உடலும் உயிரும்!

Author: தோழி / Labels: ,

உடலை விட்டு உயிர் பிரிந்து விட்டால் அந்த உடலுக்கு யாதொரு மதிப்பும் கிடையாது. ஒன்று உடலைச் சுட்டெரித்து விடுகிறோம் அல்லது புதைகுழிக்குப் போகிறது. ஆக உயிர் தங்கி இருக்கும் வரையில்தான் இந்த உடலுக்கு அவசியமும், தேவையும், மரியாதையும் இருக்கிறது.

இப்படிப் பட்ட இந்த உடலும், உயிரும் எப்போது எப்படித் தோன்றுகின்றன?

எது முதலில் உருவாகிறது?, உடலா?, உயிரா?

இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் அகத்தியர் தனது "அகத்தியர் ஆயுள் வேதம்” என்ற தனது நூலில் பதில் வைத்திருக்கிறார்.

சென்மமனிதர் தாமுஞ் சென்மிக்கும்வாறு கேளாய்
இன்னமுஞ் சுக்கிலத்தில் பிராணவாய்வதுவுஞ் சென்று
தின்னமாய் பிராணவாயுவு சென்றது கோபமுற்றி
யுன்னுமாமி ரத்தஞ்சூழ்ந்து வுதாரணவாய் வளர்க்கம்
சூழ்ந்து சுக்கிலதில் சுரோணிதங் கலக்குமென்று
பூந்திடும் வியாதி மூன்றும் பொருந்திடும் குமிழிபோல
ஏந்தியே திரளுமேழிலீரேழு தன்னிலூர்க்கு மாய்ந்த
நாளிருபத்தைந்தி லருங்முளை போற்றோன்றும்

- அகத்தியர்.

ஆணின் சுக்கிலத்தில் பிராணவாயு சென்றடைந்து கிளர்ச்சியுற்று உயிரணுக்கள் வளர்ச்சி அடையும். இந்த சமயத்தில் ஏற்படும் உறவினால், பெண்ணின் சுரோணியத்துடன் ஆணின் சுக்கிலம் கலந்து வாத, பித்த, கபம் என்று சொல்லப்படும் மூன்று விகற்பங்களும் அதனுடன் சேர்ந்து சிறு குமிழி போலாகி கருப்பையின் உட்சென்று தங்கி வளரத் துவங்கி, இருபத்தி ஐந்து நாளில் முளை போல தோன்றும் என்கிறார். இது உயிரற்ற ஒரு நிலை.

முந்திய திங்கள்தன்னில் கருமுளைத்தது கட்டியாகும்
பிந்திய திங்கள் தன்னிற் பிடரிதோள் முதுகுமன்றி
யுதிக்கும் மூன்றாந்திங்க ளுடல்விலா யரையுங்கால்கள்
ளுந்திக்கு யுயிரும்வந்தே யிணைந்திடுமென்றே.

- அகத்தியர்.

முதல் மாதத்தின் முடிவில் உருவான இந்த முளை பின்னர் வளர்ந்து ஒரு கட்டிபோல உருவாகுமாம். இரண்டாவது மாதத்தில் பிடறி, தோள், முதுகு ஆகிய பாகங்கள் உருவாகுமாம். மூன்றாவது மாதத்தில் உடல், விலா, இடுப்பு போன்றவைகள் உருவாகும்.அந்த கட்டதில் தான் கருவிற்கு உயிரும் வந்து இணையும் என்கிறார்.

ஆக,கருவானது மூன்றுமாத வளர்ச்சியின் பின்னரே உடலில் உயிர் வந்து சேருகிறது. அதன் பிறகே மற்ற அவயங்கள் வளரத்துவங்குகிறது.

இந்த தகவல்கள் எல்லாம் அறிவியல் வளராத பலநூறு வருடங்களுக்கு முன்னரே நமது முன்னோர்களால் தீர ஆராய்ந்து சொல்லப் பட்டிருக்கின்றன என்பதில்தான் இந்த தகவலின் மகத்துவமே அடங்கி இருக்கிறது. உடற்கூறியியலில் சித்தர் பெருமக்களின் ஆழ்ந்த அறிவு இன்றைய நவீன அறிவியலின் தெளிவுகளுக்கு கொஞ்சம் குறைந்ததில்லை என்பது நாம் பெருமிதத்துடன் நினைவு கூற வேண்டிய ஒன்று.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

30 comments:

விஸ்வநாத் said...

