உணவு - எத்தனை சாப்பாடு?, எப்போது சாப்பிடுவது?

Author: தோழி / Labels:


பழந்தமிழரும், உணவும் என்கிற இந்த நெடுந்தொடரில் இதுவரையில் உணவின் வரலாறு, தன்மை, சுவை, குணநலன்கள் அவை மனிதர்களின் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் போன்றவைகளைப் பார்த்தோம். உணவை எப்படி உட்கொள்வது, எந்த சமயத்தில் உட்கொள்வது, எந்த வகையான உணவுகளை உட்கொள்வது, உணவையே மருந்தாகவும், மருந்தையே உணவாகவும் கொள்ளுதல் என பல பரிமாணங்களை சித்தர் பெருமக்கள் அருளியிருக்கின்றனர்.

அன்னிய மொழி மற்றும் இனத்தாரின் பாதிப்புகள் நமது வாழ்வில் ஊடுறுவும் வரையில் இந்த வாழ்வியல் நியதிகளை நமது முன்னோர்கள் தீவிரமாய் கடைபிடித்தே வந்தனர். 

தற்போதைய உலகமயமாக்கல் கலாச்சாரத்தில் நமது வேர்களை நாம் மறந்து போய்விட்டோம் என்பது வருந்தத்தக்கது. அந்த வகையில் மறைந்து போன சில நியதிகளை இனிவரும் நாட்களில் பகிர்ந்து கொள்கிறேன். அந்த வகையில் ஒரு நாளைக்கு எத்தனை தடவை உணவை உட்கொள்ளுதல் வேண்டும், எந்த சமயத்தில் உட்கொள்ள வேண்டும் என்கிற தகவலை இன்று பார்ப்போம்.

ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு போதுமானது என்கிறார் தேரையர். தனது "பதார்த்த குண சிந்தாமணி" என்னும் நூலில் இதனை பின் வருமாறு விளக்குகிறார்.

தன்மமி ரண்டேயூண் டப்பிமுக்காற் கொள்ளினினன்
சின்மதலை காளைகடல் சேர்பருவ-தன்மூகுர்த்த
மொன்றுக்கு ணானகுக்கு ளோதுமிரண் டுக்குளுண்பர்
நன்றுக்குத் தீயோர் நயந்து

ஒரு நாளில் இரண்டு வேளைகள் உண்பதே நன்மையளிக்கும். அதற்குமேல் மூன்றாவது காலம் உணவு உண்ன வேண்டும் என்று விரும்புகிறவர்கள் நாளின் முதலாவது உணவை சூரிய உதய நேரத்திலிருந்து சரியாக ஒன்றரை மணி நேரத்திற்குள்ளும், இரண்டாவது உணவை சூரிய உதயத்தில் இருந்து ஆறு மணி நேரத்திற்குள்ளும், மூன்றாவது உணவை சூரியன் மறைந்து மூன்று மணி நேரத்திற்குள்ள்ம் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். இந்த கால முறை தவறி உண்டால் உடலுக்கு தீமை உண்டாகும் என்கிறார்.

என்ன தீமை விளையும்?

மூன்றுநான் காறெண்மு கூர்த்தங் களின்முறையே
ஞான்றுளுண்ணு மந்த நறுமுணவே-தோன்றுடலுக்
கொக்குமித நோயரமு ரோகமுயிர்க் கந்தரஞ்செய்
விக்குமித மாராய்ந்து விள்.

சூரியன் உதய நேரத்திலிருந்து நான்கு மணி நேரதில் உண்ணும் உணவினால் உடலுக்கு மிதமான நோய் ஏற்படுமாம். சூரியன் உதய நேரத்திலிருந்து ஆறு மணி நேரத்துக்கு மேல் உண்ணும் உணவினால் நோய்கள் உண்டாகுமாம்,  மாலையில் சூரியன் மறைந்து மூன்று மணி நேரத்திற்கு மேல் உண்ணும் உணவினால் உயிருக்கு தீங்கு விளையும் என்கிறார்.

தேரையரின் இந்த தெளிவுகளுக்கு பின்னே இருக்கும் அறிவியல் தன்மைகள் ஆய்வுக்குறியவை. எனினும் நமது முன்னோர்கள் இதனை கடைபிடித்து நோயற்ற வாழ்வு வாழ்ந்திருந்தனர் என்பது மட்டும் உண்மை.

அடுத்த பதிவில் எப்படி உணவை சாப்பிடுவது என்பது பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

16 comments:

RAVINDRAN said...

super

Narayanan said...

