சித்தர் பெருமக்களின் உறைவிடங்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கப் புகுந்தால், மூன்று வகையான தகவல்களே நமக்கு கிடைக்கின்றன. ஒன்று அவர்கள் ஜீவசமாதி அடைந்த இடங்கள், மற்றது அவர்கள் தங்கியிருந்த குகைகள், மூன்றாவது அவர்களது ஆசிரமங்கள் பற்றிய விவரணைகள்.
முந்தைய சதுரகிரி மலை பற்றிய தொடருக்காக, சதுரகிரியில் அமைந்துள்ள பல்வேறு சித்தர் பெருமக்களின் இருப்பிடத் தக்வல்களை தேடி தொகுத்திடும் போது அவர்கள் வாழ்ந்திருந்த குகைகள் பற்றிய தகவல்கள் மட்டும் விரிவாக குறிக்கப் பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. மேலும் இந்தக் குகைகளின் அமைவிடங்கள் யாவும் சீரான ஒரு தொடராக ஒன்றிற்கொன்று அணுக்கமாய் இருந்ததும் ஆர்வத்தை தூண்டுவதாக இருந்தது..
அந்த மலையில் இயற்கையாகவே இப்படி குகைகள் அடுத்தடுத்து இருந்திருக்குமா, அல்லது செயற்கையாக தங்களுக்கான குகைகளை அமைத்துக் கொண்டிருந்தனரா என்ற கேள்வியும் எழுந்தது. சமீபத்தில் அகத்தியர் அருளிய “அகத்தியர் பரிபூரணம்” நூலில் வேறொரு விவரம் தேடிக் கொண்டிருந்த போது கிடைத்த இந்தத் தகவல் மிக ஆச்சர்யமானதாக இருந்தது. அதாவது சித்தர் பெருமக்கள் செயற்கையாகவே குகையினை உருவாக்கும் கலையினை அறிந்திருந்தனர் என்பதே அந்த தகவல்.
அகத்தியரின் அந்த பாடல்கள் பின்வருமாறு..
மகத்தான புலத்தியமா ரிஷியேகேளு
பேசவொண்ணா அந்தரங்க உண்மைதன்னை
பெரிதான எக்கியமா முனிதான்சொன்னார்
நேசமுடன் மலைகளிலே குகையுண்டாக்க
நீமகனே மனதுகந்த மலையிற்சென்று
பாசமுடன னால்புறமுஞ் சுத்திப்பார்த்து
பதிவான யிடமதிலே குகைதான்செய்யே
குகையறிந்து செய்வதற்கு வகையைக்கேளு
குருவான பூனீரு கல்லுப்போடு
தகையாத கரியுப்பு வெடியுப்யுத்தான்
சார்வான நவாச்சார மன்னபேதி
பகையான மலைபேதி மாங்கிசபேதி
பத்தியுள்ள கல்நாதம் கல்மதந்தான்
புகையாத அரபொடியுங் கல்காந்தம்சிங்கிட்டம்
புண்ணியனே சரக்குவகை பதிமூன்றாச்சே
ஆச்சப்பா சரக்குவகை பதிமூன்றுந்தான்
அப்பனே சமபாகம் நிறுத்துக்கொண்டு
பாச்சப்பா கல்வமதில் பொடித்துநன்றாய்
பருசான யிரும்பினுட தாளிசேர்த்து
நீச்சப்பா யானைபரி கத்தம்விட்டு
நிசமான புலிகரடி ரெத்தம்வார்த்து
வாச்சப்பா கொள்ளவித்த தண்ணீர்விட்டு
மார்க்கமுடன் நவ்வலுட கம்பால்கிண்டே
கிண்டிநன்றாய் ரவியில்வைத்து தெளிவைநன்றாய்
கிருபையுட னத்தெளிவை மலைமேலூத்த
சுண்டுநன்றாய்ச் சுவடியது உவடுபோலே
சுத்தமுடன் பொங்கியது உப்பாம்பாரு
கண்டிதமாய் நீருண்டு கல்லுப்புப்போல்
கசிந்துமிக உருகுமடா அந்தவேளை
தொண்டதுபோல் கூந்தாளஞ் செய்துகொண்டு
திரமாக வெட்டியெடு குகைபோல்தானே
