பெண்கள்!... மார்பகங்கள்!... தேரையர்!

Author: தோழி / Labels: , ,


சித்தர்களின் பாடல்களின் ஊடே பயணிக்கும் போது, சில பாடல்கள் தரும் ஆச்சர்யங்கள் நம்புவதற்கு அரிதானதாகவும், அவற்றின் சாத்திய அசாத்தியங்கள் குறித்த சந்தேகங்களும் வருவதுண்டு. இம் மாதிரியான பாடல்களின் ஊடே பொதிந்திருக்கும் தகவல்கள் யாவும் மேலதிக ஆய்வுகளுக்கானவை. அந்த வகையில் இன்று தேரையர் வைத்திய சாரம் என்கிற நூலில் காணப்படும் ஒரு தகவலை பகிர்ந்து கொள்கிறேன்.

பெண்களின் மார்பகம் என்பது பாலூட்டும் ஒரு உறுப்பு. தாய்மையின் அம்சம். பரம்பரை உடல் வாகு மற்றும் உண்ணும் உணவினைப் பொறுத்து ஒவ்வொருவருக்கும் மார்பகங்களின் அளவுகள் வேறுபடுகிறது. எனினும் எல்லோருக்கும் வலது பக்க மார்பகத்தை விடவும் இடது பக்க மார்பகத்தின் அளவு சற்று பெரியதாக இருக்கும். இந்த நிஜங்களைத் தாண்டி வாழ்வியல் சூழலில் தாய்மையின் அம்சமான மார்பகங்கள் அழகியல் சார்ந்த ஒன்றாக அணுகப் படுகிறது. 

பெண்களின் மார்பகங்களை பெரிதாக்குகிறோம், சிறியதாக்குகிறோம், ஆழகுபடுத்துகிறோம் என்கிற பெயரில் நவீன மருத்துவம் பல்வேறு அறுவை சிகிச்சைகளையும், வைத்திய முறைகளையும் முன் வைக்கின்றன. எனினும் இத்தகைய சிகிச்சைகள் பெண்களின் உடல் நலத்துக்கு எதிரானது, காலப் போக்கில் பக்க விளைவுகளையும் உண்டாக்கி விடுகிறது. இதனை பெண்கள் உணர்ந்திட வேண்டியது அவசியம்.

எல்லாம் சரிதான், மேலே சொன்ன விவரங்களுக்கும் இந்த பதிவுக்கும் என்ன தொடர்பு என்கிற கேள்வி இன்னேரத்துக்கு உங்களுக்கு வந்திருக்கக் கூடும்.

தேரையரும் கூட பெண்களின் மார்பகங்களை பெரிதாக்கவும், சிறியதாக்கவும் ஒரு வைத்திய முறையினை கூறியிருக்கிறார்.

ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா!

தேரையர் வைத்திய சாரம் என்கிற நூலில் வரும் அந்தப் பாடல் பின்வருமாறு.....

கொள்ளப்பா மூஞ்சூரை நீரதிலே விட்டு
            குதித்தாவி நீந்திடும்போ திருதுண்டாக
மெள்ளப்பா கத்தியினால் வீசிப்போடு
              மிதந்ததுவும் முழுகினதும் வெவேறே கண்டு
தள்ளப்பா பசுஞ்சாணம் கவசம் செய்து
               தவறாமல் புடமிடவே நீறிப் போகும்
விள்ளப்பா ப்றணியில் புரிவாய் செய்துவைத்து
              மெல்லியர்கள் கொங்கையிலே தடவிப்பாரே.


பாரடா அழுத்திய துண்டத்தின் பற்பம்
        பாங்காகப் பூசிடவே சுருங்கிப் போகும்
வேரடா மிதந்த துண்டு பறபந்தன்னை
         மேலிட்டுப் பூசிடவே பெருத்துக் காணும்
மாரடா இப்படித்தான் செய்து பாரு
          மகத்தான என்குருவின் முறை பொய்யாகாது
சாரடா சிவசக்தி பூசை தன்னை
          தவறாது செய்திட்டால் சாதிப்பாயே.

மூஞ்சுறு என்னும் எலியைப் பிடித்து தண்ணீரில் போட்டால் அது குதித்துத் தாவி நீந்துமாம். அப்போது அதனை கத்தியினால் இருதுண்டாக வெட்டிட வேண்டுமாம். அப்ப்டி வெட்டிய உடன் ஒரு துண்டானது நீர்ல் மிதக்குமாம். மற்றது மூழ்கி விடுமாம். இப்போது இந்த இரு துண்டுகளையும் தனித் தனியே பசுஞ் சாணத்தினால் கவசம் செய்து புடமிட வேண்டும் என்கிறார் தேரையர். இப்படி புடமிட்டால் அது எரிந்து நீறாகி விடுமாம்.இவற்றை தனித் தனியே சேகரம் செய்து கொள்ள வேண்டும்.

இப்போது நீரில் மூழ்கிய பாகத்தினை புடமிடக் கிடைத்த நீறினை பெண்ணின் மார்பில் பூசினால் அந்த மார்பகம் சுருங்கி விடுமாம். அதே போல நீரில் மிதந்த மூஞ்சூறின் உடல் பாகத்தை புடமிடக் கிடைத்த நீறினை பெண்ணின் மார்பில் பூச அந்த மார்பகம் பெருத்து விடுமாம். இந்த வைத்திய முறையைச் செய்யும் போது தவறாமல் சிவசக்தியை வணங்கி செய்திட வேண்டும் என்கிறார்.

