புத்தாண்டு வாழ்த்தும், 600வது பதிவும், வயிரவ மந்திரமும்!

Author: தோழி / Labels: ,


நண்பர்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த நாள் துவங்கி இனிவரும் நாட்களில் உங்களின் எண்ணங்கள், செயல்கள், சிந்தனைகள் யாவும் மேம்பட்டு சிறந்திட எல்லாம் வல்ல குருவருளை வணங்கி வேண்டிக்கொள்கிறேன். மேலும் இன்றைய பதிவு நமது “சித்தர்கள் இராச்சியம்” வலைப் பதிவின் அறுநூறாவது பதிவாக அமைகிறது. இது நாள் வரை நீங்கள் அளித்த அன்பும், ஆதரவும் இனி வரும் நாட்களிலும் தொடர்ந்திட பணிவுடன் வேண்டுகிறேன்.

இந்த புத்தாண்டு நாளில் முயற்சியுடையோர் வாழ்வில் முன்னெடுக்கும் ஆக்கப் பூர்வமான முன்னெடுப்புகள் யாவும் சித்திக்க உதவிடும் சொர்ண வைரவரின் மந்திரம் ஒன்றினை பகிர்ந்து கொள்கிறேன். இந்த மந்திரம் அகத்தியரால் தனது "அகத்தியர் பரிபாஷை" என்னும் நூலில் அருளப் பட்டிருக்கிறது. தொழில் முனைவோருக்கும், செய்தொழில் வெற்றிகள் வேண்டுவோருக்கும், பொருள் தேடும் முயற்சியில் சுண்ங்கியிருப்போருக்கும் இந்த மந்திரம் உதவுமென்கிறார் அகத்தியர்.

இந்த மந்திரத்தின் மகிமையை அகத்தியர் பின்வருமாறு விளக்குகிறார்.

தான்பார்க்குந் தொழிற்கெல்லாம் வயிரவனும்வேணும்
         தன்மையுடன் தொட்டதெல்லாம் பலிக்கும்பாரே
மான்பார்த்த சிவகிருபை யிருந்துதானால்
          மக்களே செய்தொழிலும் பங்கமாமோ
கோன்பார்த்தக் குருமுடிக்க அருகில்நின்று
         குணங்குறிகள் தவறாமல் மனதிற்றோணி
வான்பார்த்த கருவெல்லாம் வெளியதாக
          மக்களே தோணுமடா மகிழ்ந்துபாரே.

செய்யும் தொழில்கள் எல்லாவற்றிற்க்கும் சொர்ணபைரவர் வேண்டுமாமாம். அப்படி அவர் மந்திரம் சித்தித்தால் தொட்டதெல்லாம் பலிக்கும் என்கிறார் அகத்தியர். மேலும் சிவபெருமானின் கருணை இருந்தால் செய்யும் தொழிலில் பங்கமே வராது என்கிறார் அதற்கு வைரவர் துணை என்றென்றும் வேண்டும். செய்தொழிலில் குணம் குறைகள் மனதில் தோன்றி தவறுகள் நேராது காக்க இந்த மந்திரம் உதவுமென்கிறார். அத்துடன் எல்லா உண்மைகளும் வெளிப்படையாகத் தோன்றும் மகிழ்ந்து பார் என்றும் சொல்கிறார்.

இத்தனை சிறப்பு வாய்ந்த மந்திரம் என்ன?, அதை எப்படி பயன் படுத்துவது என்பதை பின்வருமாறு அருளுகிறார்.

பண்ணப்பா சொர்ணவயி ரவன்றன் பூசை 
        பாங்கான மந்திரத்தைச் சொல்லக் கேளு
எண்ணப்பா ஓங்கென்றும் ஸ்ரீங்கென்றுந்தான்
        என்முன்னே சொர்ணரூபா வாவாவென்றும்
கண்ணப்பா நானெடுத்த கருவெல்லாந்தான்
        கைவசமாய்ச் செய்துவைக்க வாவாவென்று
சண்ணப்பா நூற்றெட்டு உருவேயானால்
        தன்வசமாய் போகுமடா தான்பார்ப்பீரே.

