உணவு - சுவையும் அதன் குணமும்!

Author: தோழி / Labels:


உணவை சமைத்து உண்ண துவங்கிய பின்னரே சுவையின் முக்கியத்துவம் முன்னிறுத்தப் பட்டது. நமது முன்னோர்கள் உப்பு, புளிப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு, இனிப்பு என ஆறு வகையான சுவைகளை வரையறுத்திருக்கின்றனர். இன்றும் கூட அறுசுவை உணவு என்கிற பதம் நம் புழக்கத்தில் இருந்து வருகிறது. முழுமையான சரிவிகித உணவை அறுசுவை உணவு என்பதாகவும் வலியுறுத்தினர். இன்று நம்முடைய அன்றாட உணவில் இந்த ஆறு சுவைகளும் இருக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும். 

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்கிற பழமொழி, சுவையின் மகத்துவத்தை நமக்கு உணர்த்துவதாகவே கருதலாம். நமது உணவில் இந்த சுவைகள் சரியான விகிதங்களில் இல்லாமலோ அல்லது ஏதேனும் ஒரு சுவை மட்டும் அதிகரிக்கும் பட்சத்தில் அது உடலில் நச்சுத்தன்மையை உருவாக்கும். குறிப்பிட்ட சுவையை முற்றிலுமாய் தவிர்த்தால் அது உடலில் குறைபாடுகளை உண்டாக்குமாம். எனவே எல்லா சுவையும் நமது உணவில் சரியான விகிதத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அவசியம்.

இந்த சுவைகளை எப்படி சுவைப்பது?

நமது முன்னோர்கள் உணவினை சுவைக்கும் வழிமுறைகளை தெளிவாகவே சொல்லியிருக்கின்றனர். அவற்றை இந்த தொடரின் நெடுகில் பகிர்ந்து கொள்கிறேன்.

இனி இந்த சுவைகள் நமது வாழ்வில் என்னவெல்லாம் செய்கிறதென பார்ப்போம். 

சுவைகளின் விகிதங்களைப் பொறுத்து உணவை மூன்று பிரிவாக, மூன்று குணமுடைய உணவுகளாக வகைப் படுத்தி இருக்கின்றனர். அவை.. “சாத்வீக உணவு”, “ராஜோ உணவு”, “தாமச உணவு”  என்பதாகும். இவை பற்றிய அறிமுகத்தை ஏற்கனவே பழைய பதிவொன்றில் பகிர்ந்திருக்கிறேன். அந்த பதிவினை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம். 

இந்த மூன்று வகை உணவுகளின் அடிப்படையில் மனிதர்களின் குண நலன்கள் மாறு படுகின்றன. சாத்வீக வகை உணவுகள் அமைதியான குணநலனையும், ராஜோ வகை உணவுகள் ஆர்ப்பரிப்பான குண நலனையும், தாமச வகை உணவுகள் அழிவினை உண்டாக்கும் குண நலனையும் நல்குமாம். பஞ்சபூதக் கலவையான நமது உடலின் ஐம்புலன்களின் செயல்பாட்டினை நெறிப்படுத்தும் உணவுதான் நமது குண நலன்களையும் தீர்மானிக்கின்றன என்றால் ஆச்சர்யம்தானே!

இனிவரும் நாட்களில் இந்த மூன்று வகையான உணவு மற்றும் அதன் கூறுகளைப் பற்றி விரிவாக பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

7 comments:

baatsha said...

"saathvaaka unavu" saappittanaal thaan aathithamilannallavanaakavum, aarokkiyamaakavum, santhoshamaakavum vaalnthirukkiraan. mannaraatchi kaalaththil "raajo unavu" vakai saappittathinaal thaan aarparipaana kunamum, raaja tharpaarum,irakkamatra kunamum irunthirukkirathu...!! aanaal kalikaalaththil "thaamasa unavu" vakai saappituvathanaal thaan koturamaana "kolaikal" kollai,veeriyaththanmai athikamaaki "paaliyalkuttram" natappatharkku ithuvum oru mukkiya kaaranamaaka irukkirathu....ithu thaan unmai.....baatsha

baatsha said...

amma....arumai sakothari "phothai" nanmaiyum theemaiyum kotukkum. "unavu" vakaiyilum nanmai undu theemai undu. iravanin pataippil ethuvum ketuthal illai. manithan thaan payanppatuththum murayil varaimuraiyintri vaalkiraan.ithu iraivanin thavaralla...!! manithanin thavaru....!!

kimu said...

Nalla pathivu :)

baatsha said...

@baatsha

Om Sakthi said...

ஓம் சக்தி ,நான் பல வருடங்ககு முன் படித்த ஒரு புத்தகம் 'பதார்த்த குண மஜ்சுரி ' அதில் உண்ணும உணவின் உள்ள பொருட்கள் என்ன குணம் உள்ளது ,அதன் தன்மை ,குளிர்ச்சியா ,வெப்பமா ,பற்றி விரிவாக உள்ளது .நன்றி .

ammu said...

நீங்கள் ஆண்களுக்கு விந்து சம்பந்தமான மற்றும் ஆண் குறி சம்பந்தமான விளங்கங்கள். ஒரு ஆண் பெண் திருமணதிற்கு முன்பு மற்றும் பின்பு எந்த வாழ்க்கையை பின்பட்ட்ற வேண்டும். கணவன் மனைவியிடம் எதிர்பார்ப்பது என்ன மற்றும் மனைவி கணவனிடம் எதிர் பார்ப்பது என்ன? குழந்தை வளர்ப்பு முறை? வேறுபடுத்தி ஆண் குழந்தை வளர்ப்பு மற்றும் பெண் குழந்தை வளர்ப்பு? குழந்தையின் ஒவ்வொரு வயது ஏறும் பொழுது பெற்றோரர்கள் குழந்தையிடம் பழகும் விதம் மற்றும் அவர்களை அணுகும் முறை எப்படி இருக்க வேண்டும்?

ammu said...

உடல் உறவுக்கு முன்பு மற்றும் பின்பு எந்த மாதிரியான உணவு உட்கொள்ள வேண்டும் மற்றும் எத்தனை நேரத்திற்கு முன்பு உண்ண வேண்டும்? விரிவாக கூறுங்கள்?

Post a Comment