உணவும், உடலும்!

Author: தோழி / Labels: ,


மனிதன் உட்பட எல்லா உயிரினங்களுக்கும் உயிர்த்திருக்க காற்றைப் போல உணவும் பிரதானம். இந்த உணவின் மகத்துவத்தைப் பற்றி சித்தர் பெருமக்கள் விரிவாகவே தங்களின் பாடல்களில் கூறியிருக்கின்றனர். இதற்கு உணவே மருந்து, மருந்தே உணவு என்ற முதுமொழியை உதாரணமாகச் சொல்லலாம்..

நாம் உட் கொள்ளும் உணவானது நமது உடலில் எப்படிப் போய் சேர்கிறது என்பதைப் பற்றி அகத்தியர் தனது வல்லாதி எனும் நூலில் பின் வருமாறு கூறியிருக்கிறார்.

சொன்னோமே யின்னமொரு சூட்சங் கேளு
           சொல்லுவேன் பொசித்ததெல்லா மாறு பங்காய்
முன்னேதான் மலத்திலொன்று மூத்திரத்தி லொன்று
           மூளுமே தசையிலொன்று விந்தி லொன்று
தன்னேதான் மூளைதனி லொன்று சேரும்
            சார்ந்திடுமே உதிரத்தி லொன்று மாக
மன்னேதான் சயகாச யேக ரோகி
            வலுவான அதிசாரம் வந்த பேர்க்கே.


வந்தபெருங் கிராணி குன்மம் எலும்பு ருக்கி
             வாங்காத கரத்தோர்களின் சாத்திய ரோகி
பந்தமுறத் தின்றதொன்று மாறி லப்பா
             பாலகனே நோயருந்தும் பாரு பாரு
உந்தனுட விந்தழிந்தால் யெல்லாம் போச்சு
              உண்டதெல்லாம் பாழாச்சு உறவும் போச்சு
விந்துதனை இழந்துபல பிணிக்குள் ளாகி
              மெலிந்துகெட்டுப் போகாமல் விள்ளு வேனே.

அதாவது நாம் உண்ணும் உணவின் சாரமானது ஆறு பங்குகளாய் பிரிகிறதாம். அதில் ஒரு பங்கு கழிவாகி மலமாகவும், மற்றொரு பங்கு மூத்திரமாகி விடுகிறதாம். மீதமுள்ள நாலு பங்கில் ஒரு பங்கானது நமது தசையிலும், விந்து/நாதத்தில் ஒரு பங்கும், மூளையில் ஒரு பங்கும், நமது இரத்தத்தில் ஒரு பங்குமாகச் சேர்கிறதாம்.

இந்த விகிதங்களின் படி உணவின் சாரம் பிரிந்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்குமாம். இதில் ஏதேனும் மாறுதல் ஏற்படும் போதே நமது உடல் ந்லம் கெடுகிறது என்கிறார் அகத்தியர்.கிராணி, குன்மம், எலும்புருக்கி நோய், சுரநோய் ஆகிய நோய்கள் உண்டாகும் என்கிறார். இதனால் உடலில் உள்ள விந்தும் அழிந்து விடுமாம். அப்போது மேலதிக நோய்களுக்கு ஆளாகி விடுவோமாம். இதனால் நாம் உட் கொண்ட உணவு அனைத்தும் வீணாகிவிடும் என்கிறார் அகத்தியர்.

எல்லாம் சரிதான், உணவின் சாரம் பிரியும் விகிதம் கெடும் போது அதை எப்படி சரி செய்வது?

அதற்கும் அகத்தியர் ஒரு தீர்வினை நல்கியிருக்கிறார். பூரண வல்லாதி சூரணத்தை பக்குவமாய் செய்து சாப்பிட்டு வர இந்தப் பிரச்சினைகள் நீங்கி உடல் ஆரோக்கியத்துடன் இயங்கிட முடியும் என்கிறார். சித்த மருத்துவர்களை அணுகினால் இந்தப் பூரண வல்லாதி சூரணம் தயாரித்துக் கொடுப்பார்கள்.

நாளை வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

7 comments:

bharathraja said...

thozhi,
yenaku oru santhegam, unavu unnum pothu yepadi unna vendum yentra vithi muraikalai siththarkal kuri ullarkalamae,antha thakaval irunthal sollungal thozhi makkaluku mikavum payanaka irukkum,,,,,,,,,, unnum unavai parkalal nantra araithu undal serimanam viraiva nadaiperum yentru yen munnorkal solli kelvipattu irukeren athu unnaitha thozhi?????????

G Rajendran said...

thozhi,

UNAVE MARUNTHU ENBATHU SITHTHAR VAKKU. ENNA UNAVUKALAI THAVIRKA VENDUM, ENNA UNAVUKALAI EPPADI
KATTAYAM SERKA VENDUM, UNAVU ALAVU MURAIKALAIYUM
SITHTHAR ARILIYA SEITHIKALAI VELIYEDA VENDUKIREN

VALZHA VALAMUDAN

G Rajendran said...

Thozi,

SITHTHARKAL ARULIYAPADI ENNA UNAVAI THAVIRKKA VENDUM ? ENNA UNAVAI ATHIKAM SERKKA VENDUM ENDRA SEITHIENAI VELIYEDA VENDUM

VAZLHA VALAMUDAN

Sivananthan said...

நண்பர்களே!
நொறுங்க தின்றால் நூறுவயது. (நொறுக்கு தீனி அல்ல) உண்ணும் உணவை பற்களால் நொறுங்க அதாவது ஒன்றிரண்டாக அல்லாமல் நன்றாக பற்களால் அரைத்து சாப்பிடுவது.
அன்பு தோழி,
அன்னியர் ஆட்சியில் நமது அனைத்து கலாச்சாரமும் சீர்கெட்டு விட்டன.அதில் உணவு கலாச்சாரமும் ஒன்று. உணவு விசயத்தில் சைவ அசைவம் பற்றி மற்றும் வாராந்திர உணவு (உணவே மருந்து-மருந்தே உணவு) அட்டவணை போன்ற தகவல்கள் நமது மக்களின் உணவு கலாச்சாரத்தை, வாழ்க்கை முறையை முற்றிலுமாக செம்மைபடுத்தும். முடியுமானால் தாருங்கள்.
நன்றி.

arul said...

nalla pathivu

RAVINDRAN said...

நல்ல பயனுள்ள தகவல்,
நன்றி

tamilvirumbi said...

தோழி ,
மிக்க நன்றி .பூரண வல்லாதி சூரணம் செய்யும் முறை ,தாங்கள் அறிந்தால் தெரியப்படுத்தவும் .

Post a comment