வர்மக் கலையானது அடிப்படையில் மருத்துவம் சார்ந்த ஒன்று என்பதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம். மனித உடலானது எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருப்பதாகவும், அவற்றின் ஊடே பத்து வகையான வாயுக்களின் ஓட்டம் இருப்பதாகவும் சித்தர் பெருமக்கள் கூறியிருக்கின்றனர்.
அவை முறையே...
பிராணன் - உயிர்க்காற்றுஅபாணன் - மலக் காற்றுவியானன் - தொழிற்காற்றுஉதானன் - ஒலிக்காற்றுசமானன் - நிரவுக்காற்றுநாகன் - விழிக்காற்றுகூர்மன் - இமைக்காற்றுகிருகரன் - தும்மற் காற்றுதேவதத்தன் - கொட்டாவிக் காற்றுதனஞ்செயன் - வீங்கல் காற்று
என்பதாக வரையறுத்திருக்கின்றன. இந்த நாடிகள் ஒன்றோடு ஒன்று இனையும் அல்லது பினையும் இடங்களை நாடிமுடிச்சுகள் என்கின்றனர். இந்த இடங்களில் இந்த வாயுக்கள் தேங்கியிருக்குமாம். இவற்றை நாடி பார்த்து அறிந்து விட முடியும் என்றும், அதனை பார்க்கும் முறைகளையும் அகத்தியர் அருளியிருக்கிறார்.
இந்த நாடி முடிச்சுகளையே வர்மப் புள்ளிகள் என்கின்றனர். இந்த புள்ளிகளை அழுத்துவதன் மூலமோ, அல்லது தட்டுவதன் மூலமோ இந்த வாயுக்களின் ஓட்டத்தினை சீரமைக்க முடியும் என்பதே வர்மக் கலையின் அடிப்படையாக புரியப் படுகிறது. இந்த வர்மங்களின் வகைகளை ஏற்கனவே முந்தைய பதிவுகளில் விளக்கியிருக்கிறேன். தேவையுள்ளோர் இந்த இணைப்பில் அந்த பதிவுகளை பார்வையிடலாம்.
இன்றைய மருத்துவத்தில் ஒருவருக்கு சிகிச்சை அளிக்க வேண்டுமெனில் அவரை மயக்க நிலைக்கு ஆழ்த்தியோ அல்லது வலி தெரியாமலிருக்கும் மருந்துகளைக் கொடுத்தோ சிகிச்சை செய்கிறோம். இதற்கென பிரத்தியேக மருந்துகள் இப்போது உள்ளன. ஆனால் வர்மக் கலையில் உடலில் ஒரு சில புள்ளிகளைத் தட்டுவதன் மூலமே ஒருவரை மயக்க நிலைக்கு ஆழ்த்தவும், குறிப்பிட்ட பாகத்தினை மரத்துப் போகச் செய்யவும் முடியும்.
சிகிச்சை முடிந்த பின்னர் மீண்டும் சில குறிப்பிட்ட இடங்களைத் தட்டுவதன் மூலம் மூர்ச்சையை தெளிய வைக்கவும், மரத்துப் போன இடத்தில் உணர்வினை மீட்டெடுக்கவும் முடியும். இந்த அடிப்படையே பின்னாளில் தற்காப்புக் கலையாகவும், உயிர் கொல்லும் போர்கலையாகவும் மாறியது.
இவைதவிர ஆயுதங்களால் வெட்டுபடுவதாலோ அல்லது வேறு வழிமுறைகளாலோ உடலில் கயமேற்பட்டு இரத்தம் அதிகமாக வெறியேறினால் அந்த இரத்தப் போக்கினை உடனடியாக நிறுத்தவும் வர்மக்கலை வழி சொல்கிறது. இதனை அகத்தியர் இவ்வாறு விளக்கியிருக்கிறார்.