தானான உவர்நீரைப் பின்னும்விட்டு
தன்மனதுக் கேற்கவே குகைதான்செய்து
மானாகேள் குகையதுவும் நன்றாய்ச்செய்து
மகத்தான உவர்நீங்க வகையைக்கேளு
தேனான மதுஉடனே தண்ணீர்பாலும்
சிறுகரந்தைச் சாத்துடனே சேர்ந்துகொண்டு
கோனான குகையைநன்றாய்க் கழுவிப்போட்டால்
கொடுமையுள்ள உவர்நீங்கித் திறக்கும்பாரே
பாரப்பா யிவ்விதமாய்க் குகைதான்செய்து
பத்தியுட னதிலிருந்து தவமேசெய்வாய்
நேரப்பா தனித்திருந்து தவமேசெய்தால்
நினைவதிலே பாய்ந்துரவி யொளிதான்காணும்
சாரப்பா தனித்திருந்து ஒளிதான்பார்க்க
தலைமலைகள் கெவிகள்வனம் தனில்சென்றார்கள்
காரப்பா கண்ணொளியைக் கண்ணால்பார்க்க
கருத்துறவே தனித்திருந்து கண்ணைப்பாரே.
வாசி நிலை அறிந்து சிவ யோகம் செய்வதற்கான அந்தரங்க உண்மை ஒன்றினை எக்கியமகா முனிவர் தனக்குச் சொன்னதாகவும், அதனை அகத்தியர் தன் மாணவரான புலத்தியருக்கு சொல்வதாக இந்த பாடல்கள் அமைந்திருக்கின்றன. மனதிற்குப் பிடித்த மலைக்கு சென்று, நான்கு பக்கங்களும் நன்றாக சுற்றியலைந்து தகுதியான இடத்தை தெரிவு செய்து கொள்ள வேண்டுமாம். அப்படி தெரிவு செய்த இடத்தில் குகையை நாமே அமைத்துக் கொள்ளலாம் என்கிறார்.
பூநீர், கல்லுப்பு, கரியுப்பு, வெடியுப்பு, நவச்சாரம்,
அன்னபேதி, மலைபேதி, மாங்கிசபேதி, கல்நாதம், கல்மத்தம், அரப்பொடி, கற்காந்தம், சிங்கிட்டம் ஆகிய சரக்கு வகைகள் பதின்மூன்றையும் சம அளவாக நிறுத்து எடுத்து, அவற்றை கல்வத்தில் போட்டு நன்றாக பொடித்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் அவற்றை பெரிய இரும்புத் தாளி ஒன்றில் போட்டுக் அத்துடன் யானைபரிகந்தம் விட்டு, புலிகரடி ரத்தம் விட்டு, அத்துடன் கொள்ளு அவித்த நீரையும் விட்டு நாவற் கம்பால் நன்றாகக் கிண்டி, இந்தக் கலவையை வெய்யிலில் வைக்க நன்கு தெளிந்து விடுமாம்.
பின்னர் தெளிந்த இந்த திரவத்தை எடுத்து பாறையில் குகை செய்ய வேண்டிய பாகத்தில் ஊற்ற வேண்டுமாம். அப்படி ஊற்றியதும் ஊற்றப்பட்ட பகுதியானது சுவடு போல பொங்கி உப்பாகுமாம். அந்த உப்பானது நீரில் கரைந்து கொண்டிருக்கும் கல்லுப்பைப் போல கசிந்து உருக்குமாம். அந்த நேரத்தில் தேவையான இடத்தை குறித்துக் கொண்டு. குறித்த பகுதியை குகை போல வெட்டியெடுக்க வேண்டும் என்கிறார்.
வெட்டியெடுக்க முடிந்த அளவு வெட்டியெடுத்த பின்னர் மேலும் தேவைப்பட்டால் இன்னும் அந்த திரவத்தை ஊற்றி, மேலும் ஆழமாக குகையை வெட்டிக் கொள்ளலாம் என்கிறார். பின் மனதிற்கு குகையின் அளவு சரியானது என்று தோன்றியதும். அந்த நிலத்தில் கல்லுப்புபோல ஏற்பட்ட கசிவு தன்மையை நிறுத்திடவும் வழி சொல்கிறார் அகத்தியர்.
