மரணத்தை வெல்ல....

Author: தோழி / Labels: ,

இந்த உலகில் மனிதனால் வெல்ல முடியாதது என ஒன்று இருக்கிறதென்றால், அது மரணமாகத்தான் இருக்கும். இத்தனை ஆண்டு கால மருத்துவ ஆராய்ச்சிகளின் முடிவில் நம்மால் மரணத்தை கொஞ்சம் தள்ளிப் போட முடியுமே தவிர வெல்ல முடியாது.

இப்படி வெல்லவே முடியாத மரணத்தையும் வெல்ல முடியும் என்கிறார் அகத்தியர். அவரது ”அகத்தியர் பூரணசூஸ்திரம் 216” என்னும் நூலில் இதற்கான விவரம் காணப் படுகிறது. இதன் நம்பகத்தன்மை மற்றும் சாத்திய அசாத்தியங்கள் விவாதத்திற்கும், மேலதிக ஆய்வுக்கும் உட்பட்டது. எனவே இதனை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே கருதிட வேண்டுகிறேன்.

விளையுமடா கிழக்காகக் காதம் மூன்றில்
வெகுவிதமாம் பொன்னிமிளை விளையும் பூமி
தளையுமடா பொதிகைமலைச் சார்பு தன்னில்
தாம்பிரவே ணிக்கரையில் அருவி ஆற்றில்
முளையுமடா அதனடுத்த தெற்கே காத
மூவிலையால் குருத்துந்தான் மரமுண்டாகும்
தளையுமடா அதிநடுவே சோதி விருட்சம்
தன்னோடு வெண்சாரை தானும் உண்டே.

தன்னையே கண்டவுடன் ரம்பிதேதேதான்
சார்வான நடுமையம் பிடித்தாய் ஆனால்
பின்னையே பிடித்தவிடங்க் கையிருக்கப்
பேராக விருதுண்டாய்ப் பொருந்திப் போகும்
மின்னையே கையில் இருக்கும் அதனைத் தின்றால்
இருபதினா யிரவருடம் இருத்தும் பாரு
பொன்னையே தேடாதே கற்பந் தேடு
பொருள்காணப் புருவ மையம் நோக்கிப் பூணே.

பொதிகமலைச் சாரலில் பொன்னிமிளை விளையும் பிரதேசம் ஒன்று இருக்கிறதாம். அதை அண்டிய பகுதியில் தாம்பிரவேணி என்னும் ஆறு ஓடுகிறதாம். அதற்க்கு தெற்குப் பக்கமாக காத தூரம் சென்றால் மூவிலையை குருத்துக்களாகக் கொண்ட மரங்கள் இருக்குமாம். அவற்றின் நடுவே சோதிவிருட்சமும் இருக்கிறதாம். அதில் வெண் சாரைப் பாம்பு இருக்குமாம்.

இந்த பாம்பை கண்டவுடன் அதன் உடலில் நடு மையத்தை கையால் பிடிக்க வேண்டுமாம். அப்படி பிடித்தால் பிடிக்கிற பகுதி கையோடு வந்துவிடுமாம். இப்படி பிடிக்கும் போது வெண் சாரை கடிக்காதாம். உடனே பாம்பின் மற்ற இரண்டு பகுதிகளும் ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளுமாம். ஒட்டியவுடன் பாம்பு ஓடிவிடும் என்கிறார்..

இப்போது கையில் இருக்கும் வெண் சாரைப் பாம்பின் பகுதியை சாப்பிட வேண்டும் என்கிறார் அகத்தியர். அப்படி சாப்பிட்டவர்களுக்கு இருபதாயிரம் வருடம் உடல் அழியாது இருக்குமாம். இந்த காலத்தில் பொன் பொருள் மீது மோகம் கொள்ளாமல் கற்ப வகைகளை தேடி அறிவதுடன், புருவ மத்தியை நோக்கி தியானித்திருக்க வேண்டும் என்கிறார்.

ஆச்சர்யமான தகவல்தானே!

அடுத்த பதிவில் கோரக்கர் அருளிய “ரவிமேகலை 75” யை மின்நூலாக பகிர்ந்து கொள்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

22 comments:

''இறைவனடி யுவராஜா'' said...

தோழி வாழ்த்துகள்...

ஆச்சரியமான தகவல் ,

தோழி உங்கள் பணி சிறக்க இறைவனிடம் இறைஞ்சும்
தொண்டன் !!!!