"ஓங் ஸ்ரீங் என் முன்னே சொர்ணரூபா வாவா. நான் எடுத்த கருவெல்லாம் கைவசமாய் செய்து வைக்க வாவா" என்பதுதான் சொர்ண வயிரவரின் மந்திரம். இதனை நூற்றி எட்டு உரு செபித்தால் மந்திரம் சித்தியாகுமாம் என்கிறார்.

மேலும் இந்த மந்திரத்தை யாரிடம் உபதேசம் வாங்கிட வேண்டும் என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார்.

பாரடா தவமுனிவர் சித்தரெல்லாம் 
        பண்பாக மறைத்ததென்ன உட்கருவின்மூலம்
நேரடா வெளிக்கருவின் மூலந்தானும்
        நெகிழாமற் பலவிதமாய்ச் சொல்லிவைத்தார்
காரடா யிக்காண்டந் தன்னிற்றானும்
        கண்மணியே காணுதற்கு வகையாய்ச்சொன்னேன்
ஆரடா அறிவார்கள் குருசொல்லவேணும்
         அல்லதா லின்னூலே சொல்லும்பாரே.

சித்தர்கள், தவமுனிவர்கள், மறைத்ததெல்லாம் என்ன? உட்கருவின் மூலத்தை வெளிப்படையாகச் சொல்லாது மறைத்து வைத்தார்கள். அதையும் இந்தக் காண்டத்தில் உனக்கு தெளிய வைத்து விட்டேன் என்று சொல்லும் அகத்தியர், இதனை வேறு யாரும் சொல்ல மாட்டார்கள் என்கிறார்... குருவாக இருப்பவர்களே இந்த மந்திரத்தை உபதேசிக்க வேண்டும். அப்படி குரு இல்லாதவர்களுக்கு இந்நூலே குருவாக இருந்து சொல்லும் என்றும் சொல்கிறார். 

எனவே, எல்லாம் வல்ல குருநாதரை மனதில் தியானித்து மிகவும் எளிதான இந்த மந்திரத்தை பயன்படுத்தி, நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளின் ஊடாக நலமும், வளமும் பெற குருவருள் துணை நிற்கட்டும்.

மீண்டுமொரு முறை எனது இதயம் நிறை புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

40 comments:

Unknown said...

600 வது பதிவுக்கு வாழ்த்துகள் தோழி!

கோவிந்தராஜு.மா said...

600 வது பதிவுக்கு வாழ்த்துகள் தோழி!

உலகெங்கிலும் வசிக்கும் நம் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் , நண்பர்களுக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.இந்த ஆண்டு நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் அளிக்கும் ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்குகிறோம்.

சீலன் said...

உங்களுக்கும் என் இனிய‌ ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Anonymous said...

அற்புதம் ! மிக அருமை !


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

149 said...

இனிய புத்தான்டு நல்வாழ்த்துகள்

Satheesh said...

108 முறை தினமும் தொடர்ந்தது செபிக்க வேண்டுமா தோழி ? எத்தனை நாட்கள் ?

நன்றி வாழ்த்துக்கள்!

kimu said...

தோழி - 600வது பதிவுக்கு வாழ்த்துக்கள்

மேலும் தோழிக்கும் மற்றும் அனைத்து நண்பர்களுக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

அனைவரும் எல்லா நலன்களும் பெற்று மகிழ்ச்சியக இருக்கவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிகொள்கிறேன்.

RAVINDRAN said...

600 வது இடுகைக்கு வாழ்த்துகள் தோழி...


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2012

Unknown said...

600 பதிவுகள் பதிவிடுவது என்பது மிகப் பெரிய வேலை! பாராட்டுகள்! மேலும் உமது பணி சிறப்புடன் தொடர வாழ்த்துக்கள்!

Gobinath Loganathan said...

600 வது பதிவுக்கு வாழ்த்துக்கழ் தோழி. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

arul said...

thanks for 600 posts
thanks for sharing today's post

vv9994013539@gmail.com said...

வாழுதுகள்.

tamilvirumbi said...

தோழி,
தங்களின் 600 வது பதிவிற்கு எனது உளம் கனிந்த வாழ்த்துக்கள் .தங்களின் தளத்தை பார்வையிடும்
அனைத்து தமிழ் அன்பர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் .

ganesh said...

nandrikaludan, puthandu vazthukkal....

BIG BEN said...

Thank you for sharing the posts.

