வர்மக் கலை என்பது அடிப்படையில் ஒரு மருத்துவக் கலை. ஆனால் கால ஓட்டத்தில் தற்காப்பு கலையாக உருமாற்றம் பெற்று, தற்போது வர்மக்கலை ஒரு நுட்பமான போர்க் கலை என்பதாக திரைப் படத் துறையினர் மூலம் வெளிக்காட்டப் பட்டிருக்கிறது. மறைந்து போயிருந்த இந்த கலையை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து பலரின் ஆர்வத்தை இந்தக் கலையின் பக்கம் திருப்பியவர்கள் என்கிற வகையில், அவர்கள் பாராட்டப் பட வேண்டியவர்களே.
நமது உடலானது எலும்புகளாலும், தசைகளாலும், நரம்புகளாலும் பின்னப் பட்டிருக்கிறது. இதில் ஒரு உறுப்பானது மற்ற உறுப்புடன் எவ்வாறு பிணைக்கப் பட்டிருக்கிறது, அவைகள் பிணைக்கப் பட்டிருக்கும் தொழில் நுட்பம் எத்தகையது என்பதை நவீன அறிவியலில் கதிரொளி (xray) மற்றும் வருடி (scan) மூலமாக நாம் பார்க்க முடிகிறது. அதனை வைத்தே சேதமடைந்த அல்லது நோய்வாய்ப்பட்ட ஒரு உறுப்பிற்குத் தேவையான சிகிச்சைகள் தரப்படுகின்றன.
இத்தகைய அறிவியல் வளர்ச்சி இல்லாத ஒரு காலகட்டத்தில், மேலே குறிப்பிட்ட நவீன முறைகளை விடவும் நேர்த்தியான, செலவில்லாத ஒரு வைத்திய முறையாக வர்மக் கலை விளங்கியிருக்கிறது என்பது நமக்கு கிடைத்திருக்கும் நூல்களின் வாயிலாக அறிய முடிகிறது. துரதிர்ஷ்டவசமாக இந்த தகவல்கள் நமக்கு முழுமையாக கிடைக்கவில்லை. பல அரிய நூல்கள் அழிந்து போயிருக்கலாம், அல்லது அழிக்கப் பட்டிருக்கலாம் என்றே கருதத் தோன்றுகிறது.
தற்போது நமக்குக் கிடைத்திருக்கும் வர்ம நூல்கள்...
ஒடிவு முறிவு சாரிவர்ம சூத்திரம்வர்ம கண்ணாடிவர்ம காண்டம்வர்ம பீரங்கிவர்ம சூடாமணி
இந்த கலை அழிந்து போனதற்கும் இந்த கலையின் சிறப்பே கூட ஒரு காரணமாக இருந்திருக்கக் கூடும். ஏனெனில் இந்தக் கலையில் தேர்ந்த ஒருவன் சகல விதத்திலும் தன் சக மனிதர்களை விட அசாத்திய திறமைகளைக் கொண்டவனாகி விடுகிறான். அப்படிப் பட்டவனால் எதனையும் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும்.
ஒரு வேளை ஆசாபாசங்களில் சிக்கியிருக்கும் தவறான மனிதர்கள் கையில் இந்த கலை சிக்கி அவர்கள் தங்கள் சுயநலத்திற்கு பயன் படுத்த ஆரம்பித்தால் அது சமூகத்தில் ஆபத்தான விளைவுகளையும், முன்னுதாரணங்களையும் ஏற்படுத்தி விடும் என்று கருதியே, சரியான மாணவன் கிடைத்தால் மட்டுமே கற்றுத் தருகிற கலையாகிப் போனது. சரியான மாணவன் கிடைக்காவிட்டால் அந்த குருவோடு அந்த கலை அழிந்து போக வேண்டியதுதான்.
பலரும் நினைப்பதைப் போல இந்த கலையினை எளிதில் கற்றுக் கொள்ள முடியாது. இதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சித்தர்கள் வகுத்திருக்கின்றனர். போகர் ஒரு பாடலில் சீடனை தெரிந்தெடுக்கும் வகையினை இப்படிச் சொல்கிறார்.
"மறைவில் வைப்பதென்றால் மைந்தா கேளு
வகைவிபரம் கைபாகம் மறைப்பொன் றில்லை
உறவாடிச் சிலபேர்கள் நூல் தாவென்று
ஓவியம் போல் மொழிபேசி உன்னை மேய்ப்பார்
திறமான நூலவற்கு வெளியிடாதே
சீடனென்று பன்னிரண்டு வருடம் காத்தால்
அறிவான பக்தியவர்க் கிருந்த தானால்
அப்பனே நிலையறிந்து நூலை ஈயே"
- போகர்.
