ஆண்மைக் குறைவு பற்றிப் பெரிதான அறிமுகம் தேவையில்லை என நினைக்கிறேன். உடலியல் ரீதியான ஏற்படும் இந்தப் பின்னடைவுகள் உருவாக்கிடும் உளவியல் சிதைவானது பல குடும்பங்களின் அவதிக்கும், அழிவுக்கும் காரணமாகி விடுகிறது.
ஹார்மோன் குறைபாடுகள் மற்றும் வாழ்வியல் சூழல் காரணங்களினால் உருவாகிடும் இந்த பிரச்சினைகளைப் பற்றி நம்மிடையே போதுமான விழிப்புணர்வு இல்லை. இதனால் பாதிப்புக்கு உள்ளாவர்கள், தங்களுக்கு ஏற்படும் இயல்பான தயக்கம் மற்றும் கூச்சம் காரணமாய் முறையான வைத்திய சிகிச்சையை எடுத்துக் கொள்ள முன் வருவதில்லை. இதனைப் பயன் படுத்திக் கொண்டு பல போலி வைத்தியர்கள் பொய்யான நம்பிக்கையை தூண்டிவிட்டு, பாதிப்புக்கு உள்ளானவர்களிடம் இருந்து பணத்தை கறந்து விடுவது காலம் காலமாய் தொடர்கிறது.
ஆண்மைக் குறைவை இரண்டு பெரும் பிரிவுகளில் அடக்கிவிடலாம். ஒன்று விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல், மற்றது உறவில் நாட்டமின்மை அல்லது இயலாமை என்பதாகும். இதற்கு நவீன மருத்துவம் அநேக தீர்வுகளை முன் வைக்கிறது. எனினும் இவை யாவும் செலவு பிடிக்கும் வைத்திய முறைகள். மேலும் இதற்கான பலனும் தொடர் சிகிச்சையின் மூலமே சாத்தியமாகும்.
ஆண்மைக் குறைவினை நிவர்த்தி செய்யும் பல வழி முறைகளை நமது சித்தர் பெருமக்கள் அருளி இருக்கின்றனர். மிகவும் எளிதான இந்த முறைகள் நல்ல பலனைத் தரக்கூடியவை என்றும் கூறியிருக்கின்றனர். அந்த வகையில் புலிப்பாணிச் சித்தர் அருளிய புலிப்பாணி ஜாலதிரட்டு என்னும் நூலில் கூறப் பட்டிருக்கும் ஒரு முறையினை இன்று பார்ப்போம்.
பாராப்பா சந்தனமுந் தேற்றான வித்தும்
பண்பான பூமிசர்க் கரையின் மூலஞ்
சேரப்பா பூனையென்ற காலி வித்துஞ்
செயலான முருங்கை வேர்ப்பட்டை கூட்டி
கூறப்பா வகைவகைக்கு விராகன் ரெண்டு
கொற்றவனே தானரைத்து தேங்காய் பாலின்
தீரப்பா சீனி சர்க்கரையும் போட்டுத்
திறமாகக் குடிப்பாயீ ராறு நாளாமே.
ஆமடா குடித்துவரத் தாது புஷ்டி
அப்பனே வீரியந்தான் விளையும் போது
தாமடா சூடுகள்தான் தணியும் பாரு
தளதளப்பாய் தேகமது காந்தி யுண்டாம்
வாமடா மங்கையரைப் புணர்ந்தா யானால்
வளமான மான்மதனோ விவனென் பார்கள்
தாமடா போகருட காடாட்சத் தாலே
நலமாகப் புலிப்பாணி பாடினானே.
