வாலை ஞான பூஜாவிதி - மின்நூல்.

Author: தோழி / Labels: ,

நண்பர்களே,

சித்தர்களின் அரிய நூல்களை மின் நூலாக தொகுத்து மின் ஊடகத்தில் பகிர்ந்திடும் தொடர் முயற்சியில், பன்னிரெண்டாவது படைப்பாக போகர் அருளிய "வாலை ஞான பூஜாவிதி" என்கிற நூலை மின் நூலாக்கி இருக்கிறேன்.

சித்தர் பெருமக்களின் வரிசையில் சிறப்பான இடத்தில் வைத்துப் போற்றப் படும் போகநாதர் அருளிய இந்த நூலானது வாலைத் தெய்வத்தை வணங்கிடும் வழி வகைகளை விளக்கிக் கூறுகிறது. சித்தர் பெருமக்கள் அனைவரும் வழிபட்ட இந்த வாலைத் தெய்வம் பத்து வயதுடைய சிறுமியின் அம்சம் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சித்தமெல்லாம் சிவமாய் திளைத்திருக்க ஆதி சக்தியின் அருளும்,ஆசியும் அவசியம் என்பதை சித்தர் பெருமக்கள் உணர்ந்திருந்தனர். அத்தகைய ஆதி சக்தியின் அம்சம்தான் இந்த வாலைத் தெய்வம். இந்த தெய்வத்தை வணங்கி இவளின் அருள் பெற்றவர்களே சித்த நிலைக்கு உயரமுடியும் என ஏராளமான குறிப்புகள் நமக்கு காணக் கிடைக்கின்றன.பட உதவி திரு . கிமு அவர்கள்.

போகர் இந்த நூலில் வாலைதெய்வதின் வழிபாட்டின் முக்கியத்துவத்தை பின் வருமாறு விளக்குகிறார்.

"இந்தவிதத்திலே தேகத்திலே தெய்வம்
இருக்கையில் புத்திக்கறிக் கையினால்
சந்தோஷ வாலையைப் பாராமல் மனிதர்
சாகிறதேதடி வாலைப் பெண்ணே"

நமது உடலில், உணர்வில் உறைந்திருக்கும் தெய்வமாகிய வாலையை அறியாமல் மனிதர்கள் தமது வாழ்நாளை வீணடித்து இறந்தும் விடுகிறார்கள் என்கிறார் போகர். இத்தனை சிறப்பு வாய்ந்த வாலையை சித்தர் பெருமக்கள் அகப்புற வழிகளில் பூசை செய்திருக்கின்றனர்.

இந்த நூலில் வாலை தெய்வத்தை வழிபடுவதற்குத் தேவையான யந்திர தயாரிப்பு முறை, அதற்கான மூல மந்திரங்கள் அவற்றின் பிரயோக முறைகள் என அனைத்தும் விரிவாக விளக்கப் பட்டிருக்கிறது. வாலை தெய்வத்தின் அருள் பெற விரும்புவோருக்கு இந்த நூல் ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை.

தமிழ் அறிந்த அனைவரும் இந்த அரிய நூலின் விவரங்களை அறிந்து கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் மின் நூலாக தொகுத்திருக்கிறேன். இத்தகைய முயற்சிகளின் வெற்றி என்பது எத்தனை பேரைச் சென்று அடைகிறது என்பதில்தான் இருக்கிறது. எனவே தயவு செய்து இந்த மின் நூலினை பார்வையிடும் நண்பர்கள் அறிந்தவர், தெரிந்தவர் என்கிற பாகுபாடு இல்லாமல் ஆர்வம் உள்ள அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

தொடரும் உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும், மேலான ஆலோசனைகளுக்கும் நன்றிகள் பல...

எனது மேலான குருவினை பணிந்து இந்த முயற்சியினை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.


என்றும் நட்புடன்,

தோழி..
www.siththarkal.com

தொடர்புக்கு..
siththarkal@gmail.com

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...Post a Comment

40 comments:

Anonymous said...

நன்றி தோழி . கண்டிப்பாக எனக்கு தெரிந்த அனைவருக்கும் சொல்லுகிறேன் .


ப்ரவீன் குமார்

Piththa_ Piraisoodi said...

I have requested for all the e books by mail a week back but iam yet to receive them. Could you please do that ?

தோழி said...

@Piththa_ Piraisoodi


சித்தர்கள் இராச்சியம் தளத்தில் இதுவரை வெளியிட்டுள்ள அனைத்து மின்னூல்களும் இந்த இணைப்பில் தரவிரக்கிக் கொள்ளலாம்.

http://siththarkal.blogspot.com/2011/08/blog-post_29.html

Anonymous said...

தோழி நான் தங்களை ஒன்று கேட்க வேண்டும்

தங்கள் ஏன் தங்கள் இந்த தளத்தில் Right click செய்யும் features ஐ disable செய்துள்ளீர் ?

இதனால் தாங்கள் கொடுக்கும் link கை web browser இல copy-paste செய்ய முடியவில்லை . மெதுவாக ஒவொரு எழுத்தாக பார்த்து பார்த்து டைப் செய்ய வேண்டயுள்ளது .

