கூடு விட்டு கூடு பாய்தல்!

Author: தோழி / Labels:

ஆய கலைகள் அறுபத்தி நான்கில் ஐம்பத்திஇரண்டாவது கலையாகவும், சித்தர் பெருமக்களின் அட்டமா சித்துக்களில் ஆறாவது சித்தாகவும் கூறப் பட்டிருப்பது "பரகாய பிரவேசம்" என்னும் கலை. இதனை எளிய தமிழில் கூடு விட்டு கூடு பாய்வது என்று நம்பில் பலரும் அறிந்திருப்போம்.

நேற்றைய பதிவில் உயிரானது உடலோடு எப்போது சேர்கிறது என்பதைப் பார்த்தோம். அப்படி சேர்ந்த உயிரானது நமது உடல் நலிவடைந்து செயலற்றுப் போகும் நிலையில் பிரிந்து விடுகிறது. இப்படி உயிர் உடலோடு சேர்வதும், சேர்ந்த உயிர் பிரிவதும் மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஒரு செயல். அப்படி இருக்கையில் நினைத்த மாத்திரத்தில் ஒருவர் தன் உடலை விட்டு நீங்கி பின்னர் அந்த உடலில் இணைவதோ அல்லது வேறொரு உடலில் இனைவதோ கற்பனைக்கும் எட்டாத ஒன்று. நிதர்சனத்தில் இது சாத்தியமே இல்லை என்கிறது நவீன அறிவியல்.

சாத்தியமே இல்லாத ஒன்றை நம் முன்னோர்கள் சாதித்திருக்கின்றனர். ஒருவரில்லை, இருவரில்லை பல்வேறு சித்தர் பெருமக்களின் பாடல்களின் ஊடே இந்த கலையினைப் பற்றிய குறிப்புகளும், தகவல்களும் விரவிக் கிடக்கின்றன. அதுபற்றிய சில விவரங்களை மட்டும் தொகுப்பதே இந்த தொடரின் நோக்கம்.

சித்தர் பெருமக்கள் நமது உடலை ஸ்தூல உடல், சூக்கும உடல் என இரண்டாக கூறியிருக்கின்றனர். தனித்துவமான பயிற்சிகளின் மூலம் இந்த இரண்டு உடல்களையும் ஒன்றிலிருந்து மற்றதைப் பிரித்து மீண்டும் இணைய வைத்திட முடியுமாம். இந்த பயிற்சி இரண்டு வகைப்படும் ஒன்று “கூடு விடா நிலை” மற்றது “கூடு விட்டு கூடு பாய்தல்”

கூடுவிட்டு கூடு பாய்தல் கேள்விப் பட்டிருப்போம். அதென்ன “கூடுவிடா நிலை”?

இந்த கூடு விடா நிலையை சித்தர் பெருமக்கள் இறந்தும், இறக்காமல் இருப்பது என்கின்றனர். அதாவது நமது உடலை நாமே இறந்தது போன்ற சலனமற்ற நிலைக்கு கொண்டுவந்து நீர், உணவு எதுவும் இன்றி சில நாட்கள் முதல் பல வருடங்கள் வரை வைத்திருப்பதையே கூடு விடா நிலை என்கின்றனர். பிரத்தியேக பயிற்சிகளின் மூலம் மட்டுமே இந்த நிலையினை அடைந்திட முடியும்.

இவை பற்றிய தகவல்கள் மிகவும் ரகசியமாக காக்கப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில் நான் தேடிய வரையில் இந்த நிலையினை எட்டும் பிரத்யேக பயிற்சிகள் பற்றிய தகவல்கள் இதுவரை எனக்குக் கிடைக்கவில்லை. குருவருள் அனுமதித்தால் எதிர்காலத்தில் கிடைக்கலாம்.

இந்த கூடு விடா நிலை இயற்கையாகவே சில உயிரினங்களுக்கு உண்டு. மீன்கள் (Mangrove killifish), தவளைகள் (burrowing frog) போன்ற சில உயிரிணங்களை உதாரணமாய் காட்டிடலாம்.. இவை சில/பல மாதங்கள் உணவு நீர் இன்றி கூடுவிடா நிலையான அசைவற்ற நிலையில் இருக்கும். பின்னர் உரிய காலம் வந்ததும் பழைய நிலைக்கு திரும்பி வாழ தொடங்கும். இந்த கூடுவிடா நிலையில் இந்த விலங்கினங்கள் இறந்தது போன்றே இருக்கும்.

ஆச்சர்யமான தகவல்தானே!

தகவல்கள் நாளையும் தொடரும்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

19 comments:

அம்பலத்தார் said...

வித்தியாசமான எமது பழம்பெருமைகளையும் திறமைகளையும் தேடிப் பதிவிடுவதற்கு வாழ்த்துக்கள்.

tamilvirumbi said...

தோழி ,
பரகாய பிரவேசம் பற்றி மிகவும் எளிமையாக பகிர்ந்தமைக்கு பாராட்டுக்கள் .தங்களிடம் ஒரு வேண்டுகோளை வைக்கின்றேன் .அதாவது ,மனிதர்கள் ,மரணம் எய்தவுடன் ,
உயிர் பயணம் செய்யும் தூரம் மிக நீண்டதாக கருதப்படுகிறது .தாங்கள்,சித்தர்களின் பார்வையில் ,அதனை செய்திகள் தெரிந்தால் பகிர்ந்துகொள்ள ஆவலை இருக்கிறேன் .
மிக்க நன்றி .

Easy Way To Earn Money said...

உளி சதை நீக்க யாதேனு வழி இருந்தால் கூறும் தோழி

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
வாழ்த்துகள்.

Rajakumaran said...

Nice, thanks

ஆன்மீக உலகம் said...

விஞ்ஞானம் முன்னேறி இதுவும் சாத்தியமாகி... சித்தர்கள் கூடுவிட்டு கூடு பாய்ந்தது உண்மை என்பது அறிவியல் பூர்வமாகவும் உணரும் காலமும் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பகிர்வுக்கு நன்றி சகோ!

Kanda said...

I'm sorry to declare in English, not sure how to use Tamil font here. however i have major hair loss problem, this occurred due Ashwini hair Oil, but same oil didn't affect my sister.

please do let me know, how to get recover from this,

Rukmangthan said...

Dear Friend,
Good message; i expecting and eager to learn more message from this site regarding medicine, art and craft, way of traditional and purity

Rajamohankumar said...

Dear thozhi,

sorry to post in english,I am very fan of you and I am wondering about your service.Great job god always will be with you.Almost I have read all post in your blog.I would like to know about kalasharpa dhosam and its remedies.Please answer my question it would be useful for every one.

ananda said...

kuduvittu ithai nam seyalama

Mahesh said...

Hi Thozhi,

Do you know any good Sidda Doctor in Tamilnadu?

Please tell us, so that we will consult them.

ananda said...

no

DM said...

தோழி
நீங்கள் ரசமணி செய்தீர்கள் அல்லவா?அதன் செய்முறை பற்றி சொல்லிக்கொடிங்களேன்
நன்றி
மது

kkbharathi said...

Nice...

Bala's said...

nandri .... thozhi..

Gopalakrishnan.V said...

நன்றி தோழி !......

Gopalakrishnan.V said...

nandri...nandri...nandri,,,,.

siva said...

koodu viddu koodu poivathu eppadi tell me tholi

Unknown said...

Hi " kooda vida nilai" is possible in lambika yogam. The state you mentioned seems to be hibernate state. All sithars after acheving everything in life will go do samadhi state. No mind . only life force will be in the body

Post a comment