பெண்கள்... வழுக்கை... தேரையரின் தீர்வு!

Author: தோழி / Labels: , ,


முடி உதிர்வது பற்றிய கவலை அநேகமாய் எல்லாப் பெண்களுக்குமே உண்டு. இது தவிர்க்க முடியாதது. இதற்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பல்வேறு காரணங்கள் உண்டு. பெரும்பாலும் பொட்டு, பொடுகு ஏற்படுவதன் மூலமே அதிகமாய் முடி உதிர்கிறது.

டைபாயிடு சுரம் எனப்படும் பித்த கபவாத சுரம் வந்து குணமான பின்னரும் பெரிய அளவில் முடி உதிரும். இதனால் அக்காலத்தில் பித்தகபவாத சுரம் வந்து குணமான உடன் மொட்டை அடிக்கும் பழக்கமும் இருந்தது. மொட்டை அடித்தால் மட்டுமே கருகருவென புது முடி வளருமாம். இல்லையேல் ஆங்காங்கே முடிஉதிர்ந்து திட்டுத்திட்டாய் வழுக்கையாகி விடுமாம்.

இப்படி முடி கொட்டி வழுக்கைத் தோற்றமுள்ள பெண்களுக்கான தீர்வு ஒன்றினை தேரையர் தனது “தேரையர் வைத்திய காவியம்” என்னும் நூலில் அருளியிருக்கிறார்.

காரு நாய் கரிச்சான்பட்டை யார்பலம்
பாரு பேருறை யார்பலம் வெள்ளுள்ளிச்
சேரு வாய்பலஞ் சேர்த்து நறுக்கியே
ஏரு வாய் நாழி யெள்ளெண்ணே யூற்றிடே.


ஊர்த்திடுங் கதிரோன் புட மேனிதம்
போர்த்திடு மிரு போதுமோ ரேழுநாள்
சேர்த்திடு மயிர் சேர முளைத்திடு
மேர்த்திடும் பத்திய மில்லைக் கார்த்திடே.

நாய் கரிச்சான் பட்டை ஆறுபலம், பேருறை ஆறுபலம், வெள்ளுள்ளி ஒருபலம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து நறுக்கி ஒருபாத்திரத்தில் போட்டு அதனுடன் ஒரு நாழி அளவு எள்ளெண்ணெய் அதில் சேர்க்கவேண்டுமாம் (ஒரு பலம் என்பது முப்பத்தி ஐந்து கிராம் ஆகும்). 

பின்னர் எள்ளெண்ணையுடன் மருந்துகளை வெயிலில் வைத்து சூரியப் புடமிட்டு சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டுமாம். இப்படி சேகரித்த இந்த தைலத்தை வழுக்கையான இடத்தில் காலை, மாலை என இரு வேளையாக, ஏழு நாள் வரை தேய்த்து வர அந்த இடத்தில் புதிய முடி முளைக்கும் என்கிறார்.

இதற்கு பத்தியம் எதுவும் சொல்லப் படவில்லை. இந்த சரக்குகள் எல்லாம் தற்போது எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது. விலையும் குறைவுதான். வீட்டிலேயே நாம் தயாரித்துக் கொள்ள முடியும். தேவையுள்ளோர் தகுதியுள்ள சித்த மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று பயன்படுத்திடலாம்.

இந்த முறையில் ஆண்களின் வழுக்கைத் தலையில் முடி வளரவைக்க முடியுமா என்பது தெரியவில்லை ஆர்வமுள்ளோர் இந்த திசையில் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளலாமே!.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

21 comments:

Ki.Ilampirai said...

முடி அழகு முக்கால் அழகு.பல் அழகு பாதி அழகு.கால் அழகு கால் அழகு.நெற்றி அழகு நிறை அழகு.இப்படி பெண்களிடம் எதிர்பார்ப்பர் பெரியவர்கள்.ஆக முக்கால் அழகைப் பெற வேண்டுமெனில் 'தேரையார்' கூற்றைக் கேட்கவேண்டும்.வள்ளுவம் 'பெரியாரைத் துணை கோடல்'எனக் கூறியதுவும் இதைத்தானே.

tamilvirumbi said...

தோழி ,
தங்களின் இந்த பதிவு வளுக்கயர்களுக்கு ஒரு வர பிரசாதம் .மிக்க நன்றி.

geethasmbsvm6 said...

vengaya charum thalaiyil theykkalam.

geethasmbsvm6 said...

to continue

மதுரை சரவணன் said...

NALLA VISAYAM.. AAYVUKKU THALATHTHAIYUM AMAITHTHAMAIKKU VAALTHTHTUKKAL

piravipayan said...

தோழி
மிக அருமையான விசயமிது ஆனால் சில சதுரகிரி குகைகளை நான் பார்க்கும்
போது அவை மிக சிறியதாக ஒருவர் நுழைய மிகவும் கஷ்டப்படவேண்டும்
மேலும் அவை சிறியதாக இயற்கையாக அமைந்தது போல் இருக்கும்

தோழி அப்படியே நரை முடி மறைக்க சாயம் இருந்தால் சொல்லவும்

Thej aswini said...

Oru Nali...yendral evalavu?

THIRUMAL said...

very nice

bharathi said...

sagothari, ungalukku mail panninal "Delivery to the following recipient failed permanently" endru varugiradu. thangalukku agathiar diyana sulogam therindal sollungalen.

bharathi from chennai.

bharathi said...

nandri thozhi. agathiar diyana sulogam thangalukku therindal ippagudiyil sollungalen. or yaridamavadu kettu sollungalen.

bharathi said...

sagothari, ungalukku mail panninal "Delivery to the following recipient failed permanently" endru varugiradu. thangalukku agathiar diyana sulogam therindal sollungalen.

bharathi from chennai.

dhana1973 said...

oru nazhi alavu yendral yevalavu

Ram said...

Madam, I have checked the herbals which you mentioned even in the shop in the Rasappa chetty street. But they dont know the names you mentioned. Please tell me the current names of these herbals

Ram said...

madam, the names which you mentioned are not available even in rasappa chetty street. I think the names has been changed . Could you tell me the current names of the herbals you mentioned in this.

Thanigai said...

vellulli enbathu vellai poondu thaaney???

Priya D said...

pl tell the pittai name in normal english

prince said...

Dear
Nai karichan and peruraiyal are siththar paripaashai, cannot be understood.

A.T.ARASU

EZEE SHOP said...

tozhy,

Can i get those herbs name in english. Can't find.

Thank you

sri said...

Any remedies for grey hair?

sri said...

Please write the remedy for grey hair also.

Rajendra Rs said...

hi,
My request please send me this article in English on mail e-mail id- rjnrs1@mail.com;
I am unable to read this and interested to know about this article.

Post a Comment