புடம் - துருத்தி!

Author: தோழி / Labels: ,

புடம் என்கிற இயல் இரண்டு கூறுகளை உள்ளடக்கியது என்று பார்த்தோம். அவை அடுப்பு அல்லது உலை மற்றது வெப்பம். இது வரை வெவ்வேறு வகையான வெப்பத்தினை பற்றியும் அவற்றை எவ்வாறு உருவாக்கினர் என்றும் பார்த்தோம்.

இன்றைய பதிவில் அடுப்பு அல்லது உலை பற்றி பார்ப்போம். இந்த அடுப்பு நெருப்பை எரியச் செய்யும் கலனாகும். இந்த அடுப்பின் அமைப்பு என்பது ஒவ்வொரு வகையான புடத்திற்கும் ஏற்ப மாறுபடும். இந்த அடுப்பில் நெருப்பினை எரியச் செய்ய காற்று அவசியமாகும். இப்படி காற்றை செலுத்த தேவையான ஒரு உபரகரணத்தை பற்றி அகத்தியர் தனது "அகத்தியர் வாத சௌமியம்" என்னும் நூலில் விளக்கியிருக்கிறார்.

"பாரப்பா ஊத்துமுறை வகையைக்கேளு
தானப்பா கிண்ணம் செய்யதுருத்தியொன்று
பக்குவமாய் உருக்குமுறை துருத்திரெண்டு
சேரப்பா சத்துவகை துருத்திநாலு
செயமான கைமுறையாய் அறிந்துகொண்டு"

உலைகளில் காற்றைச் செலுத்தும் இந்த கருவியினை அகத்தியர் துருத்தி என்று அழைக்கிறார். மூன்று வகையான துருத்திகளைப் பற்றி அகத்தியர் கூறியிருக்கிறார்.

ஒரு துருத்தி

இந்த வகையான துருத்தி முழு ஆடு ஒன்றின் தோலால் செய்யப்பட்டிருக்கும். இதற்கு ஒரே ஒரு துவாரம் மட்டும் இருக்கும். இதை இயக்குவதன் மூலம் அதன் துவாரம் வழியாக காற்று கரி அடுப்புக்கு செலுத்தப்படும். இந்த வகை துருத்திகளால் கிண்ணங்கள் செய்வதற்காக வேண்டியே கரி அடுப்பில் வெப்பம் உண்டாக்கப்படும் என்கிறார் அகத்தியர்.

இரண்டுதுருத்தி

இது கன்றின் தோலால் செய்யப்படிருக்கும். இதற்கு இரண்டு துவாரங்கள் இருக்கும். இதை இயக்குவதன் மூலம் அதன் துவாரங்கள் வழியாக காற்று கரி அடுப்புக்கு செலுத்தப்படும். இந்த வகை துருத்திகளால் தேவையானவற்றை உருக்குவதற்காக வேண்டியே கரி அடுப்பில் வெப்பம் உண்டாக்கப்படும் என்கிறார் அகத்தியர்.

நான்கு துருத்தி

இந்தவகை துருத்திகளில் நான்கு துவாரங்கள் இருக்கும். இதை இயக்குவதன் மூலம் அதன் துவாரங்கள் வழியாக காற்று கரி அடுப்புக்கு செலுத்தப்படும். இந்த வகை துருத்திகளால் தேவையானவற்றை ஊதிச் சத்து எடுக்க வேண்டியே கரி அடுப்பில் வெப்பம் உண்டாக்கப்படும் என்கிறார் அகத்தியர்.

இப்படி தோலால் செய்யப்பட்ட துருத்திகள் பத்திருபது ஆண்டுகளுக்கு முன்னால் வரை புழக்கத்தில் இருந்தன. தற்போது இவை முற்றிலுமாக பயன்பாடில் இல்லை.

குறிப்பு : கடந்த ஒரு வாரத்தில் இதுவரை 52 மின்னஞ்சல்கள் வர்மம் பற்றியும், நோக்கு வர்மம் பற்றியும் விசாரித்து வந்திருக்கிறது. நண்பர்களின் இந்த வேண்டுகோளுக்கிணங்க அடுத்த பதிவில் இருந்து வர்மம் பற்றிய சித்தர் பெருமக்களின் தகவல்களை தொடராக பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.


Post a Comment

5 comments:

yeshraja said...

ellam 7am arivu padam parthathin thakkamthan

My Mobile Studios said...

வணக்கம்
தமிழில் 7 ஆம் அறிவு படம் வெளி வந்து உள்ளது அவசியம் பார்க்க வேண்டிய படம். அதில் வர்மம் பற்றிய தகவல் இடம் பிடித்து உள்ளது. தமிழர்களின் அறிவயல் உண்மை வெளி படுத்தி உள்ளது.
நன்றி.

BALES PRO said...

நன்றி!

kimu said...

Thanks :)

SUBRAMANI said...

அநாதி சித்தர் என்ற சித்தரே சித்தர்களில் முதன்மையானவர் என்று விகடன் பதிப்பகம் வெளியிட்டுள்ள சித்தர்கள் வாழ்க்கை என்ற புத்தகத்தில் படித்திருந்தேன்.

அவரை பற்றி நீங்கள் எழுதியதாக தெரியவில்லையே?

பதிவின் கடைசி தருணத்தில் எழுதுவதாக முடிவு செய்துள்ளீர்களா?

Post a Comment