வேம்பு கற்பம்!

Author: தோழி / Labels: ,


நமது உடலானது பஞ்ச பூதங்களினால் பிசையப் பட்ட கலவை. இந்த உடலானது நிலைத்திருக்கவும், தொடர்ந்து இயங்கிட காற்றும், உணவும் தேவை படுகிறது. நாம் உட் கொள்ளும் உணவில் இருக்கும் ஊட்டப்பொருள்களையும், தாதுக்களையும் நமது உடலின் உறுப்புகள் மற்றும் சுரப்பிகள் தனித்தனியே பிரித்து உடலுக்கு அளிக்கின்றன. கழிவுகளையும் வெளியேற்றுகின்றன. இந்த உறுப்புகளையும், சுரப்பிகளையும் தூண்டும் வேலையைத்தான் நாம் உட் கொள்ளும் உணவின் சுவை செய்கிறது. ஒவ்வொரு சுவையும் நமது உடலில் உள்ள குறிப்பிட்ட சில உறுப்புகள் அல்லது சுரப்பிகளைத் தூண்டி செயலூக்கம் அடைய வைக்கின்றது.

இதனை உணர்ந்தே நமது முன்னோர்கள் தினமும் உணவில் அறுசுவையினையும் சேர்த்துக் கொண்டனர். நாகரீக வளர்ச்சியில் நாம்தான் இவற்றை எல்லாம் புறந்தள்ளி விட்டோம். இனிப்புடன் துவங்கி தாம்பூலம் தரிக்கும் போது துவர்ப்பு, கசப்பு என ஆறு சுவைகளையும் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்ட நம் முன்னோரின் அறிவின் திறத்தை நாம் மதிக்கத் தவறியது வேதனையான ஒன்று.

அந்த வகையில் கசப்பு என நாம் ஒதுக்கி வைத்த ஒரு சுவையின் கற்பம்தான் வேம்பு கற்பம். வேம்பு என்கிற் வேப்ப மரத்தின் சிறப்பினை அகத்தியர் பின் வருமாறு கூறுகிறார்.

வரிசையாய் சமாதிசெய்தா ரெந்தை யய்யா
       வாராது விஷங்களெல்லாஞ் செப்பி னாரே.
செப்பினார் வேம்பினுட பெருமை யெல்லாம்
       தேவிசொ ல்லக்கேட்டே னென்றார்  
ஒப்பிலே வேம்புக்கு மேலே கற்பம்
      உலகத்தி லில்லையென்று உரைத்தார் பாரு
தப்பில்லா வேம்புண்ணக் கசக்கும் பாரு    
      சர்க்கரைபோ லினிக்கமட்டுஞ் சாதிக்கலாம் பார்
அப்பிரேன் தேகமெல்லா மமுர்த மாகும்
      அழகான மன்மதன்போ லாகும் பாரே

- அகத்தியர்.

இத்தனை சிறப்பான இந்த வேம்பினைக் கொண்டு காயகற்பம் தயாரிக்கும் முறைகளை சித்தர் பெருமக்கள் பலரும் அருளியிருக்கின்றனர். எனினும் கருவூரார் தனது “கருவூரார் வாதகாவியம்” என்னும் நூலில் அருளியிருக்கும் எளிய வேம்பு கற்பம் பற்றி இன்று பார்ப்போம்.

தானவனாம் வேம்பினுட கற்பந்தன்னைத்
   தாரணியில் சித்தர்களே சாற்றக்கேளு
மானதொரு கார்த்திகையாம் மாதந்தன்னில்
   வாழ்மிருக சீரிடமும் பூஷந்தன்னில்
ஏனமுதற் ஜலமிக்க கொழுந்தைக்கிள்ளி
   இன்பமுடன் தின்றுவா யிருபத்தேழ்நாள்
ஆனதொரு சர்ப்பங்கள் தீண்டினாலும்
   அதுபட்டுப் போகுமப்பா அறிந்துகொள்ளே.

- கருவூரார்.

கொள்ளப்பா மாதமொன்று கொண்டாயாகில்
   குஷ்டமென்ற பதினெட்டு வகையுந்தீரும்
துள்ளுகின்ற பூதமொடு பசாசுதானும்
   துடிதுடித்துக் கண்டவுட னோடிப்போகும்
விள்ளுகிறேன் பொடிசெய்து கொழுந்து தன்னை
    வெருகடியாய்த் தேனிலரை வருடங்கொண்டால்
வள்ளலே நரையோடு திரையு மாறும்
   வாலிபமுந் நூறுவய திருப்பான்றானே

- கருவூரார்.

கார்த்திகை மாதத்தில் வரும் மிருக சீரிடம் அல்லது பூச நட்சத்திர நாளில், காலை வேளையில் வேப்பமரத்தின் அதிக நீர்த்தன்மை உள்ள கொழுந்தைப் பறித்து உண்ண வேண்டுமாம் இப்படி தொடர்ந்து இருபத்தி ஏழு நாட்கள்  தினமும் காலை வேளையில் உண்டு வந்தால் பாம்பு கடித்தாலும் கூட தீங்கு வராதாம். மாறாக, கடித்த பாம்பு இறந்துவிடும் என்கிறார். இதே முறையில் ஒருமாதம் தொடர்ச்சியாக உண்டுவந்தால் குஷ்டம் என்று சொல்லப்படும் பதினெட்டு வகையான நோய்களும் தீருமாம் அத்துடன் பூதம், பிசாசு போன்றவை அணுகாது விலகிவிடுமாம்.

