குழந்தை பேறில்லாமல் துயரத்தில் அழுந்தும் தம்பதியரின் குறை தீர்க்கும் எளிய வழி ஒன்றினை அகத்தியர் தனது “அகத்தியர் பரிபூரணம்” என்னும் நூலில் அருளியிருக்கிறார். பலரின் தொடர்ச்சியான வேண்டுகோளை நிறைவு செய்திடும் வகையில் இன்று அந்த முறையினை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
இருந்துகொண்டு குருபரனைத் தியானம்பண்ணி
இன்பமுடன் ஓம்றீங் அங்வங்கென்று
வருந்திமனக் கனிவதனால் தேனில்மைந்தா
மார்க்கமுடன் ஆயிரத்தெட்டு உருவேசெய்து
அருந்தவமாய் தலைமுழுகும் போதில்மைந்தா
அன்புடனே பெண்களுக்கு யீய்ந்தாயானால்
திருந்தியந்த மங்கையர்க்குக் கெற்பமுண்டாம்
திட்டமுடன் கண்மணியைக் காண்பார்பாரே.
பாரப்பா மலடாகி இருந்தாலென்ன
பக்குவமாய் யன்பதுக்குள் கெர்ப்பமுண்டாம்
நேரப்பா மணிமந்திர மிதுதானாகும்
நேர்மையுள்ள ரகசியமது சந்தானவித்தை
ஆரப்பா அறிவார்கள் சந்தானகரணி
அறிந்துமன துரிமையனா லடக்கம்பண்ணி
சாரப்பா சாகரத்தில் தவசுபண்ணி
சதாகாலம் பூரணத்தில் சார்ந்துவாழே.
- அகத்தியர்.
வெள்ளியினால் ஆன ஒரு கிண்ணத்தில், ஒரு கழஞ்சு தேன் விட்டு அதனை வலது கையில் ஏந்திக் கொள்ள வேண்டுமாம். பின்னர் கிழக்கு முகமாய் அமர்ந்து/இருந்து கிண்ணத்தில் இருக்கும் தேனை கவனக் குவிப்புடன் பார்த்துக் கொண்டே “ஓம் றீங் அங் வங்” என ஆயிரத்து எட்டு தடவைகள் தொடர்ச்சியாக செபிக்க வேண்டுமாம். இந்த செயல்முறையை குழந்தை பேறு வேண்டும் தம்பதியரில் கணவனே செய்திட வேண்டும் என்கிறார்.
இவ்வாறு செபித்த தேனை மனைவியியானவள் மாத விலக்கு முடிந்து தலை முழுகிய பின்னர், உண்ண்க் கொடுத்து இல்லறத்தில் ஈடுபட்டு வர கருத்தரிக்கும் என்கிறார் அகத்தியர். இந்த முறைக்கு எவ்விதமான பத்தியமும் கூறப் படவில்லை. மலடு என சொல்லப் பட்டவர்களுக்கும் இந்த முறையினால் கருத் தரிக்கும் என்கிறார் அகத்தியர்.
ஆச்சர்யமான தகவல்தானே!, தேவையிருப்பவர்கள் குருவினை வணங்கி முயற்சிக்கலாம். தேவையுள்ளோருக்கு இந்த தகவலை அறியத் தரலாம்.
அடுத்த பதிவில் வேறொரு தகவலுடன் சந்திக்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



21 comments:
கழஞ்சு என்றால் என்ன? தோழி
உங்கள் பதிவுகள் அத்தனையும் அருமையாக உள்ளது
உங்கள் பனி சிறக்க வாழ்த்துகள்
மேலும் கிழே உள்ள கணக்குகள் சரியா என்பதை கூறவும்
* 4 nel edai= 1 kunRimaNi
* 2 kunRimaNi= 1 manjaadi
* 1 manjaadi= 1 paNavedai
* 5 paNavedai= 1 kazhanju
* 8 paNavedai= 1 varaaganedai
* 20 paNavedai= 4 kazhanju = 1 kaqhsu
* 80 paNavedai= 16 kazhanju= 4 kaqhsu= 1 palam.
* 1.5 Kazhanji = 8 gram or one pown
Thanks thozi.
kazhanju nna evlo alaunu theriyaliye thozhi
டியர் தோழி
இன்று குழந்தை என்பது செயற்கையான விசயமாகி வருகிறது
குழந்தை கருவில் உருவானாலே டாக்டரிடம் ஓடுகிறார்கள் பழைய அம்மா மற்றும் பாட்டி வைத்தியங்கள எல்லாம் மறைந்து விட்டன இயற்கையான விஷயம் இன்று கடினமான விசயமாக மாறி விட்டது அலோபதி வைத்தியத்தினால்.
ஒரு நல்ல ஈசியாக வழி சொல்லி உள்ளீர்கள் சிவன் அருள் இருந்தால் எல்லாம் நடக்கும்
arul...
nandri,
arumayana thagaval.
thoduratu ungal pani.
valzha valamudan
கழஞ்சு என்றால் என்ன அளவு.... தோழி?
@manoarvi
கழஞ்சு என்பது தற்போதைய அளவுகளில் ஐந்து கிராம்.
சிறப்பான உப( பா)யம்
அன்புடன் ,
கோவை சக்தி
சிறப்பான உப( பா)யம்
அன்புடன் ,
கோவை சக்தி
Ungal sevaiyai
Endrum
Virumbugirom
Vazthugirom
Varpurthugirom
Ungal sevaiyai
Endrum
Virumbugirom
Vazthugirom
Varpurthugirom
தோழி ,
அபூர்வமான தகவல்களை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி .
@Piravipayan avargal
செயற்கை முறைகள் இருந்தாலும் இயற்கையின் வழியிலே தான் இதயத்துடிப்பு கொடுக்க முடியும்! மனிதனால் முடியாதது இதயத்தை செயல்படுத்துவது! பல செயற்கை முறைகளால் தற்போது chemical pregnancy அல்லது முத்து பிள்ளை உருவாகி பிரச்சனை கருசிதைவு ஆகிறது! நன்றாக சொன்னீர்கள்! இதயத்துடிப்பு தரும் இறைவன் ஒருவரால் மட்டும் உயிரை உருவாக்க முடியும்!
nanri thozhi........
hnalla thakaval
தங்களின் வலைபதிவினை படித்தேன் அகத்தியரின் அருளால் குழந்தை வரம் பெறுதல் நல்ல பதிவு அனைவரும் பயன் பெரும் வகையில் இருந்தது நன்றி முயற்சிக்கு பலன் கிடைக்க அகத்தியர் அருள்வார்
தங்களின் வலைபதிவினை படித்தேன் அகத்தியரின் அருளால் குழந்தை வரம் பெறுதல் நல்ல பதிவு அனைவரும் பயன் பெரும் வகையில் இருந்தது நன்றி முயற்சிக்கு பலன் கிடைக்க அகத்தியர் அருள்வார்
miga miga ariya thagaval .
Valarga ungal thondu thozhi ...
ஆணுக்கு மலட்டு தன்மை இருந்தால் கூட இந்த முறை வெற்றி பெருமா தோழி !!!
thanx for ur information
Post a Comment