மிளகு கற்பம்.

Author: தோழி / Labels: , , ,

கற்ப வகைகளைப் பற்றி ஏற்கனவே பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். எளிய கற்ப வகைகள் ஏதுமிருந்தால் பகிர்ந்திட பலரும் வேண்டியிருந்தனர். தேரையர் அருளிய “தேரையர் காப்பியம்” என்னும் நூலில் காணக் கிடைத்த எளிய கற்பமான “மிளகு கற்பம்” பற்றி இன்றைய பதிவில் பார்ப்போம்.

மரிசமொவ் வொன்றொரு வார மட்ட திக
வரிசையாய்த் தினமுமோர் மண்டலங் காலமே
யுண்டிடு தேசுட னுரமிகு பசியுங்
கொண்டிடு மதன்பொடி குழைத்து நெய்யுடனே
யுண்டிடத் தொனிதரு மோதுமிப் பொருளொடக்
காரமுங் குழைத்துணக் கடும்பசி யழலுறும்
பாரிய நோய்களும் பறக்கும தொன்றையுங்
குடிநீ ரட்டுணக் குலவுமுத் தோடமுங்
கொடும்பிணி யாவும் குடிகெட் டோடுமே

- தேரையர்.

இந்த வகை கற்ப முறைக்கு தரமான நூற்றித் தொண்ணூற்றி இரண்டு(192) மிளகுகள் தேவை படும். முதல் நாள் ஒரு மிளகு, அடுத்த நாள் இரண்டு, அதற்கடுத்த நாள் மூன்று என ஒவ்வொரு எண்ணிக்கையாக ஏழு நாள் வரை வெறும் வாயிலிட்டு நன்கு மென்று விழுங்கிட வேண்டுமாம்.

பின்னர் எட்டாம் நாளில் இருந்து ஆறு மிளகு, ஒன்பதாம் நாள் ஐந்து மிளகு என குறைத்துக் கொண்டே பதின் மூன்றாம் நாள் ஒரு மிளகு ஆகும் வரை சாப்பிட வேண்டுமென்கிறார். பதின்நான்காம் நாள் மீண்டும் எண்ணிக்கையை உயர்த்தி இரண்டு மிளகு என தொடர வேண்டும். இப்படி தொடர்ந்து ஏழு ஏழு நாட்களாய் கூட்டிக் குறைத்து ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் மிளகை சாப்பிட்டு வர வேண்டுமாம்.

இப்படி ஒரு மண்டல காலம் சாப்பிட்டு வந்தால் உடல் ஒளி பெறுவதுடன்,வலிமையும் அடையுமாம். மேலும் முக்கியமாய் ஆயுளும் அதிகரிக்கும் என்கிறார் தேரையர்.

எல்லாம் சரிதான், எப்படி உண்ண வேண்டும்?, இதில்தான் இந்த கற்பத்தின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

காலை அல்லது மாலை வேளைகளில் இந்த மிளகை உண்ணலாம் என்கிறார்.ஆனால் இதை சாப்பிடுவதற்கு ஒரு சாமம் அதாவது மூன்று மணி நேரத்துக்கு முன்னால் வரை உணவு உட்கொள்ளக் கூடாது என்கிறார். மேலும் பத்தியமாக “மது, மாது, மாமிசம்” விலக்கிட கூறுகிறார்.
எளிய கற்ப முறைதானே!

மேலும் மிளகை பொடியாக்கி தேனுடன் குழைத்து உட்கொண்டு வந்தால் குரல் இனிமையடையுமாம்.

சிட்டிகையளவு மிளகுப் பொடியுடன் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து உட்கொண்டால் கடும்பசி ஏற்படுவதுடன் பித்தம் சார்பான நோய்களும் நீங்குமாம்.

மிளகைக் குடிநீராகக் காய்ச்சி பருகி வந்தால் முக்குற்றங்களாகிய வளி, அழல், ஐய நோய்களையும் மற்றும் பல கொடும் பிணிகளையும் தீர்க்குமாம் என்கிறார் தேரையர்.

குடி நீர் என்பது எட்டுப் பங்கு நீர் விட்டு ஒரு பங்காக காய்ச்சி எடுப்பதாகும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

35 comments:

arul said...

nice information

La Venkat said...

sounds like very easy, for 52 days with out madhu, maadhu, mamisam is question mark? However trying is worth.

subramaniravimohaneswaran said...

oru mandalathirukku 192 milagugal mattume thevaipadugirathu. 196 endru enghu kurippitullar theriyapaduthavum- nandri M.S.RAVI

தோழி said...

