வர்மம் - தோற்றமும், காலமும்!

Author: தோழி / Labels: , , ,

கடந்த ஐந்தாறு நாட்களாய் தினமும் குறைந்தது பத்திருபது மின்னஞ்சல்களாவது நோக்குவர்மம் பற்றிய விசாரிப்புகளுடன் வந்திருக்கின்றது. எல்லாம் கடந்த தீபாவளி அன்று வெளியான “ஏழாம் அறிவு” திரைப் படத்தின் விளைவுதான். வர்மம் பற்றியும், அதன் வகைகள், முறைகள், செயல்பாடுகள் பற்றி ஏற்கனவே பல பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். புதியவர்கள் இந்த இணைப்பில் சென்று அவற்றை வாசித்தறியலாம்.

இருப்பினும் தொடர்ச்சியான வேண்டுகோள்களின் காரணமாய் வர்மம் பற்றிய மேலதிக தகவல்களை இந்த தொடரில் பகிர்ந்து கொள்கிறேன். இந்த தொடரினை கடந்த வாரமே வலையேற்றி இருந்தால் பரபரப்பான வாசிப்புக்கு உள்ளாகி இருக்கும். எனினும் ஏற்கனவே கடந்த வாரத்திற்கான பதிவுகளை முன்னரே வலையேற்றி விட்டபடியால் ஒரு வாரம் தாழ்த்தி இந்த தொடரை வலையேற்றுகிறேன். ஆர்வமுள்ளவர்கள் காத்திருந்து வாசிப்பார்கள்தானே!

வர்மக் கலையினை ஆதி குருவான சிவனே தோற்றுவித்ததாக சித்தர் பெருமக்கள் தங்களின் பாடல்களில் பதிவு செய்திருக்கின்றனர். அவர் தனது இணையான சக்திக்கு இந்த கலையை உபதேசித்தாகவும், அவரிடம் இருந்து நந்தி தேவர் வழியே தனக்கு கிடைத்தாக அகத்தியர் தனது பாடல்களில் கூறியிருக்கிறார்.

இதனை அகத்தியர் தனது "ஒடிவு முறிவு சாரி" என்னும் நூலில் பின்வருமாறு சொல்கிறார்.

"பாதிமதி யணிபரமன் தேவிக்கிசைய
பணிவுடனே தேவியிடம் நந்தீசர்வாங்கி
மகிழ்வாக எந்தனக்கு சொன்னாரப்பா
வேதனை வாராமல் வர்மசூக்குமம்
விபரமுடன் உந்தனுக்கு உரைக்கக்கேளே"

- அகத்தியர்.

போகரும் தனது "போகர் வர்மசூத்திரம்" என்னும் நூலில் சிவன் அம்மைக்கு சொல்ல தாயான ஈஸ்வரி நந்திக்கு சொல்ல நந்தி தனக்கு சொன்னதாக சொல்கிறார்.

"தாரணிந்த ஈசன்று ஆயிக்குச் சொல்ல
தாயான ஈஸ்வரியும் நந்திக்குச் சொல்ல
பரிவுடனே நந்திசொன்ன மார்க்கம்
பாடினேன் வர்மசூத்திரம் பண்பாய்தானே"

- போகர்.

போகரின் சீடரான புலிப்பாணி சித்தர் தனது ”வர்ம காண்டம்” என்னும் நூலில் இது பற்றி பின்வருமாறு சொல்கிறார்.

"பதாரம்தனைப் பணிந்து வர்மகாண்டம்
பாடினேன் நாடிநரம்பு ஆனவாறும்
காதாரம் கொண்டுணர்ந்து என்னைஆண்ட
கடாட்சமது போகருட கருணை யாலே
வளமாகப் புலிப்பாணி பாடினேனே"

- புலிப்பாணி.

