உணவும், வகையும் - தாமச உணவு!

Author: தோழி / Labels:


ஒருவர் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளும் உணவு வகைகளே அவரின் குண நலன்களை தீர்மானிக்கிறது என்ற நமது முன்னோர்களின் தெளிவுகளை பார்த்து வருகிறோம். மூன்று வகையான உணவுகள் மூன்று விதமான குண நலன்களுக்கு காரணமாய் இருக்கிறது என்பதையும், முதல் இரண்டு வகை உணவுகள் பற்றி இதுவரை பார்த்திருக்கிறோம்.அந்த வகையில் இன்று தாமச குணத்தை தரும் உணவு வகை பற்றி பார்ப்போம்.

முதலில் தாமச குணம் என்றால் என்ன?, அது எத்தகையது என்பதை பார்த்துவிடுவோம்.

மிதமிஞ்சிய கோபம், அளவு கடந்த காமம், அதிக தூக்கம், மூர்க்கமான முட்டாள்தனம், நிலைத்த மனமின்மை போன்றவற்றையே தாமச குணம் என்கிறார்கள்.

இத்தகைய குண நலன்களை உடையவர்கள் முரடர்களாகவும், எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் முன்கோபிகளாகவும், சிந்தித்து சீர்தூக்கிப் பார்க்கும் திறமின்றி சூழ்நிலை மற்றும் உணர்வுகளுக்கு அடிமையாகி குற்றங்களைச் செய்பவர்களாக இருப்பார்களாம்.

இப்படியான குணத்தை ஒருவருக்கு, அவர் உட்கொள்ளும் உணவுகள்தான் கொண்டு தருகின்றன என்பதை தற்போதை நவீன அறிவியலும் ஆய்வுகளுக்குப் பின்னர் ஒப்புக் கொண்டிருப்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். இம் மூன்று வகை உணவுகளின் பட்டியலைக் கொண்டு, இதுநாள் வரை நாம் எத்தகைய உணவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம், நமது குணநலன்கள் எத்தகையதாக இருக்கிறது என்பதை சுய பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் நம்மை மேம்படுத்திக் கொள்ளலாம்.


தாமச குணத்தை தரும் உணவுப் பொருட்கள்..

1. வெங்காயம்
2. வெள்ளைப் பூண்டு
3. முருங்கைக் கீரை
4. பசலைக் கீரை
5. கலவைக் கீரை
6. ஆரைக் கீரை
7. சிறு கீரை
8. உருளைக் கிழங்கு
9. பெருவல்லிக் கிழங்கு
10. முள்ளங்கி
11. சிறுவள்ளிக் கிழங்கு
12. மரவள்ளிக் கிழங்கு
13. முருங்கைக் காய்
14. பீர்க்கை
15. வாளவரைக்காய்
16. மொச்சை
17. சுரைக்காய்
18. அவரை
19. கொள்
20. செஞ்சோளம்
21. கருஞ்சோளம்
22. பட்டாணி
23. தட்டைப்பயறு
24. கம்பு
25. வரகு
26. கேழ்வரகு
27. புழுங்கல் அரிசி
28. கத்திரிக்காய்
29. முருங்கைப்பூ
30. ஈச்ச வெள்ளம்
31. பனைவெல்லம்
32. பனங்கற்கண்டு
33. கள் வகைகள்
34. நுங்கு
35. விளக்கெண்ணெய்
36. பருப்புக் கீரை
37. புளிச்சக்கீரை
38. காசினிக்கீரை
39. பனம்பழம்
40. சீதாப்பழம்
41. பண்ணைக் கீரை
42. முந்திரிப்பழம்
43. எருமைப்பால்
44. எருமை தயிர்
45. எருமை வெண்ணெய்
46. எருமை நெய்


இது வரை பழந் தமிழரின் வாழ்வில் உணவு என்பது எத்தகையதாக இருந்தது. உணவின் வகைப்பாடுகள்,அதனால் ஏற்பட்ட வாழ்வியல் கூறுகள் போன்றவற்றைப் பார்த்தோம். 

இனி வரும் நாட்களில் இந்த உணவினை எவ்வாறு உட் கொள்ள வேண்டும். அதனால் நமக்கு உண்டாகும் சாதக பாதகங்கள் குறித்த சித்தர் பெருமக்க்ளின் தெளிவுகளைப் பார்க்க இருக்கிறோம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

8 comments:

jaisankar jaganathan said...

saivam mattumey sappitu vandha kanchi sankarachariyar yen thappu panninar

Murali V said...

