நோக்கு வர்மம்.... சில அடிப்படைகள்!

Author: தோழி / Labels:

நோக்கு வர்மம். தீபாவளி நாளில் இருந்துதான் இந்த வார்த்தை பிரபலமாகி இருக்கிறது. அதற்கு முன்னர் வரை இப்படியான ஒன்றைப் பற்றி நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திக்க வாய்ப்பில்லை. இத்தனைக்கும் இது நம்முடைய அடையாளம், குறைந்த பட்சம் இப்படியான தகவல்கள், திரைப்பட ஊடகம் மூலமாவது தமிழர் பார்வைக்கு வந்திருப்பது மகிழ்வைத் தருகிறது. தமிழன் தன் பார்வையையும் கூட ஆயுதமாக உணர்ந்து அறிந்து பயன்படுத்தியிருக்கிறான் என்பதே பெருமிதமான உணர்வுதானே!.

இப்படித்தான் தமிழரின் அநேக பெருமைகள் மறைவாகவே இருக்கின்றன. அவை தாமாய் மறைந்ததா இல்லை மறைக்கப் பட்டதா என்று ஆராயப் புகுந்தால் தேவையில்லாத வீண் மன கசப்புகளே மிஞ்சும்.

நோக்கு வர்மம் என்பது அடிப்படையில் வர்மங்களின் வகைகளில் ஒன்று. இதைப் பற்றிய அறிமுகம் மற்றும் விளக்கத்தினை ஏற்கனவே ஒரு பதிவில் பகிர்ந்திருக்கிறேன். அதன் விவரங்களை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம். இந்த முறை வர்மம் பற்றி அகத்தியர், போகர் போன்ற பெருமக்கள் தங்களின் நூல்களில் விளக்கிக் கூறியிருக்கின்றனர்.

ஒரு சிலர் நமது நோக்கு வர்மம் மேல் நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் ஹிப்னாடிஸம், மெஸ்மரிசம் கலைகளுக்கு இணையானதா என்ற கேள்விவியினை மின்னஞ்சல்களில் முன் வைத்திருக்கின்றனர். என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் இரண்டும் வெவ்வேறான அடிப்படையைக் கொண்டவை என்றே கருதுகிறேன். இதற்கு இவற்றின் அடிப்படைகளை புரிந்து கொள்வது அவசியமாகிறது.

பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்பவரால் பிரபலமானதால் இதற்கு மெஸ்மரிசம் என்ற பெயர் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஹிப்னாடிஸம், மெஸ்மரிசம் போன்ற கலைகள் பற்றி திரைப்படங்கள், கதைகள் மிகையான ஒரு தோற்றத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன என்பதே உண்மை. நிதர்சனத்தில் இந்த ஊடகங்கள் காட்சிப் படுத்துவதைப் போல நினைத்த மாத்திரத்தில் ஒருவரை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவே முடியாது. ஏனெனில் இந்த முறையில் ஒருவரை இயக்க விரும்புபவர் அவர் அனுமதி இன்றி நிச்சயமாக அதைச் செய்திட முடியாது.

அவர் அனுமதி பெற்ற பின்னர் "அறிதுயில் நிலைக்கு" அவரை கொண்டு சென்று அதன் பின்னர் அவர் ஆழ்மனதிற்குள் ஊடுருவி அவரை கட்டுப்பாடிற்குள் கொண்டுவர வேண்டும். அதிலும் அறிதுயில் நிலைக்கு செல்பவர் யாருக்கும் எக்காரணம் கொண்டும் சொல்ல கூடாது அல்லது தெரியகூடாது என்று தீர்மானமாக இருக்கும் விஷயங்களை தெரிந்து கொள்ள முடியாது.

இங்கு அறி துயில் என்பது கேட்டல், பேசுதல், தொடுகை போன்ற உணர்வுகளுடன் கூடிய ஒருவகை உறக்க நிலை.

இந்த ஹிப்னாடிஸம், மெஸ்மரிசம் போன்ற கலைகளால் ஒருவரிடம் இருக்கும் மன அழுத்தம், கவலைகள், தீய பழக்கவழக்கங்கள், குற்ற உணர்ச்சி போன்றவற்றை இல்லாது செய்யலாம் அது தவிர அவரின் கடந்தகால வாழ்க்கை சம்பவங்கள். முற்பிறப்பு நினைவுகள் வரை அறியலாம் என்று கூறப்படுகிறது.

மாறாக நோக்கு வர்மம் என்பது நொடிப் பொழுதில், நினைத்த மாத்திரத்தில் பார்வையாலேயே எதிரியை வீழ்த்தவோ அல்லது தன் முன்னாலிருக்கும் ஒருவரை தனது முழுக் கட்டுப்பாடிற்குள் கொண்டுவரவோ முடியும். இது மிகையான வாதமாக இருக்க முடியாது. ஏனெனில் இது பற்றி அகத்தியரும், போகரும் உறுதியான கருத்துக்களையே தங்களின் நூலில் கூறியிருக்கின்றனர்.

எல்லோரும் நினைப்பதைப் போல இந்த கலை அடியோடு அழிந்து போய் விட்டதா என்றால் இல்லை என்றுதான் சொல்லுவேன். இன்றும் கூட இந்த கலையின் எச்சங்கள் நம்மிடையே இருந்து கொண்டுதானிருக்கின்றன. அது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

43 comments:

My Mobile Studios said...

