புடம் - வகைகள்.

Author: தோழி / Labels: ,

சித்த மருந்தியலில் மருந்துகளை ஒன்றோடு ஒன்று பிணைக்கவும், தேவையான மருந்தினை மட்டும் தனியே பிரித்து எடுக்கவும் புடம் போடுதல் செய்யப் படுகிறது. சில வகையான மருந்துகளுக்கு நீடித்த கூடுதல் வெப்பமும், தீயானது நேரடியாக மூலகங்களின் மீது படாமல் இருக்க வேண்டும்.அம்மாதிரியான செயல் முறைகளுக்கு பசுவின் சாணத்தைக் கொண்டு தயாரிக்கப் பட்ட வறட்டிகளைக் கொண்டு புடம் போட்டனர்.

இந்த வறட்டிகளின் எண்ணிக்கையை வைத்து இந்த புடங்களுக்கு பெயரிடப் பட்டுள்ளது. அகத்தியர் தனது "அகத்தியர் வாத சௌமியம்" என்னும் நூலில் இது பற்றி தெளிவாக விளக்கியிருக்கிறார்.

ஆமப்பா புடந்தனக்கு நிதானங்கேளு
அப்பனே காடையது எருவென்றாகும்
நாமப்பா கவதாரி எருமூன்றாப்பா
நன்மையுள்ள குக்குடந்தான் எருபத்தாகும்
நாமப்பா வராகபுடம் எருஐம்பதாகும்
தயவான கனபுடந்தான் எருநூறாகும்
ஓமப்பா கெஜபுடந்தான் ஆயிரமுமாகும்
உத்தமனே கைமுறையாய்ப் புடமாய்ப்பாரே

- அகத்தியர்.

ஒரு வறட்டி கொண்டு போடப்படும் புடத்தினை “காடைப் புடம்” என்றும், மூன்று வறட்டிகளை பயன்படுத்தினால் அதை ”கௌதாரிப்புடம்” என்றும், பத்து வறட்டிகளை கொண்டு போடப் படும் புடத்தினை “குக்கூபுடம்” (சேவற்புடம்) என்றும், ஐம்பது வறட்டிகளைக் கொண்டு போடப் படும் புடத்தை “வராக புடம்” (பன்றிப்புடம்) என்றும், நூறு வறட்டிகளைக் கொண்டு போடும் புடத்தினை “கனபுடம்” என்றும், ஆயிரம் வறட்டிகளைக் கொண்டு போடும் புடத்தினை “கஜபுடம்” (யானைப்புடம்) என்றும் அகத்தியர் வரையறுத்திருக்கிறார்.

இவை தவிர தொன்னூறு வறட்டிகளைக் கொண்டு போடப்படும் புடத்திற்கு “மணல் மறைவுப்புடம்” என்று பெயர்.

வறட்டியை பயன்படுத்தாமல் ஆட்டின் எருவைக் கொண்டு போடும் ஒரு புட முறையும் உண்டு. அதை “பூமிப்புடம்” என அழைப்பர். நான்கு விரற்கடை அளவுக்கு ஆட்டின் எருவை இடுவதன் மூலம் இந்த முறையில் புடம் போடுவதுண்டு.

நெருப்பினை நேரடியாக பயன்படுத்தாமல், மறைமுகமாய் வெப்பம் உருவாக்கும் சில புட வகைகளும் உண்டு.
உமிப்புடம் - இது இரண்டு வகைப்படும். ஒன்று புடமிடவேண்டிய பொருட்களை உமியில் புதைது வைத்து எடுத்தல், மற்றையது உமியால் எரித்து புடமிடுதல்.

தானியப்புடம் - தேவையை பொறுத்து நெல்லுக்குள் அல்லது வேறு குறிப்பிட்ட தானியத்திற்குள் புதைத்து வைத்து எடுத்தல்.

சூரியப்புடம் - சூரிய ஒளியில் காயவைத்து எடுத்தல்.

