சனிபகவான் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு மார்கழி 04ம் திகதி அன்று 57 நாழிகை 26 வினாடி அதாவது 21.12.2011 காலை 05 மணி 20 நிமிடத்திற்கு பெயர்ந்திருக்கிறார்.துலா ராசியானது சனிபகவானுக்கு உச்சஸ்தானம் என்று சொல்லப்படுகிறது இந்த நிலைக்கு வருவதன் மூலம் அவர் பலம் மிகுந்தவராகி விடுவார் என்கிறது சோதிட நூல்கள்.
அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய நான்கு ராசிகளுக்கான பலன்களை இன்று பார்ப்போம்.
தனுசு
நட்சத்திரங்கள் - முலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் வரை
தனுசு ராசிக்காரர்கள் இயல்பில் நல்ல எண்ணங்களைக் கொண்டவர்களாக இருப்பார்களாம். இத்தகைய ராசிக்கு பத்தாம் இடமான கன்னியில் இருந்த சனி பகவான் பெயர்ந்து பதினோராவது வீடான துலாம் ராசிக்கு வந்திருக்கிறார். இது வரை இருந்த துயரமெல்லாம் பனி போல விலகும் காலமிது. இதனை சாதக சிந்தாமணி பின் வருமாறு கூறுகிறது.
"பதினோரா மிடதில் காரி
பாங்குடன் வந்து விட்டால்
அதிகாரப் பதவி கூடும்
சுகமாக அமையும் வாழ்வே"
இந்த கால கட்டத்தில் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும், பண வரவு உண்டாகும். இந்த சனிப் பெயர்ச்சியினால் சுப பலன்களை பெறும் ராசிகளில் தனுசு ராசியும் ஒன்று. இந்த வாய்ப்பினை நழுவ விடாது பலன் பெற்றிட எல்லாம் வல்ல குருவருள் துணை நிற்கட்டும்.
எனினும் சித்திரை முதல் ஆறு மாதங்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும்.
மகரம்
நட்சத்திரங்கள் - உத்திராடம் 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம், திருவோணம், அவிட்டம் 1ஆம், 2ஆம் பாதம் வரை
மகர ராசிக்காரர்கள் ஆன்மீகத்தில் நாட்டமுள்ளவர்களாக இருப்பார்களாம். இத்தகைய மகர ராசிக்கு ஒன்பதாம் வீடான கன்னி ராசியில் இருந்த சனி பகவான் தற்போது பத்தாம் வீடான துலாம் ராசிக்கு பெயர்ந்திருக்கிறார். சோதிட நூல்கள் இதனை ஜீவனச் சனி என்கிறது. மகர ராசி நாதனான சனி பகவான் தனது நட்புக் கிரகமான சுக்கிரன் வீட்டில் உச்சம் பெற்றிருப்பதால் பெரிய அளவிலான பாதிப்புகள் இருக்காது.
"சூரிய மைந்தன் காரியும்
சுகமாய் தசமமிடம் வந்தால்
வரவு பெருகும் வளம்பெருகும்
வதுமை புரியும்யோ கம்வரும்"
எனினும் எண்ணம், சொல், செயல் ஆகியவற்றில் நிதானம் கடை பிடிக்காவிடில் அதற்கான பலன்களை அனுபவிக்க வேண்டிவரும்.இடமாற்றமும் தொழில் மாற்றமும் முன்னேற்றங்களும் உண்டாகும். அத்துடன் அலைச்சலும் அகால போஜனமும் உண்டாகுமாம். என்றாலும் கூட இந்த சனி பெயர்ச்சியால் அதிக நற் பலன்களைப் பெறும் ராசிகளில் இதுவும் ஒன்று.
கும்பம்
நட்சத்திரங்கள் - அவிட்டம் 3ஆம், 4ஆம் பாதம் , சதயம், பூரட்டாதி 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம் வரை
"நவமதில் காரி வந்தால்
நாளும் நற்செல்வம் சேரும்
அவமரி யாதை நீங்கும்
அகிலமே வணங்கிப் போற்றும்"
கும்ப ராசிக்காரர்கள் எத்தகைய சூழலிலும் நிதானமாக சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்களாய் இருப்பார்களாம்.இத்தகைய கும்பராசிக்கு ராசியின் அதிபதியான சனி பகவான் எட்டாம் வீடான கன்னியில் இருந்து பெயர்ந்து ஒன்பதாவது ராசியான துலாம் க்கு பெயர்ந்திருக்கிறார். இதுவரை இருந்து வந்த அஷ்டம சனி விலகியிருப்பது ஆறுதல் தரும் அம்சம். இதுவரை இருந்த அவல நிலை இனி மாறும்.
