அகத்தியர் பூரண சூத்திரம் - 216...

Author: தோழி / Labels:


சித்தர் பெருமக்களின் அரிய நூல்களை மின் நூலாக தொகுத்து பகிரும் எனது முயற்சியில் பதின்நான்காவது நூலாக அகத்தியர் அருளிய "அகத்தியர் பூரண சூத்திரம் - 216" என்கிற இந்த நூலை உங்களின் மேலான பார்வைக்கு சமர்ப்பிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.

பதினென் சித்தர்களில் மூத்தவராகவும், தெய்வத் தன்மைகள் பொருந்திய அவதார புருஷராகவும் அறியப் படும் அகத்தியர், சித்த வைத்திய முறையின் பிதாமகன் என்றால் மிகையில்லை.இல்லறத்திலும் நல்லறம் பேணிட முடியும் என்பதை உணர்த்திய பெருமகனார் அகத்தியர்.

இத்தனை பெருமை கொண்ட சித்த புருஷரின் இந்த நூலானது அவரது பரந்து பட்ட அனுபவத்தின் தொகுப்பாக விளங்குகிறது. குண்டலினியின் ஆறு ஆதாரங்கள் முதல் சுண்ண வகைகள், மருந்துகள், கற்பவகைகள், மைகள், வாதவித்தைகள், குளிகைகள் போன்ற பல அரிய தகவல்களையும் அதன் முறைகளையும் தெளிவாக விளக்கி கூறியிருக்கிறார்.

இந்த நூலின் பெருமைகளைப் பற்றி அவரே இவ்வாறு குறிப்பிடுகிறார்.

"பொய்யாமல் இருக்கவென்றால் இந்நூல் வேணும்
    புகலரிய தீட்சைக்கும் யோகத்துக்கும்
மெய்யான கற்பமுதல் காயசித்தி
    விருதான வாதவித்தை குளிகை சித்தி
வகையான கைமுறைகள் வாத தீட்சை
    கருவான மறைப்பென்ற சவுக்காரப் போக்கு
உய்யாமல் நூல்களிலே ஒளித்த பாகம்
    ஒளியாமலெ டுத்துரைத்தேன் உண்மையாமே"        

தமிழ் அறிந்த அனைவரும் பயன்பெற வேண்டும் என்கிற நோக்கில் இந்த அரிய நூலினை மின் நூலாக தொகுத்திருக்கிறேன்.. தமிழர்கள் அனைவரும் போற்றி பாதுகாத்திட வேண்டிய நூல்களில் இதுவும் ஒன்று. எனவே இந்த மின் நூலினை பார்வையிடும் நண்பர்கள் தாங்கள் அறிந்தவர், தெரிந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருடன் இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

நண்பர்களே!,தொடரும் உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும், மேலான ஆலோசனைகளுக்கும் நன்றிகள் பல....

எனது மேலான குருவினை பணிந்து இந்த நூலை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.


என்றும் நட்புடன்

தோழி..

www.siththarkal.com

தொடர்புக்கு:-
siththarkal@gmail.com

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

14 comments:

Remanthi said...

உங்கள் சேவை மற்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நன்றி

M Ravi said...

Mikka Nandri, Ungal Aanmeega seyalukku Enn Siram Sainth Vanakkangal
Ungal Aanmeega seya Thodara Nan Iraivanidam Vendikolgeren

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
இனிய் புத்தாண்டு வாழ்த்துகள்.

Suresh said...

I appreciate your effort and really worthy service to Tamil community. May god and sithargal bless you!

ஸ்வாமி ஓம்கார் said...

நற்பணி தொடரட்டும்

கோவிந்தராஜு.மா said...

உமது தெண்டு வளர வழ்துக்கள்.
இனிய ஆங்கில புத்தண்டு வழ்த்துக்கள்

Inquiring Mind said...

எள்ளளவும தப்பில்லை மறைப்போ இல்லை
எய்துமேன்ற கருவெல்லாம் இதிலே எய்துங்
கள்ளடா கள்ளருக்கு இந்து நூலைக்
காட்டாதே பன்னிரெண்டும் காத்தால் ஈயே


கள்ளருக்கு காட்டாதே என்று அகத்தியில் மேலே சொன்ன பாடலில் சொன்னதை படிக்க நேர்ந்தது.. இப்படி இணையத்தில் பொதுவாக கொடுக்கும்போது, யாரிடம் போய் சேருகிறது என்பது நமக்கு தெரியாது அல்லவா?

(உங்களுக்கு குருவின் அனுமதி இருக்கும் என்றூ நினைக்கிறேன்.. இருந்தாலும் ஒரு விளக்கத்திற்காக இந்த கேள்வியை கேட்கிறேன்.)

murugadas said...

happy new year

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.

tamilvirumbi said...

அன்பு தோழி ,
மிக்க நன்றி.அரிய நூலினை ,தமிழ் கூறும் நல் உலகத்திற்கு ,தந்தமைக்கு எனது உளம் கனிந்த
பாராட்டுக்கள் .

Sithargal said...

My Dear Friend,

I have already added your blogspot in my http://www.sithargal.in website.

Let us work together and will try to make sure that, your post will reach Maximum People.

God Bless...

Thanks,
Meganathan.AN

sadagopal said...

thanks tholi ithu oru nalla news

sadagopal said...

thanks tholi ithu oru nalla news

vicram77 said...

May I give some suggestion please, I'm very proud of this blog and also தமிழ் தந்த சித்தர்கள் site. But some of us can't read Tamil so if possible can some translate it to english so everybody will be benefit out of this blog and also தமிழ் தந்த சித்தர்கள். I hope I didn't hurt any body. Thanks alot.

Post a comment