அகத்திய சீடன் said...

நல்ல சேவை! பாராட்டுக்கள்!

ரசிகன் said...

பாலா திரிபுர சுந்தரி - இவர் தான் தமிழில் வாலைக் குமரி.

ஆதிசங்கரர் கூட தனது சௌந்தர்ய லஹரியில் 8 மற்றும் 92 ஆவது சுலோகங்களில் இவர் குறித்து பாடி உள்ளார்.

திருமலைவாசன் யார்? என்ற புத்தகத்தில் (நேற்று உங்கள் இடுகை படித்ததிலிருந்து தேடிக் கொண்டிருக்கிறேன். யாரிடம் கொடுத்தேன் என தெரியவில்லை. கிடைத்ததும் புத்தகம் குறித்த அதிக விவரங்கள் தருகிறேன்.) அதன் ஆசிரியர், திருப்பதியில் இருக்கும் பெருமாள் சாக்ஷாத் பாலா(ஜி) தான் என்கிறார். இதற்கு அவர் காட்டும் ஆதாரங்களும் சான்றுகளும் பிரம்மிப்பூட்டுபவை. இந்த புத்தகத்துக்கான அவரது உழைப்பு அசாத்தியமானது.

சிருங்கேரி ஸ்வாமிகளே (தற்போது இருப்பவருக்கு முந்தையவர்) தனது கையால் (பூர்வாசிரமத்தில்) வரைந்த பாலா திரிபுர சுந்தரியினுடைய படம் தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் 1917 இலிருந்து இயங்கி வரும் கிரி ப்ரஸில் (044-28343080) கிடைகிறது.

Unknown said...

தோழி அவர்களே. தங்களின் இந்த அறிய முயற்சிக்கு எனது பணிவான வாழ்த்துகள்.

tonerworld@rediffmail.com said...

inda padalin vlakkm sealmurai terindal nanum muyarchipean nandri
kannank
tamilnadu {theni}
09043865887

tonerworld@rediffmail.com said...

ஒரு நல்ல முயற்சியை திறம்பட செய்துள்ளீர்கள். வாழ்த்துகள்.
பாடல்களுக்கு பொருளும் கொடுத்தல் முழுமையான மகிழ்ச்சி விளையும்.

piravipayan said...

NALL ARUMAIYANA NOOL

Piththa_ Piraisoodi said...

Thank you

Balaji Palamadai said...

தோழி இப்புத்தகத்தின் பாடல்களுக்கு உங்கள் விளக்க உரை இருந்தால் மிகவும் பயனாக இருக்கும் . தயை கூர்ந்து பாடலும் விளக்கமும் ஒரே மின் நூல் ஆக கொடுத்தால் இந்த மின் நூல் மேலும் பயனுள்ளதாக இருக்கும் .

நன்றிகள் பல,
பாலாஜி

ரசிகன் said...

புத்தகம் கிடைத்துவிட்டது தோழி.

புத்தகம்: திருமலை வாசன் யார்?
ஆசிரியர்: சுப.வெங்கடராமன்.
பதிப்பித்தது: ரெங்கநாயகி பதிப்பகம், சுந்தரம் பில்டிங், 81/47-ஆற்காட் சாலை, கோடம்பாக்கம், சென்னை - 24

Useful to others said...

உங்களின் அரிய பணி தொடரட்டும் .. அன்புடன் சேகரன் ..

Adyaksh Kalajith said...

காளியின் பீஜத்தால் சித்தை அடைந்தேன்; தோழியின் வலைப்பூவினால் என்றுமே
அழியாத சொத்தை அடைந்தேன்.
மிக்க நன்றி.

அத்யட்சன் காலசித்தன்

AND KRISHNAMOORTHY said...

மிக்க வந்தனமும் வாழ்த்துக்களும் தோழி என் அன்புத் தோழி. தங்களின் பணிசிறக்க வாழ்த்துக்கள்!!! அன்புடன் கே எம் தர்மா...
http://keyemdharmalingam.blogspot.com

vijay Tanjore said...

Dear Sir/ Madam, really ur very great, because these presentation is very powerful and use full for all, yes i am very glad to receive you answering may god bless you grow up . - by VIJAY THANJAVUR TAMILNDAU INDIA.

ஓம் தத் சத் said...

வாலை ஞான பூஜா விதியின் உரையை இனி வரும் பதிவுகளில் தங்களால் எழுத முடியுமா ?

ஓம்

Karthi said...

Friend , I am Karthik.....Can u send the mail to

this mail id kpkarthik018@gmail.com

Unknown said...

hi thozhi,its really very great and nice of you,if i able to understand meaning for this song.very great work mahes malaysia.

ரியான் said...

