சனி என்ன செய்வார்?

Author: தோழி / Labels: ,

சித்தர்களின் சோதிட இயல் பெரும்பாலும் வாக்கிய பஞ்சாங்க கணித அடிப்படையில் அமைந்தது. ஒவ்வொருவரும் தங்களின் பெயர்களில் சோதிட நூல்களை அருளியிருப்பதால் நாம் பொதுவில் சித்தர்களின் சோதிட இயல் என்றே குறிப்பிடுவோம். நாம் இதுவரை சனி பகவானைப் பற்றியும் அவரது அம்சங்களை பற்றியும் பார்த்தோம்.

சனி பகவானின் குண இயல்புகளை பழந்தமிழ் நூலான “சாதக சிந்தாமணி” பின் வருமாறு விளக்குகிறது.

அலைசஞ் சலனபிங் கலக்கண்ணன்
ஆகம்மெலிந்து நீண்டு யர்ந்தோன்
மலைமா ருதனாம் பற்பெருத்தோன்
வாத ரோமன் சனியேயாம்
நிலையில் மந்தன் கதிர்மதிமால்
சுங்கன் பொன்சேய் நிரல்நிறையே
உலையில் நரம்பென் பிரத்தந்தோல்
உறுசுக் கிலமே நிணம்மச்சை

இரத்தஞ்சா மளங்கேழ் வெய்யோன்
தவளவெண் ணிறமே யிந்து
அரத்தமாந் தவளஞ் செவ்வாய்
அறுகுசா மளமே புந்தி
அரித்திரந் தவளஞ் செம்பொன்
அம்புகர் சாம வண்ணம்
வருத்தமில் கதிரோன் மைந்தன்
கறுப்பென வலியாற் கூறே.


அலைச்சலையும்,,சஞ்சலத்தையும் குணமாக கொண்ட சனி யானவர், மெலிந்த தேகத்தையுடையவனாகவும், நீண்ட சரீரத்தை கொண்டவனாகவும், வாத ரோகங்களையும் நரம்பு தொடர்பான நோய்களையும் ஆள்பவானாக இருப்பான் என்கிறது.

கீழே உள்ள படத்தில் நீங்கள் பார்ப்பது 12 ராசிகளின் அமைப்பை காட்டும் கட்டம். இதில் ஒவ்வொரு ராசியின் பெயரும் அதன் அதிபதியின் பெயரும் குறிப்பிடப் பட்டிருப்பதை காணலாம். இதில் பத்தாவது ராசியான மகரம் மற்றும் பதினோராவது ராசியான கும்பம் ஆகிய ராசிகளுக்கு சனி பகவான் அதிபதியாகிறார். சூரியனையும், சந்திரனையும் தவிர்த்து மற்ற கோள்கள் ஒவ்வொன்றும் இரண்டு ராசிக்கு அதிபதியாக இருப்பதையும் நீங்கள் அவதானிக்கலாம்.
சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டு காலம் வாசம் செய்கிறார் என்று நேற்று பார்த்தோம். அவர் எந்த இராசியில் வாசம் புரிகிறாரோ அங்கிருந்து மற்ற ராசிகளை அவர் பார்க்கும் பார்வையினைப் பொறுத்தே பலன்கள் எழுதப் படுகிறது. இவை ஒரு கணித சூத்திரத்தின் கச்சிதத்தோடு சித்தர் பெருமக்களால் அருளப் பட்டிருக்கிறது. தற்போதைய நிலையில் சனிபகவான் கன்னி இராசியில் வாசம் செய்கிறார். இங்கிருந்து அடுத்த ராசியான துலாம் ராசிக்கு பெயர இருப்பதையே சனிப் பெயர்ச்சி என பரபரத்துக் கொண்டிருக்கிறோம். அப்படிப் பெயர்வதால் அடுத்த இரண்டரை ஆண்டு காலம் துலாம் ராசிக்கும் அங்கிருந்து அவர் பார்ப்பதனால் மற்ற ராசிகளுக்கும் உண்டாகப் போகும் பலன்களைச் சொல்வதே சனிப் பெயர்ச்சி பலன்கள் என்கிறோம்.

வாக்கிய பஞ்சாங்க கணிதத்தின் படி எதிர்வரும் மார்கழி 4ம் திகதி அன்று 57 நாழிகை 26 வினாடி அதாவது 21.12.2011 காலை 05 மணி 20 நிமிடத்திற்கு சனிபகவான் கன்னி ராசியிலிருந்து துலாராசிக்குப் பிரவேசிக்கின்றார். சோதிட நூல்களின் படி துலாம் ராசியானது சனி பகவானுக்கு உச்சஸ்தானம் என்று சொல்லப் படுகிறது. அதாவது துலாம் ராசிக்கு பெயர்ந்த பின்னர் அவர் மேலும் வலுவானவராகி விடுவாராம். அதனால்தான் இந்த பெயர்ச்சிக்கு இத்தனை பரபரப்பும், எதிர்பார்ப்பும் கூடுகிறது.

எல்லாம் சரிதான், சனிப் பெயர்ச்சி பலன்களை பார்ப்பதற்கு முன்னர் சனி பகவான் அருளும் நன்மை, தீமைகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா?. புலிப்பாணிச் சித்தரின் "புலிப்பாணி ஜோதிடம் 300" நூல் அதற்கும் பதில் தருகிறது.

கனமுள்ள நவமாறு லாபம் மூன்று
கதிர் மைந்தனதிலிருக்க விதியும் தீர்க்கம்
தனமுண்டு பிதுர் தோஷம் சத்துரு பங்கம்
தரணிதனில் பேர் விளங்கும் அரசன் லாபம்
குணமுள்ள கருமத்தி லிருக்க நல்லன்
கொற்றவனே வாகனமும் தொழிலு முள்ளோன்
பொனம் போல போகாதே சபையில் உறு
பூதலத்தில் யென்னூலைப் புகழுவாயே.

