பழந் தமிழர்களின் ஒரு நாள் என்பது அறுபது நாழிகையாக பிரிக்கப் பட்டிருந்தது. அதாவது ஒரு நாளானது தினமும் காலை சூரிய உதயத்தில் இருந்து மறுநாள் காலை சூரிய உதயம் வரையான இருபத்தி நான்குமணி நேரமே ஒரு முழு நாள் ஆகும்.
இந்த ஒரு நாளின் அறுபது நாழிகை நேரத்தில் சில நாழிகைகள் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகத்தினதும் தனித்துவமான ஆதிக்கதில் இருக்குமாம். அந்த நேரம் அந்த கிரகத்தின் ஹோரை என்று அழைக்கப்படும். ஹோரை என்பதை ஓரை என்றும் அழைப்பர். நிழல் கிரகங்களான ராகுவிற்கும் கேதுவிற்கும் ஹோரை குறிக்கப்படவில்லை. இன்னமும் எளிமையாக சொல்வதானால் அந்த நேரங்கள் அந்த குறிப்பிட்ட கிரகத்திற்கானது.
ஒவ்வொரு நாளும் துவங்கும் போது எந்த கிரகத்தின் ஹோரையுடன் துவங்குகிறது என்றும் வரையறுத்து வைத்திருக்கின்றனர். அதன் படியே அந்த நாளின் மற்ற ஹோரைகள் கணக்கிடப் படுகிறது.
ஞாயிறு - சூரியன் ஹோரை
திங்கள் - சந்திரன் ஹோரை
செவ்வாய் - செவ்வாய் ஹோரை
புதன் - புதன் ஹோரை
வியாழன் - குரு ஹோரை
வெள்ளி - சுக்கிரன் ஹோரை
சனி - சனி ஹோரை
மேலும் நாளின் நெடுகில் எந்த ஹோரை நடைபெறும் என்பதை கீழ் வரும் அட்டவணையில் அறியலாம்..
பஞ்சாங்கத்தில் தினமும் சூரிய உதய நேரத்தை பார்க்கலாம். அப்படி பார்க்க வசதி இல்லாதவர்களுக்கு உதவிட நிறைய இணைய தளங்கள் இருக்கின்றன. எனது மற்றய தளமான சித்த ஜோதிடம் என்னும் தளத்தின் வலதுபக்க மேல் மூலையில் சூரிய உதயம் முதல் அன்றைய திதி, நட்சதிரம், ராகுகாலம், எமகண்டம், சுப நேரம் போன்ற அனைத்தையும் தினசரி காலையில் பார்த்துக் கொள்ளலாம். அவை இலங்கை இந்திய நேரப்படியே குறிக்கப்படும். இதைக் கொண்டு எளிதாக கணக்கிட்டுக் கொள்ளலாம்.
இந்த அட்டவணைப் படி சனி ஹோரை நேரத்தில் முந்தைய சனிப் பெயர்சி பரிகாரப் பதிவில் குறிப்பிட்டிருக்கும் அரிதான சனி கவசத்தினை பாராயணம் செய்து வந்தால் சனி பகவானின் பேரருளுக்கு பாத்தியமாகலாமாம்.
சனிகவசம் மற்றும் ஹோரை பற்றிய குறிப்புகளை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் PDF கோப்பாக மாற்றியிருக்கிறேன். தேவையுள்ளவர்கள் இந்த இணைப்பில் தரவிரக்கிக்கொள்ளலாம். தேவையுள்ளவர்களுக்கு இந்த இணைப்பினை பகிர்ந்திடுமாறு வேண்டுகிறேன்.
சனிகவசம் மற்றும் ஹோரை பற்றிய குறிப்புகளை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் PDF கோப்பாக மாற்றியிருக்கிறேன். தேவையுள்ளவர்கள் இந்த இணைப்பில் தரவிரக்கிக்கொள்ளலாம். தேவையுள்ளவர்களுக்கு இந்த இணைப்பினை பகிர்ந்திடுமாறு வேண்டுகிறேன்.
இத்துடன் சனிப் பெயர்ச்சி பற்றிய தொடர் நிறைவடைந்தது.