@jaisankar jaganathan
தாமச உணவு வகைகள் தெய்வீக குணங்களை நடைமுறையில் கொண்டு வருவதற்கு பெரிய தடையாக இருக்கும் என்பதே இதன் பொருள். அதாவது தெய்வீக குணங்களை தனக்குள் கொண்டு வர முயற்சி செய்பவர்களுக்கு சாத்வீக உணவு மிக அவசியம். சைவ உணவை உண்டு விட்டு தெய்வீக குணங்களை தனக்குள் கொண்டு வர முயற்சி செய்யவில்லையெனில் அது அந்த தனிப்பட்ட நபரின் தவறாகும்.

+2 தேர்வில் நிறைய மதிப்பெண்கள் எடுக்க வேண்டுமெனில் TV பார்ப்பதை தவிர்த்து நன்கு படிக்க வேண்டும். ஒரு படிக்காத மாணவன் நான் TV-யே பார்ப்பதில்லை எனக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என்று சொன்னால் அது யார் குற்றம்???!!!

maheshraja said...

தோழி வணக்கம்,

1.மஞ்சள் கௌரி பாஷாணம் 2.வெள்ளை கௌரி பாஷாணம். இந்த இரண்டில் எதை

நான் கௌரிமணியில் உபயோகிப்பது.

மேலும் கௌரியை சுத்தி செய்யும் முறையையும் எனக்கு தெளிவுபடுத்தவும்.
(கௌரியை சுத்தி செய்ய அவுரியை உபயோகிக்கலாமா?)

நன்றி தோழி,
மகேஷ்ராஜா.N

murugan said...

great

maheshraja said...

தோழி,

கீழே கூறப்பட்டுள்ள செய்முறையில்

மஞ்சள் கௌரி பாஷாணத்தை உபயோகப்படுத்துவதா?
அல்லது
வெள்ளை கௌரி பாஷாணத்தை உபயோகப்படுத்துவதா?

மற்றும் கௌரியை சுத்தி செய்யும் முறையையும்
தெளிவுபடுத்தவும்.

நன்றி தோழி.
மகேஷ்ராஜா.N

சண்முகச் செந்தூரம் :- சுத்திசெய்த லிங்கம் வராகனெடை-1, சுத்திசெய்த வீரம் வராகனெடை-1, சுத்திசெய்த பூரம் வராக னெடை-1, சுத்திசெய்த தாளகம் வராகனெடை-2, சுத்திசெய்த கௌரி வராகனெடை-1, சுத்திசெய்த வெடியுப்பு வராகனெடை-1, இவைகளைப் பொடித்து கல்வத்திலிட்டு முட்டை வெண்கருவிட்டு
இரண்டு ஜாமம் நன்கு அரைத்து பொடித்து காலியான் ஓர் முட்டைக்குள் செலுத்தி, மேலே ஓர் முட்டை ஓட்டை மூடிச்சீலைமண் செய்யவும். அவ்வாறு சீலைமண் செய்யும் போது முட்டை யின் மேல் பாகத்தில் ஒரு தம்படி அளவுக்கு முட்டை ஓடு தெரியும் படிவிட்டு மற்ற பாகங்களை யெல்லாம் மறையும் படி சீலை மண் செய்ய
வேண்டும். இது உலர்ந்த பின்பு ஓர் வாயகலமான சட்டியில் இரண்டு விரற்கடை உயரத்திற்கு மணற்கொட்டிப் பறப்பி அதன் நடுவில் சீலை செய்து வைத்துள்ள முட்டையில் வைத்து முட்டையின் முக்கால் பாகம் மறையும் படி மணலை கொட்டி, அசையாமல் அடுப்பிலேற்றி சிறு தீயாக எரித்து வரவும். மேலே தெரியும் முட்டை ஓடானது
வெந்து கம்பியால் தொட்டுப்பார்க்க துவாரம் விழுவதாக இருப்பின் அதுவே தக்கபதமென ஓர் இரும்பு கம்பியை முட்டையின் உள்ளே செலுத்தி துழவிப்பார்க்க மருந்துகள் உருவி கட்டியிருக்கும், அச்சமயம் கீழிறக்கி ஆற விட்டு முட்டையின் உள்ளே உள்ள மருந்தை மட்டும் அரைத்து பத்திரப்படுத்துக. இதில் வேளைக்கு 2 அரிசிப் பிரமாணம் தினம் 2 வேளை தேனில் கொடுக்க சுரம், சந்நிகபசுரம், சுவாசகாசம் முதலியன குணமாகும்

visa said...

Ungal profile parthen. migavum nandraga irundhadhu. ungal padaippugal anaiththum miga arputham. ungal name enna?

arul said...

arumayana pathivu

jaisankar jaganathan said...

நன்றி முரளி

Post a Comment