சனி!

Author: தோழி / Labels: ,

எந்த ஒரு தினசரியாகட்டும், வாராந்திரி ஆகட்டும், மாதாந்திரி ஆகட்டும் புரட்டுகிற பக்கமெல்லாம் சனிப் பெயர்ச்சி பற்றிய விளம்பரங்களும், பலன்களும் என பரபரப்பாக காட்சி அளிக்கின்றன. ஒரு சில தசாப்தங்களுக்கு முன்னர் வரை இது பற்றி யாரும் பெரிதாக கவலைப் பட்டதோ, கருத்தில் கொண்டதோ இல்லை என்றும் தற்போதுதான் இது பற்றி இத்தனை பரபரப்பாக பேசப் படுவதாகவும் எனது தாயார் கூட அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்.

இந்த திடீர் விழிப்புணர்விற்கு அல்லது பரபரப்புக்கு ஊடக வளர்ச்சியும் அதன் பின்னே மறைந்து நிற்கும் வர்த்தக வாய்ப்புகளுமே காரணமாக இருக்கக் கூடும்.. ஒருவர் சொல்வதைப் போல மற்றொருவர் பலன் சொல்வதில்லை. ஒருவரோ ஒரு ராசிக்கு பயமுறுத்தும் பலன்களைச் சொல்கிறார், மற்றவரோ அதே ராசிக்கு கூரையை பிய்த்துக் கொண்டு அதிர்ஷ்டம் கொட்டப் போவதாக பலன் எழுதுகிறார். இவற்றில் எது உண்மை, எது பொய் என்ற குழப்பம் இந்த பலன்களின் நம்பகத் தன்மை மீது ஒருவித சந்தேகத்தினையும் உருவாக்கி விடுகிறது. வர்த்தக ரீதியாக இதை அணுகிடுவோர் ஒரு போதும் இதைப் பற்றியெல்லாம் கவலைப் படுவதேஇல்லை.

சோதிட இயல் பற்றி சித்தர் பெருமக்கள் பரந்து பட்ட அளவில் தகவல்களை அருளியிருக்கின்றனர். இவை புத்தகங்களாகவும் அச்சேறி இருக்கின்றன. நம்முடைய பதிவிலும் கூட சோதிடவியல் பற்றிய தகவல்களை முன்னரே தொடராக பகிர்ந்திருக்கிறேன். அவற்றை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

இனி வரும் நாட்களில் சனி பகவான் குறித்தும், அவரின் இயல்புகள், நகர்வுகள், அதனால் உண்டாகும் பலன்கள், அதற்கான பரிகாரங்கள் பற்றி சித்தர் பெருமக்கள் அருளிய தகவல்களைப் பார்க்க இருக்கிறோம், சனியைப் போல் கொடுப்பாரும்மில்லை கெடுப்பாரும் இல்லை என்கிற பழமொழி சனி கோளின் மகத்துவத்தை உணர்த்தும். சனியின் பார்வைக்கு தப்பாதவர் என யாருமே இருக்க முடியாது என்றும் சொல்லப் பட்டிருக்கிறது.

சனியின் மகத்துவம் பற்றி பல்வேறு பழந்தமிழ் நூல்களில் குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. புலிப்பாணி சித்தர் சனியின் மகத்துவத்தினை பின்வருமாறு கூறுகிறார்.

தேனென்ற சனிதனக்கு மகரம் கும்பம்
தெகிட்டாத ஆட்சியது உச்ச கோலாம்
மானென்ற மேஷமது நீச்சம் மற்ற
மற்கடக சிம்மமொரு விருட்சிகந்தான்
ஊனென்ற வீண்பகையாம் மற்றோரைந்தும்
உள்ளபடி நட்பாகும் முடவனுக்கே
கொற்றவனே புலிப்பாணி கூறினேனே

சோதிட இயலில் சனியானவர் சூரியனின் மகனாக கூறப்படுகிறார்.சூரிய குடும்பத்தில் ஆறாவது கோளாக அறியப் படும் சனியானது,. சோதிட இயலில் ஏழாவது கோளாக குறிக்கப் படுகிறது. சோதிட நூல்களில் சனி பகவான் பல்வேறு பெயர்களால் அறியப் படுகிறார். அவையாவன...

அந்தன், கதிர்மகன், கரியவன், காரி, கீழ்மகன், சுந்தில், சவுரி, சாவகன், தமணியன், நீலன், நோய்முகன், பங்கு, மந்தன், முடவன், முதுமகன், மேற்கோள் என்பனவாகும்.

சனியின் குண இயல்புகள் மற்றும் அவரின் அம்சங்கள் பற்றி நாளைய பதிவில் பார்ப்போம்..

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

10 comments:

R.Srishobana said...

Thanx for ur greatness in sharing some valid and useful info at the midst of fraudulent peopl...

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.

arul said...

nice post

இராஜராஜேஸ்வரி said...

