நோக்கு வர்ம செயல்பாடு!

Author: தோழி / Labels: ,


நமது உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருப்பதாக சித்தரியல் கூறுகிறது. இது குறித்து ஏற்கனவே முந்தைய பல பதிவுகளில் பார்த்திருக்கிறோம். இவற்றில் மிக முக்கியமானது பத்து நாடிகளாகும். அவை பற்றியும் இந்த தொடரின் ஆரம்பத்தில் விளக்கியிருக்கிறேன்.

இந்த நாடிகளின் ஊடே பத்து விதமான வாயுக்கள் ஓடுவதாக சித்தர் பெருமக்கள் கூறியிருக்கின்றனர். அவை முறையே

பிராணன் - உயிர்க்காற்று
அபாணன் - மலக் காற்று
வியானன் - தொழிற்காற்று
உதானன் - ஒலிக்காற்று
சமானன் - நிரவுக்காற்று
நாகன் - விழிக்காற்று
கூர்மன் - இமைக்காற்று
கிருகரன் - தும்மற் காற்று
தேவதத்தன் - கொட்டாவிக் காற்று
தனஞ்செயன் - வீங்கல் காற்று

இந்த வாயுக்கள் நமது நாடிகளின் ஊடே ஓடிக் கொண்டிருப்பதாகவும், அப்படி ஓடும் இந்த வாயுக்கள் நாடிகளின் முடிச்சுகளில் ஒன்றோடு ஒன்று சந்திக்கும் இடங்களையே வர்ம ஸ்தானங்கள் அல்லது வர்ம புள்ளிகள் என்றும் குறிப்பிடுகின்றனர். இப்படி ஒரே முடிச்சில் பல வாயுக்கள் சந்திக்கும் போது அவை நுட்பமான வர்ம புள்ளிகளாகின்றன.

இத்தகைய நுட்பமான வர்ம ஸ்தானங்களில் அடி படும் போது அவை உயிராபத்தை விளைவிக்கக் கூடியவை. “படாத இடத்தில் பட்டு பொட்டென போய்விட்டான்” என்கிற பேச்சு வழக்குகள் இந்த நுட்பமான வர்ம ஸ்தானங்களில் படும் அடியினையே குறிப்பிடுகிறது.

இப்படி நுட்பமான வர்ம புள்ளிகளை எந்த ஒரு குருவும் ஆரம்ப நிலையில் கற்றுத் தருவதில்லை. குறைந்தது பன்னிரெண்டு வருட பயிற்சிக்குப் பின்னரே குருவானவர் இதனை அருளுவாராம். அந்த கட்டத்தில்தான் மாணவர் வர்மக் கலைக்குத் தேவையான உடல் லாவகமும், மனவலிமையும், மனப்பக்குவமும் பெற்றவராகி இருப்பாராம்.

இப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட வாயுக்கள் சந்திக்கும் நுட்பமான வர்ம புள்ளிகளே நோக்கு வர்மத்தில் பயன் படுத்தப் படுகிறது. இந்த புள்ளிகளின் மீது கவனக் குவிப்போடும், தன் முனைப்போடும் பார்வையை செலுத்தும் போது பார்வையின் தீவிரம் பொறுத்து விளைவுகளை உண்டாக்க முடியும் என்கிறார் அகத்தியர்.

பார்வையின் தீவிரம் பொறுத்து ஒருவரை நிலை குலையச் செய்வதில் துவங்கி, அவரை மயக்கமடையச் செய்யவோ அல்லது அவரின் உயிரினை போக்கவோ செய்திட முடியுமாம். இவை தவிர இன்னும் மேம்பட்ட நிலையில் அவரை தன் விருப்பத்திற்கு ஏற்ப இயக்கவும் முடியும் என்கிறார். இதைத்தான் சமீபத்தைய திரைப் படத்தில் காட்சிப் படுத்தியிருந்தனர்.

கீழே உள்ள படத்தில் நமது முகத்தில் உள்ளதாக அகத்தியர் சொல்லும் நோக்கு வர்ம புள்ளிகளை சிவப்புப் புள்ளியால் குறியிட்டுக் காட்டியிருக்கிறேன். இந்த படத்தினை ஒரு தகவல் பகிர்வாக மட்டுமே கருத வேண்டுகிறேன். யாரும் ஆர்வ மிகுதியினால் விஷப் பரிட்சைகளில் இறங்கிட வேண்டாம். ஏனெனில் நம்மைப் போன்றவர்களால் இதனை நிச்சயம் கைக் கொள்ள முடியாது. குருமுகமாக முறைப்படியான தொடர் பயிற்சிகள் மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளின் ஊடே வளர்த்தெடுக்கப் பட வேண்டியது இந்தக் கலை.



