சனி பகவானும், பரிகாரங்களும்.

Author: தோழி / Labels:

வணிக மயமாகிவிட்ட இன்றைய வாழ்க்கைச் சூழலில் பரிகாரம் என்ற வார்த்தைக்கு பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வு என்பதாகவே கற்பிக்கப் பட்டு விட்டது. இதன் அடிப்படையில்தான் ஒரு பிரச்சினைக்கு அவரவர் செல்வ நிலைகளுக்கு ஏற்ப பல விதமான பரிகாரங்கள் இருப்பதாக சொல்லிக் கொண்டிருக்கின்றனர்.

என்னுடைய வாசிப்பனுவத்தின் படி, பரிகாரம் என்பது ஒரு போதும் பிரச்சினைகளுக்கு தீர்வாகவோ, மாற்றாகவோ இருக்க முடியாது. ஏனெனில் பரிகாரம் என்பது ஒரு வகையான ஆறுதல் மட்டுமே. 

இருட்டில் நடக்கிறவனுக்கு கை விளக்குப் போலவும், கரடு முரடான பாதையில் நடக்கிறவனுக்கு காலணி போலவும்தான் இந்த பரிகாரங்கள் பயன்படும். மற்றபடி விதிக்கப் பட்ட பாதையில் அவரவர் பயணித்தே ஆக வேண்டும். எனவே பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என நினைத்து பெரும் பொருட் செலவில் பரிகாரங்களை செய்வதற்கு முன்னர் இதை மனதில் கொள்ள வேண்டுகிறேன். 

சனி பகவானின் பெயர்ச்சியினால் நமக்கு உண்டாகும் நன்மைகளை மேம் படுத்திக் கொள்ளவும், தீமைகளின் பாதிப்பினை குறைத்துக் கொள்ளவுமே இந்த பரிகாரங்கள் கூறப் படுகின்றன.சித்தர் மரபிலும் சரி, அதைத் தாண்டிய பிற ஞான மரபிலும் சரி, இறைவனை மனதில் இருத்தி துதித்திருப்பது மட்டுமே எல்லா இடர்களுக்கும் பரிகாரமாய் சொல்லப் படுகிறது. புறவழிபாடுகளையோ, சடங்குகளையோ சித்தரியலும் சரி, ஞான மரபும் சரி நிராகரிக்கின்றன. 

அந்த வகையில் சில தியான மந்திரங்களையும், ஸ்லோகங்களையும் இன்று பகிர்ந்து கொள்கிறேன்.

தியான பாடல் (தமிழ்)..

"சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்செகம் வாழ இன்னருள் தருவாய் போற்றி"


தியான சுலோகம் (சமஸ்கிருதம்)..

"நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்|
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸநைச்சரம்||"

சனி காயத்ரி

"ஓம் காகத்வஜாய வித்மஹே 
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்||"

இவை தவிர சனிபகவானின் கவசம் ஒன்று எனது பாட்டனாரின் குறிப்புகளில் இருந்து தேடி எடுத்தேன். மிகவும் அரிதான இந்த கவசத்தை எழுதியவர் யாரெனத் தெரியவில்லை. ஆனால் ஒவ்வொரு சனிக் கிழமைகளிலும் சனி கோரை நேரத்தில் இந்த கவசத்தை பாராயணம் செய்தால் சனிபகவானின் பேரருளுக்கு பாத்திரமாகலாம் என்ற குறிப்பு எழுதப் பட்டிருக்கிறது. 


அந்த பாடல் இதுதான்....


சனி கவசம்..


காப்பு

தேவரெண் டிசைக்கதிபர் சித்தரொடு கிம்புருடர்
மூவர் முனிவர் முதலோரை - மேவியுறுந்
தாரணிந்த மார்பன் சனிபகவான் கதை புகலக்
காரணிந்த யானைமுகன் காப்பு.