சந்திரப்புடம் - நிலவின் ஒளியில் வைத்து எடுத்தல்.

பருவபுடம் - பௌர்ணமி அன்று திறந்த வெளியில் மருந்துகளை வைத்து எடுத்தல்.

அமாவாசைப் புடம் - அமாவாசை அன்று திறந்த வெளியில் மருந்துகளை வைத்து எடுத்தல்.

பனிப்புடம் - பனி பொழியும் வேளையில் புடமிட வேண்டிய பொருட்களை பனியில் வைத்து எடுத்தல்.

பட்டைப்புடம் - குறிப்பிட்ட மரத்தை துளைத்து அதனுள் புடமிடவேண்டிய பொருளை வைத்து அதே மரத்தின் தூள்களால் மூடி குறிப்பிட்ட நேரம் அல்லது சில நாட்கள் கழித்து எடுத்தல்.

இவை தவிர சூட்சுமமான புட வகைகளும் உண்டு. அவை “மனிதப்புடம்”, “குருப்புடம்” எனப்படும். அவற்றை குருமுகமாய் அறிவதே சிறப்பு.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

9 comments:

kimu said...

thank u for valuable information

curesure Mohamad said...

நீண்ட நாட்களுக்கு பின் உங்கள் தளம் வந்துள்ளேன் ..மிக்க அருமை தொடருங்கள் தோழி ..
புடங்கள் ஆய்ர்வேடத்தில் குக்குட புடம் ,கஜ புடம்,மகா புடம் - என்று பல்வேறு வகைகள் உள்ளது ..

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் said...

தியானம் செய்யும் முறை !
தியானம் செய்யும் முறை !

தியானம் செய்ய வேண்டுமானால் கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்யக் கூடாது.கண்ணை திறந்து கொண்டுதான் செய்ய வேண்டும் நம் வீட்டில் தனியாக ஒரு அரை இருக்க வேண்டும் அந்த அறையில் நான்கு சதுரம் உள்ள கண்ணாடிக் கூண்டு விளக்கு வைக்க வேண்டும் அதன் மத்தியில் ஒரு அகல விளக்கோ அல்லது உலோகத்தால் செய்த விளக்கோ வைக்க வேண்டும் அதில் நல்ல எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி சிறிய திரிப போட்டு தீபம் ஏற்ற வேண்டும் ,அதற்கு முன்னாடி நாம் அமர்ந்து கொள்ள வேண்டும் .அந்த விளக்கின் தீப ஒளியை இடை விடாது கண்கள் வழியாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் .

நம்மால் எவ்வளவு நேரம் பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் இதற்கு நேரம் என்பது கிடையாது நேரம் கிடைக்கும் போதெல்லாம் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம் .இதனால் என்ன பயன் என்பதை பார்ப்போம் .

நம் உடம்பின் ஐம புலன்களில் முக்கியமானது முதன்மையானது கண்களாகும் கண்களின் வழியாகத்தான் நாம் அனைத்தும் பார்க்கிறோம் பார்க்கும் அனைத்தும் மனதில் பதிவாகிறது .கண்கள் எங்கு செல்கிறதோ அங்கு மனமும் செல்லும் கண்களில் பார்க்காதது மனதில் பதிவாகாது மனதை அடக்க வேண்டுமானால் கண்கள் வழியாகத்தான் அடக்க முடியும் .

கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்தால் இல்லாத கற்பனைகளும் தேவை இல்லாத வெளி சிந்தனைகளும் தோன்றி மனம் அலைபாயுமே தவிர மனம் அடங்காது ,மனம் என்பது ஒரு பேய் குரங்கு அதை அடக்க முடியாது ஒளியின் வழியாகத்தான் அடக்க முடியும் அதை கண்கலால்தான் அடக்க முடியும் வேறு வழிகள் எல்லாம் பொய்யான மாயா ஜாலங்களாகும்.