அருமையான பகிர்வு. பாராட்டுக்கள்!

subbaraman gopalakrishnan said...

Dear TT,

All good wishes and blessings in all your en devours. A few, in my close circle (quite well versed in predictions basing on planetary positions of horoscope) have given up the same suddenly - mentioning their health reasons (not being able to do japams) to atone mentioning of uchcham, neecham etc., in the course of their predictions. What's your opinion on the same pl?

Unknown said...

நல்ல பதிவு நன்பி

tamilvirumbi said...

தோழி ,
சனி யை பற்றி ,அடிப்படையான குணாதிசயங்களை பற்றி விளக்க உள்ளீர்கள் .மேலும் ,சனி தசை நடக்கும் பொழுது ,நாம் ,நேர்மையாகவும் ,உண்மையாகவும் ,சிரத்தையோடும் செயல்களை மேற்கொண்டால் நம்மை பாதிக்காது என்று கூறுகிறார்கள் .தங்களின்
நோக்கம் எவ்வாறுள்ளது என்று இனி வரும் பதிவுகளில் படிக்க ஆவலாய் இருக்கிறேன் .மிக்க நன்றி .

Anonymous said...

நல்ல துவக்கம். ஒரு சிறிய வேண்டுகோள். ஏன் உங்கள் வலைபதிவு rss ல், பாதி தான் வருகிறது. ஏதேனும் முக்கிய காரணம் இல்லையென்றால், முழு பதிவு மாற்ற இயலுமா?

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் said...

The Vedas of the devil!
The Vedas of the devil!

The world's religions, castes, religions cattirankal vetankalakum of all evil. Satan. Lucifer illusion refers to the entire thing in the world, all of these vetankalumakum cikkuntavarkal wrote. If you know the truth should never be a pure illusion cikkuntavarkl /

Satan, the Vedas, the Muslim religion of Islam the religion of the Solomon Rushdie is clearly described. He's written because it is where the shot to kill the Arab nation Islam matata leaders orders and heard Solomon Rushdie head, closed his books out and opt have ruined the word for this world is destroyed.

All religions are religions of God speaks of killing the killer is kolaikakara katavulaiye introduce new ways that God is angry and says that. The priestly and religious sources cattirankale Vedas.

Anyone seen the true God, all religions are taught that God put all the blame utaiyate wrote they saw cikkuntavarkal illusion. True God, death will not be watched, no power can destroy them. The death of Satan was damaged by the Vedas, all you need to understand that the human race.

To date the beginning cantaiyile catiyile matankalile religious nerikalile kottira cattiraca cantatikalile apimanittu alaikinra wandering wandering vine destruction ulakir alakalave Vallalar that is alleged in all religions.

Shiva realized that they find the true God with our Vallalar introduce this world is the great fact that

''The real God 'is arutperumjoti arutperumjoti arutperumjoti tanipperunkarunai.

. Why is he a true God saw that we need to know. The illusion of the devil's way, trapped lens. The world meant that he experienced was not lost-saving grace, the object arutperum Jyoti God to be fully accepted as a Vallalar the grace perravarkaltan truth takes tests can write .. so, he wrote,''tiruarutpa 'knowledge of the text.

Vallalar, death is not the God of the perceived ammayamanavar the light body and perravarakum. His grace, wisdom and the people that God's grace and karunai and was younger it arutperumjoti a God. It is everywhere and all the living things of life and light operate as it is, therefore, all the lives and his die so used to. The Platonic Vallalar has the right to integrity of the name.

If you want to kill atal vegetarian main keyword to find the most God-Cola said it strongly urged. He has shown true holy fear.

Clean canmarkkam; - sometimes the last option religion.
Clean canmarkkam; - all fear.
Clean canmarkkam; - unique high fear.
Clean canmarkkam; - By Truth.
Clean canmarkkam; --- Saga By studying.

So Satan otamal realize the religious, spiritual realization that philanthropy is based on a real reconciliation with pure jiva karunyat Vallalar union with Truth. Unnamalum happy life, if the field does not lead to murder.

Vallalar body and the immortality of the song; -

Hence kakanam karrale puviyale
Punale kanalale ray atiyale
Piniyale kurrale karuviyale murders
Process of writing a prison informer kolale kalale
As ennanrum verrale aliyate
I quickly gave myself a real need to provide
That degradation ninaiyatir errale ulakir
Iraivanaica carvire arutperum torch my father!

All of them are common sense and realize real arutperum ninaintu jotiantavarai ninaintu nekilntu nekilntu filled full of love and seek crying tears poured all the benefits that arise.

I katirvelu anmaneyan.

Blooming again. ' .

sitharboomi said...

miga peria veelaiyai migavum saatharanamaga enthavitha prathi palanum ethirparamal siththar neriodu thondu puruium siththaree neer vazhga enni desamengum siththar rajiamee adien g m balamurugan thiruvarur balutvr@gmail.com

Post a comment