சனிப் பெயர்ச்சி பலன்கள் - மேஷம் முதல் கடகம் வரை..

Author: தோழி / Labels:


சனிபகவான் தற்போதைய இருப்பிடமான கன்னி ராசியில் இருந்து துலா ராசிக்கு எதிர்வரும் மார்கழி 04ம் திகதி அன்று 57 நாழிகை 26 வினாடி அதாவது 21.12.2011 காலை 05 மணி 20 நிமிடத்திற்கு பெயர்ச்சியாகின்றார். துலா ராசியானது சனிபகவானுக்கு உச்சஸ்தானம் என்று சொல்லப்படுகிறது இந்த நிலைக்கு வருவதன் மூலம் அவர் பலம் மிகுந்தவராகி விடுவார் என்கிறது சோதிட நூல்கள்.

இதன் எதிரொலியாக அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கு ஒவ்வொரு இராசிக்கும் எத்தகைய பலன்கள் உண்டாகும் என்பதைப் பற்றி இனிவரும் பதிவுகளில் பார்ப்போம். இன்று முதல் நான்கு ராசிகளான மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடக ராசிகளுக்கான பலன்களைப் பார்ப்போம்.


மேஷம்

நட்சத்திரங்கள் - அசுவினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் வரை.

மேஷ ராசிக்காரர்கள் அடிப்படையில் சுயநலம் குறைந்தவர்களாக இருப்பார்களாம். தற்போது இந்த ராசியில் இருந்து ஆறாவது கட்டமான கன்னி ராசியில் இருந்து பெயர்ந்து ஏழாவது கட்டமான துலாம் இராசிக்கு வருகிறார். இப்படி ஏழாவது கட்டத்திற்கு சனிபகவான் வருவதை கண்டச் சனி என்கிறது சோதிட நூல்கள். 

இதுவரை இருந்த ஆறாவது கட்டமானது அனுகூலமான பலன்களை தந்திருக்கும். இனி அவற்றில் சிறிய அளவிலான பாதிப்புகளை உண்டாக்கும் என்றால் மிகையில்லை. அடுத்த சித்திரை முதல் ஆறு மாதங்களில் சுப பலன்கள் வாய்க்கும். 

பொதுவில் இந்த பெயர்ச்சியினால் சனி பகவானின் பாதிப்புகள் குறைந்த அளவில் இருக்கும். அதே நேரத்தில் மிதமான நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். பெரிய பாதிப்புகள் இல்லை என்பதே சுப பலன் என்பதை நினைவில் வைக்கவும்.


ரிஷபம்

நட்சத்திரங்கள் - கிருத்திகை 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம் , ரோகிணி, மிருகசிரீஷம் 1ஆம், 2ஆம் பாதம் வரை.

ரிஷப ராசிக்காரர்கள் அடிப்படையில் மிகுந்த முன் யோசனை உடையவர்களாக இருப்பார்களாம். தற்போது இந்த இராசியின் ஐந்தாவது கட்டமான கன்னி ராசியில் இருந்து சனிபகவான் பெயர்ந்து ஆறாவது கட்டமான துலாம் ராசிக்கு வருகிறார். இந்த நிலையை சாதக சிந்தாமணி பின்வருமாறு கூறுகிறது.

"காரி என்னும் ரவிமைந்தன்
        கனிவாய் ஆறாம் வீடுற்றால்
வாரிக் கொடுப்பார் மனதிலுன்
       வாட்டம்யாவும் தீரும் பாரே"

இந்த சனிப் பெயர்ச்சியினால் பெரிய அளவில் நன்மை பெறப் போவது இந்த ராசிக்கு உட்பட்டவர்கள்தான். உடல்நலம், மன நலம், செல்வ வளம் என எல்லா அம்சங்களிலும் ஏற்றம் உண்டாகுமாம். காரியத் தடைகள் விலகும், கல்வி சிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகுமாம். குருவருளும், திருவருளும் கைகூடி நிற்கும் காலமாக இருக்குமாம். 


மிதுனம்

நட்சத்திரங்கள் - மிருகசிரீஷம் 3ஆம், 4ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1ஆம், 2ஆம், 3ஆம் பாதம் வரை

மிதுன ராசிக்காரர்கள் பிறர் போற்றும் வகையில் முன் மாதிரியானவர்களாக இருப்பார்களாம். தற்போது இந்த ராசிக்கு நான்காவது கட்டமான கன்னி ராசியில் இருந்து சனி பகவான் பெயர்ந்து ஐந்தாவது கட்டமான துலாம் ராசிக்கு செல்ல இருக்கிறார். இதுவரை இருந்த நான்காவது கட்டத்தினை “அர்த்தாஷ்டம சனி” என்கிறது சோதிட நூல்கள். இத்தகைய இடத்தில் இருந்து பெயர்வது இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தியே!

இதனை சாதக சிந்தாமணி பின் வருமாறு கூறுகிறது.