தேனுடன் தண்ணீரும் பாலும், சிறுகரந்தை சாறும் சம அளவில் சேர்த்து குகையை நன்றாக கழுவி விட்டால் கொடுமையான அந்த உவர் கசிவு தன்மை நீங்கிவிடுமாம்.இப்படி குகையை செய்தபின் மன உறுதியுடன் அந்த குகையில் தனியாக இருந்து தவம் செய்தால் மனது ஒருமைப்பட்டு, சூரிய ஒளி போல் ஒரு ஒளியை புருவ மையத்தில் காணலாமாம். அப்படியான ஒளியை தரிசிக்கவே சித்தர்கள் வனங்களை நாடிச் சென்றார்கள் என்றும் சொல்கிறார். அத்துடன் அந்த ஒளியைப் பார்க்க தனிமையில் இருந்தே தவம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.
ஆச்சர்யமான தகவல்தானே!, பாறைகளை உடைக்காமல் அவற்றை இளகச் செய்து தோண்டி எடுக்கும் தொழில் நுட்பத்தினை நமது முன்னோர்கள் பயன் படுத்தியிருக்கின்றனர். இந்த தொழில்நுட்பத்தை ஆய்வு செய்து மேம்படுத்தியிருந்தால் அதன் பயன் எத்தகையதாக இருந்திருக்கும். இன்றைய நவீன தொழில்நுட்பங்களுக்கு எந்த விதத்திலும் குறைவில்லாத இத்தகைய தொழில் நுட்பங்களை ஆய்வு செய்து மேம்படுத்தாதது நம்முடைய தவறுதானே!
ஆர்வமுள்ளோர் இந்த திசையில் பயணிக்கலாமே!!
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



24 comments:
அருமை தோழி
thozhi,
siththarkal ariyatha visayam yethum illai, anal sitharkalin athisayam siththarkal vazhntha kalangal mattumae,entraiya kalathirku sathiyam akuma illa sonnalum nampuvarkala, seithu kattinalum palithu viduma thozhi sollungal.................
வணக்கம் தோழி பலஇடங்களில் உள்ள குகைகள் பற்றி நான் கேள்விபட்டுளேன் அதை எல்லாம் இவ்வாறுதான் உருவாக்கி இருப்பர்களோ என்று எண்ண தோன்றுகிறது மிகவும் ஆச்சரியமான தகவல்
அருமையான பதிவு.
நன்றி.
அருமை. வாழ்த்துக்கள்.
thozi,
arumaiyana visayam sitharkal pala arputhangalai seythu ullanar ithai nam seythal sollungal thozi.................
உங்களுடைய முயற்சிக்கு என்னுடைய முதற்கண் வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.
தீனா
கரடிபுலி இரதத்ம், உயிர் கொலை சித்தர்கள் அனுமதிகின்றர்களா ???
Iraivan umakkum inda pathivugalai vasippavargalukkum iga para sowbakiyangalai vazhangatum.
RaaKee
this news about making a cave is new
Hi Thozhi,
Siththarkal jeeva samathi adaintha idathai koora mudiuma?
ange selvathanal ena payan..
Patanjali muni
Anbudan
Naveen
முகநூல் குழுமத்தில் நண்பர் ஒருவரின் கேள்வி இது, அனைவருடன் பகிர்ந்து கொள்ள வேண்டி பின்னூட்டத்தில் கேள்வியையும், கேள்வியையும், எனது தெளிவினையும் பதிகிறேன்..
அவருடைய கே(லி)ள்வி இது..
Vinayaga Sundar கற்பனைக்கு ஒரு அளவே இல்லையா!மருந்திற்கு குகை செய்வது எப்படி என்று ,அகஸ்தியர் சொன்னால் ,தவத்திற்கு குகை தோண்டுவது என்று இடுகை இடும் பொய்யான தோழியே!உனக்கெல்லாம் இது தேவையா!
நானுணர்ந்த தெளிவு இது...
