நோக்கு வர்மம் என்பது நான்கு வகையான வர்ம பிரிவுகளில் ஒன்று என்பதை முன்னரே பார்த்திருக்கிறோம். இந்த நோக்கு வர்மத்திற்கு “மெய்தீண்டாக் கலை” என்றொரு பெயரும் உண்டு. தவிர்க்க இயலாத ஆபத்துக் காலங்களில் மட்டுமே இந்தக் கலையினை பயன்படுத்திட வேண்டும் என சித்தர் பெருமக்கள். வலியுறுத்தியிருக்கின்றனர்.
நம்மை தாக்க வரும் மனிதர்கள் அல்லது விலங்குகளின் மீது பார்வையைச் செலுத்துவதன் மூலம் அவர்களை செயலிழக்கச் செய்து நம்மை தற்காத்துக் கொள்வதே இந்த கலையின் அடிப்படை நோக்கம். மேலும் குறைந்த இடைவெளியில் உள்ளவர்கள் மீது மட்டுமே இந்த முறையினைப் பயன்படுத்தி செயலிழக்கச் செய்யமுடியும். நுட்பமான இந்த கலையில் தேர்ந்தவன் எவராலும் வெல்ல முடியாதவனாகி விடுவான் என்கிறார் அகத்தியர். இதன் பொருட்டே குருவானவர் இந்தக் கலையை அத்தனை எளிதில் தம் மாணவருக்கு அருளிட மாட்டாராம்.
ஒரு வேளை மாணவன் வர்மக்கலையை முழுவதுமாக கற்றுத் தேர்ந்த பின்னர், காலப்போக்கில் அகந்தை காரணமாய், தன்னையே எதிர்க்க துவங்கினால் என்ன செய்வது என்று தயக்கத்தின் காரணமாய், குருவானவர் இது போன்ற சில நுட்பமான வர்மங்களை தங்கள் பரம்பரைக்கு என்று வைத்துக் கொண்டு மற்றவற்றையே கற்று கொடுத்தமையும் இந்த கலையின் அழிவிற்கு இன்னுமொரு காரணமாகிறது.
இன்றும் கூட, நம்முடைய பேச்சு வழக்கில் உள்ள “கண் திருஷ்டி”, “கண்படுதல்”, “கெட்டபார்வை”, “ஒரு பார்வையில் சப்த நாடியும் ஒடுங்கிப் போதல்” என்பது மாதிரியான வார்த்தை பிரயோகங்கள் பயன் பாட்டில் இருப்பதை கவனிக்க வேண்டுகிறேன். இவற்றை நோக்கு வர்மத்தின் நீட்சியாகவோ அல்லது எச்சங்களாகவே கருதலாம்.
நமது இந்த மெய் தீண்டாக் கலையே சீனாவில் போதி தர்மர் என்னும் பௌத்த துறவியினால் போதிக்கப் பெற்றது . இந்த நோக்கு வர்மத்தை தற்போது சீனாவில் “திம்-மாக்” என அழைக்கின்றனர். இது பற்றிய மேலதிக விவரங்களை இந்த இணைப்பில் காணலாம்.
இது போலவே வர்மத்தின் மருவிய தோற்றமே ஜப்பானிய தற்காப்புக் கலையான “அக்கிடோ” என்றும் கூறுகின்றனர். அக்கிடோ பற்றிய தகவல்களை இந்த இணைப்பில் அறியலாம்.
இப்படி ஆசிய நாடுகள் எங்கும் பரவிய கலையின் தாயகம் தமிழகம். இது தமிழர்களின் கலை, ஆனால் இன்று ஏறத்தாழ தமிழர்கள் அனைவராலும் மறக்கப் பட்டுவிட்ட அல்லது தமிழகத்தில் அழிந்தே போய்விட்ட கலை இது. இன்றைக்கு நமக்கு பழம் பெருமை மட்டுமே மிச்சமாயிருக்கிறது. இது மிகவும் வருந்தத் தக்க நிலை. இந்த நிலையிலாவது நம்மிடம் இருக்கும் தகவல்களைக் கொண்டு இந்தக் கலையினை மீட்டெடுக்கும் முயற்சியில் அரசு மற்றும் தன்னார்வலர்கள் களமிறங்கிட வேண்டும்.
நோக்கு வர்மம் எவ்வாறு செயல்படுத்தப் படுகிறது?, நோக்கு வர்மப் புள்ளிகள் எவை? நோக்கு வர்மத்தால் என்ன செய்ய முடியும்?..... இந்த விவரங்களுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
Post a Comment



16 comments:
nalla payanulla thakaval.
nandri.
தொடருங்கள் சகோதரி அருமை ,
நட்புடன் ,
கோவை சக்தி
Good Message....
அருமையான பதிவு,தற்போது எல்லோரிடத்திலும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது மகிழ்ச்சியாய் உள்ளது.
nice information
இந்த பதிவு மட்டும் அல்ல..எல்லா பதிவுகளும் வெகு அருமை..
தொடரட்டும் உங்கள் நற்பணி...
என்றும் அன்புடன்
மனோ....
இந்த பதிவு மட்டும் அல்ல..எல்லா பதிவுகளும் வெகு அருமை..
தொடரட்டும் உங்கள் நற்பணி...
என்றும் அன்புடன்
மனோ....
தோழி ,
தங்களின் இன்றைய பதிவு மிகவும் தெளிவாக இருந்தது.மேலும் ,தாங்கள் திரட்டிய செய்திகளை ,
வாசகர்களுக்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி .
yaarum thayavu seidu comments sollatheergal.please.
eppothum Thozhi maathiriyana guruvai valipadubavargal
pugalchikum igalchikum varuthapadavum maataargal santhosamum pada maataargal.Thozhi avaridam irukum ariya pokkisathai intha valaipathivil secure than seigirar.so don't comment on that this is my requested words.
ennakum thozhi kum entha vitha thodarbum illai.
தோழி..!! வர்மகலை தகவல்களின் - பகிர்வு விசயங்கள் நன்றாகவே பதிவில் அமைந்து உள்ளது..! தொடருங்கள்..!!
இப்பதிவில். வர்மங்களின்..இடமும்,முறையும்...சொல்லாமல் பதிந்திருப்பது ”சரியாகவே” எனக்கு படுகிறது.
-------------------------------
மேல்நாட்டினரின் கண்டுபிடிப்புகளை கொண்டாடுவோரிடையே..!!?
நம் விஞ்ஞானிகளின் (சித்தர்களின்) நரம்பு-சூத்திரம் (வர்மகலை) ஆய்வுக்கும், மேம்படுத்துதலுக்கும், பயனாக செய்தலுக்கும் நாம் செயல்படவேண்டியது நிறைய.!!
-------------------------
மிகவும் நுட்பமானதும்,
அறைகுறை அறிவீனர்கள்
அறிந்து கொள்ளமுடியாததுமே ‘வர்மங்கள்’.
-------------------------------
Medical Varmalogy Workshop >>www.varmam.org/workshops/workshopschedule.php
like
கெட்ட பார்வை, கண் திருஷ்டி, இதெல்லாம் ஒரு வகையில் நீங்கள் சொல்வது போல்.. நோக்கு வர்மம் தான் போலிருக்கிறது.... பாதிக்க பட்டவருக்கே இதன் வீரியம் புரியும்....
ethai nadu muluvatum kondu selvathil ethu thadukkirathu......
nall Payanulla thagaval
it is very good which will develop the culture
S.Arulmozhi, Minjur
we must also learn and maintain this arts
Post a Comment