பித்த வெடிப்பும், தீர்வும்!

Author: தோழி / Labels: , ,

பெண்களுக்கு பாதிப்பையும், கவலையையும் தருவது பாத வெடிப்பு எனப்படும் பித்தவெடிப்பு. இவை ஒரு வகையான பூஞ்சை காளான்களால் வருகிற பிரச்சினையாகும். தோல் இறுகி கடினமாகி வழவழப்பினை இழந்து வெடித்துப் பிளந்து பார்ப்பதற்கே அருவெறுப்பினை தரும். இந்த பிரச்சினை அநேகமாக பத்தில் ஐந்து பெண்களுக்காவது இருக்கிறது.

இவற்றிற்கு தற்போதைய நவீன மருத்துவம் நிறைய தீர்வுகளை அளித்தாலும், அவை செலவு பிடிப்பதாகவும், முழுமையான தீர்வினை தருவதாகவும் இல்லை என்பதுதான் உண்மை. இந்த பிரச்சினைக்கு தேரையர் எளிமையான இரண்டு தீர்வினை நல்கியிருக்கிறார். அதனையே இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம்.

தனது தேரையர் வாகடம் என்னும் நூலில் தேரையர் இந்த முறைகளை அருளியிருக்கிறார்.

"உப்பு மண்புழுங் கரிசியூ மத்தவித் திந்துப்புத் தயிரொ
டெருக்கம்பால் ஒக்க விரைப்பன விற்பா தப்பிளப் படங்கப்பூச
நிலைவிற் றாமரை யாங்காலே யறுத்துப் போடும் வேரோடே."

“உப்பு மண்”, “புழுங்கலரிசி”, “ஊமத்தை விதை”, “இந்துப்பு” இவை நான்கினையும் சம அளவில் எடுத்து, தயிர் விட்டு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் இந்தக் கலவையில் எருக்கம் பால் விட்டரைத்துக் கால்களில் அப்பி வைத்தால் கால் வெடிப்புகள் அடியோடு நீங்கி விடும் என்கிறார். மேலும் பாதம் தாமரைப் பூப்போல் ஆகுமாம்.

இதே பிரச்சினைக்கு மற்றொரு தீர்வாக பின் வரும் பாடலையும் தந்திருக்கிறார் தேரையர்.

"காத்துக் கஞ்சிநீர்காலசா தத்தினடுக்
கொண் ணெறித்தி ரிக்குதென
நீற்றுப் பாலநெய்யில்காலிட வல்லீரெல்
சேத்துத் தாமரை செய்யிதழொக்குமே."

சூடான வடிகஞ்சியில் காலை வைத்தும், சூடான அன்னத்தைச் சுடுகஞ்சி விட்டு அரைத்துக் அத்துடன் கற் சுண்ணமும் கலந்து சூடாகக் கால்வெடிப்பின் மேல் பூசி வந்தாலும் பாத வெடிப்பு நீங்கி, பாதம் தாமரை இதழைப் போல ஆகுமென்கிறார்.

எளிய முறைதானே!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

21 comments:

மகரன் said...

இந்த பித்த வெடிப்புகளுக்கு நாம் செய்யும் வைத்தியம் ஒருபுறமிருக்கட்டும்... முதலில் இவை ஏன் வருகின்றன என்று கூறுவீர்களா..? சிலருக்கு இவை வருவதே இல்லை..ஆனால் சிலர் எப்போதும் இதனால் அல்லல்படுவதையும் பார்த்திருக்கின்றேன்... கால்களின் தூய்மையை தவிர ஏதோவொரு காரணம்..அது அவர்களின் பாரம்பரிய வியாதியாக இருக்கலாமா..? அல்லது நான் நினைப்பது சரியென்றால் அவர்கள் உண்ணும் உணவிற்கும் இதற்குமிடையில் நிச்சயமாக ஓர் தொடர்பு உள்ளது... அல்லாவிடில் பித்தம் என்ற வார்த்தைக்கு நவீன மருத்துவத்தின் படி என்ன பொருள்..? ஆனாலும் நவீன மருத்துவம் தரும் வேண்டாத விளைவுகளை நான் நன்கறிவேன். வருமுன் காப்பது நலம் என்பதால் இது வராமல் தடுப்பது எப்படி ?(பாரம்பரிய வியாதியாக இருந்தால் முடியாது தான்) தொடரும் பதிவுகளில் விளக்கத்தை எதிர்பார்க்கின்றேன்... நன்றி..!

arul said...

nice tips

tamilvirumbi said...

தோழி,
மிகவும் பயனுள்ள பதிவு .தற்காலங்களில் ,ஆண்களுக்கும் இந்த பித்த வெடிப்பு வருகிறது .ஏனென்றால் ,நாகரிகம் என்ற பெயரில் ,நாள் பூராவும் ,கால் உறை அணிந்து வேலை பார்ப்பதால் வருகிறது.தாங்கள் கூறிய மருத்துவக் குறிப்பு மிகவும் எளிமையானதாகவும் ,பக்க விளைவுகள் அற்றதாகவும் உள்ளது .மிக்க நன்றி .

kimu said...

