ஒரு சமூகத்தின் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் போன்ற வாழ்வியல் கூறுகளை தீர்மானிக்கும் காரணிகளில் அவர்கள் உட்கொள்ளும் உணவு முதன்மையானது என்றால் அது மிகையில்லை. ஏனெனில் மனிதன் தான் வாழும் பருவச் சூழலில் இயற்கையாய் அமைந்திருக்கும் வசதி வாய்ப்புகளைக் கொண்டே தனக்கான உணவினை உருவாக்கிக் கொள்கிறான்.
இந்த வகையில் உலகின் ஒவ்வொரு பகுதில் வாழ்ந்த இனக்குழுக்கள் தான் வாழும் சூழலுக்கு ஏற்ப தனித்துவமான அடையாளங்களை கொண்டே வளர்ந்தன, இன்னமும் வளர்ந்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் நாம் அனைவரும் அறிந்தவையே.
மனிதன் தொல் பழங்குடி இனக் குழுவாய் வாழ்ந்த காலத்தில், கிடைத்ததை உண்டு, கிடைத்ததை உடுத்தி, கிடைத்த இடங்களில் உறைந்து வாழ்ந்தவன். சற்றே மேம்பட்டு ஆற்றங்கரை நாகரிகமாய், நில உடமைச் சமூகமாய் வாழத் துவங்கிய பின்னரே தனக்கான உணவை உருவாக்கிடவும், பாதுகாக்கவும் கற்றுக் கொண்டார்கள். நெருப்பின் பயன் பாடு உணரப் பட்ட பின்னரே உணவை பதப் படுத்தவும், சமைக்கவும் ஆரம்பித்தனர்.
இந்த வகையில் ஆறாயிரம் ஆண்டு பழமையான தமிழரின் உணவியல் வரலாற்றினை அலசுவதே இந்தத் தொடரின் நோக்கம். இங்கே நான் பகிர இருக்கும் பெரும் பாலான இந்த தகவல்கள் பழந்தமிழ் பாடல்களின் ஊடே சேகரிக்கப் பட்டவை. ஆறாயிரம் ஆண்டு பழமை வாய்ந்த தமிழர்களின் வரலாற்றில், கடைசி ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளின் தகவல்கள் மட்டுமே இந்த பாடல்களின் மூலம் நமக்குக் கிடைக்கிறது.
அதற்கு முந்தைய வரலாறுகள் எல்லாமே கல்வெட்டுக்கள், சாசனங்கள் மற்றும் செவிவழிச் செய்தியாகவும், ஊகங்களின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட செய்திகளே. இவற்றில் உணவியல் தொடர்பான தகவல்கள் குறைவாக இருந்தாலும் அவை சுவாரசியமானவை.
ஆதியில் தமிழனும் உணவிற்காக விலங்குகளை வேட்டையாடி அதன் இறைச்சியை பச்சையாகவும், காய வைத்தும், சுட்டும், சமைத்தும் உண்டதாக, புறநானூறு மற்றும் பெரும்பாணாற்றுப் படை போன்ற நூல்களில் அநேகக் குறிப்புகள் காணக் கிடைக்கிறது. அவற்றை ஒவ்வொன்றாக விளக்கப் புகுந்தால் தொடரின் நீளம் அதிகரிக்கும் என்பதால் இங்கே பாடல் குறிப்புகளை தவிர்த்திருக்கிறேன்.
ஒரு பக்கம் வேட்டைச் சமூகமாய் வாழத்துவங்கிய வேளையில், சமவெளிப் பகுதிகளில் உணவிற்காக கால்நடைகளை வளர்க்கவும் தமிழர்கள் தலைப்பட்டனர். இந்த காலகட்டத்தில்தான் உணவை உற்பத்தி செய்யவும் அதனை பாதுகாக்கும் முயற்சிகள் ஆரம்பம் ஆகியது. சமையல் செய்யும் முறையும் கூட இந்த கால கட்டத்தில்தான் துவங்கியது எனலாம்.
சமைத்தல் என்றால் என்ன?, தமிழர்கள் எப்படி சமைத்தார்கள்?
விவரம் அடுத்த பதிவில்....
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



7 comments:
mam,
i am waiting for next article.
revathy
"mirukaththotu" sernthu vaalumphothu manithanm manithanaaka irunthaan manithanaaka vaala eppoluthu katru kontaano antray "mirukama" maari vittaan
ஆவலாய் தொடருக்குக் காத்து இருக்கிறோம் .
I was wondering, if there was no cooking concept invented. Most of the women lifestyle would have changed. Men will be more responsible to bring or hunt food than women.
What a relief for women...:)
You are relying on westernised evolution history.. the eastern history, particularly the history of indian sub-continent is entirely different.. i request you to free yourself from this colonial construct, and see it from our own perspective..
Also you are using Tamil people as separate race, which is again wrong.. Agasthiar, tholkappiar, all are sidhars, who transcend beyond race and language..
தோழி ,
தமிழர்களின் நாகரீகம் பற்றய பதிவு மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது .மிக்க நன்றி
கற்கால மனிதன் நாகரீகம் அடைந்து மனிதனாக தனித்துவத்துடன் வாழ ஆரம்பித்தவுடன் நன்றாகத்தான் வாழ்ந்திருபபன்.அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.ஆனால் எப்பொழுது அந்த மனிதன் ஓரிடத்தில் நிரந்தரமாக தங்கி விவசாயம் போன்ற வேலைகளை செய்ய ஆரம்பித்தவுடன் பயிர்களை விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க இரவு காவலாளிகள் பதவி உருவாயிற்று. இது போலே ஒவ்வொரு பதவிகளும் தேவைக்கேற்ற வகையில் உருவாயிற்று. ஆனால் எப்பொழுது மனிதன் தன்னை சுற்றி எண்ண நடக்கிறது என்பதை கவனிப்பதை விட்டுவிட்டு தனது வேலை,தனது மனைவி மக்கள் என குறுகிய கண்ணோட்டத்தில் வாழ ஆரம்பித்து விட்டானோ அன்று முதல் மனிதனை மனிதன் சாப்பிடும் கலாச்சாரம் உருவானது.மனிதத்தோல் போர்த்திய விலங்குகள் நம்மிடையே உருவானது.அதற்கும் நமது சமூதாய பொறுப்பின்மையும் சோம்பேறித்ததனமும்தான் தான் காரணம்.அன்று மன்னன் காட்டுவிலங்குகளை வேட்டையாடி மக்களை காப்பாற்றினான்.அதுபோல் இன்று இந்நாட்டு மன்னர்களாகிய நாம், ஒன்றுகூடி மனிதவிலங்குகளை வேட்டையாடி மனித சமுதாயத்தை காப்பாற்றலாம்.
Post a Comment