கீழ்க்காய் நெல்லி கற்பம்!

Author: தோழி / Labels: , , ,


நமது உடலை மூப்பு, பசி, பிணி போன்றவைகள் அண்டாது நீடித்த ஆயுளோடும், இளமையோடும் வைத்திருக்க வேண்டி சித்தர் பெருமக்கள் பல்வேறு கற்ப வகைகளை அருளியிருக்கின்றனர்.பொதுவில் இவை மருத்துவ காயகற்பம், யோக காயகற்பம் என இரு பிரிவாக வகைப் படுத்தப் பட்டிருக்கிறது. இது தொடர்பில் முன்னரே பல மருத்துவ காயகற்ப வகைகளைப் பற்றி இந்த பதிவின் ஊடாக பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இன்று மற்றொரு எளிய கற்பவகை பற்றிய தகவலைப் பார்ப்போம்.

கருவூரார் தனது வாதகாவியம் என்னும் நூலில் கீழ்க்காய் நெல்லி கற்பம் பற்றி பின் வருமாறு விளக்குகிறார்.

பூசமுடன் குருவாரங் கூடும் நாளில்
  புகழ் பெறவே கற்பமது கொள்வாயப்பா
வாசங்கீழ் காய் நெல்லிச்ச மூலந்தன்னை
   வளம்பெறவே நிழல்தனிலே வுலர்த்திக் கொண்டு
நேசமுடன் சூரணமே செய்து பின்பு
    நெய்தேனுஞ் சீனியுமொன் றாகக்கூட்டி
ஆசையுடன் தானருந்தக் காயசித்தி
    யாகுமிது கற்பமுறை யிதுதான் சொன்னேன்.


சொன்னேன்நான் பத்தியங்கள் நெய்யும் பாலும்
     சோறுமல்லல் மற்றொன்று மாகா தப்பா
மன்னனே அரைவருடங் கொண்டாயாகில்
     மகாகுட்டம் பதினெட்டுந் தீர்த்தே போகும்
நன்னயமா யொருவருடங் கொண்டா யானால்
      நல்லமதி புத்தியது மயங்கா தப்பா
என்றுபதி னாறான வயதுபோல
      இருநூறு வயதுவரை வலுமை தானே.


கீழ்க்காய் நெல்லியின் மூலத்தை எடுத்து நிழலில் காயவைத்து சூரணமாக செய்து கொள்ள வேண்டுமாம். (மூலம் என்பது பச்சையாக பிடுங்கப் பட்ட வேர் ஆகும்.) பின்னர் அத்துடன் சர்க்கரையும், நெய்யும், தேனும் சம அளவில் சேர்த்து சுண்டைக்காய் அளவில் உருண்டகளாக உருட்டிக் கொள்ள வேண்டுமாம்

பூச நட்சதிரமும் வியாழக்கிழமையும் சேர்ந்து வரும் நாளில் இந்த உருண்டையை உண்ணத் தொடங்க வேண்டுமாம். இப்படி இந்த உருண்டையை தொடர்ச்சியாக ஆறுமாதம் உண்டால் மகா குட்டங்கள் எனப்படும் பதினெட்டு வகை நோய்களும் தீரும் என்கிறார்.. இதையே தொடர்ந்து ஒரு வருட காலம் உண்டுவந்தால் பதினாறு வயது போல் இளமையுடனும், மதி நுட்பத்துடனும் இருநூறு வருடங்கள் வலிமையுடன் வாழலாம் என்கிறார் கருவூரார்.

இந்த காய கற்பம் உண்ணும் நாட்களில் பத்தியமாக நெய்யும், பாலும், சோறும் தவிர வேறு எதனையும் உட்கொள்ளக்கூடாது என்றும் வலியுறுத்துகிறார்.

எளிய கற்ப வகைதானே!

Post a Comment

11 comments:

revathy said...

really it is very good.thankyou
s.revathy
9701086905

149 said...

இந்த அற்புதமான முயற்ச்சிக்கு என்னுடை பணிவான வணக்கம்.

தீனதயாளன்

Remanthi said...

சொல்லுவதற்கு வார்த்தைகள் இல்லை !!! அருமை!!!

krishna said...

காயகல்பம் நன்று. பத்தியம் சற்று கடினம்போல் தெரிகிறதே.

jahubar said...

நல்ல தகவல் நன்றி...நன்றி

ராஜ்மாதவன் said...

கீழாநெல்லிக்கு இவ்வளவு பலன் உண்டா? ஆச்சரியமாக உள்ளது.

tamilvirumbi said...

அரிய பகிர்வு .இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் ,என் அன்பு தோழிக்கு உரித்தாகுக .

Jeeva said...

Is Kizha-nelli and Kizh-kai-nelli same?

தமிழ் ஜோதிடம் said...

ஞானம் என்பது பல பிறவிகளை கடந்த பின் வருவது . ஆக ஆத்மாவுக்கு அழிவில்லை . அப்படியெனில் ஒவ்வொரு முறை ஆத்மா உருமாறும் பொழுதும் ஞானம் மட்டும் ஆத்மாவுடன் கலந்தே இருக்கிறதோ ! ஏனெனில் பலவகையான ஞானம் பலவகையான ஆத்மாவின் பயணத்தில் பல வடிவங்களில் ஒன்று சேர்வதாலும் உடன் வருவதாலும் மட்டுமே கீழே கொடுக்கப்பட்டுள்ள வெப்சைட் போன்று மனிதர்களால் பகிர்ந்து கொள்ள முடிகிறது.

இந்த வெப்சைட் ஒரு இலங்கை தமிழ் பெண்மணியின் படைப்பு . என்னே அற்புதம் இவரின் ஞானத்தின் முதிர்ச்சி என்னவாக இருக்கும் என்று என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை

kimu said...

SYNONYMS
Sanskrit : Mahidhitriki, Bhhumyimalaki, Bahuphali
Assamese : Bhuin Amla
Bengali : Bhumamla, Bhumi amalaki
English : --
Gujrati : Bhoi Amali, Bhony amari, Bhonyamali
Hindi : Bhui Amala
Kannada : Nelanelli
Kashmiri : Kath
Malayalam : Kizanelli, Keezhanelli, Ajjhada
Marathi : Bhuiawali
Oriya : Bhuin Amla
Punjabi : Lodhar
Tamil : Kizhukai nelli, Kizanelli
----------------------------------
Telugu : Nela usirika
Urdu : --

MALA said...

Dear Thozhi,
During this pathyam can we drink water?
Thanks

Post a Comment