இந்த தகவல்களின் அடிப்படையில் ஆதிசிவன் இதனை உருவாக்கியிருந்தாலும், நந்தி தேவரின் வழியேதான் அவரது சீடர்கள் இந்த கலையினை கற்றுத் தேர்ந்திருப்பது தெளிவாகிறது. நந்தி தேவரின் காலம் இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

இந்த வர்மக் கலை பற்றி பல்வேறு விதமான செவிவழிக் கதைகள் இருக்கின்றன. அவற்றின் நம்பகத் தன்மை கேள்விக்குரியது. எனினும் புராண இதிகாசங்களில் இந்த வர்மக் கலை பற்றி நேரடியான/மறைவான தகவல்கள் குறிப்பிடப் பட்டிருக்கிறது. மகாபாரதத்தில் பீமசேனன் துரியோதனின் தொடையில் கதையால் அடித்துக் கொன்றதை ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.

முன்னாளில் வர்மக் கலையானது தமிழர்களின் வாழ்வியல் கலையாகவும், குருமுகமாய் எவரும் பயிலக் கூடியதாக இருந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் தமிழர்களின் மீது அன்னியர்களின் ஆதிக்கம் உருவான போது இந்த கலை மறைவாகவும், இரகசியமாகவும் வைக்கப் பட்டு, கால ஓட்டத்தில் அழிந்தே போய்விட்டது என்று சொன்னால் மிகையில்லை.

இன்று இந்தக் கலையை நமக்குச் சொல்லக் கூடிய நூல்கள் மிகவும் குறைவாகவே கிடைத்திருக்கின்றன. அவை பற்றிய தகவல்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

14 comments:

My Mobile Studios said...

வணக்கம்
வாய்பு கிடைத்தால் போதி தர்மர் பற்றி எழுதவும்.

V.Radhakrishnan said...

பல விசயங்களை பொக்கிஷங்கள் போல் இங்கே பாதுகாத்து வருவதற்கு நன்றி.

Anand said...

உண்மையிலேயே நீங்கள் பெண்தானா? இல்லை புனைப்பெயரில் எழுதுகிறீர்களா? ஏன் கேட்டேன் என்றால் எப்படி ஆன்மீகத்தில் இவ்வளவு ஆர்வம்? நன்றி! வாழ்க.... வாழ்க.... வாழ்க...வளமுடன்!

Loganathan Gobinath said...

அடுத்தபதிவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் தோழி.

Jayachandran said...

எங்கே தோழி நோக்கு வர்மம் பற்றி ஒன்றுமே கூறவில்லையே???????????

kimu said...

Thanks :)

மச்சவல்லவன் said...

நாணும் அறிய ஆவலுடன் இருந்தேன்,அடுத்த பதிவுக்காக ஆர்வமாக உள்ளேன்.
மிக்க நன்றி.

senthil said...

Dear sister all are available if you can Rtd.palyamkotai sidha collage pro.Dr.mariya Josep. IN his home his great grand fathers lot of collection is in palm tree leave script.IN OUR kanyakumari district nadar community peoples are still knows about varmam.please contact them

piravipayan said...

அன்புள்ள தோழி

நம் தமிழர்கள் ஆறாம் அறிவை ஒழுங்கா உபயோகபடுத்தினாலே போடும்
ஏழாம் அறிவு தேவை இல்லை

வர்மம் பற்றி இப்போதாவது இவர்களுக்கு அக்கறை வந்ததே
தூள் கிளப்புங்கள்

நட்புடன் ஜமால் said...

good :)

got more interested to know more on this & expecting from you

prabhakaran said...

hai tholai. inamum intha kalaigal engavathu karpeka padukeratha. matrum ungal in intha muyarchi vetriadaia valthukal

p.dharmarajan said...

Hai Tholi, kadantha oru varamaha sitharkalai pattri padekenren meega ariya thahavalgal therinthu konden .

thank you,

dharamarajan.p
pdharmano1@gmail.com

saravanan said...

தோழி வணக்கம் எனக்கு இரு ஆண் குழந்தைகள் அதில் ஒரு குழந்தையை வயது 4. வர்மம் களரி போன்ற பண்டைய கலைகளை பய்ற்றுவிக்க விரும்புகிறோன் அதற்க்கு நான் எங்கு தொடர்பு கொள்ளவேண்டும்.
சரவணன் 9655559106

SRI SIVAKUMAR said...

வர்மக்கலை மருத்துவம்,நோக்குவர்மம்அடிப்படை பயிற்சி.சென்னை SEP
21,22 முன்பதிவு அவசியம்.CT:9551340160

Post a Comment