பில்லி, சூனிய ஏவலில் இருந்து காத்துக் கொள்ள...!

Author: தோழி / Labels: ,

பில்லி,சூனியம் பற்றி சித்தரியல் கூறும் தகவல்களை பலவற்றை முந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் இம் மாதிரியான மாந்திரிக முறைகளினால் பாதிக்கப் பட்டவர்கள் தங்களை காத்துக் கொள்ளும் ஒரு எளிய வழியை இன்று பார்ப்போம்.

புலிப்பாணிச் சித்தர் தனது "புலிப்பாணி வைத்தியசாரம்" என்னும் நூலில் பில்லி, சூனிய ஏவலில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளும் ஒரு வழியை பின்வருமாறு அருளியிருக்கிறார்..

போமேடா கண்டங்கத் திரியின்மூலம்
பொங்கமுடன் காட்டு சீரகத்தின்மூலம்
வாமடா கொடியறுகின் மூலம்
வகைவகைக்கு பலம்நூறு நிறுத்திக்கொண்டு
தாமடா வெவ்வேறு பாண்டத்திலிட்டுத்
தயவான தூணிநீர் தன்னை வார்த்து
நாமடா வெந்திறக்கித் தினமொன்றாக
நலமாகத் தான்வார்க்க பில்லிஏவல்போமே.

- புலிப்பாணி வைத்தியசாரம்.

கண்டங்கத்தரியின் வேர் நூறு பலமும், காட்டு சீரகத்தின் வேர் நூறு பலமும், கொடியறுகு வேர் நூறு பலமும் எடுத்துக் கொள்ள வேண்டுமாம். (பழந்தமிழர்கள் பயன்படுத்திய அளவை முறைகளுக்கு ஈடான தற்போதைய அளவை முறைகளை முந்தைய பதிவொன்றில் விளக்கியிருக்கிறேன்). இப்படி சேகரித்த வேர்களை தனித்தனியே சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் தினம் ஒரு வேராக நறுக்கி பாத்திரத்தில் போட்டு நீர் விட்டு அவிக்க வேண்டுமாம். ஆறிய பின்னர் இந்த நீரில் மூன்று நாட்கள் குளித்தால் பில்லி, சூனியம், ஏவல் போன்றவை எது இருந்தாலும் அது போய்விடும் என்கிறார்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

8 comments:

venkatesa gurukkal said...

அருமை அருமை தொடரவும்

Anonymous said...

நன்றி தோழி !


ப்ரவீன் குமார் .......

kimu said...

Thinam oru Puthu thakaval :)
Thanks Thozi

Anonymous said...

@kimu

@kimu ------ சரியா சொன்னிங்க !!

Piththa_ Piraisoodi said...

கால வாய்ப்பாடு:(துடிக்கணக்கு)
8 அணு = ஒரு தேர்த்துகள் காலம்
8 தேர்த்துகள் காலம் = ஒரு இம்மிக் காலம்
8 இம்மிக்காலம்= ஒரு எள்ளுக் காலம்
8 எள்ளுக்காலம் = ஒரு நெல்லுக்காலம்
8 நெல்லுக்காலம் = ஒரு விரல்காலம்
கால வாய்ப்பாடு:(தாளதீபிகை)
8 கணம் = ஒரு இலவம்
8 இலவம் = ஒரு காஷ்டம்
8 காஷ்டம் = ஒரு நிமேசம்
8 நிமேசம் = ஒரு துடி
8 துடி = ஒரு குரு
இரண்டு துடி = ஒரு துருதம்,
இரண்டு துருதம் = ஒரு லகு
இரண்டு லகு = ஒரு குரு

ஆன்மீக உலகம் said...

பகிர்வுக்கு நன்றி சகோ! இந்த வேர்கள் சித்த ஆஸ்ரமங்களில் எளிதில் கிடைக்க கூடியவையா? விளக்கவும் தோழி.

59samy said...

very good information

M.S.P. Nanda said...

நன்றி

Post a Comment