சனிப் பெயர்ச்சி பலன்கள் - சிம்மம் முதல் விருச்சிகம் வரை..

Author: தோழி /


சனிபகவான் கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு எதிர்வரும் மார்கழி 04ம் திகதி அன்று 57 நாழிகை 26 வினாடி அதாவது 21.12.2011 காலை 05 மணி 20 நிமிடத்திற்கு பெயர்ச்சியாகின்றார். துலா ராசியானது சனிபகவானுக்கு உச்சஸ்தானம் என்று சொல்லப்படுகிறது இந்த நிலைக்கு வருவதன் மூலம் அவர் பலம் மிகுந்தவராகி விடுவார் என்கிறது சோதிட நூல்கள்.

அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகிய நான்கு ராசிகளுக்கான பலன்களை இன்று பார்ப்போம்.


சிம்மம் 

நட்சத்திரங்கள் -  மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் வரை

சிம்ம ராசிக்காரர்கள் கடின உழைப்பாளிகளாகவும், விடா முயற்சியுடையவர்களாகவும் இருப்பார்களாம். இத்தகைய சிம்ம ராசிக்காரர்களுக்கு இரண்டாம் இடத்தில் இருந்த சனி பகவான் பெயர்ந்து மூன்றாம் இடமாகிய துலாம் ராசிக்கு செல்கிறார். இந்த இடம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமான ஒரு இடமாகும். இது வரை இருந்த துயர நிலை எல்லாம் இனி மாறி நன்மையுண்டாகுமாம். 

இதனை சாதக சிந்தாமனி பின் வருமாறு கூறுகிறது.

"வீரிய ஸ்தானம் மீதில்
      விளங்கிடும் காரி யுற்றால்
காரியம் யாவும் வெல்லும் 
      காலமே ஏவல் செய்யுமாறே"

சிம்ம ராசிக் காரர்களுக்கு இவர் 7ம் வீட்டுக்கு உரியவராக இருந்தாலும் தற்போது இந்த ராசிக்காரர்கள் 7 1/2 ஆண்டுச் சனியிலிருந்து விடுபடுகின்றனர். இதனால் இல்லறம் நல்லறமாகும். தொழில்,கல்வி சிறக்கும். எனினும் புது தமிழ் வருடத்தின் முதல் ஆறு மாதங்கள் கவனமாய் இருந்து காரியமாற்றிட வேண்டும். பொதுவில் இந்த சனி பெயர்ச்சியால் அதிக நற் பலன்களைப் பெறும் ராசிகளில் இதுவும் ஒன்று.


கன்னி 

நட்சத்திரங்கள் - உத்திரம் 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம் , அஸ்தம், சித்திரை 1ஆம், 2ஆம் பாதம் வரை

இது வரை ராசிக்கு ஜென்ம சனியாக இருந்த சனி பகவான் இரண்டாம் வீடான துலாம் ராசிக்கு பெயர்கிறார். இந்த புதிய நிலை எழரை ஆண்டுச் சனியின் இறுதி காலகட்டம் ஆகும். கடந்த ஆண்டுகளில் நிலவி வந்த இறுக்கம், தயக்கம் போன்றவைகளின் தீவிரம் குறையும். 

இல்லறத்தில் கணவன் மனைவி உறவில் இருந்து வரும் பேதம் குறையும். உடல் நலத்தில் மேலதிக அக்கறை காட்டிட வேண்டி வரும். பொதுவில் இன்பம் துன்பம் என இரண்டும் கலந்த கால கட்டமாக இருக்கும். மிதமான பலன்களையே எதிர்பார்க்கலாம்.


துலாம் 

நட்சத்திரங்கள் - சித்திரை 3ஆம், 4ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம் வரை

துலாம் ராசிக்காரர்கள் அனைவரும் கவரும் தோற்றமுடையவர்களாக இருப்பார்களாம். இத்தகைய துலாம் ராசிக்கு பன்னிரெண்டாவது வீடான கன்னி ராசியில் இருந்த சனி பகவான் பெயர்ந்து ஜென்மச் சனியாக ராசிக்கு வருகிறார். இதை ஏழரை ஆண்டுச் சனியின் உச்ச கால கட்டமாக சோதிட நூல்கள் கூறுகின்றன. இதனால் கடுமையான விளைவுகளை எதிர் நோக்க வேண்டி இருக்கும்.

எனினும் துலாம் ராசி நாதனான சுக்கிரன் சனி பகவானின் நட்புக் கிரகமாகிப் போனதனால் இந்த பாதிப்புகள் பாதியாக குறையுமாம். எதிரிகளை இனங்கண்டு ஒதுக்கி விட்டு, நல்லவர்களின் அருகாமையை கொள்வது இடர்களை குறைக்கும். பொதுவில் இந்த பெயர்ச்சியின் போது மத்திம பலன்களையே எதிர்பார்க்கலாமாம்.


விருச்சிகம் 

நட்சத்திரங்கள் - விசாகம் 4ஆம் பாதம், அனுஷம், கேட்டை.

விருச்சிக ராசிக்காரர்கள் விடா முயற்சியுடையவர்களாக இருப்பார்களாம். விருச்சிக ராசிக்கும் பதினோராம் இடமான கன்னி ராசியில் இருந்த சனி பகவான் பெயர்ந்து பன்னிரெண்டாவது ராசியான துலாம் க்கு வருகிறார். இது ஏழரை ஆண்டுச் சனியின் துவக்க கால கட்டமாகும். எனவே இதுவரை இருந்து வந்த அனுகூல நிலைகள் இல்லாது போகும். பொருள் விரயம் இந்த கால கட்டத்தில் உண்டாகும். எண்ணம், செயல், சொற்களின் கவனம் தேவைப் படும் கால கட்டமாகும். இடமாற்றத்தையும் அதிக செலவுகளோடு அலைச்சல்களையும் கொடுக்கும் கால கட்டமிது.

எனினும் சித்திரை முதல் ஆறு மாதங்களில் சுப பலன்கள் உண்டாகும். பொதுவில் இந்த கால கட்டத்தில் மத்திம பலன்களையே எதிர்பார்க்கலாம்.

நாளைய பதிவில் கடைசி நான்கு ராசிகளான தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய ராசிகளின் பலன்களைப் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

4 comments:

tamilvirumbi said...

தோழி ,
தங்களின் இன்றைய பதிவு மிகவும் நன்றாக இருந்தது .மிக்க நன்றி .

bharathraja said...

thozhi,
nan kanni rasi,yelarai aandu saniyin iruthi kattam yendu solluringa, appatina sani pakavaan pokumpothu nalla palan kothuvittu selvara yenaku saraiya puriyavilai thozhi???

முத்தரசு said...

பகிர்வுக்கு நன்றி

tamilvirumbi said...

தோழி ,
மிக்க நன்றி.சிறந்த பதிவாக தந்துள்ளீர்கள்

Post a comment