புடம் - ஓர் அறிமுகம்.

Author: தோழி / Labels:

சித்தரியலில் மருந்து தயாரிப்பு முறையில் இரசவாதம் முக்கிய பங்கு வகிக்கிறது. பொதுவில் சித்த மருந்துகள் இரண்டு வகையைச் சேர்ந்தவை. அவை முறையே உள்மருந்து, வெளி மருந்து என அறியப் படுகின்றன. இது தொடர்பாக முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். அந்த பதிவுகளை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.

அணு விஞ்ஞானம் என்பது தற்போதைய காலகட்டத்தின் மேம்பட்ட அறிவியல் துறை. இப்போது அதனை ஒட்டியே நானோ தொழில் நுட்பம் தற்போது வளர்ந்து வருகிறது. இவை எல்லாம் நவீன அறிவியல் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், நமது முன்னோர்கள் இந்த தொழில் நுட்பங்களை தமது மருத்துவத்தில் கைக் கொண்டிருந்தனர் என்பது ஆச்சர்யமான செய்தி.

நமது உடல் துவங்கி நம்மைச் சுற்றி இருக்கும் அனைத்தும் நுண்ணிய அணுக்களால் கட்டப் பட்ட அமைப்புகளே. இந்த அணுக்கள் சிதையுமே தவிர அழியாது. அவை வேறு அணுக்களோடு சேர்ந்து புதிய அமைப்பு அல்லது புதிய பண்புள்ளவையாக மாறுபடும். இந்த பிரபஞ்சம் துவங்கியதில் இருந்து அணுக்கள் மட்டும் அப்படியே இருக்கின்றன. அவற்றின் அமைப்புகளே மாறுபட்டு வந்திருக்கின்றன.

சித்தரியலில் மருந்து தயாரிப்பு இந்த அணு அறிவியலின் அடிப்படையில்தான் நிகழ்கிறது. வெவ்வேறு இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் கொண்ட அணுக்களை ஒன்றோடு ஒன்று இணைப்பது/பிரிப்பதன் மூலம் புதிய, மேம்படுத்தப்பட்ட இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகளைக் கொண்ட அணுக் கட்டமைப்பை உருவாக்குவதெ சித்த மருந்தியலின் ஆதார அடிப்படையாகும்.

எல்லாம் சரிதான்!, புடத்திற்கும், இந்த அணு அறிவியலுக்கும் என்ன தொடர்பு என்கிற கேள்வி இந்நேரத்திற்கு உங்களுக்கு வந்திருக்கலாம். நாம் இதுவரை பார்த்த அணுக்களின் சேர்க்கை மற்றும் பிரித்தலை பக்குவப் படுத்துதல் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. இந்த பக்குவமாக்கும் செயலையே புடம் போடுதல் என்கின்றோம்.

புடம் போடுதல் என்பது சித்த மருந்தியலில் தனித்துவமான அறிவியல் பிரிவு. இனி வரும் நாட்களில் இந்த அறிவியலை எளிய தமிழில் பகிர்வதே இந்த தொடரின் நோக்கம்.

புடம் நாளையும் தொடரும்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

15 comments:

Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
சதுரகிரி சென்று வந்தோம். இணைப்பு கொடுத்திருக்கிறேன்.
படித்து விட்டு உங்கள் கருத்து எழுதுங்கள். வணக்கம்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post_30.html

kimu said...

Thanks.

V.N.Thangamani said...

good post. thanks. vaalga valamudan.

சந்திரகௌரி said...

Thanks. Please continue

சந்திரகௌரி said...

உங்கள் பதிவுகளின் மூலம் பலரைப் புடம் போட்டுத்தான் வருகின்றீர்கள். வாழ்த்துகள்

சந்திரகௌரி said...

அணுவை எரிக்கும் போது அழிக்க முடியாதா?

kanagaraj said...

புடம் போடுதல் என்றால் என்ன? செய்முறை விளக்கம் தேவை

babu said...

nano technology of siddha great thozhi continue

yogi said...

Beautiful thozhi

varathan said...

பயனுள்ள பல தகவல்கள்
தங்கள் பணி மேலும் தொடரட்டும்.
வாழ்க வளமுடன்...

varathan said...

பயனுள்ள பல தகவல்கள்
தங்கள் பணி மேலும் தொடரட்டும்.
வாழ்க வளமுடன்...

varathan said...