தோழி அவர்களுக்கு வணக்கம். உங்களிடம் வாலைகுமரி பற்றிய பிரதிபா பிரசுரம் வெளியிட்ட புத்தகம் ஏதும் உள்ளதா? நான் மைலாப்பூரில் உள்ள பிரதிபா பிரசுரம் சென்று விசாரித்து விட்டேன் பிரிண்டிங் போடவில்லை என்று சொல்லி விட்டார்கள். அவர்கள் ஸ்ரீ வித்தியா பாலா வாலை குமரி கன்னிகா பரமேஸ்வரி இப்படி அவர்கள் வெளியிட்ட புத்தகம் இருந்தால் தருமாறு கேட்டு கொள்கிறேன் ஜெராக்ஸ் எடுத்துவிட்டு குடுத்து விடுகிறேன்.

அன்பர்கள் யாருக்கும் தெரிந்தால் எனது மெயிலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.
mathish0610@gmail.com

Unknown said...

You want me to write in tamil. I dont know. You added me in google plus. But I dont know to use it. can we used email or can you add you in TALK icon in mobile. May be it is kind of chat I believe

mariyappan said...

there is no commend to this service..
Thanks......Thanks.............Thozhi....

teenmoon5 said...

சித்தர்கள் வாலை என்று குறிபிட்டது குன்டலினியைதான். மருத்துவத்தில் ஒரு கழியை இரு நாகங்கள் பற்றுவது போல் பயன்படுத்தும் குறியீடும் குண்டலினியையே குறிக்கும். அதனால் தான் மூன்று பானைகளை அடுக்கி (distillation) பயன்படுத்தும் யந்திரத்துக்கு வாலை யந்திரம் என்று பெயரிட்டனர்.

Unknown said...

தோழி......வாலை குமரி பற்றிய பாடல்களின் விளக்கவுரை வேண்டும்.....karthika962@gmail.com

Unknown said...

தோழி......வாலை குமரி பற்றிய பாடல்களின் விளக்கவுரை வேண்டும்.....

Unknown said...

Thozhi kku en manamarnda nandriyum vazhthukkalum..... Magiludan Vazhga... Balaji Gudiyattam

Unknown said...

Thozhikku Manamarnda nandri... Magiludan vazhga........ Ungal sevai thodara en Gurunadaridam.. vedikolgiren.... Balaji Gudiyattam

Unknown said...

I am not able to down load the book. The address takes back to this page. Please check

yogi said...

Could you please translate the poem!!

yogi said...

could you please translate the poem

Kcmohan1987@gmail.com said...

தெரிந்தவர்கள் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

natraj said...

வாலை ஐயா நீங்கள் சொல்லும் கோயில் எங்கு உள்ளது??வாலைமந்திரம் natravi2007@gmail.com

prasath said...

அன்பு தோழிக்கு இந்த சீடனின் வணக்கம் .தோழி வாலை தெய்வம் புத்தகத்தின் பாடல்களுக்கு உங்கள் விளக்க உரை இருந்தால் மிகவும் பயனாக இருக்கும் . தயை கூர்ந்து பாடலும் விளக்கமும் ஒரே மின் நூல் ஆக கொடுத்தால் இந்த மின் நூல் மேலும் பயனுள்ளதாக இருக்கும் .

prasath said...

அன்பு தோழிக்கு இந்த சீடனின் வணக்கம் .தோழி வாலை தெய்வம் புத்தகத்தின் பாடல்களுக்கு உங்கள் விளக்க உரை இருந்தால் மிகவும் பயனாக இருக்கும் . தயை கூர்ந்து பாடலும் விளக்கமும் ஒரே மின் நூல் ஆக கொடுத்தால் இந்த மின் நூல் மேலும் பயனுள்ளதாக இருக்கும் .

prasath said...

அன்பு தோழிக்கு இந்த தோழனின் வணக்கம் .தோழி வாலை ஞான பூஜாவிதி புத்தகத்தின் பாடல்களுக்கு உங்கள் விளக்க உரை இருந்தால் மிகவும் பயனாக இருக்கும் . தயை கூர்ந்து பாடலும் விளக்கமும் ஒரே மின் நூல் ஆக கொடுத்தால் இந்த மின் நூல் மேலும் பயனுள்ளதாக இருக்கும் .

prasath said...

அன்பு தோழிக்கு இந்த தோழனின் வணக்கம் .தோழி வாலை ஞான பூஜாவிதி புத்தகத்தின் பாடல்களுக்கு உங்கள் விளக்க உரை இருந்தால் மிகவும் பயனாக இருக்கும் . தயை கூர்ந்து பாடலும் விளக்கமும் ஒரே மின் நூல் ஆக கொடுத்தால் இந்த மின் நூல் மேலும் பயனுள்ளதாக இருக்கும் .

prasath said...

அன்பு தோழிக்கு இந்த தோழனின் வணக்கம் .தோழி வாலை ஞான பூஜாவிதி புத்தகத்தின் பாடல்களுக்கு உங்கள் விளக்க உரை இருந்தால் மிகவும் பயனாக இருக்கும் . தயை கூர்ந்து பாடலும் விளக்கமும் ஒரே மின் நூல் ஆக கொடுத்தால் இந்த மின் நூல் மேலும் பயனுள்ளதாக இருக்கும் .

Unknown said...

can you sent phone no

r.rajendrabupathi said...

நன்றி மிக நன்றாக இருந்தது

Post a comment