ஆதிவேதாந்தமுதல் அரியஞானம்
ஐந்தெழுத்தி னுட்பொருளை அயன்மாலோடும்


சோதிசிற்றம் பலத்திலாடி நின்ற
சுடரொளியை நீ பிடித்த தோஷத்தாலே


பாதிமதி சடைக்கணிய அரவம் பூணப்
பதியிழக்கச் சுடலைதனிற் பாடியாடச்


சாதியிலா வேடனெச்சிற் தின்னவைத்தாய்
சனியனே காகமேறுந் தம்பிரானே


வேலவனை வேங்கைமர மாக்கிவைத்தாய்
விறகுகட்டுச் சொக்கர்தமை விற்கவைத்தாய்


மாலினியை யுரலோடு கட்டுவித்தாய்
வள்ளிதனைக் குறவறது வனத்தில் வைத்தாய்


காலனைமார்க் கண்டணுக்கா அரனுதைத்த
காரணமும் நீ பிடித்த கருமத்தாலே


சாலவுனை யான்றொழுதே னெனைத்தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே


மஞ்சுதவ ழயோத்தியில்வாழ் தசரதன்றன்
மக்களையும் வனவாசமாக்கிவைத்தாய்


பஞ்சவர்கள் சூதினால் பதியிழந்து
பஞ்சுபடும் பாடைவர் படச்செய்வித்தாய்


எஞ்சலிலா வரிச்சந்திரன் பெண்டை விற்றே
இழிகுலத்தி லடிமையுற இசையவைத்தாய்


தஞ்சமென வுனைப்பணித்தே னெனைத்தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே


அண்டமாயி ரத்தெட்டு மரசுசெய்த
அடல்சூர பத்மனையு மடக்கிவைத்தாய்


மண்டலத்தை யாண்டநளச் சக்ரவர்த்தி
மனைவியொடு வனமதனி லலையச்செய்தாய்


விண்டலத்தை பானுகோ பன்றன்னாலே
வெந்தணலாய்ச் சூரரை வெருவச் செய்தாய்


தெண்டனிட்டே னெந்நாளு மெனைத்தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே.


அண்டர்கோன் மேனியிற்கண் ணாக்கிவித்தாய்
அயன்சிரத்தை வயிரவனா லறுக்கவைத்தாய்


திண்டிறகொள் கெளதமனா லகலிகைதான்
சிலையாகவேசாப முறவேசெய்தாய்


தண்டரள நகையிரதி மாரன்றன்னைச்
சங்கரனார் நுதல்தவிழியிற் றணல்செய்வித்தாய்


சண்டமிலாதுணைத் தொழுதே னெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே


பாருலவு பரிதியைப்பல் லுதிரவைத்தாய்
பஞ்சவர்க்குத் தூதுபீதாம் பரனைவைத்தாய்


தாருலவும் வாலிசுக் ரீவன்றம்மைத்
தாரையினாற் றீராத சமர்செய்வித்தாய்


சூரனெனு மிலங்கைரா வணன் றன் தங்கை
சூர்ப்பனகி மூக்குமுலை துணிசெய்வித்தாய்


தாரணியு மணிமார்பாவெனைத் தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே


சுக்ரன்றன் கண்ணிழந்தான் லங்கையாண்டு
துலங்கும்ரா வணன் சிரங்கண் டிக்கவீழ்ந்தான்


மிக்கபுக ழிரணியென்றான் வீறழிந்தான்
விளங்குதிரி புராதிகளும் வெந்துமாண்டர்


சக்காத்தா லுடலறுந்தான் சலந்தரன்றான்
தாருகாசூரனுமே சமரில் மாண்டான்


தக்கன்மிகச் சிரமழிந்தா நிந்தோழத்தால்
சனியனே காகமேறுந் தம்பிரானே.


அந்தன ஐங்கரங்கொம் பறவேசெய்தாய்
அறுமுனிவர் மனைவிகள்கற் பழியச்செய்தாய்


சந்திரன்றன் கலையழிந்து தழைக்கச் செய்தாய்
சங்கரனைப் பிச்சைதா னெடுக்கச் செய்தாய்


தந்திமுகாச் சூரனுயிர் தளரச் செய்தாய்
சாரங்க தரங்கரத்தை தறிக்கச்செய்தாய்


சந்ததமு முனைப்பணிவே சிறைசெய்வித்தாய்
தேவர்களைச் சூரனாற் சிறைசெய்வித்தாய்


மாதுதுரோ பதைதுயிலை வாங்குவித்தாய்
மகேச்சுரனை யுமைபிரியும் வகைசெய்வித்தாய்


போதிலயன் றாளிற்றளைப் பூட்டிவித்தாய்
பொதிகையினிலகத்தியனை பொருந்தச் செய்தாய்


தாதுசேர் மலர்மார்பா வெனைத்தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே.