என்றும் நட்புடன்
யுவராஜா

arul said...

nice post friend

Cithra said...
This comment has been removed by the author.
shankar said...

pothigai malai saralil ottia aaru thamirabarani thane ?

Sankar Gurusamy said...

இதனால்தான் சீனாக் காரங்களும் தென்கீழ்த்திசை நாடுகளை சேர்ந்தவர்களும் பாம்பை விரும்பி சாப்பிடுகிறார்களோ...

பகிர்வுக்கு மிக்க நன்றி..

piravipayan said...

டியர் தோழி

எதாவது நடக்க கூடியது
இருந்தா சொல்லுங்கோ

Rock n Roll said...

நன்று ! இறைவன் சித்தம் !



ப்ரவீன் குமார்

Jayachandran said...

மதிப்பு மிக்க தோழியாரே, தாங்கள் முன்பு இரவிமேகலை பற்றி கூறியபோதே என் தேடல் துவங்கி விட்டது, அடுத்த பதிவில் முற்று பெரும். நன்றி தோழி....

kabelan said...

தோழி .....,

ஒரு தடவையில் ஒன்றுக்கு மேற்ப்பட்ட காயகர்ப்பங்களை உண்ணலாமா???? அதாவது ஒரு கர்ப்பம் உண்ணும் காலத்தில் இன்னும் ஒரு கற்பத்தை உண்ணலாமா அப்படி உண்ணலாம் என்றால் கூடுதலாக ஒரே தடவையில் எத்தனை கர்ப்பம் உண்ணலாம் ?? தயவு செய்து கூறவும் ....
உங்கள் பதிலை எதிபார்த்து இருக்கும் நண்பர்
மட்டக்களப்பில்
இருந்து
........கபிலன் ........

Lingeswaran said...

வாழும்போதே மனதை பரம்பொருளுடன் இணைத்து விட்டால் வள்ளலார் கூறும் மரணமிலா பெருவாழ்வை அடைந்து விடலாம்தானே....!

ஆன்மீக உலகம் said...

பாடலும் அதற்கான தெளிவான விளக்கமும் அருமை... ஆச்சர்யமான விசயம்கூட அனால் இதையெல்லாம் இக்காலத்தில் தேடுவது.. கிடைப்பது என்பது சாத்தியமா என்றால் கேள்வி குறிதான்....

அருணையடி said...

Pagirvikku Nandri!

Sundarsam said...

SUNDARSAM SAID...thozhi ungal thagavalkal malaikka vaikkindrana. ENAKKU ORU SANTHEGAM ATHARKKU NEENGAL PINNOOTTAM ITTE AGAVENDUM ...
POGAR, RAMADEVAR AKIYOR ISLAMAI THAZHUVIKONDARKAL ENDRU ORU SARADU IRUKKIRATHE.. ATHU ENTHA ALAVU UNMAI ... SARIYANA PATHIL KOORAVUM NANDRI THOZHI

Sundarsam said...

THOZHI THANGAL PATHIVUKALUKKU MIKKA NANDRI.
PLZ ITHARKKU UDAN PINNOOTTAMIDAVUM. BOGARUM RAMADEVARUM ISLAMAI THAZHUVIKONDARKAL ENBATHARKKU SANDRU ULLATHA... THAVAYUSEITHU VILAKKAM KOORAVUM.
SUNDARSAM SAID

Ram said...

தேடி போனால் ஓடிபோகும், நாடாதிருந்தால் தேடி வரும்...!

tamilvirumbi said...

தோழி ,
ஆச்சர்யமூட்டும் தகவல்களை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி .இன்றைய தினம் இத்தகைய தாவரத்தினை காண்பது அரிது .தாங்கள் வந்தால் ,பொதிகை மலைக்கு அழைத்து
செல்கிறேன்

Shakthiprabha said...

அறிய தகவல்!!

Yagavarnan said...

அன்புத்தோழி காயகற்ப பயிற்சியும் முறை பற்றி சிவவாகியர் பிர சித்தர்களும் கூறியதையும் பற்றி வேதாத்திரி மகரிஷி அமைத்த ஆன்மிக அற்க்கட்டளை பயிற்றுவித்தும் வருகிறது உங்கள் பதிவுக்கு முன்வைக விரும்புகிறேன்

THIRUMAL said...

super.............

senthil said...

manavala kalai mandram kayakalpam seiyalam

THIRUMAL said...

உடல் உயரமாக வளர சித்தர்கள் மருந்து ஏதும் சொல்ல வில்லையா ? எது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் . நன்றி

ragu said...

soalregala thavara senja paadilla

Post a Comment