காகிதம்,... பாத்திரம்!... பலகாரம்?

Author: தோழி / Labels: ,


காகிதம் இரண்டாம் நூற்றாண்டில் சீனர்களால் கண்டுபிடிக்கப் பட்டது என வரலாறு கூறுகிறது. நமக்கு அநேகமாய் பதினாறு அல்லது பதினேழாம் நூற்றாண்டில்தான் காகிதம் பரிச்சயமாகி இருக்கும் என நினைக்கிறேன். இது பற்றிய தகவல் எனக்கு சரியாக தெரியவில்லை, தெரிந்தவர்கள் விளக்கிடலாம்.

சமீபத்தில் போகர் ஜால வித்தை நூலை பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு பாடல் ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் இருந்தது. ஆம், போகர் தனது பாடலில் காகிதத்தைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார். அதுவும் காகிதத்தால் செய்யப் பட்ட பாத்திரத்தில் பலகாரம் சுடுவதைப் பற்றி சொல்லியிருக்கிறார்.

ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?, அந்த பாடல் இதுதான்....

தேரியதோர் பிரண்டதனை யரைத்துக் கொண்டு
திடமான காகிதத்தாற் றென்னைசெய்து
மாரியே பின்புறத்தில் மூன்றுபூசல்
மைந்தனே யுலரவைத்துப் பூசிவாங்கி
கோரியே மூன்றுகல்லை யடுப்புபோல
கூட்டியே தொன்னையதின் மேலேவைத்து
வாரப்பா எண்ணையது காய்ந்தபின்பு
வடைபோளி யதிரசங்கள் சுட்டுவாங்கே.

- போகர்.

சற்று தடிமனான காகிததில் தொன்னை போல் செய்து கொண்டு அதில் பிரண்டை யை அரைத்து, அந்த காகித தொன்னையில் பின் புறத்தில் பூசி காய வைத்துக் கொள்ள வேண்டுமாம். இதே மூன்று தடவைகள் பூசி நன்றாக காயவைத்துக் கொள்ளவேண்டும் என்கிறார்..

இப்படி மூன்று கல்லைக் கொண்டு அடுப்பு உண்டாக்கி நெருப்பு மூட்டி அதில் காயவைத்த இந்த காகிதத் தொன்னையை வைத்து எண்ணெய் ஊற்றி, கொதித்த பின் வடை, போளி அதிரசம் எல்லாம் சுட்டு எடுக்க முடியும் என்கிறார் போகர்.

வாய்ப்பிருப்பவர்கள் இதை பரிட்சித்துப் பார்க்கலாமே!

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

6 comments:

kimu said...

ATHISAYAMANA THAKAVAL :)

kimu said...

Meaning of vaalai!!
{{{ Nandri - Link: http://www.treasurehouseofagathiyar.net/15500/15580.htm

பல யோகிகள் தத்தம் குருமூலம் 'வாலை'என்ற
பாலாம்பிகா'-மந்திரம் உபதேசிக்கப்பெற்று,பயிற்சி
செய்து பின் தீவிர தியானத்தில் அமிழ்ந்துவிடுவர்;
இiப்பேர்ப்பட்ட தீவிர யோகத்யானம் ,அன்பு இiவற்றால் கட்டுண்ட
'வாலை'ஆகிய ,பாலாம்பிகா-அந்த தீவிர யோகிகட்கு
தெய்வீக சக்திகளும்,நினைவாற்றலும்,யோக சித்திகளும்
நிச்சயம் தருகிறாள்.யிதுபற்றி நம் ,காஞ்சிமாமுனிவர்
சொல்கிறார்.
"வைத்தீச்வரன் கோவில் அம்மனுக்கு 'பாலாம்பிகா'என்று
பெயர்.'பாலை'யாகிய யிளம்பெண்ணைத் தமிழில்'தையல்'
என்பர்.ஆகவே அந்த அம்பாளுக்குத்'தையல்நாயகி'எனப்பேர் வந்தது.
யிதுவே 'சித்தர்' பரிபாசயில்(மொழி)-வாலை,வாலைமந்த்ரம்'
என மருவலாயிற்று.
வினைச்சொல்லாகப் பார்த்தால்,தைவது'என்றால் அழகு செய்வது,
அலங்கரிப்பது என வரும்.பெண் குழந்தையான'பாலாம்பிகை'
அழகு தெய்வம்.அக்குழந்தைத் தெய்வத்திற்கு நன்றாக அலங்காரமும்
செய்யவேண்டும் என்ற கருத்திலேயே பாலையை,'தையல் நாயகி'
என்று செல்லமாக அழைத்து அன்பைப்பொழிகிறார்கள்.அலங்கரித்து
மகிழ்கிறார்கள்."(எவ்வளவு அழகுற மகான்'வாலைக்கு' விளக்கம்
கொடுத்துள்ளார் பார்த்தீர்களா?-மனத்திற்கு என்ன சுகம்!)-
யிப்படித் தீவிரப் பயிற்சிபெற்ற ஒரு பெரியவர் நம்மிடையே
உள்ளார்...யாரெனத்தெரிகிறதா?(ஒரு அகத்யர்)-}}}