காயமது திருமேனிதனில்
ஆயுதங்களின் அடவால் வெட்டுண்டு
குருதியது வெளிப்போந்தாக்கால்
குருதியதை நிறுத்தும் உபாயமது
உத்தமனே உரைப்பேன் கேளு
கரமதின் கவளிகளது பிளவுண்டு
குருதி கண்டால் மணிக்கட்டுதனில் பற்றிய
மணி பந்த சூட்சுமமதில் பெருவிரலது
கொண்டு அழுத்தி மனதினில்
நூற்று எண்பது மாத்திரை அதை
எண்ணி விரலகற்ற குருதியது
அடங்கும் அடங்கு மடாபரி தொன்று
அறிந்து கொள்ளடா மணிகட்டதுமுதல்
முண்டது காண் பகுதிதனில்
வெட்டுண்டு இருதியது வருங்கால்
பதறாதே பய்ய வேமுண்டது உள்
வர்மநிலை தனில் ஆட்காட்டியதால்
மாத்திரை அரை யூன்றியே பூரணமாய்
நூற்று இருபத்து எண்ணியே விரலகற்ற
குருதியது தானெனவே நிற்கும்பாரு
பாரெனவே சிரசதனில் குருதியது
பெருக்கம் கண்டால் சென்னிபற்றிய
செவிக்குத்தி கால மதில் ஆட்காட்டியதில்
மாத்திரையது காலளவு வழுத்தி
அகவினில் எண்ணமது இரு நூற்று
நாற்பது தாமதித்து விரலகற்றிட
சுகம்தானே சுகமாய்தானே
மற்றொன்று கேளாய் மகனே
அதரமது அருகில் தானடா சுழிவர்மம்
சுண்டு அன்னம் முகவாய் தனில்
குருதி காண் சுழியதில் விரலுன்றி
மாத்திரையது கால் வரையறுத்து
உள்மனதினில் அறுபது எண்ணமிட
குருதியது சேதமிடல் தட்டென
நிற்கு மடா ஊட்டமான ஊட்டியதனில்
வெட்டுண்டு குருதியது கொட்டுங்கால்
குறியானது குரல் முடக்கியதில்
விரல்களது ஊன்றியே பாங்காய்
பரிவுடனே மாத்திரையது அரைதான்
வழுத்தி நவமணி முறை பூஜ்யமதில்
எண்ணிட இரத்த மது சுகமாய் நிற்ககுமடா
கரமது வெட்டுண்டு இரத்தப்
போக்கால் அவதி கண்டால்
மற்றொரு உபாயமது கூறுவேன்
கேளாய் மகனே கம்கூட்டது
சேருமிட சேர்க்கையதில் விரலூன்றி
சுகமாய் அழுத்திட உதிரப்போக்கது
தீரும்பாரு திடமான கால்களதில்
ஊனது தோன்றி குருதியது நீர் போன்று
வெளியேறி னாக்கால் தயவான
நெறி வர்மமது இருபுறமும் பற்றிட
குருதியது தானென நிற்கும் பாரு
நின்றெனவே முழங்காலதின்
கீழ்தானடா ஆயுதமதால் தாக்கமது
கண்டால் நடுத்தொடை சூட்சுமத்தில்
திறனாய் அழுத்திட குருதியது
நிற்கும் பாரு பாரெனவே இரத்தப்
பெருக்கத்தை நிறுத்த இறுதியான
வர்மசூட்சுமம் இது தானடா மைந்தா
பாதமது இணையும் காலது பொருத்துதனில்
பற்றிய வர்மமதில் பெருவிரலால்
தட்டெனவே அழுத்திட குருதியது
சீரென சினராமல் நிற்குமடா
- அகத்தியர்.
சமீபத்தில் விபத்தில் காயமடைந்து குருதி கொட்டக் கொட்ட கொண்டு வரப்பட்ட இரண்டு பேரின் குருதிப் போக்கினை இந்த முறையினால் உடனடியாக என்னால் நிறுத்திட முடிந்தது. இப்படியான அவசர நேரங்களில் வர்மம் போலொரு சிறந்த மருத்துவமுறை இருக்க முடியாது என்பது எனது தாழ்மையான கருத்து.