குறைந்தது பன்னிரெண்டு ஆண்டுகள் ஒருவரின் நடவடிக்கைகளைக் கண்காணித்து அவரது தகுதியினை சோதித்து அறிந்த பின்னரே அவருக்கு இந்த கலையினை கற்றுக் கொடுக்க வேண்டுமென கூறுகிறார். சரியான மாணவனைக் கண்டறிந்த உடனும் அவருக்கு இந்தக் கலையினை போதிக்க முடியாது. இந்தக் கலையினை ஏற்றுக் கொள்ளும் உடல் மற்றும் மனப் பக்குவத்தை பெறுவதற்கான பயிற்சிகளே முதலில் வழங்கப் படும். அவற்றில் தேறினால் மட்டுமே குருவானவர் வர்மக் கலையினை மாணவருக்கு அருளுவார். இதெல்லாம் இன்றைய அவசர உலகத்துக்கு சாத்தியமாகுமா?
ஆக, பொறுமை, நிதானம், தீர்க்கமான சிந்தனை, பிற உயிர்களின் மீது அன்பும், கருணையும் செலுத்தும் மனிதாபிமான பாங்கு போன்ற இயல்புகள் மிளிரப் பெற்றவரே இந்தக் கலையை கற்றுக் கொள்ளும் தகுதியுடையவராவார். இவர்களுக்கு மட்டுமே இந்த கலை முழுமையாக போதிக்கப் படுமாம். அவர்கள் நடவடிக்கையில் எள்ளளவு சந்தேகம் வந்தாலும் குருவானவர் முழுமையாக கற்றுத் தராமல் போகும் வாய்ப்புள்ளது.
பதிவின் நீளம் கருதி வர்மக் கலையின் மருத்துவப் பயன்பாடு மற்றும் நோக்கு வர்மம் பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



18 comments:
வாழுதுகள் ....
Prabakar Prabaakr · Nil
thozhi ippavum indha idukaiyil neengal kuripittulla noolkal kidaikinranava? apti endraal apti peruvathu endru theirvikkavum.
Thanks & Best Wishes
Nice .
i Search and i got some website.
http://www.santhan.com/index.php?option=com_content&view=article&id=371&Itemid=428
மேலும் தொடற வாழ்த்துக்கள்.
nice post (www.astrologicalscience.blogspot.com
Dear Thozhi,
Conratulation, for your good job without expecting
anything and you are doing wealth to Tamizh and Thamizh Ilakkiyam, as
I am a Tamilian myself and my younger generation will be thankful to
you. Whis you all the best and happy regards to all of your family.
Eventhoug I am a Computer Engineer, after reading all of
your Siththarkal Ragasiyam, I have chenged my bad habits and I have
been put interest in to Tamil Medicines and now a days taking only the
same.
I could not take print out of Pogar Karbam 300 book,
Please let me to know procedure to take print out or send me copy of
the book.
And for your kind information very soon I am going to
open a computer center at my native place, and in the same way of you
I will take all this Siththarkal Ragasiyam to our area people.
If anything wrong , Please forgive me,
As I dont have the knowledge of Tamizh typing I
couldnt sent you this using Tamizh.
Thanks a lot
Jeyaram.C,
Chennai.
11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...
super ana visayam soli irukenga inum intha kalai engavathu use panarangala please tell
தோழி ,
வணக்கம் .எனது கணவரின் வேலை பளு காரணமாக நான் இனிமேல் தங்களின் பதிவுகளுக்கு மறுமொழி இடுகிறேன் .மிகவும் தெளிவான விளக்கம் .மேலும் விரிவாக தங்களிடம் எதிர்பார்க்கிறேன்.மிக்க நன்றி
friend i want downlod all your post ,ple help me
Excellent thozhi.....
please intha kalaya enayavathu solli tharangala
plse tell me
Dear Thozhi, Please try to up load ravanan eluthiya tamil books.
உடல் உயரமாக வளர சித்தர்கள் மருந்து ஏதும் சொல்ல வில்லையா ? எது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் . நன்றி
வர்மம் அழியவில்லை, மதுரையில் நோக்கு வர்மம் தெரிந்த ஒருவர் இருக்கிறர் அவர் அருகிள் உள்ளவரை நோக்கு வர்மம் மூலம் எப்படி வீழ்த்துவது என்று செய்துகாட்டினார் 2கி.மீ தூரத்தில் உள்ளவரை எப்படி வீழ்த்துவதென்று ஜீ தமிழ் தொலைகாட்சியில் செய்து காட்டினார். அது மட்டுமல்ல இவர் கேரளாக்கு சென்று அங்கு நடந்த பல வர்ம கலை போட்டியில் வென்று தமிழரின் வலிமையை நிலைநிறுத்தியிருக்கிறார். குறிப்பு: நடிகர் கமல்ஹாசன் இந்தியன் படம் நடப்பதற்கு முன் படத்திற்காக இவரிடம் சென்று வர்மகலை பயிற்ச்சி பெற்றிருக்கிறார். நன்றி. கிருஷ்ணமூர்த்தி.செ
நோக்கு வர்மம் இப்பொழுது நமக்கு தேவை இல்லை நண்பரே , இன்று மருத்துவ வர்மம் பலரை வாழ வைக்கின்றது .தீர்க்க இயலாத பல வியாதிகளை தீர்க்கிறது.
medical varmalaogy is taught by ari coimbatore. u can visit ari.org
Post a Comment