ஆதலால் கண்கள் உருவம் அற்ற ஒளியை தியானம் செய்ய வேண்டும் .கண்களும் ஒளி-- ,தீபமும் ஒளி --இரண்டும் ஒளியாக இருப்பதால் ஜீவனும் ஒளி --ஆன்மாவும் ஒளியாகும்--,நாம் பிறந்ததில் இருந்து கண்கள் வழியாகப் பார்த்த அனைத்தும் ஆன்மாவில் பதிவாகி உள்ளது .அந்த பதிவுதான் நினைவு அலைகளாக நமக்கு துன்பமும் துயமும் அச்சமும் தந்து கொண்டு வருகிறது .அந்த பதிவுகளை நீக்கினால் மனம் அமைதி பெரும்

அந்த பதிவுகளை அகற்ற தீப ஒளி தியானம்தான் முக்கியமானதாகும் அப்படியே தினமும் தீபத்தை பார்த்துக் கொண்டு வந்தால் அந்த ஒளியும் உருவம் மறைந்து பின் புருவ மத்தியில் உள்ள ஆன்ம ஒளியைக காணும் செயலுக்குஅதே கண்கள் வந்து விடும் பின் .உருவம் கரைந்து அருவமாகும் .துவைதமாக இருந்தால் அத்துவைதம் தானே ஆகும் .எப்படி எனில் பார்க்கும் தான் கெடுவது அத்வைதம் ,பார்க்கப் படும் பொருளும் கெடுவது அதீதம் இதுதான் சத்தியமான உண்மையாகும் .

மலம ஒழிப்பு என்பார்கள் அந்த மலத்தை ஒழிப்பதற்கு தீட்சை கொடுப்பதாக சொல்லுவார்கள் மலம என்பது யாதெனில் ஆணவம் மாயை கன்மம் மாமாயை பெருமாயை என்னும் ஐந்து மலங்களாகும்,அதற்கு மலம ஒழிப்பு என்பார்கள் தீட்சை என்பது யாதெனில் தீ என்பது மலம ட்சை என்பது ஒழிவு அதற்கு மலம ஒழிப்பு என்று பெயராகும் பலபேர் விபரம் தெரியாமல் நிறைய பணம் கட்டி தேவை இல்லாமல் தியானம் யோகம தவம போன்ற தவறான வழிகளில் சென்று செய்து வருகிறார்கள் அப்படி செய்வது அறியாமையாகும் அறியாத மக்களை ஏமாற்ற நிறைய அமைப்புகள் உருவாகி விட்டது

அறியாமை என்னும் மலத்தை வேறு யாராலும் ஒழிக்க முடியாது அவரவர்கள் ஆன்மாவில் பதிவானதை அவரவர்களே தான் ஒழிக்க முடியும் ,ஒழிக்க வேண்டும்

கண்ணில கலந்தான் கருத்தில் கலந்தான் என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான் .
கையற விலாது நடுக கண் புருவ பூட்டு
கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு .
வள்ளலார் பாட்டு ,

மேலே சொல்லியபடி செய்து வாருங்கள் உங்களுக்கே அனுபவம் தானே கிடைக்கும் ஏதாவது சந்தேகம் இருந்தால் எங்களிடம் தொடர்பு கொள்ளுங்கள் இலவசமாக சொல்லித் தரப்படும் .இதுவே சன்மார்க்க தியானமாகும் .

போன் நெம்பர் ;-0424 2401402 -செல் --9865939896 .

உங்கள் அன்பு கொண்ட ஆன்மநேயன் --கதிர்வேல

pattinathar said...

u r great

pattinathar said...

vanakam thozhi

ungal thogupu migaum arumai

siththarkal vanagathakkavarkal.

avarkalathu seyalkal perammikathakkavai

ungalathu thogupu potrathakkavai

nanri

pattinathar said...

vanakam thozhi

siththarkal vanangathakkavrkal

avarathu seyalkal peramikathakkathu

ungalatyu pathiu potrathakkathu

nanri thozhi

Jaicomputers said...

அரிய உங்கல் தகவல்களுக்கு நன்றி தொடர்ந்து வெளியிடுங்கள்

suresh said...

