உணவு - நிறைவுப் பகுதி!

Author: தோழி / Labels:


தண்ணீர் உணவின் இன்றியமையாத ஒரு பகுதி என்பதை உணர்ந்தே நம் முன்னோர்கள் தண்ணீரின் அடிப்படையை இத்தனை நுட்பமாய் பகுத்து தெளிவு கூறியிருக்கின்றனர். நாம் இது வரையில் தண்ணீரின் வகைகளை மட்டுமே பார்த்து வருகிறோம். 

இந்த தண்ணீர் நமது உடலின் செயல்பாட்டில் எத்தகைய பங்கு வகிக்கிறது என்பதை கீழே உள்ள படத்தின் மூலம் அறியலாம். இந்த படம் இணையத்தில் கிடைத்தது ஒன்று. இதை உருவாக்கியவர் பற்றிய தகவல்கள் தெரியவில்லை, அவசியம் கருதி அவரது அனுமதியின்றி இங்கே பகிர்கிறேன்.


இன்று தண்ணீரின் கடைசி மூன்று வகைகளைப் பற்றி பார்ப்போம்.

உப்புநீர்

உப்புநீரா னுலவை யுள்ளிலோ டிக்குத்தும்
எய்ப்பசன மாம்பித்த மேறிடுங்காண் - செப்புகின்ற
வாயிலூ றுஞ்சலமு மாதுவர்ப்பா மாதரசே
யோயுங் குடல்வாத மோது.

உப்பு நீரை அருந்துவதால் குடல்வாதம் நீங்குவதுடன், வாயுருத்தல், சாதஞ்செரிப்பு, பித்தம், வாய்நீருறல், துவர்ப்பு ஆகியவை உண்டாகும் என்கிறார்.

சமுத்திரநீர்

கடலின் புனலாற் கவிகை பெருநோய்
உடலின் கடுப்புதிரச் சூலை - படர்குஷ்டம்
வாதகுன்மம் வெப்பிரத்த வாதநீ ராமைம
கோதரம்பலீ கமறுங்கூறு

குன்ம வாயு குடற்கரி யென்பதும்
வன்ம மான மலசல பந்தமுங்
கன்மமாகும் வன்னோய்களுங் காணுமோ
நுன்மை வாரிநீர் காய்ச்சி நுகரினே

கடல் நீரைக் காய்ச்சிக் குடித்தால் தொழு நோய்(பெருநோய்), மகோதரம், உடல்கடுப்பு, உதிரச்சூலை, குஷ்டம், வாத குன்மம், வெப்பம், இரத்தவாதம், மகோதரக்கட்டி, பீலிகம், குன்மவாயு, மலசலபந்தம், வாதநீராமை கன்மத்தாலாகிய நோய்கள், சோணிதவாதம், நடுக்கு வாதம், நாக்கிழுப்பு, பல்லிடுக்கு ரத்தம், ஊனிற்றுவிழல், சந்நிதோஷம் ஆகியவை நீங்கும் என்கிறார். 

இளநீர்

இளநீரால் வாதபித்த மேருமனதுந்
தெளிவாய்த் துவங்குமிருதிஷ்டக் - கொளிவுங்
குளிர்ச்சியு முண்டாகுங் கொடியவனல் நீங்குத்
தளிர்ந்தகன நொய்தாகுஞ் சாற்று

இளநீரை அருந்துவதால் வாதம், பித்தம், அனல், கபம், வாந்தி, பேதி நீரடைப்பும் நீங்குமாம். அத்துடன் மனது தெளிவு, கண்ணொளி தேகக் குளிர்ச்சியும் உண்டாகும் என்கிறார் தேரையர். 

இதுவரை தேரையர் பகுத்துக் கூறிய பதினெட்டு வகையான தண்ணீரின் குண இயல்புகளைப் பார்த்தோம். இந்த நிலையைத் தாண்டி இந்த தண்ணீரை உணவாக, மருந்தாக கொள்ளும் பல முறைகளை சித்தர் பெருமக்கள் நமக்கு அருளிச் சென்றிருக்கின்றனர். எனினும் இந்த தொடரின் நீளம் மற்றும் சுவாரசியம் கருதி ஒரு இடைவெளிக்கு பின்னர் பிரிதொரு சமயத்தில் இந்த தொடரினை தொடர்கிறேன்.

அடுத்த பதிவில் சித்தர்கள் அருளிய வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

6 comments:

viswam said...

அருமையான உபயோகமான பதிவுகள். வாழ்த்துக்கள்.

சிவநேசன்சிவா said...

