பேன் தொல்லை!...ஓர் சுலப தீர்வு!!

Author: தோழி / Labels: ,

பேன்களைப் பற்றிய பெரிதான அறிமுகம் யாருக்கும் தேவையிருக்காது என நினைக்கிறேன். அநேகமாய் இந்த பேன்களின் தொல்லையை நம்மில் பலரும் அனுபவித்திருக்கக் கூடும். பேன்கள் ஒருவகையான புற ஒட்டுண்ணி. நமது ரத்தத்தை உறிஞ்சி உணவாக கொள்ளும் இந்த பேன்கள், மிக வேகமாய் இனப் பெருக்கம் செய்யக் கூடியது. இவற்றை அழிக்க பல்வேறு முறைகளை கையாண்டாலும் கூட முழுவதுமாய் அழிப்பது கொஞ்சம் சிரமமான ஒன்று.

இத்தகைய பேன் தொல்லையை எளிதில் முடிவுக்கு கொண்டு வரும் ஒரு முறையை புலிப்பாணி சித்தர் தனது “புலிப்பாணி வைத்திய சாரம்” என்ற நூலில் விவரித்திருக்கிறார்.

எண்ணவே தலையிலுள்ள பேன்கள் சாக
எடுத்துரைப்பேன் சூதமொரு கழஞ்சிவாங்கி
நண்ணவே மேனிச் சாறிட்டு ஆட்டு
நன்னூலில்தான் புரட்டி நவிலக் கேளு
திண்ணவே சிகையில் சிங்கம்போல் சொருகச்
சிரசிலுள்ள பேன்களெல்லாஞ் செத்துபோகும்
கண்ணவே போகருட கடாட்சத்தாலே
கலையறிந்து புலிப்பாணி காட்டினேனே.

- புலிப்பாணி வைத்தியசாரம்.

ஒரு கழஞ்சு பாதரசம் வாங்கி, அதன் எடைக்கு சமமான அளவு குப்பைமேனிக் கீரையின் சாற்றினை கலந்து இந்த கலவையை நன்கு அரைத்து அதனை ஒரு ஒரு தடிமனான நூலில் தோய்த்து எடுத்து அதனை தலையில் சொருகிக் கொள்ள வேண்டுமாம்.

இப்படி ஒரு சாமம் அல்லது மூன்று மணி நேரம் சொருகி வைத்திருந்தால் தலையில் உள்ள பேன்கள் எல்லாம் இறந்து விடும் என்கிறார் புலிப்பாணி சித்தர்.

பேன் தொல்லைக்கு எளிமையான, அதே நேரத்தில் முழுமையான தீர்வு!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

11 comments:

naveenkumar said...

Hi thozhi,

Neengal jaathagam parpeerkala?

By
Naveen.

kimu said...

Thanks.
but oru doubt
Kazanchi patharasam endral enna?
:)

Jai said...

தோழி உங்களின் இந்த அறிய சேவைக்கு எனது உளம் கனிந்த நன்றிகளும் நல்வாழ்த்தும்.

தங்களது முந்தைய பதிவில் சூதம் பற்றி தெளிவாக சொல்லியிருக்கிறிர்கள் (http://siththarkal.blogspot.com/2010/03/blog-post_06.html) அதன்படி சூதம் ஐந்து வகையாச்சு.

அப்படியிருக்க பாதரசம் என்று நேர்முகமாக சொல்லி என்னைபோன்ற ஆர்வகோளாறுகளை யோசிக்க வைத்துள்ளீர்கள்.

இன்றைய சுழலில் நமக்கு எளிதில் கிடைக்கும் பாதரசம் ஆபத்தானது. எனவே தோழி தயவு செய்து ஒரு மருத்துவரை ஆலோசிக்க பரிந்துரை செய்யுங்கள்.

piravipayan said...

டியர் தோழி

பாதரசம் மிகவும் ஆபத்தானது ஆகவே பார்த்து மருத்துவரை கலந்து ஆலோசித்து உபயோக படுத்தவும்
'

தோழி said...

இயல்பில் பாதரசம் விஷத் தன்மையுடையதுதான். சித்தரியலில் இந்த விஷத்தன்மையே மருந்தாக மாற்றப் பட்டு பயன்படுத்தப் படுகிறது. இங்கே பேன்களைக் கொல்லும் விஷத்தன்மையை பாதரசமே தருகிறது. மனிதனுக்கு தீங்கு இழைக்காமல் இருக்கவே இந்த பாதரசத்துடன் குப்பைமேனி கீரையின் சாற்றினை கலந்து அரைத்து பயன்படுத்த அறிவுறுத்தியிருக்கின்றனர். மேலும் இது வெளிப் பயன்பாட்டிற்கானது.

ஒரு கழஞ்சு என்பது தற்போதைய ஐந்து கிராம் எடையளவுள்ளது.

தோழி said...

இந்த தகவல்கள் சித்தர்களின் பாடல்களின் வழி பெறப்பட்டவையே, இவற்றின் ந்ம்பகத் தன்மை மற்றும் செயல்திறனை முறையாக சித்தமருத்துவத்தை கற்றுத் தேர்ந்தவர்களே அறுதியிட்டு கூறிட இயலும். எனவே இவற்றை சுயமாக பரிசோதிப்பதை விட சித்த மருத்துவர்களை அணுகி அவர்தம் ஆலோசனையின் பேரில் பயன்படுத்தலாம்.

Balamurugan said...

To get rid of lice problem, the best medicine is pottaciam bermanganate (used for teeth cleaning. Mix it with coconut oil and apply on your head. In three days no louse will be found on your head

piravipayan said...

அன்புள்ள தோழிக்கு

தங்களின் சித்த மருத்துவ குறிப்பு எங்களை ஆச்சர்ய படவைக்கிறது நீங்கள் கூறியது போல் சித்த வைத்தியரை அணுகி மருந்தை அறிந்து கொள்கிறோம் தகவலுக்கு நன்றி

Suresh said...

I am reading your blog frequently and impressed with the information poured. Do we have a good medicine to stop hair loss due to heredity reason? Thanks in advance.

ASHOK said...

@kimu

கிட்டத்தட்ட ஐந்து கிராம்

Madurai gandhi said...

We should not experiment Siddha medicine without status of individual body health. For all ailments siddhars have recited poems, but it is not being used for decades. All r using Allopathy medicines and the most of the Indians r accustomed with allopathy medicines.all of sudden if any tried sidda medicine without proper guidance will lead to many side effects.Many companies r selling herbal shampoos for hair problems.All r marketing their products r the best. Who is going to bell the Cat for such siddha medicines. One friend suggested KMNO4 with coconut oil. Atleast that we can try. My wife is also having the same proble. every time i went to medical shop i asked them to give good shampp based medicine for lice proble. But a few days the problem will be over. but subsequently the same arise. My house maid had given us powder say as siddha powder to mix it with coconut oil . We tried the same. the lice problem is over but hair fall is heavy. Every medicine has got a side effect on its own.

Post a comment