ரவிமேகலை என்னும் பொக்கிஷம்!

Author: தோழி / Labels: ,

காலத்தே அழிந்து கொண்டிருக்கும் சித்தர் பெருமக்களின் நூல்களை மின் நூலாக தொகுத்து இணையத்தில் பகிர்ந்து கொள்ளும் தொடர் முயற்சியில் எனது பதின்மூன்றாவது படைப்பாக கோரக்கர் அருளிய "ரவிமேகலை - 75" என்கிற இந்த நூலை மின் நூலாக்கி இருக்கிறேன்.

பதினென் சித்தர் மரபில் பதினாறாவது சித்தராக வைத்து போற்றப் படுபவர் கோரக்கர். பல்வேறு சித்தர் பெருமக்களும் இவரின் சிறப்புகளை தங்களின் பாடல்களில் குறிப்பிட்டிருப்பது இவரது மகத்துவத்தை நமக்கு உணர்த்துகிறது. இவை தாண்டி இவர் மகத்துவம் கூறும் பல்வேறு செவிவழிக் கதைகள் புழக்கத்தில் உண்டு.

கோரக்கர் பாடல்களில் எளிமையான சொல்நயமும், சந்த வகுப்பும் சிறப்பாக அமைந்திருப்பது அவரது மொழியாளுமையை பறைசாற்றுகிறது. இதுவரை நம்மில் பலரும் அறிந்திராத பல சூட்சுமங்களையும் அவற்றின் ஊடே பொதிந்திருக்கும் அரிய பல தகவல்களைக் கொண்ட இந்தநூல் நமக்குக் கிடைத்த பெரும் பொக்கிஷம் என்றால் மிகையில்லை.

காலமதில் கடியரவின் விடமும் ஏறா
கடுந்தீயின் சூடேறா சலமுங் கொல்லா
ஞாலமதில் சமாதிபெற மண்ணுந் தின்னா
நடுவனவ னுனதருகே வரவே மாட்டான்
வேலனைய கத்திவாள் வெட்டு மேறா
விடந்தலைமேற் கொண்டவனும் விமலி யாத்தாள்
சீலமுடன் ஞானப்பால் தந்து கந்தே
யீரெட்டாம் வயதுமெப்போ திருந்து வாழ்வாய்.

இந்த மின் நூலினை பார்வையிடும் நண்பர்கள் அறிந்தவர், தெரிந்தவர் என்கிற பாகுபாடு இல்லாமல் ஆர்வம் உள்ள அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

எனது மேலான குருவினை பணிந்து இந்த முயற்சியினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

மின்நூலை இந்த இணைப்பில் தரவிரக்கிக் கொள்ளலாம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

10 comments:

ViswanathV said...

மின்நூலைத் தரவிரக்கிக்
கொண்டேன்;
நன்றி.

பாடல்களோடு
அதன் அர்த்தமும்
அழகு தமிழில்
அளித்திருந்தால் இன்னும்
நன்றாயிருக்கும்.

subravimohan said...

enakkum athe, porulurai vendum - nandri M.S.Ravi

revathi said...

yes thozhi porul vendum

ஆன்மீக உலகம் said...

நல்லதொரு அரிய பரிசு தருகிறீர்கள்.. பாடலின் விளக்கமும் கொடுத்தால் மேலும் மகிழ்ச்சி... பகிர்வுக்கு நன்றி சகோதரி!

ஆன்மீக உலகம் said...

கோரக்கர் சித்தரின் மற்றைய சந்திரரேகை, முத்தாரம், மலைவாகடம் , நாமநீச திறவுகோல் ஆகிய நூல்களும் விரைவில் தங்களது தளத்தில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

Ram said...

Anbu Thozhi

Ungal sevaikku enathu kai koopiya vankkangal.

Merkondu paratta vaarthai illai.

Regards
RK

tamilvirumbi said...

தோழி ,
தங்களின் சிகரத்தை தொடும் சீரிய பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்

shanmugathirukumaran said...

excellent

Srinivasan Rajagopalan said...

Thanks to you who use technology development for widening knowledge

Ananth Sozhan said...

Thanks, If require i can help you to translate some more book. If require i can send money as well for to help you. Please let me know your interest. Thnaks

Post a Comment