இல்லறம் நல்லறமாகும். சிறுசிறு பிரச்சனைகளை தந்தாலும் பொதுவில் நல்ல நற்பலன்களையே சனிபகவான் தருவார். தகுதிக்கு மீறிய செயல்களில் இறங்காதிருத்தல் உத்தமம்.
மீனம்
நட்சத்திரங்கள் - பூரட்டாதி 4ஆம் பாதம் , உத்திரட்டாதி, ரேவதி.
மீன ராசிக்காரர்களுக்கு ஏழாம் இடமான கன்னி ராசியில் கண்டகச் சனியாக இருந்தவர் பெயர்ந்து எட்டாம் இடமான துலாம் ராசிக்கு அஷ்டமச் சனியாக வந்திருக்கிறார். இது இதுவரை இருந்த துயர நிலையை அதிகரிப்பதாகவே இருக்கும். எனவே இனி வரும் நாட்களில் தேவைக்கும் அதிகமான நிதானமும், ஒழுங்குடன் கூடிய செயல் பாடுகளுமே கடுமையான துயரத்தில் இருந்து காப்பாற்றும்.
"அட்டம ஸ்தானம் தன்னில்
கடுமையுடன் காரி வந்தால்
எருமை யேறிய எமனும்
நேரில் வந்தது போலாமே"
உற்றார், உறவினர், நண்பர்கள் என சமூகத்தினரின் அவதூறுக்கும், அவமதிப்புக்கும் ஆளாகும் வாய்ப்புகள் உண்டு. கடுமையான மன அழுத்தங்கள் உண்டாகும் என்பதால் இந்த கால கட்டத்தில் நல்லோர் அருகாமையும், அறிவுரையும் கேட்டு நடப்பது நல்லது.
இத்துடன் சனிப் பெயர்ச்சி பலன்கள் முற்றிற்று.
இது வரை நாம் பார்த்த பலன்களை வாசித்த பின்னர் உங்கள் மனதில் நற் பலன்களை மேலும் அதிகப் படுத்தி நலமடையவோ அல்லது தீய பாதிப்புகளைக் குறைத்துக் தம்மை பாதுகாத்துக் கொள்ளவோ ஏதும் பரிகாரங்கள் இருக்கின்றனவா என்ற கேள்வி இன்னேரத்திற்கு வந்திருக்கும்.
அது பற்றி நாளைய பதிவில் பார்ப்போமே!
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment
8 comments:
Thanks
தோழி ,
மிக்க நன்றி.சிறந்த பதிவாக தந்துள்ளீர்கள்
நல்ல பதிவு.
வாழ்த்துகள்.
Nanri Tholi..
சனிப் பெயர்ச்சிப் பலன்களைப் பொதுவான ஒரு மேலோட்டமாக சொல்லி உள்ளீர்கள். நன்றி தோழி.
இதனைப் பற்றி சிறிது ஆழ்ந்து பார்த்தால் பலன்கள் வெவ்வேறு காரண காரணிகளுக்காக மாறுபடவே செய்கிறது. இதனைத் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழ்க்கண்ட லிங்க் சென்று உங்கள் ராசிக்கான பலன்களை விரிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
http://www.youtube.com/watch?v=zg7Fvvc4Qko&feature=related
thozhi,
mika mika arumai,innum thodaravendum ungal yeluthukkal,sitharkalin arul ungalukku undu...........
ஓம் சக்தி ,அன்புள்ள நேயர்கள ,அன்வருகும் வணக்கம் .தமிழில் எழுத ,கூகுளே ஜிமெயில் -தமிழ் -transilation முதலில் அ என்று அதை கிளிக் செய்து விட்டு -எதை எழுத வேண்டுமோ அதை ஆங்கிலத்தில் டைப் செய் உமம், எட்த்து கா ட்டு--------
vanakam --என்று ஆங்கிலத்தில் எழுதி --enter --தட்டினால் தமிழ் எழுத்து வரும் ,மாறி
இருந்தால் ,back space புட்டன் மெதுவாக் அழுத்தி வரும் சொல்லில் தேர் இந்து எடுதுகொள்ளுகள்.நான் இப்டித்தான்-பழகிறன்.எதில் தவறு வரு கிறது .யாராவது வேறு வழி சொல்லி கொடுத்தல் ஏற்றுகொள்கிறான்.நன்றி .
தோழி ஒவ்வொரு ராசியின் குணநலன், எப்படி இருப்பார்கள், அவர்கள் எப்படி வரலாம் என்று சித்தர்கள் சொல்லி இருகிறார்களா, அப்படி சொல்லி இருந்தால் அதை பதிவு செய்யுங்கள் நன்றி
Post a Comment