@subravimohan

தவறை திருத்திவிட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி.

vv9994013539@gmail.com said...

நன்றி, தொடரட்டும் அற்புதம் . . .

tamilvirumbi said...

தோழி ,
நல்ல பதிவை கொடுத்தமைக்கு மிக்க நன்றி.மிளகு ,அதிகப்படியான வெப்பத்தை உண்டுபண்ணும் என்று கூறுகிறார்கள் .சிலர் ,மிளகு அதிக அளவு எடுத்துக்கொண்டால்
பித்தம் தலைக்கு அதிகமாகும் என்று கூறுகிறார்கள்.இது உண்மையா?

naveenkumar said...

Hi anbu thozhi,

Nan munnare keetu irunthen.Ennal(anaivaralum) kathiruka mudiyavillai ovoru pathivirkkum.Karanam velai pazhu,neram inmai kudumba soolnilai.Sithar kal vazhkaiku thevaiyana niraiya seithiyai solli sentrullanar .athai eduthu koorum pakkiam ungalluku kidaithu ullathu.Niraya per ungal Blog lum keetu parthu irukiren.Oru puthakathin pdalai mulumayaga varam oru murai allathu ,matham oru murai ..muzhuvathumaga padal matrum atharkana vilakam anupalame.Oru manithanin vazhnal 60 varudam entral (60*365) pathivukal mattumey arriya mudium.Ennnudaiya aarvakolarai mannikavum. Bonazaka muzhu therayar kappiaythaiyum anupi ullen

Anbudan
Naveenkumar

kimu said...

எத்தனை மிளகு போட்டு தண்ணீரை காய்ச்சவேண்டும் ???
தண்ணீரின் அளவு ??

naveenkumar said...

Hi anbu thozhi,

Nan munnare keetu irunthen.Ennal(anaivaralum) kathiruka mudiyavillai ovoru pathivirkkum.Karanam velai pazhu,neram inmai kudumba soolnilai.Sithar kal vazhkaiku thevaiyana niraiya seithiyai solli sentrullanar .athai eduthu koorum pakkiam ungalluku kidaithu ullathu.Niraya per ungal Blog lum keetu parthu irukiren.Oru puthakathin pdalai mulumayaga varam oru murai allathu ,matham oru murai ..muzhuvathumaga padal matrum atharkana vilakam anupalame.Oru manithanin vazhnal 60 varudam entral (60*365) pathivukal mattumey arriya mudium.Ennnudaiya aarvakolarai mannikavum.
Note : Bonazaka muzhu therayar kappiaythaiyum anupi ullen

http://siddhadreams.blogspot.com/2011/03/theraiyar-kappiyam-ebook-download.html


Anbudan
Naveenkumar

அகோரி said...

மிக மிக அருமையான பதிவு தோழி

kaleappan said...

தோழி வணக்கம்,
இங்கே குறிப்பிடும் மிளகு என்பது எதை குரிக்கிறது,
கருப்பு மிளகு?
வெள்ளை மிளகு?
அல்லது எது?

நன்றி,

Nanjil Kannan said...

உருவு சிறுத்தாலும் மிளகின் குணம் பெரிது :)))) நன்றி அக்கா

Venkatesh said...

தோழி,

மிளகு கற்பம் உண்ணும் பொழுது
உணவில் புளி, தயிர், நல்ல எண்ணெய் சேர்த்து கொள்ளலாமா? மேலும் எந்த காயை பயன் படுத்த கூடாது என்பதையும்
தாங்கள் தெரிவிக்கவும்.

என்றும் அன்புடன்,
பொடியன்

manoarvi said...

நாள் மிளகு எண்ணிக்கை
1 1
2 2
3 3
4 4
5 5
6 6
7 7
8 6
9 5
10 4
11 3
12 2
13 1
14 2
15 3
16 4
17 5
18 6
19 7
20 6
21 5
22 4
23 3
24 2
25 1
26 2
27 3
28 4
29 5
30 6
31 7
32 6
33 5
34 4
35 3
36 2
37 1
38 2
39 3
40 4
41 5
42 6
43 7
44 6
45 5
46 4
47 3
48 2

total 192

முடியும்போது 2 மிளகுடன் முடிகிறது ...கணக்கு சரிதானா தோழி ?