நாளைய பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment
8 comments:
thanks for info
ஒவ்வொரு நாளும் எந்த ஹோரையில் துவங்குகிறது என்றூ கணக்கிட ஏதாவது வழிமுறை இருக்கிறதா?
ஏழு கிரகங்களும் பூமியின் மேல் ஆதிக்கம் செலுத்தும்போது, எப்படி நாம் குறிப்பிட்ட நேரத்தில் இந்த கிரகம்தான் அதிகம் செலுத்துகிறது என்று சொல்வது? ஏதாவது அறிவியல் முறை உள்ளதா, இல்லை சித்தர்கள் சொன்னதை அப்படியே எடுத்துக் கொள்ள வேண்டுமா?
மிக்க நன்றி
நல்ல பதிவு.
வாழ்த்துகள்.
Good news. Keep it up
///inquiring mind said/ ஒவ்வொரு நாளும் எந்த ஹோரையில் துவங்குகிறது என்று கணக்கிட ஏதாவது வழிமுறை இருக்கிறதா?///
எந்தெந்த வார நாட்களில் எந்தெந்த கிரகப் பெயர் இருக்கிறதோ,அந்தந்த ஹோரையில் காலையில் 6 மணி முதல் 7 மணி வரையில் ஹோரையாகக் கொண்டு அந்த நாள் துவங்கும். அதாவது
1)ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை காலை 6-7 சூரிய ஓரை நடக்கும்.
2)ஒவ்வொரு திங்கள் கிழமை காலை 6-7 சந்திர ஓரை நடக்கும்.
3)ஒவ்வொரு செவ்வாய் கிழமை காலை 6-7 செவ்வாய்(அங்காரக) ஓரை நடக்கும்.
4)ஒவ்வொரு புதன் கிழமை காலை 6-7 புத ஓரை நடக்கும்
5)ஒவ்வொரு வியாழக் கிழமை காலை 6-7 குரு ஓரை நடக்கும்.
6)ஒவ்வொரு வெள்ளிக் கிழமை காலை 6-7 சுக்கிர ஓரை நடக்கும்.
7)ஒவ்வொரு சனிக் கிழமை காலை 6-7 சனி ஓரை நடக்கும்.
பிறகு 6-3-8-1 என்ற கணக்கில் அந்தந்த நாளுக்குரிய ஓரைகள் நடக்கும்.அதாவது காலை ஆறு மணிக்கு ஆரம்பிக்கும் ஓரை சூரிய ஓரையாக இருந்தால் அன்று காலை6-7 ம்,மாலை 3-4 ம்,இரவு 8-9ம்,மீண்டும் அதிகாலை 1-2 ம் அதே ஓரை நடக்கும்.மேலும் அடுத்தடுத்த ஹோரைகளை கணக்கெடுக்க கிழமை வரிசையில் ஒன்று விட்டு ஒரு கிழமையாக முன்னால் தாவிச் சென்று கணக்கிட்டுக் கொள்ளலாம்.அதாவது செவ்வாய்க் கிழமை காலை 6-7 செவ்வாய்(அங்காரக) ஹோரை என்றால் ஒன்று விட்ட முன் கிழமை ஞாயிறு எனவே அடுத்த 7-8 மணியில் ஞாயிறுக்குரிய சூரிய ஓரையே நடக்கும்.அதன்பின் 8-9 மணிக்கு ஞாயிறுக்கு ஒன்று விட்ட முன் கிழமை வெள்ளிக் கிழமை, எனவே அடுத்த 8-9 மணியில் வெள்ளிக் கிழமைக்குரிய சுக்கிர ஓரையே நடக்கும்.அதன்பின் இப்படியே 9-10 புத ஓரையும்,அதன்பின் 10-11 திங்களுக்குரிய சந்திர ஓரையும்,அதன்பின் 11-12 சனி ஓரையும்,அதன்பின் 12-1 வியாழனுக்குரிய குரு ஓரையும்,பிறகு மீண்டும் 1-2 அங்காரக(செவ்வாய்) ஓரையும் நடக்கும்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்
http://machamuni.blogspot.com/
http://kavithaichcholai.blogspot.com/
superb ...
தோழி ,
தாங்கள் விலா வாரியாக கொடுத்துள்ள செய்திகள் அனைத்தும் அருமை .மிக்க நன்றி .
Post a Comment