பிரமிப்பான ஒரு விஷயம், எங்களோடு
பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி;

arul said...

nice information

kimu said...

Nice post.
Valuable information.
Thanks

tamilvirumbi said...

தோழி ,
இன்றைய பதிவில் ,தாங்கள் விளக்கிய கருத்து மிகவும் அரிதானது.நவீன அறிவியல் வளர்ச்சி இருந்தபோதும்,சில குறைபாடுகளை ,மருத்துவர்களால் கூற இயலவில்லை .
இன்னும் ,வாய்வு தொல்லைக்கு ,இன்று வரை ,ஆங்கில மாறுவதில் சரியான மருந்துகள் இல்லை. அப்படியே இருந்தாலும்,பக்க விளைவுகள் அதிகமாக உள்ளது.
மிக்க நன்றி.

Er.Rajkumar P.P said...

ஆயிரமாயிரம் மருத்துவ நூல்கள் அழிந்ததைப் பேசும் அருமைத்தமிழ் மக்கள் இது போன்ற பல
எஞ்சிய நூல்களைப் படித்து அறிவை வளர்த்துக் கொள்வார்கள் எனில் மிக்க மகிழ்ச்சி! தகவல் மிக மிக அருமை!

Ram said...

@தோழி
இந்த தகவலை தாங்கள் முன்னரே பதிவு செய்து விட்டீர்களே !!

Geetha6 said...

Fantastic

ISB said...

மிக அருமை

ISB said...

மிக அருமை

Unknown said...

Nice information....

S.Puvi said...

தகவல்களுக்கு நன்றி. எம் முன்னவர்களி அறிவியலில் குறைந்தவர்களல்ல. மேற்கத்தேய ஆதிக்கத்தினால் எம்மவர் அறிவியல் மறைக்கப்பட்டுவிட்டன. இவற்றை வளர்த்தெடுக்க வேண்டும்.

ma.thaa ponnarasu said...

nanru

ma.thaa ponnarasu said...

அருமையான தகவல்கள்....,உஙகள் முகவரி.,..தொலை பேசிஎண் வேண்டும், நான் வானொலி தயாரிப்பாளர்

Bharath technocrats of textiles and garments said...

என்னை பொருத்தமட்டில் விஞ்ஞானம் என்பது மெய்ஞ்ஞானத்தின் ஒரு பாகமே ஆகும். என்னை பொருத்தமட்டில்,தமிழ் ஒரு தாயாகும்.... இது வெற்று வாக்கியம் அன்று..... தமிழ் யாதென்று முழுமையாக அறிந்துணர்தவர்கள் என்னோடு ஒப்புவர். ஆகையினால் நாம் நமக்கு நாமே உவமை பாராட்டுவதை விட்டுவிடல் ஒரு நல்ல பக்குவமாக இருக்கும் என கருதிகிறேன். இராகவஜொதீ.

Yagavarnan said...

அற்புதம் பகிர்ந்தமைக்கு நன்றி

Kamal said...

Really... interesting to read and proud to be a TAMIZHAN...

jagannathan said...

இந்தியாவில் யார் யாருக்கோ பாரத ரத்னா விருது கொடுக்கிரார்கள் ஏன் அகத்தியருக்கு கொடுக்க்கூடாது.

karthik said...

My doubt is clear now.

Unknown said...

i find the site

Unknown said...

நன்றி ஐயா...

Unknown said...

நன்றி ஐயா ...

vmseva said...

வாழ்க வளமுடன்.,

vmseva said...

வாழ்க வளமுடன்.,

Karthikeyan said...

I would like to clarify whether we should take pepper after three hours of food or the opposite ?

Thanks

Unknown said...

அருமையான தகவல் ... மிக்க நன்றி ...

Unknown said...

தகவலுக்கு. மிக்க. நன்றி ...

Unknown said...

அருமையான தகவல் ... மிக்க நன்றி ...

Unknown said...

I salute my forefathers ! They were genius !

Unknown said...

I salute our forefathers.They were genius !

Unknown said...

அருமை

Post a Comment