமாய்ப் பாடியபின் பலதே சம்போய்
     பரிவாய்முன் னுற்றபொய்கை யூரில் வந்தேன்.

இதன் படி கோரக்கர் தான் எழுதியதாக பட்டியலிடும் நூலின் விவரங்கள் பின் வருமாறு.....

சந்திரரேகை 200
ரவிமேகலை 75
நமனாசத் திறவுகோல் 100
நாதபேதம் 25
கனகபிந்து 85
கரிசல் 201
நவில்ஞானம் 1101
சீவரத்தினம் 95
மூலிமர்மம் 800
சோதிநாதம் 86
காண்டமோரி 200
நிகண்டு 300
செந்தூரம் 91
கனமதி 91
முத்தாரம் 91
காண்டநிகண்டு 300
சித்தர்வாதம் 66
அம்சதீபம் 67
மெய்ஞ் ஞானம் 1100
சித்தர்மறைப்புண்மை 100
சித்தர்சம் வாதம் 100
கூடுவிட்டுக் கூடு பாய்தல் 200
மறைப்புச் சூட்சம் 55
மந்திரலீலை 305

இந்த நூல்களை காவிரி நதிக்கரையில் தான் வசித்த போது எழுதியதாகவும், அதன் பின்னர் முத்தர நதி அருகில் இருக்கும் பேரூர்ப் பட்டி என்னும் சிற்றூரில் சமாதி கொள்ள் இருப்பதால், இந்த நூல்களை எல்லாம் பாடிவிட்டு தான் முன்னர் வசித்திருந்த பொய்கை ஊருக்கு வந்ததாக குறிப்பிடுகிறார். 

எனவே கோரக்கர் எழுதியவற்றில் நமக்கு கிடைத்திருக்கும் நூல்களின் எண்ணிக்கை எத்தனை என்பதில்தான் குழப்பமே தவிர, அவர் எழுதிய நூல்களின் விவரங்களை தெளிவாக அவருடைய பாடல்களின் வாயிலாகவே அறிய முடிகிறது.

என்னுடைய தனிப்பட்ட சேகரிப்பில் மட்டுமே கோரக்கர் அருளிய ஒன்பது நூல்கள் இருக்கின்றன. எதிர்காலத்தில் குருவருள் அனுமதிக்கும் பட்சத்தில் அவற்றை மின்னூலாக்கி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

நாளைய பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

27 comments:

revathy said...

nice mam
s.revathy

jaisankar jaganathan said...

என் கிட்ட சந்திரரேகை -200இருக்கு.கோரக்கரின் கர்வத்தை மற்ற சித்தர்கள் அடக்கின வரலாறும் இருக்கிறது

arul said...

nice sharing

tamil temples said...

@jaisankar jaganathan

தாங்கள் அந்த நூலை இங்கு வெளியிடலாமே....

tamil temples said...

மிக்க நன்றி தோழியே...

kasi said...

please sent me a pdf copy of chandra regai

sksathapan@gmail.com

Madurai said...

please sent me a pdf copy of chandra regai

Madurai said...

please sent me a pdf copy of chandra regai
maduraipandir@gmail.com

rajkumar said...

சித்தர்கள் நூல்கள் எங்கே கிடைக்கும் என்று சொல்லமுடியுமா

rajkumar said...

சித்தர்கள் நூல்கள் எங்கே கிடைக்கும் என்று சொல்லமுடியுமா

Dhanasekar said...

Mr Jaishankar sir.... Chandira regai 200 book iruntha soluga... na athai paka aasaipadaran...

Waradan said...

தோழி எனக்கு கோரக்கரின் சந்திர ரேகை 200 மின்னூல் இருந்தால் அனுப்பி வையுங்கள்... nwaradan81@gmail.com

Waradan said...

@jaisankar jaganathan எனக்கு கோரக்கரின் சந்திர ரேகை 200 மின்னூல் இருந்தால் அனுப்பி வையுங்கள்...

jegan said...

please send me chandra regai pdf please. jegant6@gmail.com

baski_500 said...

Guru Arul Thunai Nirkattum..

Chandira Regai Book enakku email panungal..

cd.bhaskar@gmail.com

Bogar Arul Sirakkatum!
Thiruchitrambalam!
Anbudan
Bhaskar C D

jai bmjai said...

எனக்கு தெரியும் சென்னை யில் கிடைக்கும்

jai bmjai said...

எனக்கு தெரியும் சித்தர்களின் நூல்கள் கிடைக்கும் இடம்

Deepak sundaram said...

If anyone has a copy of chandra regai. Please send a copy to deepaksund2706@gmail.com.

Thanks & Regards,
Deepak

Kannan EVS said...

@jaisankar jaganathan Anyone Please send a copy of Chandraregai book to my email ID.
evs.kannan@gmail.com

Kathir ksk said...

Mam,

Please send me சந்திரரேகை 200 - கோரக்கர் , E- book to my kathiravaaksk@gmail.com . Thanks in advance

srinavin ..... said...

எங்கே கிடைக்கும் சகோதரர் ?

srinavin ..... said...

தாங்கள் எனக்கு அதை மின்னஞ்சலில் அனுப்ப விரும்பினால் மிக்க மகிழ்ச்சி

Unknown said...

Can anyone please send me the pdf copy of Chandraregai 200 & Ravimeghalai 75:

muru100@gmail.com

Thanks,
Murugesh

Kathir B said...

Hi please send me the PDF copy of chandira regai to my mail I'd sendmail2kathir@gmail.com.I am unable to get this book even after gone through book fair.
Thanks in advance.

Kathir B said...

Hi please send me the PDF copy of chandira regai to my mail I'd sendmail2kathir@gmail.com.I am unable to get this book even after gone through book fair.
Thanks in advance.

Mahen Thila said...

Pls if anyone has a pdf copy of chandira regai pls send by email to me at mahenthila@gmail.com. Tqvm

Unknown said...

please if anyone has chandra ragai send to me through
maniikandan4@gmail.com

Post a Comment