படர்தாமரை, ஓர் எளிய தீர்வு!

Author: தோழி / Labels: ,

தோலில் ஏற்படும் தொற்று நோய்களில் முதன்மையானது “படர்தாமரை” எனப்படும் ஒரு வகையான தேமல் ஆகும். இது உச்சந்தலை, முகம், பிறப்பு உறுப்புகள் ஆகிய இடங்களில் படர்ந்து பரவும் தன்மையுடைய தொற்று நோயாகும்.

இத்தகைய தேமல் பரவிய இடங்களில் தோல் நிறமாற்றம் அடைந்து அடர் கருப்பு நிறமாகி விடும். தீராத அரிக்கும் தன்மை உடைய இதனை சொறிந்து விட்டால் அதிலிருந்து வெளியாகும் நீர்மத்தினால் இது மேலும் உடலின் மற்ற பாகங்களில் பரவிடும். பெரும்பாலும் உடல் சுத்தம் மற்றும் உடைச் சுத்தம் இல்லாதவர்களுக்கே இத்தகைய தொற்று உண்டாகிறது.

தற்போதைய நவீன மருத்துவம் இந்த பிரச்சினைக்கு நல்ல பல தீர்வுகளை அளிக்கிறது. இருப்பினும் இந்த நோய்க் கிருமிகள் உடலின் உள்ளுறையும் தன்மையுடவை என்பதால் தொடர் சிகிச்சையினால் மட்டுமே முழுமையான தீர்வு கிடைக்கும். இது செலவு பிடிக்கக் கூடியது. 

இத்தகைய தோல் வியாதிகளுக்கு சித்தர் பெருமக்கள் பல எளிமையான தீர்வுகளை முன் வைத்திருக்கின்றனர். அவற்றில் சிலவற்றை முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். அவற்றை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

இன்று படர்தாமரை பிரச்சினைக்கு தேரையர் அருளிய தீர்வு ஒன்றினை பார்ப்போம். தேரையர் வாகடம் என்னும் நூலில் இருந்து இந்தக் குறிப்பு எடுக்கப் பட்டது.

கொன்றைக் கொழுந்து தகரைவிதை குழலா வரைவேர் குளவிந்தம்
மனறத் துளசி திரிபலையும் மற்று மிலுப்பைப் புண்ணாக்கும்
ஒன்றக் கூட்டிப் பழமோரில் ஊறி யெடுத்தெலு மிச்சம்சாற்றில்
நன்றா யரைத்துப் பூசியிட நாடா படர்தா மரைதானே.

- தேரையர்.

கொன்றைக் கொழுந்து, தகரவிதை, ஆவாரைவேர், மஞ்சள், துளசி, கடுக்காய், தான்றிக்காய், நெல்லி முள்ளி, இலுப்பைப் பிண்ணாக்கு, ஆகியவற்றை சம அளவில் எடுத்து தூளாக்கிக் கொள்ளவேண்டும். பின்னர் இவற்றை பழைய மோரில் ஊறவைத்து எடுத்து,எலுமிச்சைச் சாற்றுவிட்டு நன்கு அரைத்துப் படர்தாமரை இருக்கும் பகுதிகளில் பூசிவர குணமாகும் என்கிறார்.

மேலே சொன்ன மூலிகைகள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கிறது. விலையும் மிக மலிவுதான். தேவை உள்ளவர்கள் தகுதியான சித்த மருத்துவரின் ஆலோசனை பெற்று இயற்கையான இந்த மருந்தினை நாம் வீட்டிலேயே தயாரித்து பலன் பெறலாம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

11 comments:

அருணையடி said...

எளிய நல்ல தீர்வு! முயற்சித்துப் பார்க்கலாம்!

tamilvirumbi said...

தோழி ,
தற்பொழுது ,உலக வெப்பமயமாதலின் காரணமாக ,நிறைய மக்கள் தூள் வியாதியால் துன்புறுகின்றனர்.மேலும் ,தாங்கள் கொடுத்த படர் தாமரை போன்று ,முகத்தில்
தவறான உணவு பழக்கங்களால் ,ஏற்படும்,பூஞ்சை எனப்படும் தோல் வியாதிக்கு ஏதேனும் சித்த மருத்துவத்தில் உள்ளதா?.எனது ,நண்பர் ஒருவருக்கு ,முகத்தில் உள்ளது .அவரால் , தாங்கமுடியவில்லை .அவரது ,முகத்தின் நிறமும் மாறுகிறது.இதற்கு,ஏதேனும் ,தீர்வு இருந்தால் ,தாங்கள் தெரிய படுத்த வேண்டுகிறேன் .மிக்க நன்றி .

Anonymous said...

வணக்கம் தோழி!
தலைப்புக்கேற்ப பின்னணி BACKGROUNDER நன்றாகத்தான் உள்ளது. ஆனால் அதிக நேரம் பார்க்கும் போது தலை வலிக்கிறது. புதிய பதிவுகளையாவது தயவு செய்து பின்னணியை கண்ணுக்கு குளிர்ச்சியான நிறத்தில் அமைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

Anonymous said...

பதிவுகள் அனைத்தும் நன்றாக உள்ளதால் நேரம் போவதே தெரிவதில்லை. மேலும் மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்

நன்றி!

பாலாஜி கண்ணன் said...

வணக்கம் தோழி, நாளை (23/02/2012)நம் வலைப்பூவிற்கு வயது மூன்று வாழ்த்துக்கள்,தாங்கள் எழுதவேண்டும் பல நூறாண்டு.எல்லாம் சித்தன் செயல்.சிவன் செயல்.

Smitha Prakash said...

Useful information. Please keep on posting.

Thanks!
Prakash
http://medicalinformationforyou.blogspot.in/

Banu Prasad said...

Hi Thozhi, Is there any cure for childhood epilepsy? My daughter is 4 years and seizures started at 5 months. She is still not able to fight it out. And regressed all her milestones. Now she is like a month old infant. Is there anyway I can reach you?

Siva Darma said...

Great stuff!
Great Blog!
Good Inspiration too!
Thanks for this blog.

My Blog: http://www.tradilife.com

ILMVM66 said...

Good Information

Unknown said...

மிக்க மகிழ்ச்சி... எனது மகனுக்கு படர்தாமரை இருக்கிறது... நீங்கள் சொன்ன ஆலோசனையை முயற்சி செய்து பார்க்கிறேன்... இன்ஷா அல்லாஹ்

Unknown said...

மிக்க மகிழ்ச்சி... எனது மகனுக்கு படர்தாமரை இருக்கிறது... நீங்கள் சொன்ன ஆலோசனையை முயற்சி செய்து பார்க்கிறேன்... இன்ஷா அல்லாஹ்

Post a Comment