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான பகிர்வு நன்றி தோழி.

ரோகிணிசிவா said...

migavum thelivaana, thevaiyaana pathivu ,thanks Thozi

தோழி said...

@kaleappan

கொடியில் நன்கு முற்றிய மிளகு காய்களை வெயிலில் உலர்த்தினால் அது கரு மிளகு.....

அத்தனை முற்றாத மிளகு காயை நிழலில் உலர்த்தினால் வெள்ளை மிளகு..

எந்த வகையான மிளகு என்கிற குறிப்புகள் இல்லை. கருமிளகு பயன்படுத்தலாம்.

தோழி said...

@manoarvi

கணக்கு சரியே!

Unknown said...

its really super

linelogesh said...

Amazing Sister

piravipayan said...

மிளகு கற்பம் அருமை
மிளகு இருந்தால் எதிரி வீட்டில் கூட விருந்து சாமிளகு கற்பம் அருமை
மிளகு இருந்தால் எதிரி வீட்டில் கூட விருந்து சாப்பிடலாம் என்று ஒரு பழமொழி கூட உண்டு

ஈசீயாக கடைபிடிக்க கூடிய கற்பம் செய்து பார்போம் தகவலுக்கு நன்றி
ஏதனும் பத்தியம் உண்டா ?

ப்பிடலாம் என்று ஒரு பழமொழி கூட உண்டு

ஈசீயாக கடைபிடிக்க கூடிய கற்பம் செய்து பார்போம் தகவலுக்கு நன்றி
ஏதனும் பத்தியம் உண்டா ?

PS said...

Mayb this is correct

1 1
2 2
3 3
4 4
5 5
6 6
7 7
8 7
9 6
10 5
11 4
12 3
13 2
14 1
15 1
16 2
17 3
18 4
19 5
20 6
21 7
22 7
23 6
24 5
25 4
26 3
27 2
28 1
29 1
30 2
31 3
32 4
33 5
34 6
35 7
36 7
37 6
38 5
39 4
40 3
41 2
42 1
43 1
44 2
45 3
46 4
47 5
48 6
49 7

Total 196

Lingeswaran said...

எளிய முறைதான்....!

Raakee said...

Vanakkam,
enakku eduvum theriyathu,milagu karpam ethil vunna vendum? Muthanda kiyazham enral enna? Milagu karpam unnum pozhudu kadaipidikavendiya
murai enna?Paththiyam vunda illaiya?

Eppadiku,
Maha Paavi,Sandalan,ezhi piravi.Raa.kee

Satheesh said...

இதை பின்பற்றுபவர்கள் யாரேனும் தங்களின் அனுபவத்தை பகிர்ந்தால் சிறப்பாக இருக்கும். இன்றுடன் நான் எஇட்டு நாட்களாக பின்பற்றிவருகிறேன்.

La Venkat said...

@Satheesh

இனிய சத்ீஷ,

மிளகு கர்ப்ப முயற்சியின் பலன் பற்றி சொல்லவும்.

வெங்கட்.

Satheesh said...

I made mistake on count of pepper for 19th & 20th day. Do i need to restart the whole process or continue as it is???

vv9994013539@gmail.com said...

21-01-2011 அன்று உடன் 48 நாட்கள் முடிவடிகெறது.
தோழிக்கு நன்றி.
வாழ்க தமிழ்
வளர்க தமிழ்.

THIRUMAL said...

nandri

vv9994013539@gmail.com said...

@My Mobile Studios21.01.2012

La Venkat said...

Dear Mr.Satheesh and mobile studios,

Can you pls share your experience?
my mail id venkattex@yahoo.co.in

kbalasubbu said...

Finally… I finished it yesterday (28/05/2012). I can’t comment much that it made a big or small difference in my body (because I don’t see or feel any significant difference), but it was a real test for my consistency. I don’t drink, even beer so that wasn’t a problem but being a married man and a non vegetarian, I was put under real test. Any way I won at the end. I am not sure wether it made any difference physically but definitely yes , mentally. It really boosted my confidence that, If I decide to do something. I can.

Tonnes of thanks to Thozhi…

Balasubramanian Kumaran

Suresh said...

thozhi,

nan daily 2 pal poondu with 4 kaduku sappadukeren. thu sari ya thavara....?????

Prasanna said...

Excellent Thozi. Vazhga Valamudan!!

sasikumar said...

KARPAM MEANING PREGNANCY= AM I RIGHT ?

Post a Comment