இரசவாதம் மற்றும் மருந்து தயாரிப்புகளின் போது தேவையான மூலகங்களை உருக்க பயன்படும் ஒரு நுட்ப முறைக்கு குகை என்று பெயர். இந்த குகைகள். இரண்டு வகைப்படும்
1 - பஞ்ச சுண்ணக்குகை
2 - பஞ்ச பூதக்குகை.
இதைத்தான் நீங்கள் குகை என சொல்ல வருகிறீர்கள் என நினைக்கிறேன். மேலே பதிவில் கொடுக்கப்பட்ட தகவலுக்கான ஆதாரமாய் பாடலைக் கொடுத்திருக்கிறேன். பாடலின் வரிகளை தாங்கள் படித்திருந்தால் பொருள் எளிதில் விளங்கியிருக்கும்.
"வாசிநிலை கண்டுசிவ யோகஞ்செய்ய"
"நேசமுடன் மலைகளிலே குகையுண்டாக்க"
"பாரப்பா யிவ்விதமாய்க் குகைதான்செய்து
பத்தியுட னதிலிருந்து தவமேசெய்வாய்"
இவைகளுக்கு நான் விளக்க்ம் சொல்லித்தான் தாங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்கிற அவசியமில்லை என நினைக்கிறேன். மேலும் எனது பதிவுகள் என்பது தகவல் பகிர்வே, இவை இறுதியானவை அல்ல மேலதிக ஆய்வுகளும், விவாதங்களும் தேவை என்றே கூறியிருக்கிறேன். தங்களின் கருத்துக்கு நன்றி.
தோழிக்கு ஒரு வேண்டுகோள்..! தங்கள் இந்த தளம் பலருக்கு மிகவும் பயனுள்ளதாய் அமைந்துளளது..! பல தரபட்டவர்கள் படிக்கின்றார்கள்..! ஆனால் சிலர் வேண்டுமென்றே கிண்டல்செய்யும் தொனியுடன் கருத்து தெரிவிப்பதற்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை..! அவர்களின் கருத்துகளை வெளியிட்டு அதற்கு நீங்கள் பதில் சொல்வது மற்றவர்களுக்கு இடையூறாகஇருக்க கூடும் .!எனவே இவற்றை தவிர்த்து விடலாமே..!
@தமிழ் அமுதன் Well said.thanks
Nalla Thagaval.
Namadhu thozhar satheesh: Siththa perumakkal uyir kolai seivadhillai. karadipuli raththam enbadhu veru oru mooligai alladhu oru maraththin ver patri kooda irukkalam. Namadhu badluck siththa perumakkalin maruthuva mattrum mooligai korippu azhindhu vittadhu. Avai irundhirundhal pala adhisayangal nadandhirukkum.
Nandri
C.R.Bala
தோழி ,
தங்களின் பதிவு மிகவும் அரிய தொழில் நுட்பங்களை ,நமது பழம் தமிழர்கள் ,பயன்படுத்தியது ,மிகவும்
அரிதானது..அது சாதாரண மனித முயற்சிக்கு அப்பாற்பட்டது .சித்தர்களின் ,தொழில் நுட்பக்கலை,
நம்மால் அறியமுடியாதது மட்டும் அல்ல .சில புல்லுரிவிகள்,தவறாக பயன்படுத்தி விட இயலும் என்ற
காரணமும் இருக்கலாம்.மிக்க நன்றி .
@CRB, Thanks for your information, this is the limitation of our human logic/brain. We need Guru to remove our darkness and show the light.
good creative critics
use full
sitharkal saivathaiae virumpuvar avarkal eppadi puli rathathai eadukka solluvarkal ....... mannikkavum villakkam tharunkal ............by s.vaithilingam tenkasi
it is very use ful site whoever to now who i am and to reach sittharkkal way is very nice.....thanks for the useful work to all.
ungal thagavaluku nandri nandri
I APPRECIATE THE (NEGATIVE) POSTER SUNDAR AND YOUR JUSTIFICATIONS.THIS WILL INCREASE OUR EFFICIENCY TO DO THIS ACTIVITY MORE. THANKS --- KUMAR M
It's really intresting
Post a Comment