சித்தர்கள் எந்த மதம்?

Author: தோழி / Labels: , ,


சித்தர்கள் தமிழைச் சேர்ந்தவர்கள், இந்து மதத்தவர்கள், அதிலும் குறிப்பாக சைவ மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாகவே கருதிக் கொண்டிருக்கிறோம். இது உண்மையாக இருக்க முடியுமா?, சித்தர் பெருமக்களை இத்தகைய அடையாளங்களுக்கு அடக்கி விடமுடியுமா?

இப்படி ஒருக் கோணத்தில் சித்தர் பெருமக்களை அணுகினால், விடை என்னவாக இருக்கும் எனத் தோன்றியதன் விளைவே இந்தப் பதிவு. என்னுடைய தெளிவு இறுதியானது இல்லை, எனினும் தெளிவை நோக்கிய ஒரு துவக்கப் புள்ளியாக இருக்குமென நம்புகிறேன். தவறுகளிருந்தால் பொருத்தருளவும்.

நம்மில் பலரும் சித்தர்கள் என்றால் சிந்தை தெளிந்தவர்கள், தன்னை உணர்ந்தவர்கள் என்பதாகவே அறிந்திருக்கிறோம். நிதர்சனத்தில் இது ஒரு மேலோட்டமான சிந்தனைப் போக்கு. என்னுடைய வாசிப்பனுபவத்தில் சித்தர் பெருமக்கள் ஓவ்வொருவரும் ஏதோவொரு வகையில் தனித்துவமானவர்களாக, இம் மாதிரியான பொது வரையறைகளுக்கு அப்பாற் பட்டவர்களாகவே இருந்திருக்கின்றனர்.

ஏற்கனவே நிறுவப் பட்ட மதம், இனம், சாதி, மொழி, சடங்கு, சாத்திரங்கள் என இவை எல்லாவற்றையும் தாண்டிய சம நோக்குப் பார்வை ஒன்றே இவர்களிடத்தே நாம் காண முடிகிற பொதுமைப் பண்பு. இப்படி இருக்கையில் எதன் அடிப்படையில் இந்தப் பெருமக்களை ஒரு மதத்திற்கோ, மொழிக்கோ, இனத்திற்கோ அடையாளமாய் காட்டிட முடியும். 

சித்தரியல் என்பது வரையறைகள் இல்லாத தனித்துவமான சுதந்திரம் நிறைந்த, உயர் வாழ்வியல் கலாச்சாரம். இந்து மதச் சூழலில் நாம் பார்க்கும் சித்தர் பெருமக்களைப் போலவே மற்ற பிற மதங்களிலும் இத்தகைய மேன் மக்கள் அநேகர் வாழ்ந்திருந்தனர். இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மிக நிச்சயமாக இவர்கள் அமானுஷ்ய மனிதர்கள் இல்லை. நம்மினும் எளிய வாழ்வியல் தத்துவங்களை முன்னிறுத்தி வாழ்ந்த மாமனிதர்கள். முன் தீர்மானங்கள் எதுவும் இல்லாமல் இவர்களை அணுக துணிந்தால் மட்டுமே இந்த நிஜம் நமக்குப் புலப்படும்.

நுணுக்கமான இந்த தத்துவ நிலையினை புரிந்து கொள்வதில் புள்ளியளவு பிசகு ஏற்பட்டாலும் கூட, அது மத எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு, நாத்திக வாதம் என்பன போன்ற நேரெதிர் பிம்பங்களை கட்டமைத்துவிடும் ஆபத்தும் இருக்கிறது. சித்தர்களோ அல்லது அவர்களையொத்த மற்ற பிற மதங்களின் மெய்யுணர்வாளர்களோ கடவுள் கோட்பாட்டினை நிராகரிக்க வில்லை. மாறாக மெய்யான தெய்வம் எதுவென தேடித் தெளிவதை முன் வைத்தனர். 

தேடல் என்பது தன் இருப்பினை உணர்ந்து, தன் சுற்றத்தை, அதன் இயல்பைக் குறித்த புரிதலின் வாயிலாக உயர் நிலையான மெய்யறிவினைக் கைக் கொள்ளுதல் என்பதாகவே இருந்தது. மேலான குருவின் வழி காட்டுதலோடு இந்த தேடலின் பாதை அமைகிறது. தன்னை உணர்ந்த மேலான சித்த நிலையில் அவர்கள் யாருடைய பிரதிநிதியும் இல்லை, அல்லது தம்மை முன்னிலைப் படுத்தும் தன் முனைப்பும் இல்லை. இதையே சித்தியடைந்த மேலான இறைமை நிலை என்பதாகிறது.

ஸ்தாபனங்களை நிராகரித்த இப் பெருமக்கள், ஒரு போதும் கடவுளையோ அவரின் தன்மையையோ மறுக்கவில்லை. மாறாக தம்மில் உறைந்த இறையை உணராதவர்களை ஏழைகள் என்கிறார் பட்டினத்தார்.

ஒன்றென்றிரு தெய்வம் உண்டென்றிரு
ஒன்றாய் உயிராய் உடல்தோறும் நீஇருந்தும்
என்றும் அறியார்கள் ஏழைகள்தாம் பூரணமே.

இதனையே திருமூலரும்...

அகம் புகுந்தான் அடியேற்கு அருளாலே
அகம் புகுந்தும் தெரியான் அருள் இல்லோர்க்கு
                             
இந்தக் கருத்தினை இன்னும் தீவிரமாய் சிவ வாக்கியர் பின் வருமாறு கூறுகிறார்.