பயனுள்ள பல தகவல்கள்
தங்கள் பணி மேலும் தொடரட்டும்.
வாழ்க வளமுடன்...

varathan said...

பயனுள்ள பல தகவல்கள்
தங்கள் பணி மேலும் தொடரட்டும்.
வாழ்க வளமுடன்...

Sin Sha said...

தங்களுக்கு என் முதல் வணக்கம்,
நான் தங்களிடம் சில தகவலை பெற விரும்புகிறேன், எனக்கு தாங்கள் நல்வழியை அருளவேண்டும். கேட்பது தவறாக இருப்பின் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்.
எனது ஆசை என்ன வென்றால் மனிதர்களுக்கு நல்ல முறையில் சித்த மருத்துவத்தை அளித்து அவர்களின் உடல் பிணியை ( வியாதியை ) அகற்றி நல்ல உடல் நலத்தோடு வாழ வைக்க வேண்டும் என்பதே எனது முயற்சியாக உள்ளது.
நான் எந்த ஒரு மருத்துவ படிப்பும் பயின்றது இல்லை. உலக அறிவும், மருத்துவ முறைகளும், ஏதும் அவ்வளவாக தெரியாது, இருப்பினும் எனக்குள் இந்த ஆசை எழுந்துள்ளது எனவே தாங்கள் தான் எனக்கு வழிக்காட்ட வேண்டும்.
என்னை முழுமையும் முழு முதற்கடவுளுக்கும், சித்தர்களுக்கும், சித்த மருத்துவத்திற்கும் அர்ப்பணிக்கிறேன்.
நான் சித்தர்களின் ஆசி பெறுவதற்கும், மூலிகைகளை தேடி எங்கு செல்ல வேண்டும், மூலிகைகளை பெற என்ன செய்ய வேண்டும், இதில் ஆபத்துகள் இருக்கின்றனவா என்பதை எனக்கு தெளிவாக வழிகாட்ட வேண்டுமென்று தங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன்.
நான் இங்கு சஞ்சீவி மூலிகையை பற்றி மட்டும் கேட்பதினால் தாங்கள் என்னை தவறாக எண்ணவேண்டாம், உலக நியதிகளுக்கு அப்பாற்பட்டது என்பது தெரியும், இருப்பினும் அதை பற்றி அறிந்துகொள்ளவே கேட்கிறேன்.
தாங்கள் சஞ்சீவி மூலிகையை நேரில் பார்த்ததுண்டா ?
அதன் மகத்துவத்தை பரிசோதித்து இருக்கிறீர்களா ?
சஞ்சீவி மூலிகையில் பல வகைகள் உள்ளனவாம், அதில் ஒன்று மரணத்தையே வெல்லும் என்கிற தகவலை ஒரு இதழில் படித்தேன், அது சதுரகிரி மலையில் இருப்பதாகவும் அறிந்தேன். அது எந்த அளவிற்கு உண்மை என்று புரியவில்லை இது உண்மைதானா ?
இதுவரையில் யாரவது தேடி சென்று மூலிகையோடு வந்ததுண்டா ?
இதில் ஆபத்துகள் இருக்குமா ?
நீர்முள்ளி விதையை உண்டால் ஒரு வாரம் பசிக்காது என்பது உண்மையா ?
யாரேனும் இதை உண்டு அதன் மகத்துவத்தை சொன்னதுண்டா ?
நான் சித்தர்களின் ஆசி பெறுவதற்கும், மூலிகைகளை தேடியும் சதுரகிரி மலைக்கு செல்ல விரும்புகிறேன் இது சரியானதா ?
இன்னும் பல தகவல்களை பெற விரும்புகிறேன், ஆகையால் இதற்கான பதிலை தாங்கள் உடனடியாக அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.
உங்களுடைய பதிலை நான் எப்பொழுது காணமுடியும், எதில் சென்று பார்க்க வேண்டும் என்பதையும் என் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.
மின்னஞ்சல் – sinsha_1986@yahoo.co.in snsha20@gmail.com
உங்களிடம் இருந்து நல்ல பதிலுக்காக காத்திருக்கிறேன்.

நன்றி
தீ. சிந்துபாணி
varmasri said...

பதினெண் சித்தர்கள் அறக்கட்டளை உங்களுக்கு உதவும்தொடர்புக்கு 9994321261,9443636347

Post a Comment