அப்பர்தமை கருங்கல்லோ டலையிற்சேர்த்தாய்
அரனடியின் முயலகனை யடங்கச்செய்தாய்


செப்புமா ணிக்கர் தமைச் சிறையிலிட்டாய்
ஸ்ரீராமனை மச்சவுரு வெடுக்கச்செய்தாய்


ஒப்பிலனு மான்வாலி லொளிதீயிட்டாய்
ஒலிகடலி னஞ்சையான் உண்ணவைத்தாய்


தப்பிலா துனைதொழுதே னெனைத்தொடாதே
சனியனே காகமேறுந் தம்பிரானே


நீரினையுண்ட டெழுமேக வண்ணா போற்றி
நெடுத்தபத்தி லறுகமலக் கண்ணா போற்றி


சூரியன்றன் றவத்தில்வந்த பாலா போற்றி
துலங்குநவ கிரகத்துண் மேலா போற்றி


காரியென் பெயர்களுப காரா போற்றி
காசினியிற் கீர்டத்திபெற்ற தீரா போற்றி


மூரிகொளு நோய்முகமா முடவா போற்றி
முதுமகனின் முண்டகநாள் போற்றி போற்றி


சூரியன்சோ மன்செவ்வாய் சொற்புதன் வியாழன் வெள்ளி
காரியனி இராகு கேது கடவுள் ரொன்பா னாமத்


தாரியல் சக்கரத்தை தரித்திரர் பூசித்தாலும்
பாரினிற் புத்திர ருண்டாம் பாக்கியம் நல்குந்தானே.

              சனி கவசம் முற்றும்.

இந்த அரிய பாடலை எழுதியவர் யாரென தெரிந்தவர்கள் கூறினால் நன்றியுடையவளாக இருப்பேன். 

இந்நேரத்துக்கு சனி கோரை நேரம் என்பது என்னவென்ற கேள்வி உங்களுக்கு வந்திருக்கும். அது தனியே விவரிக்க வேண்டிய ஒன்று, அந்த தகவல்களுடன் நாளை சந்திக்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

11 comments:

arul said...

thanks for the new poem

Sivananthan said...

அவரவர் (பாவ, புண்ணிய) கணக்கில்- பாவ-புண்ணிய இருப்பு தொகைக்கு ஏற்ப சனி பகவானின் தீர்ப்புகளும் இருக்கும். மிக அதிக பணம் செலவுடன் பரிகாரம் செய்து சனி பகவானை "காக்கா" பிடிக்க முடியாது. குறைந்த அளவு பாவ இருப்பு உள்ளவர்கள் கஷ்ட நஷ்டத்துடன் தப்பித்துவிடுவார்கள். பாவ இருப்பு அதிகம் உள்ளவர்கள் தப்புவது கடினம்தான். ஆனால் அவர்களும் மனம் உருகி வருந்தி,திருந்தி இறைசிந்தனையுடன் பரிகாரம் செய்து வந்தால் தப்பிப்பது மட்டும் அல்ல மறுவாழ்வும் கிடைத்துவிடும் என நம்பலாம்.

sirkazhianand said...

samaskaram pathivukalin ethirseyalkal santhithe thiravendum...............


like your article

Piththa_ Piraisoodi said...

சனி கவசப் பாடலை கீழ்க்கண்டவாறு
சந்தத்தோடு பாடினால் சுலபமாக இருக்கும்:

ஆதி வேதாந்த முதல் அரிய ஞானம்
ஐந்தெழுத்தின் உட்பொருளை அயன்மாலோடும்
சோதிசிற்றம்பலத்தில் ஆடி நின்ற
சுடரொளியை நீ பிடித்த தோஷத்தாலே
பாதிமதி சடைகனிய அரவம்பூனப்
பதியிழக்க சுடலைதனில் பாடியாடிச்
சாதியிலா வேடநெச்சில் தின்னவைத் தாய்
சனியனே காகமேறும் தம்பிரானே .....

tamilvirumbi said...

தோழி ,
மிக்க நன்றி.ஆனால் ,ஏழரை சனியில் ,துன்புருகிறவர்கள்,ஏழை எளியவர்களுக்கு மற்றும் உடல் ஊனம் அற்றவர்களுக்கு உதவினால் ,சனியால் ஏற்படும் இடர்கள்
குறையும்.மேலும் ,சனிக்கு பரிகாரம் செய்தவர்கள் ,ஆறு மாதங்களில் ,அவரவர் ஜாதக நிலைகளுக்கு ஏற்ப பலன்கள் கிடைக்கப்பெறுவார்கள் என்று ஜாதக அலங்காரம்
என்ற நூலில் கூறப்பட்டுள்ளது .