திரு கதிர்வேல்... அவர்கள் கூறும் தியான நிலைகளில் ஆரம்ப படிநிலைகளில் ஒன்று... இக்கால வாழ்கை முறைக்கு தகுந்த பயிற்சி இதுவே... ஆனால் விளக்கிற்கு ஒரு சிறப்பான எண்ணை உள்ளது... இதனை தாரணை என்று கூறபடுகிறது, தாரணை என்பது மனதை ஒருமுகப்படுத்துதல் ஆகும். ஓரு வஸ்துவில் சிந்தனையை நிறுத்தி அதிலேயே லயித்து இருப்பதாகும்...

இலாஞ்சனை

அதிகாலையில் எழுந்து சகாசனத்தில் (சவாசனம்?) கண்களை திறந்து அசைவற்ற பார்வையால் சூட்சுமமாகிய ஒரு இலட்சியத்தை கண்ணீர் வரும் வரையில் பார்க்க வேண்டும். பிறகு கண்களை மூடி கொஞ்ச நேரம் சென்றபின் திடீரென கண்களை திறந்து எதிரில் நிச்சலனமாகிய ஆகாயத்தை ஏகாக்ர சித்தனாகச் சூரிய பிம்பம் தோன்றும் வரையில் பார்க்க வேண்டும். இதனால் நிர்மலமான திருஷ்டியுண்டாகும். இவ்விலாஞ்சனை நாசி நுனியில் சித்திக்கின் நோயற்ற வாழ்வும், புருவ மத்தியில் சித்தித்தால் கேசரி முத்திரையின் திறமும் அடைகின்றன. நேத்ர ரோகங்கள் பனிபோல் விலகும். இப்படிச் செய்வதால் சீவகாந்த சக்தி அதிகரிக்கும். இதன் காரணத்தினாலேயே மகான்கள் 8 நாள் 10 நாள் வரையிலும் பிரக்ஞையின்றி இருக்கிறார்கள். இலாஞ்சனை சந்திர யோகம்

பௌர்ணமி நடுசாமத்தில் ஒருவித அணையில் மல்லாந்து சாய்ந்து கொண்டு, பூரண சந்திரனை 2 நாழிகை நேரம் ஒரே பார்வையாக இடகலையில் ஓங்-வங் என்று மானசீகமாகத் தியானித்து, 16 மாதம் பார்த்து வந்தால் கண் குளிர்ச்சியாகும் நிழல் சாயாது. வாசி கட்டும். நரை திரை ஏற்படாது.


இலாஞ்சனை சூரிய யோகம்

பங்குனி, சித்திரை மாதங்களில் அதிகாலையில் எழுந்து அங்கசுத்தி செய்து, சூரியன் உதயமாகி வருவதை தினம் 2 நாழிகை [48 நிமிட] நேரம் ஒரே பார்வையாகப் பிங்கலையில் ஓங்-சிங் என மானசீகமாக தியானித்து 20 நாட்கள் பார்த்து வந்தால் சூரியன் பால் போல தோன்றும். ஒரு மண்டலம் பார்த்து வந்தால், பிறகு எந்த வேளையிலும் சூரியனையாவது, வேறெவ்வித வெளிச்சங்களையாவது பார்த்து வந்தால் கண் கூசக் கூடாது. கண் கடுப்பு நிவர்த்தி ஆகும். மார்பில் சூரியன் போல் வட்டமாகத் தோன்றி முதுகுபுறத்தில் சோதி பிரகாசிக்கும்.

நன்றி :கட்டுரையாளர்: திரு. பரந்தாமன்,விருது நகர், தமிழகம்
https://groups.google.com/forum/#!msg/theyva-thamizh/9huoFCBm-FE/rSX2eXGWotsJ

Unknown said...

Thozhi ungalai pol irruppavargal lal than ithu pondra kalaigal indrum valkirathuuu

Manm uvarndha nandri
Valarga ungal panigal

Post a comment