சாயை என்ற சொல்லுக்கு உருநிழல், பிரியாத துணை என்பதாக அர்த்தங்கள் உண்டு. நம்முடைய நிழலையே நாம் பார்ப்பதன் மூலம் அதை உணர்வதையே சாயா புருஷ தரிசனம் என்கின்றனர். இந்திய யோக மரபில் இந்த சாயா தரிசனம் பற்றி நிறைய குறிப்புகள் காணப் படுகின்றன. நமது சித்தர் பெருமக்களின் பாடல்களிலும் கூட இத்தகைய குறிப்புகள் காணப் படுகின்றன. பத்திரகிரியார் பாடலொன்று பின் வருமாறு..
கண்ணின் ஒளி பாய்ந்ததுவும் கருத்தறிந்து கொண்டதுவும்
விண்ணின் ஒளி கண்டதுவும் வெளிப்படுவதும் எக்காலம்
கண்ணின் ஒளி பாய்ந்ததுவும் கருத்தறிந்து கொண்டதுவும்
விண்ணின் ஒளி கண்டதுவும் வெளிப்படுவதும் எக்காலம்
-பத்திரகிரியார்.
வெயில் நேரத்தில் கீழே விழும் நமது நிழலைப் பார்ப்பதில் பெரிதாக என்ன விசேடம் இருந்து விட முடியும் எனத் தோன்றுவது இயற்கையே... நிழலைப் பார்ப்பதில் விசேடமில்லை, அப்படிப் பார்த்த நிழலின் ஊடாக நம் சாயையை தரிசிப்பதில் தான் விசேடமிருக்கிறது. குண்டலினி யோகம் பயில்பவர்களுக்கு இது எளிதில் சாத்தியமாகும் என்கிறார்கள்.
சரி, இந்த சாயா தரிசனத்தை எப்படி பெறுவது?
மேகங்கள் இல்லாத காலைப் பொழுதில், எட்டு ம்ணி துவங்கி ஒன்பது மணிக்குள்ளான சமயத்தில், மேடுபள்ளம் இல்லாத சம தரையில் நமது நிழல் பக்கம் திரும்பி நின்று நம் காலடியில் இருந்து ஏழு முதல் ஒன்பது அடி தூரத்திற்கு நிழல் விழும் போது நமது நிழலை நன்றாக உற்றுப் பார்க்கவேண்டுமாம். இப்படி கண்ணிமைக்காமல் ஒரு நிமிடம் முதல் முப்பது நிமிடம் வரை பார்க்கலாம். பார்த்த பின்னர் அப்படியே மேலே தலையை நிமிர்த்தி சுத்த நீல ஆகாயத்தைப் பார்த்தால் அங்கே நமது உருவப் பிம்பம் அல்லது சாயை தோன்றுமாம்.
இப்படி இந்த சாயா தரிசனத்தை தொடர்ச்சியாக நான்கு முதல் ஆறு வருடங்கள் வரை செய்து வந்தால் நமது நிழலானது நம் கூட இயங்கும் இன்னொரு புருஷனைப் போல தோன்றுமாம். இப்படித் தோன்றிய பிறகு இந்த சாயா புருஷன் ஒரு ஆள் ரூபத்தில் நம்முடனே திரியும் என்கிறார்கள். நாம் படுத்தால் அதுவும் படுக்கும். நாம் எழுந்தால் அதுவும் எழுந்திருக்கும். நமக்கு வரும் நல்லவை கெட்டவைகளை முன்கூட்டியே அது உணர்த்தும். அது சரீர ஞானத்தையே ஒத்து இருக்கும் என்கிறார்கள்.
தொடர்ச்சியாக இதை செய்து வருகிறவர்களுக்கு எல்லா வகையான சித்துக்களும் வாய்க்குமாம். முக்காலத்தையும் உணர்ந்து சொல்லும் ஆற்றல் உடையவர்களாகி விடுவார்களாம். எல்லையற்ற பிரபஞ்ச சக்தியுடன் நாம் தொடர்பு கொள்ள உதவும் ஒரு விதமான உளவியல் பயிற்சியாக இது இருக்கக் கூடும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.சிலர் பௌர்ணமி நிலவு ஒளியிலும் இந்த சாயா தரிசனம் பார்ப்பதுண்டு. இதை மாயா புருஷதரிசனம் என்பார்கள்.
இத்தனை சிறப்பு வாய்ந்த இந்த சாயாபுருஷ தரிசனத்தை எளிதாய் பெற உதவும் மை ஒன்றினை போகர் அருளியிருக்கிறார்.
ஆம், அந்த விவரங்கள்.... அடுத்த பதிவில்.... காத்திருங்கள்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



23 comments:
very very good article mam.i love u mam.