நன்றி தோழி பின் கூறுபவை ஓலை சுவடியில் உள்ளவை இதை தாங்கள் உங்கள் வலைதளத்தில் ஒரு பகுதியாக வெளியிடுங்கள் கண்டிப்பாக அந்த மனிதன் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் கண்டுபிடிக்கலாம் .ஏன் என்றாள் பல ஜோதிடர்கள் உங்களின் ரசிகர்கள் யாராவது ஒருவராது இந்த ஜாதகத்தை பார்த்திருந்தால் மிகவும் சுலபம்.அவரின் ஜாதகத்தை உங்களுக்கு தெரிவிக்கிறேன் .
இதில் கட்டமாக இல்லை நான் வரிசை படுத்துகிறேன் தாங்கள் அதை கட்டம் போட்டு வலைதளத்தில் வெளியிடுங்கள் .
1.கண்ணியலக்கினம்
2.சுத்தம்
3.சுத்தம்
4.சனி
5.சுத்தம்
6.செவ் ,ராகு
7.சுத்தம்
8.வியாழன்
9.சூரியன்,புதன்
10.சுக்கிரன்
11.சுத்தம்
12.கேது,சந்திரன்
சோமவாரத்தில் பிறப்பான் .
என் அப்பனுக்கு உகந்த வைகாசியில் உதிப்பான்.
வெறி கொண்டு சித்தத்தை அடைவான் .
சித்தனாக திரிவன் ,பித்தனாக அழைவான்
ஜாதிகளை வெல்வன் ,மதங்களை இணைப்பான் ,சித்தமே மெய்யென்று உலகிற்க்கு உரைப்பான் .
தோழி தயவு செய்து இதை உங்கள் வலைத்தளத்தில் ஒரு செய்தியாக இடுங்கள் .
சித்தர்கள் ஆட்சி விரைவில் வரும் அதற்க்கு நாமும் ஒரு உறுதுணையாக இருப்போம் .

kimu said...

Nandri thozi :)

manthiregam said...

you want manthregam trinig plss. cont.. manthiregam@gmail.com

THIRUMAL said...

உடல் உயரமாக வளர சித்தர்கள் மருந்து ஏதும் சொல்ல வில்லையா ? எது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் . நன்றி

Anonymous said...

DIFFERENT DIMENSIONS OF WATER

“நீரின்றி அமையாது உலகு” இது வள்ளுவன் வாக்கு.
“Without water, the Earth cannot sustain”
says Saint Thiruvalluvar.

நீ (நீர்) இருக்குமிடமும், உன் செயலும் தான்
உன் பெயரை தீர்மானிக்கிறது.
Your habitation and actions determine your name.


நீ கண்ணில் இருந்து வெளிவருவதால் உன் பெயர் கண்ணீர்
When you come out from the Eyes, you are named as Tears

நீ வாயில், திருவாயில் சுரப்பதால் உன் பெயர் உமிழ்நீர்
When you secrete from the Mouth, you are nicknamed as Saliva

நீ உடலில் உருவாகி உலாவருவதால் உன் பெயர் செந்நீர்
When you are formed in the Body, your are titled as Blood

நீ சிறுநீரகங்களில் இருந்து வெளிவருவதால் உன் பெயர் சிறுநீர்
When you come out from Urinary bladder, you are entitled as Urine

நீ இனப்பெருக்க உறுப்புகளில் உருவாவதால் உன் பெயர் வெண்ணீர்
When you are formed from the Reproductive organs, you are called Semen

நீ வானத்து மழை மேகத்தில் இருந்து உருவாவதால் உன் பெயர் மழைநீர்
When you pour down from the rainy Clouds, you are designated as Rainwater

நீ குளம், குட்டை மற்றும் ஏரிகளில் தேங்கி நிற்பதால் உன் பெயர் நன்னீர்
When you stay at the Tanks, Ponds & Lakes, you are described as Fresh water

நீ நிரந்தரமாக கடலில் குடிகொண்டிருப்பதால் உன் பெயர் உப்புநீர்
When you stay permanently in the Oceans, you are termed as Marine water

நீ அனைத்து உயிரினங்களும் குடிப்பதற்கு பயன்படுவதால் உன் பெயர் குடிநீர்
When you are used for Drinking purpose, you are known as Drinking water

நீ கழிவுகளோடு இரண்டறக் கலப்பதால் உன் பெயர் கழிவுநீர்
When you mix up with Garbage, you are labelled as Sewage water

நீ ரோஜாவின் இதழ்களில் இருந்து எடுக்கப்படுவதால் உன் பெயர் பன்னீர்
When you are extracted from Roses, you are hailed as Rosewater


நீ இவ்வுலகில் பல பரிமாணங்களில்,
பல பெயர்களில் உருவாகி,
உயிர்களின் உயிராக (ஜீவாதாரமாக) திகழ்கின்றாய். அனைத்து உயிரினங்களும் வாழ்வாங்கு வாழ நீ/நீர் நீடுழி வாழ்க.
You are existing in this world in different dimensions in different names and giving life to the living beings. Long live for the sake of the living beings.

Post a Comment