யாரம்மா நீ
நா தேடிக்கிட்டு இருக்குற கேள்விகளுக்கு விடைகள் ஒரே இடத்தில இருந்து எனக்கு கிடைகிறது .
மிக்க நன்றி

என்னுடைய தாழ்மையான கருத்து.
தமிழுக்கு இலக்கணம் எழுதியது அகத்தியர்.
அவருடைய மாணவர் தொல்காப்பியர் அதை திருத்தி எழுதினார்.
கடவுள் -கட +உள். இதை கூறியதும் சித்தர்களே.இதுவே சித்தர்கள் கோட்பாடு.
சித்தர்கள் இந்து மதமே சார்த்தவர் அல்ல இந்து மதமே அவர்கள் கூறிய கருதுகால் மூலம் உருவாக்கப்பட்டது என்கிற கோணத்தில் சற்று ஆராய்ச்சி செய்யலாம் என்பது என் கருத்து.
.......Thirumanthiram

வெள்ளிவெண் திங்கள் விளங்கும் புதன்இடம்
ஒள்ளிய மந்தன் இரவிசெவ் வாய்வலம்
வள்ளிய பொன்னே வளரும் பிறையிடம்
தெள்ளிய தேய்பிறை தான்வல மாமே.
பொழிப்புரை :

கிழமைகள் ஏழனுள், `வெள்ளி, திங்கள், புதன்` என்னும் மூன்றில் இடநாடி வழியாகவும், `சனி, ஞாயிறு, செவ்வாய்` என்னும் மூன்றில் வலநாடி வழியாகவும், வியாழனில் வளர் பிறையாயின் இடநாடி வழியாகவும், தேய் பிறையாயின் வல நாடி வழியாகவும் இயங்குதல் உடல் நலத்திற்கு ஏற்புடைய இயற்கைப் பிராண இயக்கமாகும்.
.............

என்னோட சிறு கருத்தை இங்கு பகிர்கிறேன்.
திருமூலர் கூறிய மூச்சு பயிற்சி மூலம் எனது உடல் சூடை நான் குறைத்து உள்ளேன்.(நான் மேஷம் ராசி உடல் மிகவும் சூடானது ).என்னுடைய வியர்வை,வேகம் அனைத்தும் குறைந்து விட்டது இதனால்.

அவர் கூறிய முறை படி.
வெள்ளி , திங்கள்,புதன்- காலை,மதியம், மாலை மூன்று வேலை இட நாசியில் கற்று இழுத்து(4 Sec) , நிறுத்தி(18-22 Sec) , வலது நாசியில் விடுகிறேன்.(8-9 sec)
சனி, ஞாயிறு மற்றும் வியாழன் (தேய்பிறை) - வலது நாசியில் கற்று இழுத்து(4-5 Sec) , நிறுத்தி(18-22 Sec) , இடது நாசியில் விடுகிறேன்.(8-9 Sec)

வடக்கு அல்லது கிழக்கு திசையில் அமர்கிறேன்

ஆசனம்- பத்மாசனம்

கால அளவு -30 நிமிடம்

சரியான முறையில் செய்தால் உங்கள் மேல் வயிர் உள்ளே குளுமை உண்டாகும்.மிகவும் ஆனந்த நிலை கிடைக்கும்.புலன் அடங்கும்.

2-3 மணி நேரம் இந்த நிலை நீடிக்கும் மீண்டும் செய்ய வேண்டும்(Morning before food,afternoon before food and Evening).இதை செய்து பார்க்கலாம்.
கள்ளுன்ணமல் you can feel that after doing ida naasi moochu payirchi

It reduced my intake food Qty.
Reduced my weight.
My dandruff removed fully(Weekly twice i am start taking nallennai bath-wednesday and saturday).
I was having severe dandruff problem.

All these happened in last 40 days....
breath become very slowdwoned now.
Reduced my tension,speed,angry all..

you can see result immediatly.

jana said...

arumai thozi

baatsha said...

saappaattu piriyarkalukku irandu neram pothathu

R.vijayaraghavan. said...

@Narayanan
Om sakthi,vanakagam,ungaludaiya pathil nanru.nanri.nadi suethi,naram atharkkumel vandam.ok,see you. thozhikkum en nanri.

R.vijayaraghavan. said...

ஓம் சக்தி ,வணக்கம் ,நண்பர் க்கு என் நன்றி தோழிக்கும் என் நன்றி ,உங்கள் பதில் நன்றாக உள்ளது .நானு பலருக்கு சித்தர் ராசியம் பற்றி சொல்லயுள் லேன் ,நாடி சுத்தி ,நன்று.

ceylonstar said...

What time is snack time? How many allowed? :)

sekar said...

நல்ல பதிவு . நன்றி

My Mobile Studios said...

நன்று, மறந்ததை மீண்டும் கொண்டுவருவோம்.
எனது தாத்தா வும் இரு வேளை உணவு எடுத்து கொண்டார்.

வாழுதுகள்.

Vijayan said...

thanks

Gnana Boomi said...

Very good post. Thanks for sharing.
ஒரு வேளை உண்பவன் யோகி
இரு வேளை உண்பவன் போகி
மூன்று வேளை உண்பவன் ரோகி என்று சொல்லியிருக்கிறார்கள் சித்தர்கள். :) நாமெல்லாம் எந்த வகை?

Makeswaran.S said...

@Narayanan

Makeswaran.S said...

Thanks a lot. i don't have a word to thankful to your guys every one.
I like siddhars in my breath. i am very happy to meet like this guys in this generation.

Saravanan K said...

Romba nandri thozhi- Very useful

Saravanan K said...

Romba Nandri Thozhi. Very useful info

Unknown said...

Sir, are any exercises for good digestion?

Post a Comment