பல லட்சம் ரூபாய் செலவும், சிகிச்சைக்குப் பின்னர் பக்க விளைவுகளையும் கொண்டு தரும் நவீன வைத்திய முறைக்கு சவால் விடும் ஒரு வைத்திய முறையினை நமது முன்னோர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அருளியிருக்கின்றனர். இந்த முறையின் சாத்திய அசாத்தியங்கள் ஆய்வுக்கும், மேம்படுத்துதலுக்கும் உட்பட்டவை என்றாலும் கூட நமது முன்னோரின் அறிவின் திறம் எத்தகையதாக இருந்திருக்கிறது என்பதற்கு இம் மாதிரியான பாடல்கள் உதாரண்மாய் இருக்கிறது.

ஆர்வமுள்ளோர் இது தொடர்பாக மேலதிக ஆய்வுகளை செய்து இந்த வைத்திய முறையினை மேம்படுத்திடலாமே!

நாளை வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

22 comments:

Lingeswaran said...

மிகச் சரிதான்...இந்த பாடலை பல வருடங்களுக்கு முன்பே தேரையர் வைத்திய சாரம் என்ற நூலில் நான் படித்து வியந்திருக்கிறேன்...
ஆனால் அப்போது அதை யாரிடமும் பகிர்ந்து கொள்ள இயலவில்லை...

RAVINDRAN said...

நல்லது.

josham said...

bharathi ennaku oru santhegam ennpadi tamil type panringa?

மாலதி said...

மிகவும் சுவையான வேண்டிய பதிவு பாராட்டுகள்

bharathraja said...

thozhi,
yeppadi solluvathu yentru theriya villai,arumai arumai mika mika arumai, entraiya elam vayathu pengal than azhaku yentru solluvathu avarkalin marbakamthan,pengal thannai azhaku paduthikolla beauty parlour & doctor evarkalai thedi sentru udalai keduthu kolkirarkal,pengal entha siththa maruthuvathai thirumbi parka vaiyunkal thozhi.......

Om Sakthi said...

ஓம் சக்தி,பெண்களின் தாய்மை பருவத்தில் ,குழத்தைக்கு பால் சுர்றக்க முருங்கை கீரை சாபிடலாம்,பால் ஆதிக்ம சுரந்தால் அதை தடுக்கும் முறை உம உள்ளது

Prano said...

தோழி எனக்கொரு சந்தேகம் மார்பகங்களை பெரிதாக்குவதற்காக ஒரு உயிரை போக்க வேண்டுமா? அவ்வாறான ஒரு முறையை ஏன் தேரையர் போன்ற ஒரு சித்தர் குறிப்பிட்டுள்ளார்?

techsatish said...

super

Jayachandran said...

அந்த பசுஞ்சான கவசம் அந்த நீரினை உறிஞ்சி கொள்ளுமே?????
மேலும் புடமென்றால், தீயின் அளவு பற்றி கூறவேயில்லையே???

தயவு செய்து இதற்கு வழி கூறுங்கள் தோழியே<<<

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.

PALANI said...

உயிரை கொன்று வைத்தியமா? அதுவும் இந்த வைத்திய முறையை சொன்னவர்கள் சித்தர்களா? அப்படியானால் சீவ காருண்யம் , உயிர்கொல்லாமை?????????????????????????? மன்னிக்கவும் தயவு செய்து விளக்கவும்

R.T.அமுதன் said...

தோழி , புடம் எத்தனை எருவில் போட வேண்டும்

R.T.அமுதன் said...

தோழி , புடம் எத்தனை எருவில் போட வேண்டும் ?

kimu said...

நல்ல பதிவு.
அறிந்திடாத ஆச்சர்ய தகவல்.
பொதுவாக இதைப்பற்றி பெண்கள் வெளியில் சொல்வதில்லை.

மார்பகங்கள் பெரிதகுவதற்கு - நெஞ்சிக்கு நேராக நமஸ்காரம் / வண்ணகம் செய்யும்படி கைகளை வைத்துகொண்டு - ஒரு கையை அழுத்தம்கொடுக்க வேண்டும். எப்படி மாறி மாறி சில நிமிடம் / தினமும் செய்துவந்தால் இந்த பிரச்சனை தீரும் என்று ஒரு புத்தகத்தில் படித்துள்ளேன்.

அந்த எலியும் - சணமும் சேர்ந்து - சாம்பலாகிவிடும், தீருமன் - தீருநீறு போல் வருவதை பூசவேண்டும் - அப்படிதானே !!

மானிப்பாய் சுதன் said...

ஆச்சரியமிக்க தகவல்கள்,ஆராய்ச்சிக்குரியவை.நன்றி

தி.சுதர்மன்

மானிப்பாய் சுதன் said...

ஆச்சரியமான ஆராய்ச்சிக்குரியவை.

prabu said...

@மாலதி எலி... மிகவும் சுவையானதா "யன்ன கொடுமை சார்"

மதுரை சரவணன் said...

arumai... aachchariyam... viyakka vaikkum thakavalkal alli theliyungkal.. vaalththukkal

tamilvirumbi said...

தோழி ,
தாங்கள் தந்த பகிர்விற்கு மிக்க நன்றி .

krishna murthy said...

your second comment is fine. neerai kattum mooigai is kattukodi

krishna murthy said...

neerai kattum mooligai is kattukodi

Unknown said...

kandippa seiyanum

Post a comment