வலிமை யான இடங்களான 9,6,11,3 ஆகிய நிலைகளில் சூரிய பகவானின் மகனான சனிபகவான் நிற்பாரானால் குறிப்பிட்ட அந்த ஜாதகருக்கு ஆயுள் அதிகமாகுமாம், மேலும் பணவசதி படைத்தவராக இருப்பதுடன், பிதுர் தோஷமுள்ள அவன் சத்துருபங்கனாகவும் இருப்பானாம், உலகில் புகழ் பெற்றவனாக விளங்குவானாம். மேலும் அரசாங்கத்தின் மூலம் லாபங்களும் கிடைக்குமாம். சனி பகவான் ஜாதகனுக்குப் 10-ல் நின்றால் வாகன யோகமும் செய்கின்ற தொழில் செழிப்புற்று பொன்னும், பொருளும் கிடைக்குமாம். இவையெல்லாம் சனி பகவான் தரும் நற்பலன்கள்.

புகழ்கின்ற ஈராறு யிருநான் கேழில்
புனிதமுள்ள சனிரெண்டு நான்கில் நிற்க
இகழ்கின்ற வாத நோய் நாய் கடிக்கும்
இதமுள்ள அன்னைக்கு கண்டம் நான்கில்
நிகழ்கின்ற ரெண்டேழில் மனைவி நஷ்டம்
நிசம் சொன்னோம் யெட்டுக்கு உயிர்க்கு சேதம்
மகிழ்கின்ற ஈராறில் விரையமாகும்
துலையுமடா மாடாடு துன்பஞ் சொல்லே.


முக்கியத்துவம் வாய்ந்த 12,8,7,2,4 போன்ற இடங்களில் சனிபகவான் நிற்பாராக இருந்தால் ஜாதகருக்கு உண்டாகும் பலன்களாவது, ஜாதகருக்கு நான்காம் இடத்தில் சனி நிற்பாராயின் வாத நோயுண்டாகுமாம், நாய் கடிக்குமாம், பெற்றெடுத்த தாய்க்கு கண்டம் போன்றவைகள் உண்டாகுமாம். இதுபோன்று 2,7 ஆகிய இடங்களில் சனிபகவான் நிற்பாராக இருந்தால் மனைவி/ கணவருடன் சுமூகமான உறவு இருக்காதாம். இது போல் சனி பகவான் 8-ம் இடத்தில் நிற்பாராராக இருந்தால் ஜாதகருக்கு உயிர் ஆபத்து உண்டாகுமாம். இது போன்று 12-ம் இடத்தில் நிற்பாராகில் ஜாதகருக்கு பொருள் விரையமும், ஆடு, மாடுகள் இழப்பு உண்டாகுமாம் பொதுவாக துன்பங்களே உண்டாகும் என்கிறார்.

இதுவரை சனி பகவான் யார், அவரது இயல்புகள், குண நலன்கள், அவரால் உண்டாகும் நன்மை, தீமைகளைப் பற்றி பார்த்தோம். இனி வரும் பதிவுகளில் இந்த சனிப்பெயர்ச்சியினால் ஒவ்வொரு இராசிக்கும் என்ன பலன்கள் உண்டாகும் எனப்தைப் பற்றி பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

10 comments:

GAJENDRA PRABU said...

waiting for ur words !!!

tamilvirumbi said...

தோழி ,
தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி .தாங்கள் சனி பகவான் அய்ந்தாம் இடத்தில் இருந்தால் என்ன பலன்கள் என்று குறிப்பிட வில்லை ஏன் என்று தங்களால் கூற முடியுமா ?

sekar said...

Nalla pathivu

ThirumalaiBaabu said...

விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டும் இன்றி ...மக்களை வீணாக ஏமாற்றி பணம் சம்பாதிப்பது மட்டும் இன்றி , அவர்களை பொய்யும் புரட்டும் சொல்லி மன வேதனையில் ஆழ்த்துவது போன்ற பல பிரச்சனைகளுக்கு இனி வரும் பதிவுகள் வழி வகுக்கும் என்பதில் எல் அளவும் ஐயம் இல்லை ...தொடரட்டும் உங்கள் சேவை ..

யாழ் அர்ஜுன் said...

அன்புக்குரிய தோழி
நான் இலங்கை(Srilanka Jaffna)சார்ந்தவன்
இன்று தான் உங்கள் பதிவுகளை பார்க்க முடிந்தது நம்ப முடியாத விடயங்கள் போல இருந்தாலும் எல்லாம் உண்மை என்று நம்புறன்
உங்கள் பணிதொடரவும்
வாழ்த்துகிறன்

யாழ் அர்ஜுன்
http://ejaffna.blogspot.com

Lingeswaran said...

அப்பா....சனி பகவானே காப்பாத்துப்பா.....

Advocate P.R.Jayarajan said...

மிகவும் தேவையான பதிவு தோழி..
நான் மகர ராசி, திருவோண நட்சத்திரம்.
எனக்கு சனி பெயர்ச்சி எவ்வாறு உள்ளது..?

Densil said...

dear friend ,

kadaga rasi poosam natchathirathirkum magaram rasi avittam natchathiram onram padham.
indha irandirkum thirumanam ceyyalama idhil yedhum kurai yedhum irundhal yenna parigaram ullathu yenru tohzi avargal miga viraivaga yenaku bathil therivikkum badi panivanbudan kettukolgiren ippadikku nal vazhkaiku kathirukum deny.

BeenaaManivannan said...

Very nice... i feel good reading...

narayana krishnan said...

what about in 1 st house

Post a Comment