சுகப்பிரசவம் ஆக வேண்டுமா!!

Author: தோழி / Labels: ,

நமது சமூக அமைப்பில் தாய்மையே ஒரு பெண்ணை பூரணத்துவமானவளாக ஆக்குகிறது, என்கிற நம்பிக்கை ஆழமாய் வேரோடியிருக்கிறது. ஒவ்வொரு பிரசவமும் ஒரு பெண்ணிற்கு மறுபிறவியைப் போன்றது என்கிற பேச்சு வழக்கு காலகாலமாய் புழக்கத்தில் உள்ள ஒரு சொலவடை.

நவீன அலோபதி மருத்துவத்தின் படி பிரசவம் இரண்டு பெரும் கூறுகளாய் அணுகப் படுகிறது.

1. யோனி வழிப் பிரசவம் (Normal vaginal Delivery).
இது இயற்கையாக குழந்தை பிரசவிக்கும் முறை.

2. சத்திர சிகிச்சை பிரசவம் (Caesarian Section).
இயற்கையாக குழந்தையை பிரசவிக்க முடியாத சூழ்நிலையில் மருத்துவர்கள் சத்திர சிகிச்சையின் மூலம் குழந்தையை பிரசவிக்க செய்யும் முறை.

எதனால் இயற்கையாக குழந்தையை பிரசவிக்க முடியாமல் போகிறது என்பதற்கு மருத்துவ ரீதியாக நிறைய காரணங்கள் முன் வைக்கப் படுகிறது.

பெண்ணின் வயது மற்றும் உடல் அமைப்பு

சூல் வித்தகம் கர்ப்பபையின் கழுத்துப்பகுதியை மறைத்திருத்தல் அல்லது மூடியிருத்தல் (Placenta praevia)

தாய்க்கு ஏற்படும் அதிக குருதிப் பெருக்கு ( Severe antepartum haemorrhage)

தாயின் குருதி அமுக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்தல் (Severe pregnancy induced hypertention)

cephalopelvic disproportion (CPD)

Meconium or foetal distress

Severe intrauterine growth retardation

இது போன்ற தவிர்க்க இயலாத சூழல்களில் தாய் மற்றும் சேயின் உயிரை காப்பாற்றிட மருத்துவர்கள் சத்திர சிகிச்சையின் மூலம் குழந்தையை பிரசவிக்க செய்கின்றனர். இந்த முறையை சிசேரியன் சத்திர சிகிச்சை (Emergency caesarian section) என்பர்.

நவீன அறிவியலுக்கு இவை எல்லாம் சரிதான், ஆனால் அலோபதி மருத்துவம் வளராத பல நூறு ஆண்டுகளுக்கு முன்னர் நமது தாய்மார்கள் இது மாதிரியான பிரச்சினைகளை எல்லாம் நிச்சயம் எதிர் கொண்டிருப்பார்கள். அதற்கு நம் பெரியவர்கள் என்ன மாதிரியான தீர்வினை வைத்திருந்தார்கள் என்பதைப் பற்றியதே இந்த பதிவு.

நான் தேடிய வரையில் சத்திர சிகிச்சை பிரசவம் பற்றி சித்தர் பாடல்களில் குறிப்புகள் எதுவும் காணக் கிடைக்கவில்லை. ஆயினும் இயற்கை பிரசவம் தடைப்படுவது பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. அப்படியான சூழல்களில் என்ன செய்திட வேண்டும் என்கிற தீர்வுகளும் அந்த பாடல்களில் இருக்கின்றது.

அந்த வகையில் அகத்தியர் தனது அகத்தியர் பரிபூரணம் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ள ஒரு சில குறிப்புகளை இன்று பார்க்கலாம்..

காணடா பிறவியது னோக்குதற்கு
கருவாக சுண்டையுடன் வடவேர்வாங்கி
பூணடா சற்குருவை தியானம்பண்ணி
புத்தியுடன் வளையமிட்டு மஞ்சள்சாத்தி
பேணடா கால்விரலில் பூட்டினாக்கால்
பிள்ளையது தான்பிறக்கும் பெருமையாக
பாரப்பா யின்னமொன்று சொல்வேன்கேளு
பரிதான பெரண்டைவேர் கொன்னைவேரும்
நேரப்பா காடியிலே அரைத்துமைந்தா
நீமகனே தாங்குடுக்க பிறவினோக்குங்
காரப்பா அதிமதுரம் பொடியேசெய்து
கருணையுடன் தேனதிலே கொடுத்துப்பாரு
பாரப்பா பிறவியது தானேனோக்கி
பிள்ளையுமே சுகமாகப் பெறுவாள்பாரே.

- அகத்தியர்.

சுண்டை என்னும் மூலிகையின் வடக்கு பக்கமாக செல்லும் வேரை எடுத்து வந்து குருவருளை வேண்டி வணங்கி, வளையமாக செய்து மஞ்சள் பூசி கருவுற்ற பெண்ணின் கால் விரலில் அணிந்தால் குழந்தை சுகமாக பிறக்குமாம்.
அதே போல பிரண்டை வேரும் கொன்னை வேரும் காடி விட்டு அரைத்து கருவுற்ற பெண்ணுக்குக் கொடுக்க குழந்தை சுகமாக பிறக்குமாம்.