Nandri - Link: http://www.treasurehouseofagathiyar.net/15500/15580.htm

அஞ்சா சிங்கம் said...

காகிதம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு சீனர்களால் கண்டுபிடிக்கப்பட்டது .
கண்டுபிடித்தவர் பெயர் சாய் லூன் அவர் ஒரு அரவாணி ..
பதினான்காம் நூற்றாண்டு அரபியர்கள் சீனர்களை கடத்திசென்று அம்முறையை தெரிந்து கொண்டார்கள் .
பின்னர் ஆங்கிலேயர்கள் அவர்களை அடிமைபடுத்தும் வரை காகிதம் செய்முறை உலகத்தின் ரகசியமாக காப்பாற்ற பட்டு வந்தது .

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்

பழ.மாதேஸ்வரன், குருவரெட்டியூர் - 638504 said...

முயற்சித்து பார்க்கலாம் நல்ல இடுகை நன்பரே. !

venkatesan said...

வணக்கம் தோழி ,
பேப்பர் பற்றி ஒரு சுவாரஸ்யமான செய்தி .பேப்பர்ஐ
கண்டு பிடித்தவர்கள் யார் என்று தெரியாது. ஆனால்
சீனாவில் 'காஹஸ்' என்ற புல்லில் இருந்து தயாரிக்கப்
பட்டதால் இது காகிதம் என்று பெயர் .
அதே நேரம் அரேபியர்கள் 'பாபராஸ் ' என்ற புல்லில் இருந்து தயாரிக்கப்பட்டதால் பேப்பர் என்று பெயர் . வந்ததாக சொல்வார்கள் .


அன்புடன் S V .வணக்கம் தோழி ,
பேப்பர் பற்றி ஒரு சுவாரஸ்யமான செய்தி .பேப்பர்ஐ
கண்டு பிடித்தவர்கள் யார் என்று தெரியாது. ஆனால்
சீனாவில் 'காஹஸ்' என்ற புல்லில் இருந்து தயாரிக்கப்
பட்டதால் இது காகிதம் என்று பெயர் .
அதே நேரம் அரேபியர்கள் 'பாபராஸ் ' என்ற புல்லில் இருந்து தயாரிக்கப்பட்டதால் பேப்பர் என்று பெயர் . வந்ததாக சொல்வார்கள் .


அன்புடன் S V .வணக்கம் தோழி ,
பேப்பர் பற்றி ஒரு சுவாரஸ்யமான செய்தி .பேப்பர்ஐ
கண்டு பிடித்தவர்கள் யார் என்று தெரியாது. ஆனால்
சீனாவில் 'காஹஸ்' என்ற புல்லில் இருந்து தயாரிக்கப்
பட்டதால் இது காகிதம் என்று பெயர் .
அதே நேரம் அரேபியர்கள் 'பாபராஸ் ' என்ற புல்லில் இருந்து தயாரிக்கப்பட்டதால் பேப்பர் என்று பெயர் . வந்ததாக சொல்வார்கள் .


அன்புடன் S V .

Post a comment