Piththa_ Piraisoodi said...

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு,
உளவு என பல்வேறு காரங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கைகோளில், அதன் கருவிகளில்ஏற்படுவதில்லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.இது எப்படி சாத்தியம்??? - என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரள வைத்தது.


ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்துவிடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.


இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்று வரை விண்ணில் செயற்கைகோள்கள்
திருநள்ளாறு பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது."

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை,நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை விஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன்.

நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே

நவகிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!!
உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள் பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்தஅறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும், அதற்காக அவர்கள் நம்மை பின்பற்ற வைத்ததுதான் கடவுள் மார்க்கம் என்றே நான் எண்ணுகிறேன்...

எது எப்படியோ??? நமது முன்னோர்கள் நம்மை விட
கில்லாடிகள் !!!!

எப்படியா ??

அவர்கள் போட்ட புதிருக்கு இன்னும் விடை தெரியாமல்
அலைந்து கொண்டிருகிருகிறோம்.. அறிவியல் வளர்ச்சியோடு.

piravipayan said...

அன்பு தோழி
நல்ல அருமையான பதிவு
சனி பகவானின் அருள் எல்லோரும் பெற அந்த சனி கவசத்தை
தரவிறக்க ஏற்பாடு செய்யமுடியுமா

நன்றி

radhakrishnan sathiyamurthy said...

Hai,
I am R.Sathiyamurthy
Read sani kavacham. Good.
some of the lines left over in print

After Saranga Tharangaththai Tharikka saithai

these lines to be included

Santhathamum vunaippaniven yenai thodathe
Saniyane kakam yerum thambirane

Seethathanai Ravananal serai saiviththai

and then only
Devagalai suranaal Serai saiviththai

please corret the same in tamil


kindly permit us to copy and download.

Unknown said...

nanri thozhi

Unknown said...

தோழி வணக்கம்,

தங்கள் சேவை அளப்பறியது

சனி கவசம் பாடலில் *** குறியிட்ட இட்ட இடத்தில் இரு அடிகள் விடுபட்டிருப்பது போலிருக்கிறது


அந்தன ஐங்கரங்கொம் பறவேசெய்தாய் அறுமுனிவர் மனைவிகள்கற் பழியச்செய்தாய்
சந்திரன்றன் கலையழிந்து தழைக்கச் செய்தாய் சங்கரனைப் பிச்சைதா னெடுக்கச் செய்தாய்
தந்திமுகாச் சூரனுயிர் தளரச் செய்தாய் சாரங்க தரங்கரத்தை தறிக்கச்செய்தாய்
***
சந்ததமு முனைப்பணிவே சிறைசெய்வித்தாய் தேவர்களைச் சூரனாற் சிறைசெய்வித்தாய்
மாதுதுரோ பதைதுயிலை வாங்குவித்தாய் மகேச்சுரனை யுமைபிரியும் வகைசெய்வித்தாய்
போதிலயன் றாளிற்றளைப் பூட்டிவித்தாய் பொதிகையினிலகத்தியனை பொருந்தச் செய்தாய்
தாதுசேர் மலர்மார்பா வெனைத்தொடாதே சனியனே காகமேறுந் தம்பிரானே.

முடிந்தால் பிரசுரிக்கவும்.

மோகன், ஹைதராபாத்

Anonymous said...

பரிகாரம் உண்மை பொய் அல்ல . பிரம்மாவின் சட்டத்தின் படி விதியை பிராத்தனை மூலம் வெல்லலாம் .மனித உயிர்களின் பாவதிர்கேற்ப நோய்கள் தோன்றும் , அதை பிராத்தனை மூலம் வெல்லலாம் அதற்கு சித்தர்களும் துணை நிற்கிறார்கள் . யார் யார் சித்தர்களை நம்புகிறார்களோ யார்யாருக்கு பூர்வ ஜன்ம புண்ய பலம் உள்ளதோ அவர்களுக்கு விதி நிச்சயம் மாறும் ...

Post a comment