அதிமதுரத்தை பொடி செய்து தேனில் குழைத்து கொடுக்க குழந்தை சுகமாக பிறக்கும் என்கிறார்.

ஆச்சர்யமான அதே நேரத்தில் சுலபமான வழிமுறைகள்தானே!, இவை எல்லாம் என்னுடைய துறை சார்ந்தவை என்பதால் எதிர்காலத்தில் குருவருள் அனுமதித்தால் இத்தகைய தகவல்களை எல்லாம் தொகுத்து ஆவணமாக்கி அதன் பேரில் ஆய்வு செய்திட வேண்டும் என தீர்மானித்திருக்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

23 comments:

kimu said...

nalla thagaval.
thanks

ராஜா MVS said...

நல்ல பயனுள்ள தகவல்.. அன்பரே...
-ஆனால் இவைகளை எப்போது செய்யவேண்டுமென்று தாங்கள் குறிப்பிடவில்லையே... பிரசவகாலத்திலா.. அல்லது 6,7ஆம் மாதத்திலிருந்து தொடர்ச்சியாகவா என்ற குறிப்பு ஏதும் இல்லையே... நண்பரே...

அருள் said...

தியாகத்தின் வேரைத்தேடி: தென் ஆப்பிரிக்காவிலிருந்து மயிலாடுதுறைக்கு ஒரு பயணம்

http://arulgreen.blogspot.com/2011/10/blog-post_19.html

arul said...

excellent information please post more information about this.
(astrologicalscience.blogspot.com_

Anonymous said...

நல்ல விஷயம் தோழி... கண்டிப்பா பதிவு செய்ங்க.. எல்லாருக்கும் பயன்படட்டும் :)

பாவா ஷரீப் said...

கால் விரல் ஓகே தோழி
எந்த விரல் ?

Dr. D. Lakshmi said...

Nichaya Neengal Aaivu seiya vendum thozhi. En vazhthukkal.

Anonymous said...

very good information for all.

Anonymous said...

nice information to every one.

THIRUMAL said...

nallathu

THIRUMAL said...

nandri

Unknown said...

அறிந்திருக்க வேண்டும் இந்த விசயங்களை என்று இருந்தேன் நன்றி

Inquiring Mind said...

கொங்கு மண்டல சதகம் என்ற புத்தகத்தில், வயிற்றை கிழித்து குழந்தையை எடுத்த தகவல் பாடலாக படித்த ஞாபகம்.. தங்களுக்கு வேண்டுமானால் அந்த பாடலை மறுபடியும் தேடி எடுத்து தருகிறேன்..

S.Puvi said...

நல்லசெய்தி, உங்கள் சேவை வளரட்டும் - வாழ்த்துக்கள்.
இப்படியான ஒரு சம்பவம் ஒரு வருடத்திற்கு முன்பு எனது நண்பன் ஒருவனின் அக்காவிற்கு இப்படியான ஒரு சம்பவம் நடைபெற்று தாயும் குழந்தையும் இறந்தது. இதற்கு அந்த வைத்தியரின் பெறுப்பற்ற தன்னை என காரணம் கூறப்பட்டது. எனவே இத்துறையில் பணிபுரிபவர்கள் உங்களைப்போன்று சேவை மனப்பாங்கு உள்ளவராக இருக்க வேண்டும்.
உங்கள் சேவை தெடர என் வாழ்த்துக்கள்

S.Puvi said...

நல்லசெய்தி, உங்கள் சேவை வளரட்டும் - வாழ்த்துக்கள்.
இப்படியான ஒரு சம்பவம் ஒரு வருடத்திற்கு முன்பு எனது நண்பன் ஒருவனின் அக்காவிற்கு இப்படியான ஒரு சம்பவம் நடைபெற்று தாயும் குழந்தையும் இறந்தது. இதற்கு அந்த வைத்தியரின் பெறுப்பற்ற தன்னை என காரணம் கூறப்பட்டது. எனவே இத்துறையில் பணிபுரிபவர்கள் உங்களைப்போன்று சேவை மனப்பாங்கு உள்ளவராக இருக்க வேண்டும்.
உங்கள் சேவை தெடர என் வாழ்த்துக்கள்

muthu said...

i am so excited while reading this. even i would like to try this. But how would i can start this?
i am just waiting for your reply

Unknown said...

தங்களது இந்த சேவை முயற்சி நிச்சயம் கண்டிப்பாக வெற்றியடையும்

Unknown said...

nice msg

Vahishah said...

@S.Puvi

Vahishah said...

Nalla thahaval

Unknown said...

உங்கள் சேவை மிகவும் பாராட்தலுக்கு உரியது .

Unknown said...

ஐ லைக் யுவர் வ்ரிடிங்க்ஸ் வெரி மச் . ஐ வான்ட் டு க்நொவ் மோர் அபௌட் சிதர்கள் . ப்ளீஸ் WRITE இன்
மைய் பிளாக்கர்

Principal KV ,CME,PUNE,INDIA said...

i am seeing this site for the first time.
no words to express the feeling.
very useful and knowledgeable tips and every page is interesting. thank you

Post a comment