இந்த கொழுந்தை பொடியாக செய்து, வெருகடி அளவு எடுத்துத் தேனில் குழைத்து ஆறு மாதங்கள் தொடர்ச்சியாக உண்டு வந்தால் நரை திரை மாறுமாம். அதோடு வாலிபதோற்றத்துடன் நீண்ட நாட்கள் வாழலாம் என்கிறார் கருவூரார். இந்த கற்ப முறைக்கு பத்தியம் எதுவும் சொல்லப்பட வில்லை. 

வேறொரு தகவலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

30 comments:

bharathraja said...

kuruvae,
arumai ethai nan enimel kataipikka pokiren

SABARI said...

NICE

naveenkumar said...

Hi Thozhi,
Verukadi alavu entral evalavu,,,
ore nerathil irandu karpa muraikali pin patralama?......


Anbudan
Naveen

naveenkumar said...

Hi Thozhi,

Intha padalil koori irupahu pola pei pisasu irupathu unmai thana?

Anbudan
Naveen

mathu said...

thank you

Kumar said...

வேம்பு , துளசி போன்றவைகள் தொடர்ச்சியாக உட்கொண்டால் ஆண்மை குறைவு வரும்னு சொல்வது உண்மையா ?

Ganesh said...

அகத்தியர் ஜீவநாடி பற்றியும் எழுதுங்களேன்.

கணேஷ்

Shiva said...

நல்லதொரு பதிவு. கார்த்திகையில் ஆரம்பிக்கணும்னா இன்னும் ஒரு வருஷம் காத்திருக்கணுமே!

தென்காசி சுப்பிரமணியன் said...

//கார்த்திகை மாதத்தில் வரும் மிருக சீரிடம் அல்லது பூச நட்சத்திர நாளில், காலை வேளையில் வேப்பமரத்தின் அதிக நீர்த்தன்மை உள்ள கொழுந்தைப் பறித்து உண்ண வேண்டுமாம் இப்படி தொடர்ந்து இருபத்தி ஏழு நாட்கள் தினமும் காலை வேளையில் உண்டு வந்தால் பாம்பு கடித்தாலும் கூட தீங்கு வராதாம்.//

Karthigai mathathil poosa nazhil thotarnthu 27 naatkal.

karthigai mathathil oru poosa nal thane varum. ithil eppadi thotarnthu 27 naatkal saapituvathu.

tamilvirumbi said...

தோழி ,
மிக்க நன்றி.தாங்கள் அனைவரும் பின்பற்றக்கூடிய ,எளிய முறைகளை பகிர்ந்தமைக்கு மீண்டும் ஒரு முறை என் நன்றியை தெரிவிக்கிறேன் .

Rajakumaran said...

Thanks

Lakshmanan said...

@SUBRAMANI

அதாவது துவங்கும் நாள் இந்த இரண்டில் ஏதாவதொன்றாக இருக்கவேண்டும் என்று பொருள் கொள்ளுங்கள். நட்சத்திரங்கள் மொத்தம் 27 அதனால்தான் இந்த கணக்கு.

Unknown said...

வெருகடி - பெருவிரல் முதலிய மூன்று விரல்களின் நுனிகளால் எடுக்குமளவு (a large pinch, as much as can be taken up with tips of thumb and two fingers)

RAVINDRAN said...

nanri

நிகழ்காலத்தில்... said...

பயனுள்ள தகவல்..

வாழ்த்துகள் தோழி..

Inquiring Mind said...

i heard, that for each month, a particular rasi would be dominant.. in chithirai, mesha rashi, and stars are aswini, barani kaarthigai, in sequence..

மதுரை சரவணன் said...

nanri

sirkazhianand said...

good one

RAJESH KANNAN said...

anybody have "jathaka Sinthamani" Tamil book?

ananda said...

thank u thozhi

ananda said...

thank u thozhi

THIRUMAL said...

nice

munees waran said...

Mikka nantri sakothari

THIRUMAL said...

உடல் உயரமாக வளர சித்தர்கள் மருந்து ஏதும் சொல்ல வில்லையா ? எது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் . நன்றி

kowsirosan said...

megaum nanri! nanri! akka ungkal payanam melum thodara ungkal viruppam nangkal ungkalin karam pidiththu todarum intha pakkam akka

Unknown said...

arugil irukum vembin magathuvathai thelivu paduthiyatharku nanri

Unknown said...

nanty

La Venkat said...

அன்புள்ள தோழி,
"மிளகு கர்ப்பம் புதியது" பற்றி
நாட்டு மருந்து கடையில் இருந்து வெள்ளை மிளகை வாங்கி வந்து சுத்தமான தேனில் போட்டு மூடி விட்டேன். இத்தனை நாள் முயற்சித்த்து பார்த்து விட்டேன். ஆனால் மிளகு தேனை உரியவில்லை. என்ன செய்வது. ஏதோ பிழை உள்ளது. ஆனால் தெரியவில்லை.
நேரம் இருந்தால் உதவவும்.
தோழன்,
வெங்கட்

Unknown said...

veepagarpam unum pothu unauv kattupadu (or)pathiyam ethenum undaa?

Unknown said...

veepagarpam sapitum pothu unauv kattupadu(or) pathiyam ethenum undaa?

Post a Comment