தோழி வணக்கம்,
என்னிடம் நாவல் பலகை சிறு துண்டுகளாக இருக்கிறது.
அகத்தியர் அருளிய ' குழ்ந்தை பேரு அருளலும் தந்திரம் '
பூஜையை செய்ய விரும்புவோர் என்னிடம் பெற்றுக்கொள்ளலாம்.

கிருஷ்ணமூர்த்தி
சென்னை

Thozhan said...

Ennidam irukum padal 1000 sitharkal irukum idamum naam kata varamum kidaikum

Thozan

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நன்றி.

piravipayan said...

அன்புள்ள தோழி

பித்த வெடிப்புக்கு நல்ல மருந்து சொல்லி உள்ளீர்கள் அருமை ஆனால் அதே நேரம் வரும் முன் காப்பதே சிறந்தது , நம் பெரியவர்கள் நம்மிடம் அடிக்கடி கூறும் வார்த்தை கை கல் முகம் கழுவி கொள்வது காலை சுத்தமாக வைத்து கொண்டால் நிறைய நோய்கள் வராது.

வெளியே சென்று வந்தவுடன் காலை சுத்தமாக நன்றாக கழுவி கொண்டு வந்தால் பித்தவெடிப்பு காணமல் போய்விடும்

Hari Haran PS said...

எனக்கு தெரிந்தவரை நமது உடம்பில் இருந்து வெளியேறாத இறந்து போன செல்கள் படிமமாக பாத ஓரங்களில் படிகிறது. இவற்ற்றை செரியாக சுத்தம் செய்யாவிட்டால் வெடிப்பு வரும்.

இவை வராமல் இருக்க வெந்நீரில் குளித்து முடிதவ்வுடன், பாத ஓரங்களை நன்றாக விரல் நகங்களால் சுரண்டி எடுத்துவிடலாம். இதை செய்தாலே வெடிப்பு வராமல் இருக்கும் .

curesure Mohamad said...

தோழி நெடுநாளைக்கு பின் உங்களது தளம் வந்துள்ளேன் ...
உங்களை சேவை நன்று ..தொடரவும் ..உங்களை தொடருவதில் எனக்கு பல சிக்கல்கள் இருக்கிறது ...
இன்றைய பதிவில் பித்த வெடிப்புக்கு ஆயுர்வேத மருந்துகளில் சிந்தூராதி லேபம் என்கிற களிம்பும் ,ஜீவந்தயாதி யமகம் என்கிற தைலமும் வெளிபிரயோகமாக ,சித்த மருந்துகளில் கிளிஞ்சல் மெழுகு ,வங்க வெண்ணை ,குங்கிலிய வெண்ணை போன்ற மருந்துகளும் ,ஹோமியோபதியில் கிராபைடிஸ் என்கிற மருந்தில் செய்கிற களிம்பும் நல்ல பலன் தரும் ..

Advocate P.R.Jayarajan said...

முகம் அழகாக இருக்கும்.. ஆனால் அப்படியே பாதங்களை பார்த்தால் வெடிப்புகள் அறுவெறுப்பாக இருக்கும்... பெண்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய பிரச்சனை. பதிவுக்கு வாழ்த்துகள்..

geethasmbsvm6 said...

தேன் மெழுகு, தேங்காய் எண்ணெய், சாம்பிராணிப் பொடி மூன்றையும் கலந்தால் மெழுகு போல் வரும். அதைத் தினம் படுக்கப் போகும்போது கால்களைச் சுத்தமாய்க் கழுவிவிட்டுத் தடவிக்கொண்டு படுத்தால் பித்தவெடிப்பு மறைந்துவிடும்.

Unknown said...

நல்ல பதிவு பகிர்ந்தமைக்கு நன்றி தோழி

SUNDARABHAVANAM said...

Dear Sister,
This is a very nice tips. But, I have a confussion, now a days nobody is cooking rice directly. The usage of Cooker is covering the major portion of the cooking process. Then, how we will the VADI KANJI ?
Namah Shivaaya !

palanisankaran said...

payanulla thagavalkal. thanks thozhi.

A.J.Dhanasekaran said...

தோழி நன்றி

Thanndavarayan said...

திரு கிமூ அவர்களுக்கு,
எனக்கு உங்கள் நாவல் பலகை வேண்டும். உங்கள் மின்னஞ்சல் முகவரியை தருக.

நன்றி
ரவி

siva said...

kuzandai thantha agathiyar sonnadu anupungal

siva said...

kuzandai thantha agathiyar sonnadu anupungal

Unknown said...

DEAR SISTER,
THANK YOU

S.Chandrasekar said...

One more easy process is there. Take small quantity of Lime (Sunnambu) on you palm and add 5 drops of casor oil (Vilakkenai). Mix well till heat comes out. Now apply this past on cracks daily for a week. You will get cracks, if you are in a dusty atmosphere, if weather is very cold, if you don't wash your feet and clean with soap stone, if you have too much of heat in your body. So take care of your foot. Wear shoes wherever possible.

avm said...

"வாழ்த்துக்கள்"
http://visaexport.blogspot.com

Post a Comment