இந்த நோக்கு வர்ம தாக்குதலில் இருந்து நம்மை காத்துக் கொள்ளவும் வழிவகைகள் இருக்கின்றனவாம். அவற்றை குருமுகமாகவே அறிவது சிறப்பு என்பதால் அதை இங்கே ஒரு தகவலாக மட்டுமே பதிந்து வைக்கிறேன். தற்போதும் தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மற்றும் கேரளத்தின் சில பகுதிகளில் தேர்ந்த வர்மக் கலை ஆசான்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அத்தகையவர்கள் ஒருபோதும் தங்களை வெளிக் காட்டிக் கொள்வதில்லை. எனவே ஆர்வமுள்ளவர்கள் அவர்களைத் தேடியறிந்து பணிந்து இந்தக் கலையினை பழகிடலாம்.

நம்மிடம் இருக்கும் நூல்கள் நமது தேடலின் பாதையில் வழிகாட்டும் விளக்காக மட்டுமே இருக்க முடியும். அதைத் தாண்டிய நிபுணத்துவத்தை குருமுகமாக மட்டுமே அறியமுடியும்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

21 comments:

balaji said...

மிக அருமையான பதிவு இது . உங்கள் முயற்சிக்கு எனது உளம் கனிந்த பாராட்டுகள் . உங்களை போன்று சிலர் இருப்பதால் தான் சித்தர்கள் பற்றியும் அவர்களின் நூல்களில் உள்ள தகவல்கள் பற்றியும் எங்களுக்கு கிடைத்தன.

நிவிர் வாழ்க பல்லாண்டு .
என்றும் அன்புடன்,
பாலாஜி

kimu said...

Thanks

check this link:
http://www.varmam.com/
http://www.varmakkalai.com/

Rajakumaran said...

Nice, thanks ..

tamilvirumbi said...

தோழி,
தங்களின் வர்மத்தை பற்றிய பதிவு மிகவும் நன்றாக இருந்தது.மேலும் ,இதுவரை எனக்கு தெரியாத ஒன்றை தாங்கள் பகிர்ந்தது மிக்க மகிழ்ச்சி .மிக்க நன்றியும் கூட .

arul said...

nice post friend

Nethra said...

Vanakkam Thozi avargale.. Enakku oru vilakkam thevai.. Enathu mariyathaikku uriya priyavar oruvar "VARMAM KATRAAL VARUMAI VARUM" endru solliyathaal katpathai
paathiyil niruththi vitten. Athu unmaiya? thanggalin bathilai ethir paarkkireen. Nandri..

Gurunatha pandian said...

சந்தோஷமாக நன்றி

somnath said...

arumai arumai arumai

Lingeswaran said...

என்னதான் இருந்தாலும் நோக்கி நோக்கியே கார்களையெல்லாம் அனாயாசமாக பறக்க விடுவது மிகவும் மிகையானது...

Lingeswaran said...

மதுரையில் காமராஜர் பல்கலைகழகம் அருகில் விராட்டிப்பத்து என்ற ஒரு ஊரில் திரு. ராஜேந்திரன் என்ற ஒரு வர்ம ஆசான் இருக்கிறார். வர்மக்கலையில் மிகவும் அனுபவமும், திறமையும் வாய்ந்தவர். கமல்ஹாசன் நடித்த இந்தியன் திரைப்படத்தில் வர்மக்கலை நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தவர் சாட்சாத் இவரேதான்...

nadarasa sritharan said...

like it...

shane said...

nice

மதியின் வலையில் said...

நல்ல பதிவு

MEGAN said...

thank u very much sir.

ttss said...

இலங்கையில்/யாழ்ப்பானத்தில் வர்மக்கலை ஆசான்கள் இருக்கிறார்களா?

saravanan said...

varmam thernthavargal yarvathu therinthal enaku theriya paduthungal tholargale saran.ox.88@gmail.com

CVA said...

tHANK U SO MUCH,SUPER,& KUNDALINI PAEIRCHI SEIYA UDAL VAGU EPPADI IRUKA VAYNDUM

CVA said...

THANKU SO MUCH

nantha kumar said...

arumai

nantha kumar said...

arumai

v,a, saravanan said...

thanks for this post !!!!

Post a Comment