"பஞ்சம ஸ்தானம் தன்னில் 
       பாங்காகக் காரி வந்தால்
மிஞ்சிய துன்ப மெலாம்
       மழிந்திடும் மேன்மை உண்டே"

சனி பகவானின் இந்த புதிய நிலையானது பூர்வ புண்ணிய பலன்களோடு தொடர்பு உடையது என்பதால், முற்பகலில் செய்ததன் பலன்களை இப்போது அறுவடை செய்ய வேண்டி இருக்கும். குடும்ப வழிச் சொத்துக்கள், உறவுகள் மூலமாக நெருக்கடிகள் உண்டாகலாம். குருவருளை வேண்டி வணங்கி இடர்களை களையலாம். 


கடகம்

நட்சத்திரங்கள் - புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம்.

கடக ராசிக்காரர்கள் உயரிய சிந்தனைப் போக்கினை உடையவர்களாக இருப்பார்களாம். இத்தகைய கடக ராசிக்கு 3ம் இடமான கன்னி ராசியில் இருந்து 4ம் இடமான துலாம் ராசிக்கு சனி பகவான் பெயர்கிறார். இந்த நிலை அர்த்தாஷ்டம சனி எனப்படும். எனவே இதுவரை இருந்த அனுகூல நிலை இனி இருக்காது.

எனவே இந்த கால கட்டத்தில் கடக ராசிக்காரர்கள் எண்ணம்,சொல், செயல் ஆகியவற்றில் நிதானம் காட்டுவது நல்லது. எனினும் புது தமிழ் வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் சுபபலன்களை எதிர்பார்க்கலாம். மேலும் இந்த ராசிக்காரர்களின் தாயாருக்கும் தாய் மாமன்களுக்கும் பாதிப்புக்களைக் கொடுக்கும். தெய்வ வழிபாடு கைகொடுக்கும்.

அடுத்த நான்கு ராசிகளான சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ஆகியவற்றின் பலன்களை நாளைய பதிவில் பார்ப்போம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

13 comments:

bharathraja said...

thozhi,

yenaku kanni rasi,ippo varum 2011 yenaku kastakalama illa nalla kalama...

tamilvirumbi said...

தோழி ,
தங்களின் சனிப்பெயர்ச்சி பலன்கள் மிகவும் சிறப்பாக உள்ளது.மேலும் ,நான் கூறவேண்டியது என்னவென்றால் ,கடந்த
குரு பெயர்ச்ச்யின் பலனாக ,குருவின் பார்வை சிலராசிகளுக்கு ஏற்படுவதால் சனியால் ஏற்படும் கேடு பலன்கள் குறையும்
என்று பஞ்சாங்கத்தில் கூறப்படுகிறது.தங்களின் பதிவிற்கு மிக்க நன்றி .

kimu said...

நான் ரிஷபம் - மிருகசிரிஷம் !!!
நன்றி

Lingeswaran said...

நான் மேஷ ராசி....தப்பிச்சேன் சாமி....ரொம்ப நன்றி தோழி தகவல் தெரியப்படுத்தியதற்கு...!

Sivananthan said...

அன்பு தோழி
துல்லியமாகவும் வாழ்க்கையை வழிநடத்தும் விதமாகவும் பதிவு உள்ளது.
மிக்க மகிழ்ச்சி
மிக்க நன்றி.
சிவானந்தன.

saravanan chandramouli said...

mikka nandri....palangal abaramaga ullana....thodarga um thondu...ivvulagil anaivarukkum

geethasmbsvm6 said...

பலன்கள் எல்லாம் சரிதான். ஆனால் மேஷராசிக்காரர்கள் அடிப்படையில் சுயநலம் குறைந்தவர்கள் என்பதும், ரிஷபராசிக்காரர்கள் முன் யோசனைக்காரர்கள் என்பதும் கொஞ்சம் கூடப் பொருந்தவில்லை. கிட்டத்தட்ட பத்துப்பேருக்கும் மேல் இந்த ராசிக்காரர்களைப் பார்த்தாச்சு; பழகியாச்சு. அச்வினி நக்ஷத்திர மேஷ ராசி என்றால் சுயநலத்துக்குப் பின்னர் தான் மற்றவையே! :(((

உங்கள் கருத்துக்கு மாறாகச் சொல்வதற்கு மன்னிக்கவும். சொந்த அனுபவம். :(((

geethasmbsvm6 said...

ராசியை விட லக்கினம் தான் சரியாக வரும் என்று சில ஜோதிடர்கள் சொல்கிறார்கள். உங்க கருத்து?

naveenkumar said...

hi thozhi,

Parikaram intha sanipeyarchiku anupavum..

Anbudan
Naveenkumar

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

rompa nanri sir.

எஸ்.எஸ்.பூங்கதிர் said...

unkal pathivu mika arumai

ஆன்மீக உலகம் said...

சனிப்பெயர்ச்சி பலன்கள் அறிந்துகொள்ள முடிந்தது... பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ!

Vijay Kumar said...

வணக்கம் தோழி ..........
மிக்க நன்றி !!!!!!
நான் ரிஷபம் ரோகினி ,

என்னுடைய பிறந்தநாள் வரும் 25 _ தேதி
தங்கள் கூறிய ராசி பலன் மிகிழ்ந்த மகிழ்ச்சி அளிக்கிறது ,,,,,

மீண்டும் நன்றிகளுடன்
நண்பன் விஜய குமார் .....

Post a comment