இவை தவிர பல்வேறு நோய்க் குறியீடுகளை அறியவும், அவற்றிற்கான சிகிச்சை முறைகளையும் அகத்தியர் தனது நூலில் விவரித்திருக்கிறார். நேரமும், குருவருளும் அனுமதித்தால் எதிர் காலத்தில் அவை பற்றி விரிவாக பதிவிட முயற்சிக்கிறேன்.
இனி, எல்லோரும் மிக ஆவலும் எதிர்பார்த்திருக்கும் நோக்கு வர்மம் பாக்கி இருக்கிறது. அதென்ன நோக்கு வர்மம்?. இப்போது அதை பயன்பாட்டில் இருக்கிறதா? நோக்கு வர்மத்தால் என்ன செய்யலாம்?, என்ன செய்ய முடியும்?
இந்த கேள்விகளுக்கான பதிலுடன் அடுத்த பதிவில் சந்திக்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



20 comments:
Thanks
Waiting for the next post :)
வாழுதுகள் ! தொண்டு தொடரட்டும் ........
அருமையான பதிவு. தொடருங்கள்.
HI wer r u located....any classes or any coaching given for this arts??
nandri tholi
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
Good post
நன்றி தோழி,
வழக்கம் போல் ஒரு அதிசய தகவல்.
எப்போதும் போல் பாடலுக்கான விளக்கத்தை படத்துடன் உங்கள் நடையில் உரையாய் தந்தால் அதனால் பயனடைவோர் அதிகம்.
பாடலின் உரையுடன் படங்களை சேர்க்க முயற்சி செய்யுங்கள்.
நன்றி பல கோடி...
அன்புள்ள தோழிக்கு,
வர்மம் பற்றிய கட்டுரையை படித்தேன் ,நன்றாக உள்ளது வர்மம் பற்றிய ஒரு கட்டுரையில் அடங்கல் பற்றியும் ,அதில் எளிதில் பயன்படுத்தும் சில முறைகளை கூறினால் நன்றாக இருக்கும்
நன்றி
நந்தகுமார்
Nice
nice :)
praveen kumar
தோழி... உங்கள் தகவல்கள் எல்லாமே உண்மையானவை. நண்பர் விநாயக சுந்தர் எதை போலியான தகவல் என்கிறீர்கள்? சித்த மருத்துவம் பயின்ற நீங்களே இப்படிக் கூறுவது ஆச்சரியமாய் உள்ளது. இங்கு எப்படி வியாபார நோக்கு வருகிறது?
@Jai
சித்தர் பாடல்களுக்கு தோழி விளக்கம் அளிப்பதே பெரிய விஷயம்...சித்தர் பாடல்களுக்குப் படங்கள் கிடைப்பதென்பது மிகவும் அரிது என்றே எண்ணுகிறேன்.
நண்பர்களே!தோழி என்பது ஒரு பொய்யான ,புத்தகங்களில் இருந்து ,அறிவியல் ரீதியாகவோ ,அனுபவரீதியாகவோ இல்லாமல் ,அனுமதியின்றி பதிப்பாளர்களிடம் இருந்து திருடப் பட்டு ,ஆன்மீக அன்பர்களை திசை திருப்பி ,வியாபார நோக்கத்தில் ,குருவின் பெயரால் செயல் படும் ஒரு போலி வியாபாரக் குழு என்பது ,சித்தர் ஞாலம் என்ற பகுதியில் நிரூபிக்க பட்டுள்ளது.மனவியல் ரீதியாக மற்றவர்களை ,வியாபார நோக்கத்திற்காக ,அடிமை படுத்தும் வேலையை ,தோழி என்ற பெயரில் ,இந்தக் குழு நடத்தி வருவது ,மிகவும் கண்டிக்க தக்கது.////
யார் இந்த காமெடி பீஸு..!
@Jai
dear thozhi,
I also request,as Jai, to give explanations in your words which can be easily understood by people like me, because there is a very important message in this paadal. thank you.
onnumey puriyala
nandri
nantri
Antony
nanri thozhi
Post a Comment