சந்தனம், தேற்றான் கொட்டை, பூமிசர்க்கரைக் கிழங்கு, பூனைகாலி வித்து, முருங்கை வேர்ப்பட்டை என இவை ஒவ்வொன்றிலும் இரண்டு வராகன் எடை வீதம் எடுத்து கல்வத்தில் இட்டு, தேங்காய்ப் பால் ஊற்றி அரைத்தெடுக்க வேண்டுமாம். இதனுடன் அளவாக சீனிச் சர்க்கரையை சேர்த்து பன்னிரெண்டு நாட்கள் குடித்து வந்தால் தாது புஷ்டி ஏற்பட்டு வீரியம் உண்டாகும் என்கிறார். இதனால் உடலின் சூடு தணிவதுடன், தேகம் பொலிவாகுமாம். மேலும் இத்தகைவரைச் சேரும் பெண்கள் இவன் மன்மதனோ என வியந்து போவார்கள் என்றும் கூறியிருக்கிறார்.
இந்த வைத்திய முறையின் பலனாக விந்தணு எண்ணிக்கை அதிகரிப்பதுடன், உறவில் நாட்டமும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. இந்தச் சரக்குகள் எல்லாம் எந்த ஒரு நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கக் கூடியவை. இதில் குறிப்பிடப் படும் சீனிச் சர்க்கரை எதுவெனத் தெரியவில்லை. தேவை உள்ளவர்கள் அனுபவம் வாய்ந்த சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் இதனைப் பயன் படுத்தி பலன் பெறலாம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



17 comments:
Nandri thozi...
நண்பர்கள் சார்பாக மிக்க நன்றி.
பெங்களூர் விவேக்.
miga miga nalla pathivu intha kalathirku thevayana pathivu
தோழி,
தற்காலத்திற்கு ,தேவையான பதிவு.தற்காலத்தில்,குழந்தை இல்லாமைக்கு ,பெண்களைவிட ,ஆண்களால் தான் பிரச்சனை .ஏனென்றால் ,பதினைந்து வயதிற்குள்,
சகவாச தொடர்பால் ,மதுபானம் ,மற்றும் ,விலை மாதர்களுடன் புணர்ச்சி ,போன்றவற்றில் ஈடுப்பட்டு ,ஆண்மையை இழந்து விடுகின்றனர் .அதுதான் ,இன்றைய ,
சூழ்நிலையில் ,தமிழகத்தில் ,நடைபெறும் ,மணமுறிவில் ,பெரும்பங்கு வகிக்கிறது .தங்களின் ,சமயோசித பதிவு ,ஒரு நல்ல முடிவை தரும் என்று எதிர்பார்க்கிறேன்.
மிக்க நன்றி .
U R REALLY THOZI TO ALL.
super
வணக்கம் தோழி அருமையான பதிவக்கு நன்றி..
''இரண்டு வராகன் எடை'' வராகன் என்பது என்ன?
nanri thozhi ! viragan edai enbathai gramil sollavum. please
I have white patches in my legs, it says due to cells died in my body the natural colour is visibily coming. How to cure it and to stop spreding the same.
@Nagulesh
1 வரகானெடை -- 4 .16 கிராம்
very nice advise by Mohandass, Manapparai
Seeni entralum sarkkarai entralum ontru thaan
அன்புள்ள தோழி,
கரும்பு, பேரீச்சம் பனை,'சாகோ' எனப்படும் பனை, தென்னையில் இருந்தும் வெல்லம் தயாரிக்கப்படுகிறது. சீனிச்சர்க்கரை என்பது வெல்லத்தைத்தான் குறிக்கிறது.
பழைய குழந்தைப் பாட்டில் கூட,
’சீனிச்சர்க்கரை கட்டி
வாய் சிவந்த பவளப் பெட்டி’ என்ற வரிகள் வரும். இது அச்சு வெல்லத்தைக் குறிக்கிறது.
அன்புடன்,
வ.க.கன்னியப்பன்
please sent photos of putam in my id.
elavarasan.d1@gmail.com
please sent photos of putam in my id.
elavarasan.d1@gmail.com
Very useful advise. Thanks
R.Chandran, Lucknow (u.P.)
very use full msgs thanks. my friend thozi
Post a Comment