கோயில் பள்ளி ஏதடா குறித்துநின்ற தேதடா
வாயினால் தொழுதுநின்ற மந்திரங்க ளேதடா
ஞானமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலா மிறையையே

திருமூலரின் இந்தப் பாடலும் இதனை வலியுறுத்தும்.

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் 
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில்கொண் டான்என்று
உடம்பினை யானிருந் தோம்புகின்றேனே

மனித வாழ்வியல் கூறுகளான அத்தனை துறைகளிலும் அவர்களின் தேடல்களும், அதன் தெளிவுகளும் நமக்குக் கிடைத்த பொக்கிஷங்கள். அவற்றை போற்றிப் பராமரித்து மேம்படுத்துவதே நாம் அவர்களுக்குச் செய்யும் மரியாதையாக இருக்கும். அன்பையே இறையாகக் கொண்டு, அகிலம் சிறக்க தம்மை அர்ப்பணித்த அப் பெருமக்களை மதங்களின் பிரதிநிதி என்பதை விடவும் மனிதர்களின் பிரதிநிதி என்பதே சாலப் பொருந்தும். 

மதங்களைத் தாண்டிய மனித நேயத்தை வலியுறுத்திய அப் பெருமக்களின் வழி நிற்பதில் பெருமை கொள்வோம்.

பிற் சேர்க்கை:

நண்பர்களே,

சித்தர்கள் இராச்சியம் வலைப் பதிவு இன்றோடு இரண்டாண்டுகளை பூர்த்தி செய்து, மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க இருக்கிறது. தொடரும் உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும், மேலான ஆலோசனைகளுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். 

எல்லாம் வல்ல குருவருளினால் மட்டுமே இத்தனையும் சாத்தியமாயிற்று.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

24 comments:

Blogger_urs said...

தோழி

3rd birthday..www.siththarkal.com

வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

My Mobile Studios said...

வாழுதுகள்

தமிழ் அமுதன் said...

இரண்டே ஆண்டுகளில் 2700 க்கு மேற்பட்ட ஃபாலோயர்கள், ஆறு லட்சத்தை நெருங்கும் பார்வையாளர்கள்...! பிரமிக்க தக்க சாதனை..!

Venkatesh said...

மேலும் இனிதே பயணிக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

revathy said...

வாழ்த்துகள் .மேலும் பல நூறு ஆண்டுகள் தங்கள் சேவை தொடரட்டும் .
ரேவதி

Kulasekar said...

My best wishes

arul said...

all the best

tamilvirumbi said...

தோழி ,
நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள். மனிதநேய மிக்கவர்கள் சித்தர்கள் என்ற கருத்து பற்றிய பதிவிற்கு மிக்க நன்றி

Ganesh said...

வாழ்த்துக்கள்

ursaro saro said...

உங்களது இத்திருப்பணி தொடர மென்மேலும் வாழ்த்துக்கள்....

www.unakulnan.blogspot.in

kimu said...

my best wishes - thozhi :)

KONAPPALA SETTY P RAJARAAM SETTY said...

உங்கள் சேவை தொடர சித்த மஹா புருஷர்கள் ஆசி கிடைக்க எல்லா வல்ல ஆண்டவன் அருள் புரியுமாரி வேண்டிகொள்கிறேன்

jegans said...

சித்தர்கள் இராச்சியம் தனது 3வது ஆண்டில் காலடி வைப்பதில் பெருமகிழ்சி.வாழ்த்துக்கள் தோழி.

immanantony said...

CONGRATS
AND MY BEST WISHES AND PRAYERS FOR THE DIVINE EFFORT

சின்னப்பயல் said...

வாழ்த்துகள் ..

Mohanraj Muruganandam said...

Very Thanks for your all posts in this blog.

LAV said...

இனிய தோழி,
தங்கள் சேவை மேலும் மேலும் வளர வாழ்த்துகிறேன்.
அன்புடன்,
LAV.

KARTHIK said...

god bless you

k balachandar said...

All are god`s wish,suceeds your spritual services

Netrikkan said...

Vazha! Valamudan!!

Bharath technocrats of textiles and garments said...

தோழி அவர்களுக்கு,

நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளும்.தாங்கள் தரும் தகவல்கள் பாராட்டுக்களுக்குரியவைகள். மேலும் தாங்கள் கூறியுள்ள கருத்தை " சித்தர்கள் எந்த மதத்தை சார்தவர்கள்" நான் ஆமோதிக்கிறேன்.சித்தர்களை பற்றி தாங்கள் கூறியுள்ள கருத்து மிக சரியானதே,தாங்கள் இதற்காக தயக்கம் காட்ட வேண்டியதில்லை. சித்தர்கள் எல்லோர்க்கும் உரியவர்கள்,அவர்களை இனம்,மதம் எனும் சிறிய விஷயங்களின் உள்ளே வரமாட்டாதவர்கள் , அவர்கள் இறையறிவாளர்கள் ,மெய்யறிவாளர்கள்,உண்மையான உண்மையை அறிந்தவர்கள்,நாமும் அவர்களை பின்பற்றுவோமேயானால் நாமும் உண்மையான உண்மையை அறியலாம்,தெளியலாம்,உணரலாம்,உணர்ந்தகாளே அதுவென ஆகலாம். இராகவஜோதீ .

suriya said...

தங்களின் தகவல் மேலும் வளருட்டும் நன்றி

Easy Way To Earn Money said...

தங்கள் சேவை மிக உயர்ந்த மற்றும் உன்னதமான சேவை . இரு ஆண்டுகள் அல்ல நூறு ஆண்டுகள் தொடர வாழ்த்துக்கள் - C.M.Suresh Kumar

vanji said...

வாழ்த்துக்கள் தோழி!!! தொடர்க உம் சேவை !!!

Post a Comment