S.Revathy M.pharmacy
vijayawada
nice thozhi..........
arumai
சாயா புருஷ தரிசனத்தில் ஆகாயத்தில் தெரியும் தரிசனத்தை வைத்து ஒருவருடைய ஆயுளை அறிந்து கொள்ள வழியும் உண்டு
அறிய தகவல் வாழுதுகள்,
நன்றி.
தோழி,
தங்களின் இன்றைய பதிவு ஆச்சரியமாகவும் ,அபூர்வமாகவும் உள்ளது.மிக்க நன்றி.
nalla seidi nadri
அரிய தகவல்கள்.. பலருக்கு உபயோகமாக இருக்கும் என எண்ணுகிறேன்.
http://anubhudhi.blogspot.in/
My uncle had done this already while he walking at morning he see's him at adjacent side and night while sleeping time he see's him next in the bed.
naama nizhal a paakum pothu background light aavum,nizhal dark aavum irukkum...athai imaikamal paartha pin suvarilo, vaanathilo num paarvai seluthinal pimbam therivathu saatharana vishyam thaan...neriya pugaipadam kuda irukku intha maathiri illusion create panna...aanal naan ninaitha saatharana vishyathula ivlo aacharyangal irukkaratha solli enaku puriya vaichathuku kodi nandrigal .....adutha pathipukaga kaathukitu irukken....mikka mikka Nandri Thozhi....
ஓம் சக்தி ,ஆன்மிக உண்மைகள் நிறைய உள்ளது .தீபத்தில் ,சுடடறில் தன்னை பார்ப்பது ,அதனுடன் பேசுவது ,வேறிடத்துக்கு போய் பார்த்து வரசொல்ல்வது ,என்ன்று பல நுணுக்கங்கள் உள்ளது.நல்லது ,காற்றில் பல உண்மைகள் மறைத்து இருப்பது போல ,பல உண்மைககளை தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு,நன்றி .
சாயா/மாயா புருஷ தரிசனம் பதிவு அற்புதம் இதுபோன்ற அறிந்த தகவள் பற்றி பிரர் கூறுவதைகாட்டிலும்
உங்கள் மின் பதிவில் பார்பதில் ஒரு அனந்தம் இருக்கத்தன் செய்கிறது
உங்கள் நுட்பத்திறுகு எனது நெஞ்சார்ந்த நன்றி வாழ்க வளமுடன்
nice
unmayagave natakkanum.......bramayila uruvaakkuna mara kalundrum paathukkonga.......
Hi Everybody Welcome to Siddha world
Hi Everybody Welcome 2 Siddha WORLD pirbanjatheepika ungalai alaithu sella irukkirathu ready for everyone {Without Dead}
yogam yo gam Yogathukkulleya Yogam undu aryamudiyumo ummal
Yo Come va vendru alaithal; varumo Yogam veesarithupar unmai unaralam
hi manam kalangiyathal vantha vinayayappa ithu b
manathai kellappa athu sollum nam yaar endru
சாயா தரிசனம் மிக எச்சரிகையுடன் செய்ய வேண்டும் வெறும் வயிற்றில் செய்ய கூடாது. இதை செய்யும் முன்பு அதற்கான மை தயாரித்து வைத்துக்கொள்ளவேண்டும். நம் நிழலை பார்த்துவிட்டு திடீரென ஆகாயத்தையோ சுவற்றயோ பார்த்தல் இது தெரியத்தான் வேண்டும் என்றார்கள். இங்கு பல பேர் அதை persistence of vision என நினைத்துகொண்டு, அதில் என்ன பிரமாதம் என்கிறார்கள். டிவியை அணைத்தப்பின் அந்த காட்சி சில வினாடிகள் தெரியுமே, அதுபோல் என்று சிலர் இங்கு நினைத்துவிட்டனர்.
மாடியில் நின்று பார்க்கும் பொது, நம்முடைய 10 அடி நிழலானது சிறிதாக தெரியும். அப்படி தெர்யும் நம் பிம்பம் பனைமரம் அளவுக்கு ஆகாயத்தில் தெரியும். அதில் தலை இல்லாமல் தெரிந்தால், நிழலின் சொந்தக்காரன் ஒரு மாதத்தில் இறப்பான். கைகளோ, வேறு எந்த பாகமோ இல்லாமல் தெரிந்தால், ஆறு மாதத்தில் இறப்பான். பிம்பத்தில் அவன் நெஞ்சு பகுதியில் ஓட்டை விழுந்து அதில் வெளிச்சம் தெரியுமானால் ஓராண்டில் மாண்டுபோவான் என்று சித்தர் பாடல் சொல்கிறது.
எதற்கு பார்த்து சஞ்சலப்படவேண்டும்..? வேண்டாமே!
tholi kurali viday pattri thodar solungal
mayajalam tharinthavargal irunthal ennai thodarbukolungal
Post a Comment