Ineea puthandu vazthukal

Anonymous said...

தங்களின் அறுநாறாவது பதிவிற்கு வாழ்த்துக்கள்.நன்றி.

நல்ல தமிழ் உள்ளங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அகமுதலி

agatiyaradimai said...

தோழிக்கு என்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கின்றேன்.

baski said...

thanks for 600 posts

wish you happy new year

Dr.M.Meenakshi Sundaram said...

Dear Thozhi,
Wish you all very happy and prosperous new year.
Congratulations for the 600th post.
heart felt thanks for publishing a mantra for getting victory in our endeavours.
May God be kind enough to you in giving prosperity to you in your careers.
wishes,
Dr.M.Meenakshi Sundaram

Muthu Rathinam said...

புத்தாண்டு வாழ்த்துக்கள் , உங்கள் -மெயில் i .d . தேவை,

முத்து ரத்தினம் , சவுதி அரேபியா .

Remanthi said...

தோழி உங்களின் இந்த 600 வது பதிப்பிற்கு எனது உள்ளம் கனிந்த வாழ்த்துகள் ... happy new year 2012

நாடி நாடி நரசிங்கா! said...

நடுவில் வரும் கண்ணப்பா சொல்ல வேண்டாமா

ஓம் தத் சத் said...

தங்களுடைய இந்த பதிப்பிற்கு மிக்க நன்றி

ஓம்

G Rajendran said...

தோழி, புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் பணி சிறக்க எங்கள் வாழ்த்துக்கள்.

Netrikkan said...

Wish u HAPPY NEW YEAR....2012.

Always my wishes continue your blogs.

Thanks

Tamil Stuff said...

முதலில் உங்களுக்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள். மேலும் உங்களுக்கு இந்த இணைப்பு பயனுள்ளதாக இருக்கலாம் http://www.tamilvu.org/library/l7100/html/l7100cnt.htm


கணேஷ்

subramanian said...

be happy

subramanian said...

Dear Dr,
Be happy

Balaji Palamadai said...

சகோதரி தோழிக்கு ,
உளம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துகள்
நிவிர் என்றும் வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்,
பாலாஜி

இராஜராஜேஸ்வரி said...

600 வது அயராத பதிவுக்கு வாழ்த்துகள்..

இர.கருணாகரன் said...

தோழி அவர்களின் 600 பதிவு என்பது சாதாரணமானதல்ல , மேலும் இவையாவும் பாதுகாக்கப்பட வேண்டியவையாகும், அரிதான பல விஷயங்கள் , யாரையும் நோகடிக்காத தகவல்கள் , தம்பட்டம் அடித்துக்கொள்ளாத அடக்கம்.

மேலும் வளர்க , வாழ்க .


வாழ்த்தும் அன்பும்.

ramamurthysuresh said...

NANDRI PALLAND PALLANDU PALLYRATHANDU PALAKODI NOORAYERAM AANDUGAL UNGAL PUGAL NILAYKKATTUM

NARAYAN said...

600 பதிவுகள் என்பது ஒரு சிறந்த சாதனைதான்தான்.

தங்கள் உழைப்பிற்கு எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்.

தங்கள் பணி மென்மேலும் தொடரட்டும்.எல்லாம் வல்ல இறையருளும் குருவருளும் தங்களுக்கு துணை நிற்கட்டும்

வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.

நாராயணசாமி.ம

புது தில்லி.

வேதை.அன்பரசு said...

amma ungalin pani menmelum thodara ellam valla guruvaum thruvaum vanangukiren

வேதை.அன்பரசு said...

amma ungalukku ellam valla guruvin arulum thiruvin arulum kidaikka iraivanai pirarthikkiren......

Anonymous said...

You Done Great job.it's a huge, remarkable and amazing success.wish you all continuous success.Always my wishes with you.God bless you.happy tamizhar thiru naal valthugal.

With Regards,
P.N.GOPALAKRISHNAN

yesu said...

good

revathy said...

mam.daily i am using this mamthiram.it is very useful to me.i feel i am a lucky girl.UN exceptely i sawed your web.i cant explain my feeling.thank you mam.
s.Revathy M.PHARMACY
vijayawada

mariappan said...

eppati entha neram

mariappan said...

eppoluthu entha thesai solla ventum

Post a Comment