அகத்தியர் வாங்கிய சாபம்!

Author: தோழி / Labels: ,


சித்தர் பெருமக்களில் மூத்தவரும், சிறப்பானவருமான அகத்தியரே சாபம் வாங்கிய தகவலை, கோரக்கர் தான் அருளிய “நமனாச திறவுகோல்” என்னும் நூலில் விளக்கியிருக்கிறார்.

வைத்ததொரு நூல்தன்னில் வெளியாய்
எல்லாம் ஓதிவைத்தோம் புவிமனுச்சந் தேகம்தீர
மெய்த்தவநூல் மேதினியில் அறியா வண்ணம்
மறைவாக வகத்தியரும் மறைத்த தாலே
உய்வாக என்பாலாம் சித்த னார்கள்
உரிமையிலா வகத்தியருக்குச் சாபம் ஈந்தே
துய்மையுடன் வைத்தநூல் இவர்கண் ணுக்குத்
தோன்றாமல் போகுங்கண் தெரியா தென்றே

என்றேகிச் சாபமிட்ட போதே நூலும்
இழிவாகப் பாறையைப்போல் திரண்ட தங்கே
நன்றாகப் பாறையிடம் சென்றோர்க் கெல்லாம்
நகருமது தெளிவாக நூலும் தோன்றும்
நின்றாலும் அகத்தியரின் கண்ணுக் கின்நூல்
நிலவரமாய்த் தோற்றிடவே தில்லை யில்லை
வென்றிடவே நூலிருக்கும் பாறை யெய்தி
விகற்பமற ரவிமேகலை யுரைத்த மந்திரம்
-கோரக்கர்.

உலகில் இருக்கும் மக்கள் அனைவரின் சந்தேகங்களையும் தீர்க்கும் நூல் ஒன்றினை தான் எழுதியிருப்பதாக கோரக்கர் குறிப்பிடுகிறார். அத்தனை ரகசியங்களையும் வெளிப்படையாக எழுதியதனால் அந்த நூலை அகத்தியர் பூமியில் உள்ளவர்களுக்கு கிடைக்காமல் மறைத்து வைத்தாராம். இதை அறிந்த மற்ற சித்தர் பெருமக்கள் அந்த நூல் அகத்தியர் கண்களுக்கு மட்டும் தெரியாமல் போகட்டும் என சாபம் கொடுத்தார்கள் என குறிப்பிடுகிறார்.

சித்தர் பெருமக்களின் சாபத்தினால் அந்த நூலானது பாறைபோல் திரண்டு நின்றது என்றும், அந்த நூலினை படிக்க விரும்புவோர் அந்த பாறை அருகினில் சென்றால் பாறை விலகி வழிவிட அந்த நூல் கண்ணிற்குத் தெரியும், அதை படிக்கலாம் என்கிறார். ஆனால் அகத்தியர் அந்த பாறை அருகில் சென்று பாறை விலகினாலும் நூல் அவரது கண்ணுக்குத் தெரியாது என்கிறார் கோரக்கர்.

இத்தனை அற்புதமான நூல் இருக்கு இருக்கும் இடத்தையும், பாறையை அடையும் வழியையும். அந்த பாறையின் அருகில் சென்றதும் சொல்லவேண்டிய மந்திரம் பற்றிய விபரங்களையும் கோரக்கர் தனது ரவிமேகலை என்னும் நூலில் சொல்லியிருப்பதாக சொல்கிறார்.

இத்தனை ரகசியங்கள் அடங்கிய இந்த ரவிமேகலை என்னும் கோரக்கர் நூலை விரைவில் மின்னூலாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

11 comments:

seyyon said...

அகத்தியர் ஏன் அந்த நூலை யாரும் படிக்கக்கூடாது என்று எண்ணினார்?. என்ன காரணம் என்று பகிர்ந்து கொள்ள இயலுமா?.

பால கணேஷ் said...

ரவிமேகலை நூலைப் படித்து பாறை இருக்குமிடம் அறிந்து சென்று மந்திரம் சொன்னால் பாறை விலகி நூல் தெரியுமா... நம்ப இயலாத ஆச்சரியத் தகவல்!

Hari OM said...

What a information, Kudos to you.

Anonymous said...

ம்ம்ம்ம் ஆச்சரியமான தகவல் தோழி தொடரட்டும் உங்கள் அற்புதமான பதிவுகள் .எல்லாம் சரி அனால் ஏதானும் சந்தேகம் என்றால் தான் பதில் வருவதில்லை !!!

Unknown said...

ஏழு பிறப்பெடுத்தாலும் சித்தர்கள் பற்றிய அறிவு கைமண் அளவுதான் போல. தொடரட்டும் உங்கள் பணி...

AGILNALAN said...

அற்புதம். சித்தர் பொக்கிசங்களை எளிதாக அடைய முடியாது என்பது என் கருத்து.உங்கள் படைப்புகளுக்கு நன்றி.

Waradan said...

Sirapana pathivu Thozhi! Viravil Ravimegalai padika avalai ullom!

செவுந்தலிங்கன் said...

பாராட்ட வார்த்தைகள் இல்லை தொடரட்டும் உம்பணி,,,,

India said...

அருமையான தகவல்கள் மிகவும் பயனுள்ளவை

நன்றிகள் பல உரித்தாகுக

India said...

பழைய புத்தகங்களில் ஓரளவு படித்தவைகளை

புதுப்பித்து அளித்த உமக்கு கோடான கோடி

நன்றிகள்...

lovelysivaraj said...

சித்தம் சிவமயம்

Post a comment