வணக்கம்,

வாழ்க தமிழ்...........

kimu said...

Nandri, mellum sollunga.

S.Puvi said...

பதிவுகளுக்கு நன்றி
தமிழர்களின் கலைகளை மீண்டும் வளர்க்க வேண்டும்.

அகல்விளக்கு said...

Interesting....

geethasmbsvm6 said...

அருமையான தகவல்கள். நன்றி. தொடருங்கள்.

geethasmbsvm6 said...

தொடர

Anonymous said...

அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் தோழி...

G said...

interesting subject. i am waiting for your next post. thank you.

Suresh Kesavan said...

Thank you so much.... kathu errukiren adutha padivirkku

Jayachandran said...

அடுத்த பதிவுக்காய் தவம் கிடப்பேன் தோழி..
உங்கள் தவலுக்கு : http://www.dli.gov.in இந்த தளத்தில் தேடினால் பல சித்தர்களின் நூல்கள் புத்தக வடிவில் தரவிக்கம் செய்து கொள்ளலாம்..
[நான் இதுவரை அகத்தியரின் அமுதகலைஞானம் ஆயிரித்திநூறு, agasthiyar karpa theetcha, Theraiyar karisilai 300, மூலிகை மர்மம், agasthiyas paripoorana agarathi, மனையடி சாஸ்திரம் மற்றும் download செய்துள்ளேன்.. தாங்களும் பயன்படுத்தி கொள்ளலாமே...

GowRami said...

அடுத்த பதிவிற்காய் ... ஒரு ஜீவன்...அருமையான வரிகள்

GowRami
www.sidharalkal.blogspot.com

tamilvirumbi said...

தோழி ,
தாங்கள் வர்மத்தின் வகைகளை விளக்கமாக பகிர்ந்தமைக்கு நன்றி .

Amuthan said...

வர்மக்கலை எங்கு கற்கலாம் தோழி

Amuthan said...

வர்மக்கலை அழியவில்லை எங்கோ உயிர்புடன் உள்ளது அதை நாம் மீட்டு எடுப்போம்

அகோரி said...

அருமையான தகவல்கள்
அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் தோழி...

Anonymous said...

nice and infomative ..........


praveen kumar..

prabhu thirugnanam said...

அருமை தோழி....
மேலும் தகவல்களுக்கு காத்திருக்கிறேன்....

nadarasa sritharan said...

like

Gnanandren said...

supper thamila

Gnanandren said...

supper thamila

Anonymous said...

i want more details in varmam

Anonymous said...

i want more details in nokku varmam

sakthi said...

sithargal pattriya ungal thagaval arumai

lakshmanan said...

sir i m laksman i have noku varam olisuvadi details where learn the course tell me about that

lakshmanan said...

sir i m laksman i have noku varam olisuvadi details where learn the course tell me about that

nivash said...

Kumarasamy said...

i want datail nokku varmam sir please

nivash said...

i want nokku varmam details more please

MEGAN said...

how to learn noku varmam,i need more details for it.

SouRa said...

The best one How to learn

sakkarapani said...

super mam.

Eanaku Eathuku Muneadi eathu tharethu. eadutha kanalel kathu irupan.


Eandrum Nandregaludan

narayananbalamoorthy said...

ithenna rahaciam nattai pathukakkumna en pothuvakka koodathu.............

NATURE said...

Madurai Rajendran is teaching this varmakalai

pattivinayakam R P said...

சித்தர்கள் பாடலை எளிமையாக புரிந்துகொள்ள ஜட்ஜ் பல்ராம் அய்யா எழுதிய "சாககலை", முப்புகுரு, அமுத கலசம், போன்ற நூல்கள் படித்தால் ரசவாதம் புடம்போடுதல் ஆகியவை எளிமையாக புரியும். அடுத்து, "உதகம்" பற்றி சில குறிப்புகள் அடுத்த பதிவில்....

gop said...

How to download this page?

vignesh danger said...

Naam azhikka mudiyaaatha tamizhargal.naam irukkum varai nam kalaigal azhiyaaaathu

vignesh danger said...

Tamizhargal irukkum varai tamizhargalin kalaigal azhiyaaathu

Mohan Raj said...

Thank you so much. I do no who u are. But am proud of u. I am waiting for your next edition.

prabhu tamil said...

i have see a book varmam in 9 years old i am very interst in nooku varmam search , finally i have find and test go to dark room all door closed only in one candle more than 4 hour i see candle i have lost my mind but i have feel magnet power my eyes please try

Shankar Thiyagaraajan said...

அற்புதமான வலைப்பதிவு.
மேலும் உங்கள் பதிவிற்காக காத்திருக்கிறோம்.

நன்றி...!

Felix said...

Hi Prabhu... Please send me your mobile number to 9941906201... I want to talk to you... Thanks

Felix said...

Hi Prabhu... Please send me your mobile number to 9941906201... I want to talk to you... Thanks

RHAJAH RT said...

Where to learn nokku varman i nit address and contact no ?

vijaya said...

Fine...

Post a Comment