சோழ மன்னனும், கணபதி கோவிலும்!

Author: தோழி / Labels:


சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே அவர்கள் காலத்தைய நிகழ்வுகளும் குறிப்புகளாய் பதிவாகி இருக்கின்றன. அப்படியான தகவல்களை முந்தைய பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். அந்த வரிசையில் இன்றும் சுவாரசியமான ஒரு வரலாற்றுத் தகவல்.

இந்த பாடல் தேரையர் அருளிய தேரையர் காவியம் என்ற நூலில் காணப் படுகிறது. மதுரைக்கு வடக்கே இருப்பதாக கருதப் படும் ஒரு கோவிலைப் பற்றிய குறிப்புதான் இந்த பாடல்கள்.

கோடியென்ற மதுரைக்கு வடக்கேயப்பா
கெடியான யோசனைதான் பத்துக்கப்பால்
ஆலென்ற விருட்சமது ஒன்றுண்டப்பா
நலமான கணேசனென்ற கோயிலொன்று
ஆடியடா அங்கொருவ ராருமில்லை
அப்பனே யருள்பால சோழனென்று
தேடியல்லோ தர்மத்தைச் செய்யவென்று
திரும்பினான் கணேசர்பதம் வணங்கினானே.


வணங்கியல்லோ ஆலயத்தை முடித்தானப்பா
வகையான தர்மமது மெத்தவப்பா
இணங்கியல்லோ கணேசருக்கு கிருபைவந்து
ஈஸ்பரிக்குத் தான்வணங்கி யியம்பிச்சொன்னார்
கணங்கியல்லோ யீசருக்குத் உரைத்திட்டப்பா
காட்டிவிட்டார் சிதம்பரத்தை கைக்கொண்டப்பா
அணங்கியல்லோ சிதம்பரத்தை கைக்கொண்டப்பா
அப்பனே வாலையைத்தா னீய்ந்திட்டாரே.


ஈய்ந்திட்டார் கணபதியும் நந்தியப்பா
யிகபரமா யறுகோண சுப்பிரமணியம்
போந்திட்டார் சண்டேசுரர் வீரர்கூட
புகழான வடுகனுடன் மாயைபீசம்
ஊத்திட்டார் புவனையுடன் திரிபுரையின்பீசம்
உத்தமனே மேருவைத்தான் கொடுத்தார்பாரு
ஏந்திவிட்டா ரத்தனையு மிரண்டுகையால்
இகபரமாய் குளிகையது கேட்டானப்பால்


கேழ்க்கையிலே கணபதியுங் குளிகைவாங்கி
கொடுத்துவிட்டார் சோழனுட பாக்கியந்தான்
கேழ்கையிலே அவனுடைய நாமங்கேளு
கடிதான கணேசனென்ற சோழனப்பா
வேழ்க்கையிலே மேருவில்தான் பூசைமெத்த
விதிமுறையாய்க் கைவரிசை யதிகம்பாரு
ஆழ்கையிலே யஷ்டாங்க யோகமெல்லாம்
அப்பனே மெத்தக்கூடும் சென்றுபாரே.

மதுரை நகரில் இருந்து வடக்கு பக்கமாக பத்து யோசனை தூரத்தில் ஒரு ஆலமரம் இருக்கின்றதாம். அங்கே ஒரு கணபதியின் கோவில் இருந்ததாம் அந்த கோவிலை கவனிக்க யாரும் இல்லையாம். அப்போது அந்த வழியே வந்த தர்ம சிந்தனை கொண்ட சோழ மன்னன் கோவிலைக் கண்டு கணபதியின் பாதம் வணங்கினானாம்.

அப்படிக் கணபதி பாதம் வணங்கிய சோழ வேந்தன் பின்னாளில் அந்த கோவிலை பெரிதாக்கி சிறப்பாக கட்டிமுடித்தானாம். அந்த மன்னனின் தான தர்மங்கள் எல்லாவற்றிலும் மனம் மகிழ்ந்திருந்த கணபதியானவர், ஈஸ்வரியையும், ஈசனையும் வணங்கி வேண்டினாராம். ஈசன் சிதம்பர சக்கரத்தையும், வாலை தாயின் சக்தியும், சுப்ரமண்யர், சண்டேசுரர் மற்றும் வடுகன் ஆகியோரின் பீஜ மந்திரங்களும் கொண்ட சக்திவாய்ந்த மேரு யந்திரத்தை மன்னனுக்கு கொடுக்கும் படி நந்தியிடம் கொடுத்தாராம். நந்தியும் அந்த யந்திரத்தை மன்னனுக்கு கொடுக்க அந்த யந்திரத்தை வாங்கிய சோழமன்னன் அதை அந்த கணபதி கோவிலிலேயே பிரதிஷ்டை செய்தானாம். பிரதிஷ்டை செய்த மன்னன் கணபதியிடம் இகபர குளிகை தரும்படி வேண்டினானாம்.

அவன் வேண்டுதலுக்கு இணங்கிய கணபதியும் சோழ அரசனுக்கு இகபர குளிகையை கொடுத்தாராம். அந்த பாக்கியத்தை பெற்றதால் சோழ வேந்தனுக்கு கணேச சோழன் என்ற பெயர் வழங்கலாயிற்றாம். இந்த கோவிலில் அந்த மேரு யந்திரத்திற்கு விதிமுறைப்படி சிறப்பாக பூசைகள் நடை பெறுகின்றன என்று சொல்லும் தேரையர் அங்கு சென்று தியானம் செய்பவர்களுக்கு அட்டங்க யோகமெல்லாம் சிறப்பாக கைகூடும் என்கிறார். 

மதுரைக்கு வடக்கே பத்து யோசனை தூரத்தில் இருக்கும் அல்லது இருந்த கணபதி கோவில் பற்றியும், கணேச சோழன் பற்றியும் தகவல் தெரிந்தவர்கள் இங்கே பகிர்ந்து கொள்ளலாமே!


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

17 comments:

bharathraja said...

thozhi,
sirappana pathivu, sozharkal varalaru puthagathil patithu irukiren

Jai said...

நான்கு குரோசம் கொண்டது ஒரு யோசனை. இரண்டரை மைல் ஒரு குரோசம். எனவே, யோசனை என்பது பத்து மைல் தொலைவு
ஆகிறது. காதம் என்பதும் சுமார் பத்து மைல் தொலைவு என்பர். யோசனையைக் கூப்பிடு தூரம் என்றும் கூறுவர்.

http://www.tamilvu.org/slet/l3100/l3100pd1.jsp?bookid=56&auth_pub_id=71&pno=729

smarttester said...

Pillaiyarpati is located at a distance of 71 Kms from Madurai towards North-East.

Malaikottai, trichy is located at a distance of 138 Kms from Madurai towards North-slightly East direction.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நன்றி.

PS said...

kAdam – Distance of about 10 Miles

Osanai ==> 4 kAda dhOram

Reference ::
http://ponniyinselvan.in/41/articles/2008-06-30-tamil-measurements

10 Yosanai(Osanai) = 10 X 4 kAda dhoram

1 kAda dhoram = 10 miles

the distance maybe from madurai 400 miles or 640 Kms. In that case the temple is outside Tamil Nadu.

I am not clear, why there is mention of madurai or the measurements different. I do see people mentionsing they have visited the temple and temple is within 15 kms in madurai.

Please dear friends any one point out the data, so that it may help lots of brothers and sisters in their search.

Unknown said...

நல்ல பதிவு.கோவிலை பற்றி தெரிந்தவர்கள் சொல்லுங்கள் அன்பர்களே .நன்றி

kimu said...

As per the location, given by mr.Rukmangathan Devadoss - view the front portion with alamaram of that vinayakar temple in the link below:

image:

http://dl.dropbox.com/u/28601693/nehru%20aala%20vinayakar%20temple.jpg

article:

http://www.hindu.com/mp/2007/03/03/stories/2007030300510400.htm

PS said...

@kimu

Respected my friend the page says the temple came into existance some 120 years ago(the hindu article says so). Any other reference? just not to mis lead people with false information.

Yuvabharathy said...

மதுரைக்கு வடக்கே 100 கிமீ தூரத்தில் முக்கியமான எந்த பிள்ளையார் கோவில் இருக்கு?

kimu said...

Thanks for your reply.

1st) I made my comment not to misled the people who are following this blog.

2nd) As per the comment made by mr.Rukmangathan Devadoss - for this topic via fb, i have given the link, for more analysis, to findout the exact vinayakar temple mentioned in that song.

3rd) The ruling of cholaz is between 10th - 13 century A.D. so, we don't know the exact starting point of madurai to that vinayakar temple - as mentioned in that song or we dont know how big the temple was?

So, no one knows which one is the exact vinayakar temple as per the siddhar song -
only with the help of more readers comments and views, we will able to findout that temple.

PS said...

Happy New year

@kimu

Thagavaluku nandri.

I would like if we get more information on the topic.

tamilvirumbi said...

தோழி ,
அபூர்வமான தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி .

Dr.V.K.Kanniappan said...

அன்புள்ள தோழி,

ஒரு யோசனை 10 மைல் என்றால் 10 யோசனை 100 மைல் அல்லது 160 கிலோமீட்டர். மதுரைக்கு வடக்கேயும், சோழநாட்டிலும் உள்ளது. தஞ்சாவூர் பெரிய கோவிலாக இருக்குமா?

sadagopal said...

thanks

Unknown said...

கள்ளழகர் கோவில் புதையல் பக்கம் எடுத்த தற்கு
நன்றி.
திருச்சிற்றம்பலம்

Unknown said...

kovil enka iruku nanbarkal sollunkal nandri

Unknown said...

tamilnda

Post a comment